Saturday, February 25, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 8

இது வரை

மூணு நாள் வீட்டுச் சாப்பாடு அம்சமா இருந்துச்சு...அம்மா சாப்பாட்டுல்ல எப்பவும் அன்பு இருக்கும் அதுவும் எனக்குன்னு ஒரு படி அதிகாமவே
இருக்கும்..அது தான் அந்த ருசிக்கான ரகசியம்

நம்ம விசிட்க்காக அம்மா மார்கெட்ல்ல சொல்லி நல்ல் பனங்கிழங்கு வாங்கி வச்சிருந்தாங்க...காலையிலே ருசியான் நுங்கு சர்பத் வேற அப்பா வாங்கிட்டு கொடுத்தாப்புல்ல....ஸ்ப்ப்ப்பா தின்னவ்வேலி ஜில்லாக்குன்னு சாப்பாட்டுல்ல ஒரு தனி விசேசம் உண்டு அதை அனுபவிச்சி சாப்பிட்டு பாத்தவனுக்கு தான் தெரியும்

அம்மா வைக்கிற  கறி குழம்புக்கு இணை ஏது!!...ஞாயித்துக் கிழமை காலை டிபன் இட்லியும் கறி குழம்பும் தான்...எத்தனை இட்லி சாப்பிட்டேன்னு எனக்கு கணக்கு வைக்கவே முடியல்ல...அம்மா பாட்டுக்கு இட்லியை வச்சு குழம்பை ஊத்திட்டே இருந்தாங்க...வயித்துல்ல இருந்த இடத்தை எல்லாம் நிரப்பி அதுக்கு மேல தொண்டை வரைக்கும் அடைச்சாச்சு... எவ்வளவு நாள் ஆச்சு இப்படி வக்கனையாச் சாப்பிட்டு...வீட்டுச் சாப்பாடு வீட்டுச் சாப்பாடு தாம்...ம்ம்

இதுக்கு பிறகு...சூடாக் கொஞ்சம் போல கருப்பட்டி காபியைத் தம்ளர்ல்ல ஊத்திக்கிட்டு பூரசமரத்துப் பக்கம் வந்து நின்னேன்... பக்கத்துல்ல மல்லிச்செடி தழைச்சு வளந்துருந்துச்சு. ..  கிளையெல்லாம் பூத்துக் குலுங்குச்சு...மல்லிவாசம் அப்படியே ஆளை தூக்கி அசர அடிச்சது...மனசு அப்படியே அந்த வாசத்துல்ல லயிச்சு கிடக்கையிலே செல்போன் சிணுங்குச்சு..டாம் தான் போன்ல்ல பேசுனான்....

கிட்ட இருந்து போன் வந்து சரியா 18 மணி நேரத்துல்ல நான் சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பார்க்கிங்க்ல்ல நின்னுட்டு இருந்தேன்... அங்கே டாம்...கேஜி...லட்சுமிபதி...நாணா...சுதா எல்லாரும் அங்கேயேத் தான் இருந்தாங்க...எல்லார் முகத்துல்லயும் கவலை ரேகை கோரத் தாண்டவமாடிகிட்டு இருந்துச்சு..

“மூச்சு பேச்சு இல்லடா...கஷ்ட்டம்ன்னு தான் சொல்லுறாங்க...ஐசியுல்ல வச்சிருக்காங்க...”

“ம்”

”ரத்தம் நிறைய போயிருச்சாம்...எதுவும் 48 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்ன்னு சொல்லுறாங்கடா”

"ம்”

”லோடுலாரிகாரன்...திருப்பத்துல்ல வச்சு அடிச்சுருக்கான்...ஓவர் ஸ்பீடு...சரக்குப் போட்டிருப்பான் போல...வண்டி எல்லாம் சுத்தமாக் காலி...ஸ்பாட் அவுட்ன்னு முடிவு பண்ணிட்டாங்க...ஒரு ஆட்டோக்காரர் தான் பாத்து தூக்கிட்டு வந்துருக்கார்....”

“ம்”

தொண்டக்குழிக்குள்ளே எதோ ஒரு பந்து உருளுறது மாதிரி இருந்துச்சு...டாம் பேச பேச என்னாலே   "ம்" ங்கற வார்த்தையைத் தவிர வேற எதுவும் வெளியே கொண்டு வர முடியல்ல...நான் அடிப்பட்டி ஆஸ்பத்திரியிலே படுத்தப்போக் கூட பெரிசா தெரியல்ல... உணர்வில்ல...இப்போ என்னவோ போலிருந்துச்சு... உயிர்ங்கறது உடம்புல்ல எங்கே இருக்குன்னு இன்னும் மருத்துவம் கண்டுபிடிக்கல்ல.. உடம்பு வலிக்கு மருத்துவம் பல மருந்து சொல்லிருச்சு...ஆனா உயிர் வலிக்கு என்ன மருந்தோ இன்னும் தெரிஞ்சுக்க முடியல்ல..

டாம் மட்டும் அப்பப்போ உள்ளே போய் விவரத்தை விசாரிச்சுட்டு வந்து சொல்லிகிட்டு இருந்தான்...கொஞ்ச நாளா விட்டிருந்த சிகரெட் பழக்கத்தை அந்த நிமிசம் மறுபடியும் ஆரம்பிக்கச் சொல்லி மனசு பரபரப்பா ஆச்சு...ஆஸ்பத்திரின்னும் பாக்கமா ஒரு ஓரமா போய் ஊதிட்டு வந்து உக்காந்தேன்...

தம்மடிக்கும் போது மனசு நிக்காம தறிகெட்டு ஓடுச்சு....பூரச மரத்தடியிலே வச்சு நடந்த அந்த முத சந்திப்புல்ல தொடங்கி....மல்லி செடியை நட அவப் பாவாடையை இடுப்புல்ல தூக்கி சொருகிட்டு நின்ன அழகான ஒரு மாலை பொழுதுன்னு நீண்டு... அவளுக்கு வைத்தியும் அவத் தங்கச்சி மூக்களகியும் சேந்து சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடுத்தது...அதை ஹகிரவுண்ட் கட்டச் சுவத்துல்ல உக்காந்து நான் ரசிச்சது... அப்புறம் என் முட்டாத் தனத்தாலே அவளை அழ வச்சேனே..அந்த அழுகை..அங்கே வந்து மனசு பெரூமூச்சு விட்டுச்சு...முழுசா எரிஞ்ச சிகரெட் விரலைச் சுட்டுருச்சு...நினைவுக்கு வந்து திரும்பவும் பார்க்கிங் ஏரியா நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன்..

எல்லாத்தையும் உங்க கிட்டச் சொன்ன அவுட்டிங்க் போன அன்னிக்கு கெத்தா மண்ணுல்ல எழுதிட்டு கிளம்பிப் போனக் கதையை மட்டும் தான் சொன்னேன்...அதுக்கு அப்புறமும் அன்னிக்கு ஒரு கதை நடந்துச்சு...சொல்லக் கூடாத ஒரு கதை...ம்ம்ம் மனசுல்ல அந்தக் கதை தான் ஓட ஆரம்பிச்ச்து....நீங்களும் கேளுங்க...

அவுட்டிங்க்ல்ல எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்சு கூட்டமெல்லாம் சாப்பாட்டுக்கு எதிர்பாத்து உக்காந்து இருந்த நேரத்துல்ல...மேடையிலே எல்லா விளக்கையும் மொத்தமா அணைச்சுட்டாங்க...பவர்கட் போல ஜெனரேட்டர் போட்டு விடுவாங்கன்னு எல்லாரும் உக்காந்து இருந்தோம்....அப்போ

சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் நடிச்சு அப்போதைக்கு ரொம்பவும் பிரபலமான ஹம் தில் தே சுக்கே சனம்(HUM DIL DE CHUKE SANAM) படத்துல்ல ஒரு பாட்டு வரும் பாருங்க.... டோல் பாஜே(DHOL BAAJE)ன்னு...அந்த பாட்டுக்கு ஐஸ் அப்படி ஒரு ஆட்டம் போட்டிருப்பா...சல்மான் சவுண்டே இல்லாம இருப்பான அந்த பாட்டுல்ல... அந்த பாட்டோட மெட்டு மெல்லிய ஒலியா பரவ ஆரம்பிச்சது...அப்படியே பாட்டும் ஆரம்பம் அச்சுது.... பாக்கப் போனா அந்த படம்  நம்ம பாக்யராஜ் எடுத்த அந்த 7 நாட்கள் படத்தைச் சுட்டு எடுத்தது தான்...ஆனா பாட்டு எல்லாம் பட்டாசுங்க..அதுல்லயும் ஐஸ் ஆட்டம் செம மத்தாப்புங்க..


அந்த இசைக்கு ஏத்தாப்புல்ல மேடையிலே ஒவ்வொரு விளக்கா எரிய...வெளிச்சம் பரவ...

ஒய்யாரமா...மஞ்சளும் கருப்பும் கலந்த கலர் காக்ரா சோளியிலே நடந்து வந்தது....ரஞ்சனி...எனக்கு நாக்கு உலந்து மேல் உதட்டுக்கு உள் பக்கமா ஓட்டிகிச்சு..

ஒட்டியாணம் கட்டிய இடுப்பை இசையின் வேகத்துக்கு தகுந்த மாதிரி வெடுக் வெடுக்னு அவ வெட்டி ஆட ஆரம்பிச்சதும்...அவன் அவன் சோத்தை மறந்து விசிலைப் போட்டு மண் தரைன்னும் பாக்கமா உக்காந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டான்க...

வளைந்து நெளிந்து அவ ஆட ஆட எனக்கு குளிர் ஜூரமே வந்துரும் போலிருந்துச்சு....ப்சங்க எல்லாம் மொத்தமா பிளாட் ஆயிட்டாங்க...அடிச்ச சரக்கோட மப்பு நிறைய பேருக்கு இறங்கிப் போச்சு..பொண்ணுங்களும் உற்சாகமா சவுண்ட் விட்டு அவளை இன்னும் ஏத்தி விட்டாங்க

மேடையிலே ஒரு பிரளயமே நடந்துகிட்டு இருந்துச்சு....ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம்....சாரி ஐஸ்...போட்டின்னு வந்தா நீ ரஞ்சனிகிட்ட இருந்து ஒரு ஆயிரம் மைல் தளளி நிக்கற்து உனக்கு நல்லது...உன் இமேஜூக்கு நல்லதுன்னு ஐஸ்வர்யா கிட்டப் போய சொல்லமுடியாததால்ல எனக்கு நானே சொல்லிகிட்டேன்...

கையிலே கேமரா இல்ல...பரவாயில்ல கண்ணையே கேமராவா மாத்தி அவளை வளைச்சு வளைச்சு போட்டோவா எடுத்து மைன்ட்ல்லே பிரிண்ட் போட்டு மைண்ட் சுவத்துல்ல மாட்டிவச்சுட்டு  இருந்தேன்...

