
நினைவில் இன்னும்
நனைந்தபடி அந்த நவம்பர் மாதம்..
இரு விழிகளின் ஓரம்
இருண்ட மேகங்களாய்
இமைகள் படபடக்க..
இன்னொரு புயல்
இதயத்தின் வெகு அருகில்
இன்னும் சில நிமிடம்
இதுவும் கடந்துப் போகும்
இடியின் சத்தம்..
இலக்கின்றி தாக்க...
மின்னல் கீற்று
முகத்தில் அறைய...
சோவெனக் கொட்டுது
சாரல் மழை...
இசைக்கும் மழை..
இனிக்கும் மழை...
இன்று இரண்டுமே இல்லை...
வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...
வெற்று பார்வைகள்
வெளிறிய கனவுகள்.
கலகலப்பா சொல்லும் வாக்கியம்
காலத்தின் கட்டாயம்
களை இழந்தத் தொனியில்
கேட்க முடிந்தால்
கேட்டுப் போ..
ஜில்லென்று ஒரு காதல்..
ஜம்மென்று ஒரு கல்யாணம்...
ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்
13 comments:
iyyayyaooo
manasukku kashtama irundhuchhu
iduvum uravugal pottika
//வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...//
மிக அழகான உவமானங்கள் தேவ் !அழுத்தமாக அமைதியாக சாரலடிக்கின்றன !!
உங்கள் மழைக்கால கவிதை என் நினைவினை நனைக்கிறது !!
தேவு என்ன ஆச்சு திடீர்னு சொல்லமக் கொள்ளாம திடீர்னு நீ பாட்டுக்குள்ள மழையில் நனையிற...?
கவிதை பற்றி அடுத்த
பின்னூட்டத்தில்...
அன்புடன்...
சரவணன்.
ஒரு சின்ன சந்தோஷம் இந்தப் பதிவிட்ட சில மணிக்குள் இந்தப் பதிவின் தலைப்பு உண்மையாகி விட்டது.. ஆம் சென்னையில் தற்சமயம் மழைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது...
//வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...
//
//ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்//
அழகான கவிதை தேவ்...
//சென்னையில் தற்சமயம் மழைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது... //
கொண்டாடுங்க :)
அனிதா - நன்றி. போட்டிக்கு அனுப்புவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
நவீன் - நன்றி
கப்பி- //சென்னையில் தற்சமயம் மழைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது... //
கொண்டாடுங்க :)
மழை நின்னுப் போச்சு கப்பி.:(
தேவ்,
கவிதை அருமையா இருக்குங்க!!
//ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்//
:(((
நல்ல வர்ணணைகள்..
//வெற்று பார்வைகள்
வெளிறிய கனவுகள்.//
கவிஞனுக்கு அனுபவம் தேவையில்லை, கற்பனை போதும்...
இங்கே அனுபவமா :-))
தேவ்
/இதுவும் கடந்துப் போகும்/
கண்களில் மழை வரவைக்குது
A nice poem :)
Thanks Haniff
dev unga kavithai ellame almost love failure pathi than irukku. athukkum mela intha ulagathila ennanamo irukku. athayum unga azhagana tamil la kondu vanga. aavaludan ethirparkiren. rasigai :)
ரசிகை,
நீங்க சொல்லுற கருத்தை நானும் ஒப்புக்குறேன். காதலைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு.. மெதுவாக அதைப் பற்றியும் எழுதுறேன்..
Post a Comment