ஆட்டத்தைப் பாத்தவங்க எல்லாரும் வாயைப்  பிளந்தப் படியே நிக்க ஆட்டம் முடியும் போது மொத்த பேரும் உச்சக் கட்ட பரவச நிலையைத் தாண்டிப் போயிட்டாங்க...மேடைக்கு கீழே அவன் அவன் தனியா ஒரு நாட்டியக் கச்சேரியே நடத்திட்டு இருந்தான்...சுருக்கமா சொல்லணும்ன்னா அவ ஒரு மந்திரக் கயிறு போட்டு மொத்தப் பேரையும் ஆட வச்சுட்டா..

பாட்டு முடியும் போது...மென்மை வன்மைன்னு கலந்து அதுல்ல பெண்மையைக் கொஞ்சம் சேர்த்து...கவிதையாச் சொல்லணும்ன்னு பாத்தேன்...முடியல்ல...எப்படி சொல்லுறது...தமிழ்ல்ல வார்த்தையே பத்தாது அவ அப்போ என்னப் பாத்த பார்வையை வருணிக்க...இளையராஜால்ல ஆரம்பிச்சி ரஹமான் வரைக்கும் எல்லாரும் என் பக்கமா வந்து அந்த நிமிசத்தைக் கொண்டாட என்னமோ எல்லாம் வாசிச்சாங்க தெரியுமா...நம்புங்க நான் செத்துட்டேன்...அவ இன்னொரு முறை பாக்க மாட்டாளான்னு தவிச்சுட்டேன்...ஓவருன்னு நீங்க நினைச்சா..கம்மின்னு நான் சண்டைப் போடுவேன்...அவ ஒரு தேவதை...சோ லவ்லி தேவதை...


தேன்ல்ல தலை குப்புற விழுந்த வண்டு மாதிரி அவ அழகுல்லயும் அபிநயத்திலும் மொத்தமா கவுந்த நான் அவளைத் தேடி மேடைக்குப் பின்னாடி போனேன்..


அவளைப் பாத்த நேரத்துல்ல வார்த்தை எல்லாம் விசா வாங்கிட்டு கிளம்பி போயிருச்சு...கெத்து எல்லாம் செத்து வெத்தா உடம்பு மட்டும் நிக்குது....அவ முகத்துல்ல இருந்து உதறி விட்ட வேர்வைத் துளி என் முகத்துல்ல பட்டு சிதற்...அதுக்கும் மேலயும் என்னால முடியல்ல..


வார்த்தைங்க தோத்து போற இடத்துல்ல செயல்கள் சட்டுன்னு ஜெயிக்குமாம்...அவத் தோளைத் தொட்டு என் பக்கம் திருப்புனேன்...அவக் கண்களை அவ்வளவு பக்கத்துல்ல அதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்ல...கடைசியா..எதோ ஒரு படத்துல்ல மீனாவோட கண் க்ளோஸ் அப்பை தான் அவ்வளவு பக்கத்துல்ல பேரின்ப விலாஸ் தியேட்டர்ல்ல முத வரிசையிலே உக்காந்து பாத்ததா ஞாபகம்...இவக் கண்ணைப் பாத்து திணறி போயிட்டேன்...

அவ அசையாம நின்னா...சின்ன சத்தமோ சலனமோ இல்ல அவகிட்ட....இன்னும் கொஞ்சம் துணிஞ்சு என் உதட்டை அவ உதட்டுக்கு ரொம்ப பக்கமா கொண்டு போயிட்டேன்....அவளோட வாசம் வச்சு அவ என்ன ப்ர்ப்யூம் யூஸ் பண்ணுறான்னு என்னாலே யூகிக்க முடியல்ல...அதுவா முக்கியம்...அவ கண்ணை மூடவே இல்லை...என்னை இன்னும் ஆழமாப் பாத்துட்டு இருந்தா...

மழையிலே நனைஞ்சு ஈரமா இருக்க செர்ரீ பழம் மாதிரி அவ உதடு இரண்டும் எனக்கு ரொம்பவே பக்கத்துல்ல இருந்துச்சு....என் கை இரண்டும் அவ தோளை அழுத்திப் பிடிச்சி இருந்துச்சு...கட்டிப்பிடிச்சும் பிடிக்காமலும் இருந்தா எப்படி இருக்குமோ அந்த ஒரு மாதிரி நிலையிலே இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தோம்...அவ மூச்சு காத்து என் முகத்துல்ல பட்டுட்டு இருந்துச்சு...அது கொஞ்சம் சூடா இருந்துச்சு....அவ விலகவும் இல்ல...என்ன எதிர்க்கவும் இல்ல

அவ உதட்டை என் உதட்ட்டோடச் சேத்து பூட்ட்ப் வினாடிக்கும் நேரம் கம்மியா தான் இருந்துச்சு...அந்த நேரம் எனக்குள்ளே என்னமோ முழிச்சுகிச்சு....சட்டுன்னு அவக் கிட்ட இருந்து விலகிட்டேன்...அவளை ஒரு முறை பாத்தேன்...அவ கண்ணுல்ல சின்னச் சலனமோ கலவரமோ எதுவும் இல்ல...ரொம்ப ஆழமான அமைதி மட்டுமே என்னால பாக்க முடிஞ்சது...நான் அதுக்கு மேல அங்கே நிக்காம திரும்பி இருட்டுல்ல இறங்கை நடக்க ஆரம்பிச்சேன்... திரும்பி பாக்காமல் தான் நடந்தேன்...ஆனாலும் அவப் பார்வை என் முதுகை துளைச்சு முன்னாடி வர்ர மாதிரியே இருந்துச்சு எனக்கு...

நான் செஞ்ச வரைக்கும் ரைட்டா?? செய்யாம விட்டது தப்பா??ன்னு எனக்கு தெரியல்ல...ஒண்ணு மட்டும் புரிஞ்சது....I WAS TRULY MADLY DEEPLY AND VERY BADLY IN LOVE WITH HER...i WOULD DIE FOR HER....

மூணாவது நாள்...

அவளை அப்பவே பாக்கணும் போல இருந்துச்சு... ஒரு பூங்கொத்தை வாங்கிட்டு அவ ரூமுக்குத் போனேன்...மல்லிகைப் பூங்கொத்து...

நான் போன நேரம் அங்கே யாரும் இல்ல..ரூம் கதவு சாத்தியிருந்துச்சு.. கதவை மெல்லத் தட்டிட்டு...உள்ளே போனேன்....ஆஸ்பத்திரி பச்சை கலர் ட்ரெஸ்ல்ல அவளைப் பாக்க என்னவோ போலிருந்துச்சு... குழந்தை மாதிரி குவிஞ்சு படுத்து நல்லாத் தூங்கிட்டு இருந்தா...அப்படியே நின்னு அவ முகத்தைப் பாத்துட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு..பாத்துட்டே நின்னேன்....

தேவதை தூங்குறா....என்னையுமறியமா குனிஞ்சு அவ நெத்தியிலே முத்தம் வைக்க போனேன்..அப்புறம் அந்த முத்தத்தையும் என் உதட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைச்சுட்டு நிமிந்தேன்......

தலையிலே எதோ சர்ஜரி பண்ணியிருப்பாங்க போல...கட்டுப் போட்டிருந்தாங்க... முடி எல்லாம் எடுத்துருந்துச்சு...கழுத்து பக்கம் நீளமான காயம்... உதடு கன்னங்களில் வெட்டு காயம்...அவத் தூக்கத்தை கலைக்க விருப்பமில்லாம அப்படியே கிளம்பி வந்துட்டேன்... பூங்கொத்துல்ல பேர் எழுதாம மேசையில்ல வச்சுட்டு வந்தேன்.....

கால் போனப் போக்குல்ல நடந்து சுத்திட்டு ராத்திரி ரொம்ப லேட்டாத் தான் ரூமுக்கு வந்தேன்...டாம் அவங்க மாமா வீட்டுக்குப் போயிட்டான்... அவளோட முகம் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள்ளே வந்து வந்து போயிட்டு இருந்துச்சு...

மொட்டை மாடியிலே வெட்ட வெளியிலே வந்து நின்னேன்.....ரொம்ப் ரொம்ப வருசத்துக்கு அப்புறம் வானத்தைப் பாத்து கையெடுத்து கும்பிட்டு கத்துனேன்....

"கடவுளே அவளை இங்கேயே என் கூட இருக்க விடு....உன் ராஜ்ஜியத்துல்ல  பல்லாயிரக் கோடிக்கணக்கான தேவதைகள் இருக்காங்க...எனக்கு என் வாழ்க்கையிலே இவ மட்டும் தான் சாமி தேவதை....ப்ளிஸ் அவளை என் கிட்ட கொடுத்துரு....."

“பொழச்சுக்குவா அவளுக்கும் ஒண்ணும் ஆகாது...ஒண்ணும் ஆகாது... எனக்கு நானே திருப்பித் திருப்பிச் சொல்லிகிட்டேன்..."

அடுத்த பகுதியில் வாசம் நிறையும்....

Tuesday, February 21, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 7

இது வரை..

வேலைன்னு வேலைன்னு மனசும் உடம்பும் ஒரெடியாக் களைச்சுப் போயிருந்துச்சு...சட்டையைக் கழட்டி வெத்து உடம்பா கண்ணாடி முன்னாடி நின்னு பாத்தா அங்கே இங்கேன்னு எங்கே பாத்தாலும் உடம்புல்ல ஊளைச் சதை..இதே கணக்குல்ல போனா வர்ற புள்ளையார் சதுத்திக்கு நம்மளை புள்ளையாரா உக்கார வச்சிருவாங்க போலிருக்கேன்னு ஒரு எண்ணம் தோணுச்சு,, பல மாசம் கழிச்சு ஜிம் பக்கம் எட்டிப் பாத்தேன்...எடை மெஷின்ல்ல ஏறி நின்னா முள் முக்கி முனகி சதமடிக்கரதுக்கு இன்னும் 2 கிலோ தான் பாக்கின்னு காட்டிச்சி....

அடுத்த சில வாரங்கள் ஜிம்மே கதின்னு கிடக்க ஆரம்பிச்சேன்... அதிகாலையிலே திருவான்மியூர் பீச்ல்ல ஓட்டம்...அதுக்கு பிறகு பெசண்ட் நகர்ல்ல விளையாட்டு...நேரம் கிடைக்கும் போது கொஞ்சமா சைக்கிளிங்... வாரமிரு முறை வேளச்சேரியில நீச்சல்... சிதறி கிடந்த சிந்தனைய எல்லாம் உடம்பை இறுக்கறதுல்ல காட்ட ஆரம்பிச்சேன்..உடம்பு குறைய ஆரம்பிச்சது... மனசு நிறைய ஆரம்பிச்சது...

ஆபிஸ்ல்ல  அநாவசியமா பேச்சு வளத்துக்கறது சுத்தமா நின்னுப் போச்சு....முக்கியமா நாளுக்கு நாலுன்னு ஊதுன்ன தம்மை மொத்தமா நிறுத்துனேன்...சரக்கு மட்டும் எப்போவது பீர்...அதுவும் ஆசைக்கு..        

போஜனப் பிரியனே உன் தொண்டையிலே கத்தியை வை...டாம் ரூம்ல்ல வச்சிருந்த பைபிள்ல்ல எப்பவுவோ படிச்ச ஒரு செய்தி...இப்போ நம்ம வாழ்க்கைக்கு செட் ஆச்சு...ராத்திரி சாப்பிடுற பாஸ்ட் புட் ஐட்டம் எல்லாம் கட்..கேப்பை கேழ்வரகு கூழ்...சப்பாத்தின்னு அளவா வளமா சாப்பிட ஆரம்பிச்சேன்...

வாழ்க்கையை ரசிக்க ஆரம்பிச்சேன்...தலைவர் படத்தை மட்டுமே பாத்தவன் ஜாக்கிசான் படத்தை மட்டுமே இங்கிலீஸ் படம் என பதினைஞ்சு வயசு வரைக்கும் நம்பியவன்..பின்னர் பலான பிட் படங்களும் ஆங்கில படம் தான் என ஒத்துகிட்டவன்...இப்போ உலக படமெல்லாம் பொறுமையா பாக்க ஆரம்பிச்சேன்...எப்பவோ அப்பா வாங்கி நான் எடுத்துட்டு வந்த பொன்னியின் செல்வன் புக் எல்லாம் வாசிக்க ஆரம்பிச்சேன் வாழ்க்கை அழகாத் தெரிஞ்சது...

அன்னிக்கு ஆபிஸ் போனப்போ அவ டெஸ்க் சுத்தி எல்லாரும் கூட்டம் போட்டுட்டுருந்தாங்க...

"வாவ்....பியுட்டி புல்....(WOW BEAUTIFUL)"

"மார்வலஸ்!!!" ( MARVELOUS)

"அச்சோ என்ன அழகு!!!"

இப்படி மாத்தி மாத்தி யாராவது எதாவது சொல்லிட்டே இருந்தாங்க....அவ
லேப்டாப்ல்ல எதோ படம் காட்டிட்டு இருந்தா...

“உர்ரே...ஆர்பிவோட வுட் பி சின்ன வயசுல்லு யுஎஸ் போயிருந்தாரா...அப்புடு திஸ்க்குன்ன போட்டோ எல்லாருக்கும் ஆர்பி காட்டுரார்ரா...பலேகா உந்திரா.. அதுல்லு வாஷிங்டன்லு செர்ரி பிளாசம் பிக்ஸ்(CHERRY BLOSSOM PICS) சூப்பர்கா உந்திரா...நீயும் சூடுரா....”

“நாங்க எல்லாம் நேர்ல்ல போய் ஒயிட் அவுஸ்ல்ல வைன் ஊத்தி  குடிச்சுட்டே அதை எல்லாம் சூடிக்குறோம்....வெறும் போட்டோவுல்ல பாத்து என்ன ஆகப் போகுது”

“லேதுரா...ஆர்பி அம்மாயிக்கு அஸ்வின் பாபுகாரு மேலு பிரேமம் ஜாஸ்திரா அதே காரணத்துல்லு அம்மாயி அவர் ட்ரிப் போட்டோஸ் அல்லாருக்கும் காட்டி சந்தோஷம் ஆவுறார்ரா...லவ்ரா லவ்....அதே நேனு சின்னப் அப்புடு ஸ்கூல்லு பிக்னிக் வெள்ளின அப்புடு  திஸ்சுக்குன்ன போட்டோ எல்லாம் சுதாக்கு காட்டி நா மீத்து அவருக்கு லவ் வருமா ட்ரை சேஸ்தானுரா ஓகேவா?”

“என்னடா நீ ஸ்கூல் படிக்கும் பிக்னிக் போனியா எங்கே போன...போட்டோ இருக்கா காட்டுரா பாப்போம்....”

அவனும் பிக்காசாவைத் திறந்து கால் சட்டை போட்ட ஒரு தேவாங்கு குரூப்க்கு நடுவில்ல நின்னுட்டு இருந்த போட்டாவை எல்லாம் ஒவ்வொண்ணா ஒரு கதையோட காட்டுனான்...அவன் சொன்ன கதை எல்லாம் தனியா ஒரு மெகா சிரியலே எடுக்காலாம்...அவ்வளவு மொக்கை....”

“ஏண்டா  அது வாஷிங்க்டண்டா அவன் அவன் ஆஹா ஓஹோன்னுவான் அர்த்தமிருக்கு...நீ காட்டுற போட்டா எல்லாம் எங்கேயோ கடப்பாவுல்ல கக்கா போற காட்டுல்ல எடுத்த மாதிரி இருக்கு...அசிங்கமா திட்டிற போறா...மூடி வை”

“அல்லாம் புரியுது...அது ஏமி கக்கா போற காடு....உர்ரே பாபு அல்லாம் உனக்கு காமெடியா உந்தி....பிரேமம் பாபு...ட்ரூ லவ்...நாக்கு அம்மாயி மீத்து காதல்ரா...சத்தியம்ரா  ?”

“டேய் லட்சுமிபதி யார் தான் யாரை லவ் பண்ணல்ல..ஓலகம் வேகமா போனாலும் அவன் அவன் ஓரமா உக்காந்து லவ் பண்ணிட்டு தான் இருக்கான்...லவ் செய்யி...ஆனா வீட்டுல்ல பாக்குற பொண்ணாப் பாத்து கட்டிக்கோ... உங்க ஊர்ல்ல தான் ஐடி அல்லுடுன்னா பணத்தைக் கோணி பையிலும் பவுனை சிமெண்ட் பையிலும் போட்டு தருவாங்களேப்பா..அதுவும் ஆன்சைட் அல்லுடுன்னா மார்கெட் வேல்யூவே தனி... அப்புறம் எதுக்கு பாவா லவ் பிரேமம் காதல் எல்லாம்...மணி வேஸ்ட் டைம் வேஸ்ட் டோட்டல் லைப் வேஸ்ட்...நல்ல ரம்பா ரோஜா மாதிரி பிகரா பாத்து செட்டில் ஆவுடா...”

“உர்ரே....மேரேஜ் அரெஞ்ச் சேசானு ரா....அதுல்லு லவ் மாத்ரம் எவ்வுருராலும்   அரஞ்ச் செய்ய லேதுரா...அர்தம் ஆயிந்தா LOVE JUST HAPPENS BAVA?”

”அடேய் லட்சுமிபதி...ஐடில்ல ரிசெஷன்(RECESSION) வந்தாலும் உனக்கு கைவசம் இன்னொரு தொழில் இருக்குடா.... நேரா போய் பாலகிருஷ்ணாவைப் பாரு பஞ்ச் டயலாக் எழுதி கொடுத்து பொழப்பை ஒட்டிக்கலாம் இல்லன்னாலும் எங்கூரு கோடம்பாக்கத்துல்ல உன் பஞ்சை லைட்டா பஞ்சர் பாத்து உருட்டி விட்டு காசு பாத்துரலாம்...போடா போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா பஞ்ச் டயலாக் பேசிகிட்டு...”

அவன் போன பிறகு அவன் சொன்ன விசயத்தை யோசிச்சு பாத்தேன்...அதில் அர்த்தம் இருந்தது...எத்தனை பேருக்குடா மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை அமையுது...அவன் அவன் அமையிற வாழ்க்கையைப் பிடிச்ச மாதிரி நடிச்சுகிட்டே வாழ்ந்து முடிச்சுடுறான்...

ஊருக்கு போய் ஆறு மாசம் ஆச்சி டிக்கெட் போடணும்... ஏஜெண்டுக்கு போனைப் போடும் போது...  அவத் தான்.. அவக் குரலே தான்..
ஹலோ,,, ஹலோன்னு மறுமுனையிலே கத்திகிட்டு இருந்த ஏஜெண்ட்டைக் கண்டுக்காம போனைப் பாதியிலே வைக்க வச்சது...

“அட்டென்சன்(ATTENTION)....லாஸ்ட் ஒன் இயரா டே நைட் பாக்கமா....பல கஷ்ட்டப் பட்டு நாம உழைச்சு....2 வாரம் முன்னாடி புரொடக்‌ஷன் போன நம்ம அப்ளிகேஷன் பத்தி நிறைய பாஸிட்டிவ் ரிப்போர்ட்ஸ் .. கமெண்ட்ஸ். .ரிவியூஸ்....வி ஹேவ் டன் இட் கைஸ்... த புரொஜக்ட் இஸ் எ ஹியுஜ் சக்சஸ்   ( POSITIVE REPORTS..COMMENTS..REVIEWS. WE HAVE DONE IT GUYS..THE PROJECT IS A HUGE SUCCESS).அது மட்டுமில்ல....இந்த புரொஜக்ட்டோட மொத்த சப்போர்ட் ப்ளஸ் (SUPPORT PLUS)அவங்களோட அடுத்த முக்கிய புரொஜட் மூண்லைட் 3.0(MOONLIGHT 3.0)வும் நமக்கே சைன்(SIGN) ஆயிடுச்சு....சோ இட்ஸ் பார்ட்டி டைம்....போனஸ்....ஹைக்ஸ்...ஆண்ட் கிராண்ட் செலிப்ரேஷன்ஸ்.....த்ரி சியர்ஸ் டூ த விநாடிக்ஸ் டீம்... ஹிப் ஹிப் ஹூரே ஹிப் ஹிப் ஹுரே( SO ITS PARTY TIME...BONUS...HIKES...AND GRAND CELEBRATIONS...THREE CHEERS TO THE VNAUTIX TEAM  HIP HIP HURRAY HIP HIP HURRAY)”

அர்த்தத்தோட சில பேரும் அர்த்தமில்லமா பல பேரும் அர்த்தமே புரியாம இன்னும் சில பேரும் அந்தக் கொண்ட்டாத்துல்ல கலந்துகிட்டு சத்தம் போட்டுட்டு இருந்தாங்க...

இது தான் ஐடி உலகம்...மாட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவை பொங்கல்... பேக்டரில்ல இருக்க மெசினுக்கு எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவை ஆயுதப் பூஜை...  எங்களுக்கு எப்பவாது எதாவது புராஜக்ட் பெரிய லெவல்ல வருமானம் கொண்டாந்து கொடுத்தா மேனேஜ்மெண்ட் வைக்கிற பொங்கல் தான் இந்த ட்ரீட் செலிபேரஷன் அவுட்டிங் எல்லாம்...

எங்க பொங்கலுக்கு எல்லாரும் தயார் ஆயிட்டு இருந்தாங்க...போனஸ் ஹைக் இந்த வார்த்தைகளைத் தவிர அந்தப் பேச்சுல்ல வேற எதுவும் எனக்கு  புரியல்ல புடிக்கல்ல...

அவன் அவன் எந்த பிகரை பொறி வச்சு அவுட்டிங்க்ல்ல புடிக்கலாம்ன்னு ஒரு கணக்கோட திரிய ஆரம்பிச்சாங்க....சொல்ல மறந்துட்டேன்..இந்தக் கேப்ல்ல கம்பெனியிலே நிறைய புது பசங்களும் புது புள்ளகளும் சேந்துருந்தாங்க... ட்ரெயினிஸ்..சம்பளம் கம்மி..ஆனா ஒரே வேலை தான்...

“அவுட்டிங்க் எல்லாம் நான் வர்றல்லப்பா....ஊருக்கு போறேன்....எந்த வேலைக்கும் என்னிய இழுக்காதீங்க சொல்லிட்டேன்...” நான் நாணா.. .டாம்... எல்லார்கிட்டயும் திடமா சொல்லிட்டேன்...எல்லாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எனக்கு அதில் இஷ்ட்டமில்ல... வர முடியாதுன்னு சொல்லிட்டேன்.... அவுட்டிங்க்கு முதல் நாள் சாய்ங்காலம் அவ வந்து கேக்குற வரைக்கும்...

“வரமுடியாதுன்னு சொன்னீங்களாம்....சீனியர்ஸ் இப்படி பண்ணா....அப்புறம் ஜூனியர்ஸ் கிட்ட எப்படி டீம் ஸ்பிரிட் எல்லாம் எதிர்பாக்க முடியும்.... எல்லாம் இருக்கட்டும்....நான் கேக்குறேன்... ஒரு பிரெண்ட்டா கேக்குறேன்... ப்ளிஸ் வரணும்...நீங்க வரணும்... ஐ வில் எக்ஸ்பெக்ட் யூ”

அதுக்கு அப்புறமும் நான் எப்படி போகாம இருக்க முடியம்?!!...ஊருக்கு போட்ட டிக்கெட்டை கிடப்பில் போட்டுட்டு கிளம்புனேன் அவுட்டிங்க்கு...

“வர மாட்டேன்னு ஒரு ஒரு வாரமா சீன் காட்டுன” - கேஜி

“ஊருக்கு போற ட்ரெயின் எல்லாம் தண்டவாளத்துல்ல இருந்து தரைக்கு வந்துச்சோ” - நாணா

“சாருக்கு கேக்குறவங்க கேக்கணும் அப்போத் தான் வருவார்....பல வருச நட்பை விட நேத்து பூத்த நட்புக்கு தான் சார் அதிக மரியாதை கொடுப்பார்” - டாம்..

“உர்ரே...பாபு வந்துட்டாருரா.. ஹேப்பிகா உந்தி எதுக்கு சண்ட...ரண்டி என் ஜாய் செய்யி ரண்டி” லட்சுமிபதி செம ஸ்டைலா வந்து இருந்தான்...

யாரோ பாடுனாங்க...யாரோ ஆடுனாங்க...மிமிக்ரி பண்ணாங்க...எதோ ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி(EVENT MANAGEMENT COMPANY) என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க... அவன் அவன் ரவுசா ஆட்டம் போட்டுட்டு இருந்தான்

நிகழ்ச்சியிலே ஒரு கட்டமா நீச்சல் போட்டி வச்சாங்க....சின்னச் சின்ன பசங்க எல்லாம் சட்டைய அவுத்துட்டு டவுசரை மாட்டிட்டு ரெடியா போய் நின்னாங்க... பொண்ணுங்க எல்லாம் கூச்சல் போட்டு ஒரே உற்சாகம்...

கன்னியர் தம் கடைக்கண் பார்வை தம் மீது பட்டு விட்டால் மண்ணில் மாமலையும் ஒரு கடுகாம் குமரருக்கு...பாவேந்தர் பாரதிதாசன் அய்யா அழகாத் தான் எழுதி வச்சிட்டு போயிருக்காரு...எல்லா டீம்ல்ல இருந்தும் ஆள் வந்துட்டாங்க...எங்க டீம்ல்ல மட்டும் யாரும் போகல்ல...ஒருத்தருக்கும் நீச்சல் தெரியல்ல....

எனக்கு நீச்சல் தெரியும்ங்கறது டாமுக்கு தெரியும்...அவன் போட்டுக் கொடுக்க மாட்டான்னு எனக்கு தெரியும்...ஆனா அன்னிக்கு போட்டுக் கொடுத்துட்டான்....

மாட்டேன்ன்னு சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது...

எப்படியும் கடைசியா வருவேன்னு எதிர்பாத்தானோ என்னவோ தெரியல்ல...அவனை முறைச்சுட்டே போனேன்...

“மாப்பூ...வின்னிங்க் இஸ் நாட் இம்பார்டெண்ட்....பார்டிசிபேசன் மேட்டர்ஸ்(WINNING IS NOT IMPORTANT PARTICIPATION MATTERS)” சவுண்ட் வேற விட்டான்...அதுக்கு கெக்கபிக்கன்னு சிரிக்க நாலு பேர்....

ஜம்பிங் பேட் பக்கம் போய் மெதுவா சட்டையை கழட்டுனேன்...அப்பவே பொண்ணுங்க மெதுவா ஏக்கப் பெருமூச்சு விடுறது கேட்டுச்சு...அடுத்து பனியனைக் கழட்டி நிக்கும் போது.... ஓஓஓஓன்னு ஒரே விசில் சவுண்ட்... பழனி படிக்கட்டை எல்லாம் பனியனுக்குள்ளே செதுக்கி இல்ல வச்சிருந்தோம்... ஜிம்ல்ல உழைச்ச உழைப்பின் மகிமை நல்லாவே தெரிஞ்சது.. கால்சட்டையோட நிக்கையிலே.... மொத்த ஏரியாவும் வெக்கையிலே வெந்து தணியறது தெரிஞ்சது... .கையைக் காலை மடக்கி டாமை கொஞ்சம் கடுப்பேத்திட்டு... ஆட்டத்துக்கு ரெடி ஆனேன்....

அதுக்கு பிறகு...ஆட்டத்துல்ல ஜெயிச்சு....சொட்ட சொட்ட டவலை கட்டிகிட்டு வெத்து உடம்போட கொஞ்ச நேரம் வேணும்னே திரிஞ்சேன்...டாமுக்கு நோகட்டும்ன்னு தான்...பொண்ணுங்க வின்னிங்க் டீம் போட்டோன்னு சொல்லி எல்லா டீம் பொண்ணுங்களும் என்னோட வந்து போட்டோ எடுத்துகிட்டாங்க...

அப்புறம் டக் ஆப் வார்ங்கற கயிறு இழுக்குற போட்டி...அதுல்லயும் ஜெயிச்சு ஒரு வழியா ஆர்ப்பாட்டம் முடிஞ்சு டின் பீரை எடுத்துட்டு பீச் ஓரமா ஒதுங்கிட்டேன்...

சரசரன்னு சாரல் காத்து அடிச்சா மாதிரி ஒரு வாசம் வர திரும்பி பாத்தா அவளே தான்...என் பக்கத்துல்ல வந்து உக்காந்தா...அவ கையிலே பெப்சி டின்..நான் பீரை கீழே வச்சேன்...

“கேரி ஆன்(CARRY ON)....சூடான வெயிலுக்கு சில்லுன்னு பீர் நல்லாத் தான் இருக்கும்”

நான் வெறுமனே சிரிச்சேன்...கீழே வச்ச பீர் கீழேயே தான் இருந்துச்சு..

“மனசுல்ல என்ன சல்மான் கான்னு நினைப்பா.....சட்டை இல்லமா.... பொண்ணுங்க எல்லாம் இருக்காங்கன்னு பாக்காமா....எல்லார் கூடவும் ஒரே சிரிப்பா போட்டோ வேற..... அப்படி என்ன விளம்பரம் வேண்டி இருக்கு?”

நான் சிரிப்பு குறையாம கீழே வச்ச பீரை கையிலே எடுத்து லேசா குடிச்சுகிட்டேன்...

“என்னப் பண்ணுறது....சட்டையை கழட்டி பொண்ணுங்க கூட போட்டோ எடுக்கறதுக்குன்னு   வாஷிங்க்டன் பிளாரிடான்னு பிளைட் ஏறுற அளவுக்கு எனக்கு வசதியும் வர்றல்ல...அப்படி காட்டுறவங்க போட்டோவை ஊரைக் கூட்டி காட்டுற அளவுக்கு அசத்தலான பொண்ணும் எனக்குன்னு அமையல்ல... சோ நமக்கு எல்லாம் சொந்த விளம்பரம் தான்...”

”ம்ம்ம்ம் நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க....ஐயம் என்கேஜ்ட்( iAM ENGAGED)”

”பட் ஸ்டில் யூ ஆர் நாட் மேரிட்...( BUT STILL YOU ARE NOT MARRIED)”

“யூ ஆர் ஃபாலிங் ஃபார் த ராங் கேர்ள்” ( YOU ARE FALLING FOR THE WRONG GIRL)

எதுவும் பேசாமல் மண்ணில் எழுதி விட்டு எழுந்து நடந்தேன்..நான் போன பிறகு அவ அதைப் படிச்சிருப்பா...

உங்களுக்கும் அது என்னன்னு தெரியணும்ல்ல....சொல்லுறேன்...படிங்க

“நீ விரும்புவதை சுதந்திரமாக இருக்க விட்டு விடு
அது உன்னுடையதாகுமானால் நிச்சயமாய்  உன்னிடம் திரும்பி வரும்..”
     AND I HAVE SET YOU FREE...TO COME BACK OR BE GONE THE CHOICE IS YOURS....."

தொடரும்

Friday, February 17, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 6

இது வரை...

கண் முழிச்சு கட்டில் ஓரமா இருந்த வாட்ச்ல்ல  டைம் பாத்தேன்...மணி 12 ஆகி இருந்துச்சு...தலை வலி தாங்க முடியல்ல...உடம்புல்ல யாரோ தீ வச்ச மாதிரி கொதிச்சுது...உள்ளுக்குள்ளே மொத்தமும் நடுங்குச்சு....மெதுவா எழும்பி தடுமாறி கிச்சன் பக்கம் போனேன்...சூடா ஒரு காப்பி குடிக்கணும் போல இருந்துச்சு...

காப்பியைப் போட்டு எடுத்துட்டு சோபாவில்ல வந்து சாய்ஞ்சேன்...மொபைல்ல 12 மிஸ்ட் கால்...டாம்...லட்சுமிபதி...ஆபிஸ் நம்பர்...அம்மா...ம்ம்ம் இன்னும் சில தெரியாத நம்பர்கள் ஊர்ல்ல இருந்து வைத்தி நம்பர்...அப்புறம்...அவ நம்பர்...அதுல்ல இருந்து எந்த மிஸ்ட் காலும் இல்ல...எஸ் எம் எஸ்கள் வேற வந்து குவிஞ்சுருந்துச்சு...

மெசெஜ் பாக்ஸை திறக்கவும் இல்லை...யாருக்கும் திருப்பி கூப்பிடவும் நம்பரை எல்லாம் பாத்து முடிக்கும் போது தலை எல்லாம் சுத்திச்சு...காலுக்கு கீழே தரை இருக்கான்னு பாத்துகிட்டேன்...
அவசரத்துக்கு இருந்த ஒரு பெரஸ்ட்டமால் எடுத்து விழுங்குறது எதாவது சாப்பிடணுமே...அம்மாவின் அவசர மிளகு ரச ரெசிப் ஞாபகம் வந்துச்சு...அம்மா அளவுக்கு காட்டமான இதம் பதம் இல்லைன்னாலும் ஒரள்வு சுமாரா வந்துருச்சு ரசம்...கொஞ்சம் தெம்பு திரும்புச்சு...சாப்பிட்டுட்டு மாத்திரையும் போட்டுட்டு மூணு மணி வாக்குல்ல ஆபிஸ்க்கு கிளம்பி போனேன்...

இதுக்குள்ளே ஆபிஸ்ல்ல இருந்து இன்னும் 12 மிஸ்ட் கால் வந்துருந்துச்சு...எதையும் நான் எடுக்கல்ல...மொத்தம் ஆபிஸ் மிஸ்ட் கால் 22...

“உர்ரெ டயர்டா உன்னரா...ஓகேவா பாபு”

“சுதா நைட் பல்ப் கொடுத்துட்டு கேஜி கூட போயிட்டாளா...காலையிலே கரெக்ட் பண்ணியா..”

“பாபு நுக்கு அல்லாம் ஜோக்குரா....போரா”

“டேய்...நீ பேசுற பாதி எனக்கு புரியல்ல...ஆனா பாசத்துல்ல எதோ விசாரிக்குறன்னு தெரியுது...நீ நல்லவன் டா...இரு வேலையை முடிச்சுட்டு பேசுவோம்...”

அஞ்சு மணி பக்கம் ரிப்போர்ட் எல்லாம் முடிச்சி...ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப சீட்ல்ல இருந்து எழும்புனேன்..

”ரிவியூ முடிச்சுட்டு  கொஞ்சம் கமெண்ட்ஸ் இருக்கு பிக்ஸ் பண்ணிட்டு போயிடமுடியுமான்னு ஆர்பி கேட்டாங்க” நாணா தயக்கத்தோடு கேட்டான்..

கண் எல்லாம் லேசா இருட்டிகிட்டு வந்துச்சு...உடம்புல்ல இருந்த மொத்த தெம்பையும் இழுத்து வச்சு தலையை சரின்னு ஆட்டுனேன்...

ஆறு மணி ஆச்சு....சட்டுன்னு கரண்ட் கட் ஆகிருச்சு...கம்ப்யூட்டர் மட்டும் பேக் அப்ல்ல ஓடிட்டு இருந்துச்சு...இரண்டு நிமிசம் கழிச்சு கரண்ட் வந்தப்போ...

கோரசா எல்லாரும் சேர்ந்து ஹேப்பி பர்த் டே டூ யுன்னு சத்தமா சொல்லிகிட்டே என் க்யுபிக்கல் பக்கம் கையிலே பலூனோட வந்து நின்னாங்க...எல்லாரும்ன்னா எல்லாரும் தான்...அவளும் தான்...

சட்டுன்னு ஜூரம் விட்டுப் போனாப்புல்ல இருந்துச்சு....காலையிலே இருந்து மொபைல்ல அவ்வளவு மிஸ்ட் கால் இருந்ததுக்கான அர்த்தம் அப்போத் தான் விளங்குச்சு...27வது பொறந்த நாள்....மார்ச் 31....அம்மா அது தான் காலையிலே கால் பண்ணியிருக்கணும்...சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு....டாம்....வைத்தி கூட அதான் கூப்பிட்டுருக்கான்...

எல்லாரும் கையெழுத்து போட்ட கார்ட் ஒண்ணு கொடுத்தாங்க...அதுல்ல அவக் கையெழுத்தும் இருந்துச்சு....HAPPY BIRTHDAY - RANJANI PRIYADARSHINI..
ஏழு வருசத்துக்கு முன்னாடி பாத்த அதே கையெழுத்து...அப்போ ஹேப்பி பர்த் டேக்கும் அவ பேருக்கும் நடுவுல்ல LOVEங்கற வார்த்தை இருந்துச்சு...இப்போ அது இல்ல...எனக்கு மெதுவா சிரிப்பு வந்துச்சு...

எனக்கு பிடிச்ச பிளாக் பாராஸ்ட் கேக் வாங்கி வச்சிருந்தாங்க...ஆளுக்கு ஆள் ஊட்டி விட்டாங்க...ஒரே அமர்களம் பண்ணாங்க....ஒரு பெரிய வைன் கிளாஸும்  நோ ஸ்மோக்கிங்ன்னு ஒரு பெரிய சைஸ் வால் ஹேங்கிங்கும் தந்தாங்க....கலாட்டாப்  போச்சு...

அவ கூட்டத்தோட வந்து நின்னாளே ஒழிய என்கிட்ட எதுவும் பேசல்ல...ஒரு சின்ன புன்னகையைத் தவழ விட்ட படி அவளும் கொண்டாட்டத்துல்ல கலந்துகிட்ட மாதிரி காட்டிகிட்டா..

காலையில் வீட்டுக்கு வந்தது ஞாபகம் இருந்துச்சு....அப்புறம் என்ன ஆச்சி...எப்போத் தூங்குனேன் எப்படி தூங்குனேன் எதுவும் ஞாபகம் இல்ல...

பைக்ல்ல அவ முன்னாடி நான் பைக்ல்ல உறுமிட்டு நின்னேன்....பின்னாடி ஒரு கால் டாக்சி வந்து நின்னுச்சு...என்னைத் திரும்பி பாக்கம அவ அதுல்ல ஏறவும் டாக்சி வேகமாப் புறப்பட்டு போச்சு..சரியா அந்த நேரம் பொத்துகிட்டு ஊத்துச்சு பாக்கணும் வானம்...மழைன்னா அப்படி ஒரு மழை...ஒதுங்கி நிக்கத் தான் வண்டி விட்டு இறங்குனேன்...

திடீருன்னு ஒரு எண்ணம்...பைக் எடுத்துட்டு அந்த டாக்சி போன திசையிலே நானும் போனேன்...ஒரு நூறு அடியிலே அந்த டாக்சியைப் புடிச்சுட்டேன்...கொஞ்சம் இடைவெளி விட்டு டாக்சி பின்னாட் கொட்டுற மழையிலே நனைஞ்சிட்டே போனேன்...வண்டி வேளச்சேரி ரோட்டுக்கு திரும்பும் போது நின்னுச்சு...நின்ன வண்டி நின்னுட்டே இருந்துச்சு....

எதோ பிரச்சனைன்னு தெரிஞ்சுது....அடுத்த அரை மணி நேரம் அந்த டாக்சி டிரைவரும் நானும் சேர்ந்து ஒரு வழியா வண்டியை ஓடுற அளவுக்கு ரெடி பண்ணிட்டோம்...விடாம பெஞ்சுது மழை...மொத்தமா நனைஞ்சு போயிட்டேன்..லேசா குளிர் வேற வெட வெடன்னு உடம்பை ஆட்ட ஆரம்பிச்சது...அவ வண்டிக்குள்ளேயே உக்காந்து இருந்தா...

ஒரு கணத்துல்ல வானத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம் விழுந்துச்சு பாக்கணுமே...மின்னல்...அந்த மின்னலடிச்ச வினாடியிலே அவ முகத்தை நான் எதேச்சையாப் பாத்தேன்...கடவுள் தன்னை பெண் அம்சமா படைச்சிருந்தா அது அவளைப் போல தான் இருந்து இருக்கும்...உலகின் ஆண்டவன் படைச்ச அழகுக்கு எல்லாம் சேத்து ஒரு கோயில் கட்டுனா...அதுல்ல மூல பிரகாரத்துல்ல இருக்க வேண்டிய பெண் கடவுள் அவளாத் தான் இருக்க முடியும்ன்னு தோணுச்சு....ரஞ்சனி மின்னலும் மழையுமா என் வாழ்க்கையில் வந்தவள்...

டாக்சி வீடு வரைக்கும் போக நான் தெருமுனையில்ல நின்னு அவ இறங்கி வீட்டுக்குள்ளே போறதைப் பாத்துட்டு கிளம்புனேன்..பாதி வழி வரும் போதே என் உடம்புல்ல குளிர் நடுக்கம் அதிகமாகியிருச்சு

எது எப்படியோ என் 28வது பிறந்த நாள் அதிகாலையில்ல மின்னல் மழைக்கு நடுவே அந்த ஒரு வினாடி நான் பாத்த அவ முகம் என் வாழ் நாள்ல்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பிறந்த நாள் பரிசு...

முதல் நாள் ராத்திரி நடந்த விசயத்தை எல்லாம் அப்படியே மனசுல்ல ஓட்டி முடிச்சேன்...

“ஹேப்பி பர்த் டே பாஸ்” புதுசா ஒரு குரல் கேட்டு நிமிந்தேன்...

“ஹாய் இது அஸ்வின்....என் ஃபியான்சி....” அவ தான் சிரிச்சுட்டே அறிமுகம் செஞ்சு வச்சா..

சாதரணமா சினிமாவுல்ல வர்ற அமெரிக்கா மாப்பிள்ளை எல்லாம் செக்கசெவன மீசை எல்லாம் மழிச்சுட்டு நுனி நாக்குல்ல தமிழை கொலை பண்ணுற கேரக்ட்டரா பாத்து பழக்கப்பட்ட எனக்கு அஸ்வின் ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சார்...

ஆறடிக்கு கொஞ்சம் அதிகமா உயரம்..நல்ல ஜிம் பாடி....நம்ம கலர்...கருப்பு...அடர்த்தியான முடி...அளவான மீசை....பால் சிரிப்பு....

“ஹலோ...பாஸ்...என்ன பர்த் டே அதுவுமா ட்ரீட் எல்லாம் இல்லையா?”
ரொம்ப யதார்த்தமா கலகலன்னு கேட்டார் அஸ்வின்...

எனக்கு அவரை முதல் சந்திப்பிலேயே பிடிச்சிப் போச்சு...ரொம்ப பிடிச்சிப் போச்சு...

“கண்டிப்பா பாஸ் போகலாம்....சரக்கோட....கொண்டாடிடுருவோம்...”
நானும் சிரிச்சிகிட்டே பதில் சொன்னேன்...ஓரக்கண்ணால் அவளைப் பாத்தேன்...அவப் பார்வையிலே இப்போ நெருப்பும் இல்ல வெறுப்பும் இல்ல...

”ஹேப்பி பர்த் டே.......” இப்போ அவ குரலில் தேன் தெறிச்சது....

“தேங்க்யூ....” என் மனசு சந்தோசத்துல்ல ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சது..

தொடரும்

Thursday, February 16, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 5

இதுவரை நடந்தது

உனக்கும் ஆர்பிக்கும் என்ன பிரச்சனை? அன்னிக்கு ராத்திரி ரூமுக்கு வந்த டாம் நேராவே கேட்டான்...

ஊருல்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அம்மாவுக்கு மூட்டு வலின்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு....தம்பி செம்ஸ்டர் ரிசல்ட் என்னாச்சு...உங்க அப்பா இன்னும் திருட்டு தம் அடிக்கிறாரா...அவருக்கு சிகார் வாங்கிட்டு வந்தியா?”

என்னப் பிரச்சனைன்னு கேட்டேன்?

ஏர்போர்ட்ல்ல இருந்து நேரா ஊருக்கு போயிட்டப் போல...எனக்கு சரக்கு வாங்கிட்டு வந்தீயா ...இல்ல அதை ஊர்ல்ல யாருக்காவது கொடுத்துட்டியா

அவளுக்கும்ம் உனக்கும் என்ன பிரச்சனைன்னு கேட்டுகிட்டு இருக்கேன்..

அவளையே கேளு....

டாம் நீ எனக்கு பிரெண்ட்..அதுன்னாலே தான் உன் ரூமுக்கு வந்தேன் ..இனிமே தயவு செஞ்சு என்னை அந்தப் பக்கம் கூப்பிடாதேன்னு சொல்லிட்டு போறாஎன்ன ஓ...அவ என்னையும் சேத்து அசிங்கப்படுத்திட்டு போறாடா...போர்வையை இழுத்து மூடிட்டு படுத்தேன்...டாம் அதுக்கு அப்புறமும் என்ன எல்லாமோ பேசிட்டே இருந்தான்...நான் தூங்கிட்டேன்...நல்லா தூங்கிட்டேன்...
காலையிலே நான் எழும்பும் போது டாம் ஆபிஸ்க்கு போயிட்டான்...என்னை எழுப்பவும் இல்ல....என் கிட்ட சொல்லிக்கவும் இல்ல...

சேட்டன் கடையிலே நின்னு தம்மையும் டீயையும் போட்டுட்டு பஸ ஏற புறபடும் போது லட்சுமிபதி வந்தான்..

“உர்ரே ஆபிஸ்க்கு போதானுவா....ரா...ரா...”

ஹால்ஸ் எடுத்து வாயிலே போட்டுட்டு அவன் வண்டியிலே ஏறி உக்காந்தேன்..

“உர்ரே ஐடியா செப்புரா...அம்மாயிக்கு நா பிரேமம் எப்படி செப்புதானுரா...”

ஓசியிலே ஆபிஸ்க்கு பிக் அப் பண்ணிட்டு பொண்ணை பிக் அப் பண்ண என்கிட்டே ஐடியாகேட்டான்...

“ஏற்கனவே நான் கொடுத்த ஐடியா ஏமி ஆயிந்து பாபு...ஓர்க் அவுட் ஆகல்லயா”

”உர் ரே மீரு சொன்ன மாதுரி நேனு அம்மாயி கிட்ட போய் சாங் பாடுனேன்ரா...அம்மாயி அதுல்லு இருந்து நா மீது கோப்பம்ங்கா உந்தி...ஏமி சாங்ரா அது”

“பாக மன்ச்சி லவ் சாங் பாபு...னூ ராகம்ல்லு மிஸ்டேக்கு...மறுபடியும் ட்ரை செய்யு”

சுவாதி அப்பா பேர் ரெட்டின்னாலும் சொந்த ஊர் வேலூர்ன்னாலும் பக்கவான சென்னை பொண்ணு...அவக் கிட்டப் போய் கட்ட குரல்ல மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடியிருக்கான்.. அவனோட வார்த்தையிலே சொல்லணும்ன்னா...மங்கினேன்...சொல்லு தங்கினேன்...ன்னு இழுத்துருக்கான்.. அது மட்டுமா....அவனுக்கு புடிச்ச நடிகர் ராமராசன்னு ஒரு பத்து நிமிசம் பேசியிருக்கான்...அவக் கடுப்பாகி திட்டி தாளிச்சு அனுப்பிட்டா..

“பாபு...னு சென்னைக்கு ஒச்சது டப்பு கோசம் பாப்பா கோசம் காது...டப்பு ரண்டி...ஆல் பாப்பா ரண்டி...பிரேமம்க்கு பிரேக் விட்டு வண்டியை பிரேக் போடு ஆபிஸ் வந்துருச்சுன்னு வண்டியில் இருந்து இறங்குனேன்...காதல் ஒருத்தரையும்  விட்டு வைக்காது...எல்லாரையும் எதோ ஒரு பொழுதில் சந்திச்சே தீரும் போல இருக்கு...லட்சுமிபதி மட்டும் விதிவிலக்கா என்ன...

ரிலீஸ்க்கு முதல் நாள்...பரபரவென எல்லாரும் சுத்திட்டு இருந்தாங்க...நான் என் டெஸ்க்ல்ல போய் உக்காந்து இண்டியா டைம்ஸ் சைட்டைத் திறந்து சினிமா செக்‌ஷன் பக்கம் போனேன்....ப்ரீத்தி ஜிந்தா குட்டி பாவாடையிலே ரெட்டை ஜடை போட்ட படம் ஒண்ணு இருந்துச்சு....பக்கத்துல்ல ஒல்லியா ஒரு புதுப் பொண்ணோட படம்....கரீனா கபூர்.ன்னு பேர் பாத்தேன்...பிகர் தேறுமா..நான் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ளே லட்சுமிபதி குரல் கேட்டு நிமிந்தேன்...

“மீட்டீங்ரா....தாஜ் ரூம்ல்ல” ஒவ்வொரு மீட்டிங் ரூமுக்கும் ஒரு பேர் எங்க ஆபிஸ்ல்ல...தாஜ்...சார்மினார்...கோல்கொண்டா...செஞ்சி...பிருந்தாவன்...இப்படி..
தாஜ் மூணாவது மாடியிலே இருந்துச்சு...

டீ எடுத்துட்டு நான் மீட்டீங் வர்றதுக்குள்ளே ஆரம்பிச்சுட்டா....மீட்டீங்கை...

”சில பல டிபெக்ட் இன்னும் பிக்ஸ் போடல்ல...அது இல்லாம புரொடக்‌ஷன் போறது கஷ்ட்டம்...எதாவது பண்ணனும்....இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு டெட் லைன்...” அவளே தான்...தேன் தொட்ட குரலில் கொஞ்சம் காரம் கலந்திருந்தது...

பேச்சுக்கு நடுவே என் பக்கமா அவ பார்வை திரும்புன போதெல்லாம் அதுல்ல இருந்த நெருப்பின் வீச்சு இருக்கே..அப்பப்பா...என்னை எரிச்சு என் சாம்பலை கரைச்சுட்டு தான் மறு வேலைன்னு சொல்லாமல் சொல்லுச்சு...வெக்கங்கெட்ட மனசு அவ ஆத்திரத்தையும் இல்ல சேத்து ரசிச்சுது...

அன்னிக்கு முழுக்க நான் அவ கிட்டயும் அவ என் கிட்டயும் பேசவே இல்லை..பேச வேண்டிய சந்தர்ப்பங்கள்ல்ல எல்லாம் டாம் வந்து பேச்சு வார்த்தை சுமூகமா நடக்கும் படி பாத்துக்குட்டான்...ம்ம்ம் அதை விட முக்கியமா தான் நல்லவன்...நான் தான் கெட்டவன்ங்கறதை தெளிவா விளக்குற மாதிரியே நடந்துகிட்டான்....

ஒரு மாதிரியா அந்த முக்கியமான டிபெக்ட் பிக்ஸ் போட்டு முடிக்கும் போது மணி பதினொண்ணு....அது டெஸ்டிங் பண்ணி முடிக்கும் போது மணி இரண்டு..

யாரும் வீட்டுக்கு போகல்ல....ஆங் டாம் கிளம்பியிருந்தான்....அன்னிக்குன்னு பாத்து செங்கல்பட்டுல்ல அவங்க மாமா  ஆக்சிடெண்ட்ல்ல மாட்டிகிட்டார்ன்னு போன் வந்துறுக்கு.....

நான் தான் அவனைக் கொண்டு பஸ் ஏத்தி விட்டுட்டு வந்தேன்...பொண்ணை பாத்து அவன் வேணும்ன்னா நண்பனை நட்டாத்துல்ல விடலாம்..ஆனா நான் அப்படி இல்லையே... தளபதியிலே தலைவன் சொன்ன நட்பைப் பாத்து வளந்தவனாச்சே...

”ஓ....கிரேட்...” காரம் குறைஞ்சு அவக் குரல்ல புது உற்சாகம் தெரிஞ்சது.

“சூப்பர் மக்கள்ஸ்...லெட் அஸ் நவ் வெயிட் பார் த ரிசல்ட்....குட் குட்ன்னு ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் சொல்லிட்டு இருந்தா....என் பக்கம் வரவே இல்ல...

”அய்யோ மணி இரண்டே கால்....கேப் புக் பண்ணவே இல்ல....” சுதா தான் முதல்ல சொன்னா...லட்சுமி பதி முகத்துல்ல சட்டுன்னு பல்ப் எரிஞ்சது...

“டாம் கேப் புக் பண்ணல்லயா?”  அவத் தான் கேட்டா

யாரும் பதில் சொல்லவே இல்ல....

”நோ ப்ராளம் சுதா...நேனு ட்ராப் சேசுதானு...ரண்டி.....” லட்சுமி பதி பைக் கீயோட சுதா முன்னால் போய் நின்னான்.

”கேஜி அண்ணா....நீங்க அடையார் தானே போறீங்க....ட்ராப் பண்ணிடுறீங்களா...?”

கேஜி சுதாவையும் பரிதாப முழித்த லட்சுமிபதியும் மாறி மாறி பாத்தான்...என்னை ஓரக் கண்ணால் பாத்தான்...நான் சிரிச்சேன்...

“சரி வா போலாம்....” அவங்க ரெண்டு பேரும் கிளம்புனாங்க...நானும் சிஸ்டமை ஷட் டவுன் பண்ணிட்டு அவங்களோட வெளியே போனேன்...லட்சுமி பதி தலையைத் தொங்கப் போட்டுட்டு கூடவே வந்தான்...

வாசல் தாண்டும் போது லேசா தலையைத் திருப்பி அவளை அவளுக்குத் தெரியாமல் பாத்தேன்...அவளும் கிளம்பிட்டு இருந்தா...எதையோ தேடிட்டு இருந்தா...நான் நடந்தேன்...

பை பை குட் நைட் எல்லாரும் கிளம்பினார்கள்...ஒரு தம்மை போட்டுட்டு கிளம்புலாம்ன்னு பத்த வச்சேன்..குளிர் காத்து முகத்துல்ல வந்து அறைஞ்சது...

பத்து நிமிசம் ஆச்சுது....ஆனா அவ வெளியே வர்றல்ல...அடுத்த தம்மை எடுத்து பத்த வச்சேன்....இன்னொறு பத்து நிமிசம் போச்சு...அப்போவும் அவ வெளியே வர்றல்ல...மூணாவது தம்மை பத்த வைக்கும் போது...அவ வெளியே வந்தா...

வெள்ளை சுடிதார்...வெள்ளை கைப்பை...காற்றில் அலை பாஞ்ச முடி...சத்தம் சன்னமா வரும் மெல்லிய கொலுசு போட்டிருந்தா அதை அப்போத் தான் கவனிச்சேன்...கை இரண்டையும் குறுக்கா கட்டிகிட்டு நின்னா...

நான் பைக்ல்ல சாஞ்சு நின்னபடி கொஞ்ச நேரம் வச்ச கண்ணு வாங்காம உ உதட்டரோம் ஒரு சிரிப்பு வழிய அவளை ரசிச்சு பாத்துட்டு இருந்தேன்..அதே நேரம் அவளும் என்னைப் பாத்தா...

அந்தக் கண்ணு கருவிழியிலே என் உருவம் பட்ட ஒரு வினாடியிலே அவக் கண்ணு ரெண்டுல்லயும் தீ பிடிச்சிருச்சு... சட்டுன்னு முகத்தை வேற பக்கம் திருப்பிகிட்டா...நான் மூணாவது சிகரெட்டை நிதானமா ஊதி தள்ளிட்டு வண்டியைக் கிளப்புனேன்...ஒரு உறுமல் கொடுத்து கிளப்புனேன்...

அவ என் பக்கம் திரும்புவான்னு நினைச்சேன்...அவத் திரும்பவே இல்ல...எனக்கு சிரிப்பு வந்துச்சு....பைக்கை அவ பக்கமாக் கொண்டு போய் நிறுத்தி இன்னும் உறுமலை அதிகப் படுத்துனேன்....

தொடரும்

Thursday, February 09, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 4

இதுக்கு முன்னாடி படிக்க

உடம்பு சரியாகி ஆபிஸ்க்கு போன முதல் நாள்...அவளைப் பாக்க அவ கேபினுக்கு போனேன்....போனி டெயில் போடிருந்தா முன் நெத்தியிலே கத்தையா கொஞ்சம் முடி சரிஞ்சு விழுந்து கிடந்துச்சு.....சந்தனத்தை அரைச்ச கலர்ல்ல ஒரு சல்வார்...கையிலே ஒரு வளையல்...அவ லேப் டப் தட்டுற தாளத்துக்கு அந்த வளையல் போட்ட ஆட்டத்தை நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு...

சட்டுன்னு அவ தலையை  தூக்கி என்னை பாத்தப்போ தான் நான் என் கண்ணை அவ வளையல் ஆட்டத்துல்ல இருந்து  எடுத்தேன்

ஒரு சின்ன சிரிப்போட என்னைப் பாத்து அந்த தேன் தொட்ட குரல்ல என்னைப் பாத்து."வெல்கம் பேக்.....ம்ம்ம் முப்பது நிமிசத்துல்ல வர்றேன்னு சொல்லிட்டு மூணு மாசம் வெயிட் பண்ண வச்சிட்டீங்களே....கம் இன் ...." கையைக் கொடுத்தா...

புதுசா பூத்த ரோஜாப் பூவை எடுத்து உள்ளங்கையிலே வச்சு  அழுத்துனாப்புல்ல இருந்துச்சு எனக்கு...

"சாரி இந்த வாட்டி கொஞ்சம் லேட்டாயிருச்சு...அடுத்த வாட்டி சொன்ன டைம்க்கு கரெக்ட்டா வந்துருவேன்...பாருங்க" நானும் சிரிச்சுகிட்டே சொன்னேன்

"இந்த வாட்டியே டாக்டரை வச்சு எமதர்பார்ல்ல எக்ஸ்ட்ரா டைம் கேட்டு வாங்கியிருக்காங்க பாஸ் அடுத்த வாட்டி எல்லாம் கேஸ் நிக்காது.... எனிவே குட் டு சி யு பேக் (Any ways good to see you back)”  அப்படி சொல்லிட்டு  மறுபடியும் சிரிச்சா..அந்த சிரிப்பு உள்ளே வரை போய் எனக்கு இன்னொரு பிறப்பைக் கொடுத்துட்டு வந்து என் உதட்டுல்ல உக்காந்த்துச்சு

கொஞ்ச நேரம் அவகிட்ட அதே சிரிப்பு குறையமா பொதுவா பேசிட்டு இருந்துட்டு என் சீட்டுக்குக் கிளம்புனேன்.... ரெண்டு அடி எடுத்து வச்ச பிறகு என்னமோ தோணுச்சு திரும்பி அவ சீட்டுக்கு வந்து

ரஞ்சனி....ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு அவ பதிலுக்கு எதிர்பாக்கமா நடந்தேன்.. அந்த கேப்புல்ல இரு கண்ணையும் லேசா மூடி திறந்து மறுபடியும் அந்த சிரிப்பு சிரிச்சா பாருங்க ரஞ்சனி
எல்லா அகராதியிலும் அழகுன்னா அதுக்கு அர்த்தமா உம் அவ பேர் தான் இருக்கணும்ன்னு என் மனசுக்குள்ளே தோணுச்சு

அடுத்த சில் நாள் ஆபிஸ்ல்ல வேலை ஜாஸ்தியாகிடுச்சு...டாம் கிளையண்ட் சைட்டுக்கு போய் இருந்தான்...இன்னும் ஒரு மாசம் அங்கே தான் இருப்பான்.... நாணாவுக்கு மலேரியா வந்து வீட்டுல்ல படுத்துட்டான்...

புராஜக்ட்ல்ல எல்லாரும் புதுசு....ரிலீஸ் தேதி வேற நெருங்கி வந்துட்டு இருந்துச்சு....புது பசங்கள்ல்ல முக்கியமா சொல்ல வேண்டிய பசங்கன்னா...கேஜிங்கற கிருஷ்ணகிரி....சொந்த ஊர் சிக்கிம்...சென்னை வந்து பத்து வருசம் ஆச்சு....டேட்டா ஸ்பெஷலிஸ்ட்...

அடுத்து சுதா....முதல் புராஜெக்ட்...அண்ணா யுனிவர்சிட்டி டாப்பர்...

அப்புறம் லட்சுமிபதி ஊர் ஆந்திரா கடப்பா....பாலகிருஷ்ணாங்கற மகத்தான தெலுங்கு கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்துன பெருமை இவனையே சேரும்.பதிலுக்கு அவனுக்கு நம்ம கேப்டன்...பசுநேசன்ன்னு தமிழகத்தின் மகத்தான கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தி வச்சது தனிக்கதை..

இதுல்ல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் சுதாவுக்கு சொந்த ஊர் வேலூர்...அவங்க அப்பா பேர் ராமாரெட்டி அந்த விவரத்தையும் விளக்கமா சொல்லுறேன்... இப்போதைக்கு புராஜக்ட் முக்கியம் அதுனாலே அதைக் கவனிப்போம்

 முதல் ரிலீஸ்க்கு இரண்டு வாரம் தான் இருந்துச்சு...ராத்திரி பகல் பாக்கமா ஆபிஸே கதின்னு கிடந்து வேலை பாத்தோம்...டீ...தம்ன்னு குறையாம டென்சனை ஊத்தியும் ஊதியும் தள்ளி வேலை பாத்துட்டு இருந்தேன்..
எல்லார் கிட்டயும் அதே சிரிப்பு எப்போவும் சுறுசுறுப்பு கொஞ்சம் குறும்புன்னு ரஞ்சனி எப்பவும் ஆபிஸ்ல்ல வளைய வந்துட்டிருந்தா

சுருக்கமா சொல்லணும்ன்னா அந்த புராஜக்ட்க்கு அவ தான் ஆணி வேர்ன்னு சொல்லணும்...எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா...சனி ஞாயிறுன்னு பாக்கமா அவ முன்னால நின்னு எல்லாரையும் உற்சாகமா வேலை செய்ய வச்சா...அவப் பாக்காத நேரம் எல்லாம் அவளையே நான் பாத்துட்டு இருந்தேன்...அவளை நான் பாக்காத நேரம் மனசுக்குள்ளே ஓரு ஓரமா அவ ஞாபகம் இருந்துட்டே இருந்துட்டே இருந்துச்சு...அவளை நினைக்கும் போதெல்லாம் என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒரு பரவசம் பரவும்...ரஞ்சனி ஒரு தேவதை

ஒரு ஞாயித்து கிழமை ரூம்ல்ல தனியா இருந்தேன்....சன் டிவியிலே சூர்யா ஜோதிகாவை துரத்தி துரத்தி உயிரின்  உயிரேன்னு பாடிக்கிட்டு இருந்தான்... மனசு பரபரன்னு ரஞ்சனியின் ஒவ்வொரு ஞாபகமாய் விரட்டிட்டு போயிட்டு இருந்துச்சு....என் சூட்கேஸ்ல்ல இருந்த என் பழைய  ஸ்கெட்சிங் பேடை எடுத்துப் பிரிச்சேன்... மனிதன் படத்து தலைவரின் அம்சமான பென்சில் ஸ்கெட்ச்சில் ஆரம்பிச்சு நெல்லையப்பர் கோயில் வாசல் பூக்காரம்மா...பத்தாம் கிளாஸ் மேத்ஸ் எடுத்த ஆலிஸ் டீச்சர்...சுருட்டை முடியோட சின்ன வயசு சச்சின்...எதோ ஒரு புடவை கடை வெளம்பரத்துல்ல பாத்த அந்தக் காலத்து மீனா...ஆங்....ஹாலிவுட் படம் பாக்க ஆரம்பிச்ச காலத்துல்ல வரைஞ்ச சல்மா ஹய்கோட பிகினி படம் இப்படி பக்கம் பக்கமா படங்களை புரட்டிகிட்டே வந்தேன்....கடைசி பக்கத்துல்ல  பாளையங்கோட்டை வீட்டு மதில் சுவரோரம் நின்ன மல்லிக் கொடி...அது பக்கத்துல்ல நான் அப்போ பாத்த ரஞ்சனி.....நான் வரைஞ்ச படம்...

ரஞ்சனி நிறைய மாறி இருந்தா...மாத்தம் எல்லாம் ஏத்தம் கொடுக்கறதுக்கு கொஞ்ச பேருக்கு தான்..அதுல்ல ரஞ்சனி நிச்சயம் ஒருத்தி...அழகுக்கு அழகு சேர்ந்திருஞ்சு...ஒளிக்கு ஒளி சேந்துருச்சு...ரஞ்சனி தேவதையா இருந்தா இப்போ தேவதைகளுக்கு எல்லாம் அரசியாயிட்டா...

கடைசியா ரஞ்சனி படத்தை வரைஞ்சப் பிறகு நான் வேற எந்த படமும் வரையல்லங்கற விவரமும் எனக்கு புரிஞ்சது...கிட்டத்தட்ட பத்து வருசம் கழிச்சு வரையணும்ன்னு தோணுச்சு...மறுபடியும் ரஞ்சனியை வரையணும்ன்னு தோணுச்சு....

நோட்டை எடுத்துட்டு அப்படியே வெளியே வந்து உக்காந்தேன்....மனசுக்கும் விரலுக்கும் என்ன தொடர்போ தெரியல்ல....அப்படியே ரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமா நோட்ல்ல தெரிய ஆரம்பிச்சா....முன் நெத்தியிலே விழுந்த கத்த முடி அதை அவ விரலை வச்சு நெட்டி தள்ளிட்டு பூவா உதட்டை குவிச்சு அவ சிரிக்கிற மாதிரி....கசங்காத அவ மேலாடை...பாத்து பாத்து வரைஞ்சு முடிச்சு நிமிந்தா.....

“என்னடா பண்ணிட்டு இருக்க....ஏர்போர்ட்க்கு வருவேன்னு பாத்தேன்...வரவே இல்ல....ஒரு போன் கால் கூட இல்ல.......அப்படி என்ன பிசியா இருக்க....”

சட்டுன்னு நோட்டை என் கையில் இருந்து பிடுங்கிட்டான் டாம்....

“சார்  ரொம்ப பிசி போல....” அந்த தேன் தொட்டக் குரலுக்கு சொந்தக்காரி டாம்க்கு பின்னாடி படியேறி வந்தா...

“மாப்ளே...இதெல்லாம் நீ வரைஞ்ச படமாடா...சொல்லவே இல்ல....இவ்வளோ நல்லா வரைவீயா....வாஆஆஆவ்”

“கொடு பாப்போம்.....” அவன் கிட்ட இருந்து அவ நோட்டை பிடுங்கினா...

“மச்சி எல்லாம் தலைவர் படம் தானா.....பாருடா  காஜோல்.....தில் வாலே படத்துல்ல தானே ...இந்த குட்டியூண்டு ஸ்கர்ட் போட்டுட்டு மழையிலே ஆடுவா...அப்படியே இருக்கா.......”

ஒவ்வொரு பக்கமா புரட்டிட்டு இருந்தாங்க....

“ஹே இது....மார்டின் லூதர் கிங்...பக்கத்துல்ல சே குவேரா....இது.....”

“மால்கம் எக்ஸ்”

“பொண்ணுங்க படமா தான் இருக்குன்னு பாத்தேன்....இவங்க படமும் இருக்கே பரவாயில்லயே”

“எனக்கு பிடிச்சவங்க படம் எல்லாம் இருக்கும் மனசுக்கு பிடிச்சா தான் வரைய முடியும்”

“மச்சி ஷகிலா சேச்சி படம் ஒண்ணு வரைய முடியுமாடா....” டாம் அடுத்த பக்கம் பொரட்ட இருந்தப்போ அவன் போன் அடிக்க  “ஆர்பி நீங்கப் பாருங்க....இதோ வர்றேன்” அவன் அந்தப் பக்கம் போனான்...

“மனசுக்குப் பிடிச்சவங்களைத் தான் வரைய முடியும்...சரி ரொம்ப சரி...”
ரஞ்சனி புரட்டுன பக்கத்துல்ல இப்போ அவ பாத்தது அவளோட படத்தை....அந்த மல்லி கொடிக்கு பக்கத்துல்ல அவ நிக்குற படத்தை.... பக்கத்துல்ல நான் பாதி வரைஞ்சிருந்த அவளோட இப்போதைய படத்தை....

நான் அவளையே பாத்தேன்....அவ  நோட்டு புக்ல்ல இருந்து கண்ணை எடுக்கவே இல்ல....

அவளோட செல்போன் அடிச்சுது.....எடுத்து கிசுகிசுன்னு எதோ பேசுனா....

“ஹே போன்ல்ல யாரு தெரியுமா அஸ்வின் என்னோட வுட் பி....வேலண்டைன்ஸ் டே நாளைக்கு...அவருக்கு கிப்ட் வாங்க தான் கிளம்புனேன்...போற வழியிலே உங்களையும் பாத்துட்டு போலாம்ன்னு டாம் சொன்னான்...வந்தது நல்லதாப் போச்சு....கிப்ட் கிடைச்சுருச்சு....”

நான் புரிஞ்சும் புரியாமலும் அவ அடுத்து என்ன சொல்ல வர்றான்னு கேக்க அப்படியே நின்னேன்...

“இந்த படம் நல்லாயிருக்கு....இது அஸ்வின் கிட்ட இருக்கணும்...ஹி வில் லவ் இட்...ஆக்சுவலி ரெண்டு படமும்....” நோட்டை எடுத்து வச்சிகிட்டா...

“இந்த படம்  இன்னும் முழுசா வரைஞ்சு முடிக்கல்ல”

“வரைஞ்ச வரைக்கும் போதும்” கடைசி வார்த்தைக்கு அழுத்தம் அதிகம் கொடுத்து சொன்னா...”வரைஞ்ச வரைக்குமே நல்லாயிருக்கே....இது கண்டிப்பா அஸ்வின் கிட்ட இருக்க வேண்டிய படம்...”  திரும்பவும் அழுத்தமா சொன்னா...

அது வரைக்கும் எனக்கு வராத கோவம் சட்டுன்னு வந்துச்சு....அவக் கையிலே இருந்து நோட்டை வாங்குனேன்...கிட்டத்தட்ட இழுத்து பிடுங்குனேன்...

“உங்க அஸ்வினுக்கு வேணும்ன்னா அவரை வரையச் சொல்லுங்க...இல்ல நீங்க வரைஞ்சு கொடுங்க....இது எனக்கு வேணும்...இது என் கிட்டத் தான் இருக்கணும்...இருக்கும்”  அவ கொடுத்த அழுத்தத்தையும்  தாண்டி அழுத்தமாய் சொன்னேன்...

முதல் முறையா அவக் கண்ணுல்ல நெருப்பு பூக்குறதைப் பாத்தேன்....

தொடரும்

Friday, February 03, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 3

முன் கதைப் படிக்க...

ட்ரிங் ட்ரிங்....ரஞ்சனி ப்ரியதர்ஷினி டெஸ்க்ல்ல இருந்த போன் அலறிகிட்டே இருந்துச்சு யாரும் எடுக்கல்ல...மூணாவது முறையா ட்ரை பண்ணேன்...கிட்டத்தட்ட கடுப்பாகி கட் போன நேரத்துல்ல "ஹலோ...ஆர்பி ஹியர்..."

தேன்ல்ல ஊறப்போட்ட
அதே குரல் காதுல்ல வந்து விழுந்துச்சு..குரல்ல வழியுற தேன்ல்ல மனசை நனைய விடக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிகிட்டு குரலைச் சரிப்படுத்திகிட்டு...

"ஹலோ...டெஸ்டிங் லீட் பேசுறேன்ங்க...."அப்படின்னு ஆரம்பிச்சேன்
"ஓ..ஒகே...வாட்ஸ் இட் ரிகார்டிங்....(Oh Ok what is it Regarding)"

"அது வந்துங்க அந்த புது ரிக்கொயர்மென்ட்(Requirement) பத்தி..."
"ஓ..ரைட் நவ் அயம் ரன்னிங் பார் ஏ மீட்டிங்க்...கேன் யு செக் மை கேலண்டர் அன்ட் பிக்ஸ் அப் ஏ மீட்டீங் சம் டைம் டுமாரோ...(Oh Right now am running for a meeting..Can you Check my Calender and fix up a meeting sometime tommorrow)"

"இது கொஞ்சம் அவசரம்ங்க..."
"ஓ பாய்...கான்ட் யு அன்டர்ஸ்டேண்ட் ...ஐ கான்ட் ஹெல்ப் இட் ..யு ஹேவ் டு வெயிட் டில் டுமாரோ...சாரி...(Oh Boy..Can't you understand...I cant help it..you have to wait till Tommorrow...sorry")

ஓகேன்னு போனை வச்சிருக்கலாம்...ஆனா நான் வைக்கல்ல..என் விதிக்கு என்னை இழுத்து வீதியிலே விடுறதே வாடிக்கையாப் போச்சே
"நான் என்ன உங்களை சாயங்காலம் காபி டேக்கு டேட்டிங்க் போலாமான்னு கூப்பிட்டேன்.. புராஜ்க்கெட் விஷயமா பேச தானே கேட்டேன்...உங்க டைம் இப்போ அவசரமா வேணும்...யு பெட்டர் அன்டர்ஸ்டேன்ட் தட்...( You better understand it)"

அந்த பக்கம் பத்திக்கிச்சு...அவ அழுத்தமா மூச்சு விடுறதை வச்சே அங்கே இருக்க சூடு இங்கே எனக்கு தெரிஞ்சது..அதைப் பத்தி நான் கண்டுக்கல்ல..எனக்கு என் கோவம்..அவளுக்கு அவ கோவம்

"மைன்ட் யுவர் லாங்க்வேஜ் ( Mind your Language).. நீங்க கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிக்க நான் ஒண்ணும் இங்கே வெட்டியா உக்காந்துட்டு இல்ல்...புரியுதா... சென்ட் மீ ஏ ரிக்கொஸ்ட் ஐ வில் ரெஸ்பான்ட் (Send me a request ..I will respond)" கெத்து குறையாமல் பொரிஞ்சு தள்ளுனா


நானும் இறங்கல்ல..."கோவம்ன்னு வந்தா தான் சில பேருக்கு சொந்த மொழி வருது.....தமிழுக்கு மாறிட்டீங்க...எனிவே தட்ஸ் நன் ஆப் மை பிசினெஸ்( Anyway thats none of my business)...நான் உங்களை மீட் பண்ணனும்...இன்னிக்கே மீட் பண்ணனும்...வேர் ஆர் யு சிட்டிங்? (Where are you seated)"


"ம்ம் வாங்க பாக்கலாம்...ஐ யாம் வெயிட்டீங்...(I am waiting) அடுத்த 30 நிமிஷம் பேசலாம்...ரைட் அவே... (Right away) நான் சிறுசேரி ஆபிஸ்ல்ல இருக்கேன்....3வது ப்ளோர் லெப்ட் விங்க்...( 3rd Floor Left wing) சீட் நம்பர் 3A123 ( Seat number 3A123)
சொல்லி முடிக்கும் போதே அவ பேச்சுல்ல இருந்த திமிரோட அளவு அதிகரிப்பதை என்னால உணர முடிஞ்சுது..


நான் இருக்கது அண்ணா சாலை ஆபிஸ்... சிறுசேரிங்கறது பழைய மகாபலிபுரம் சாலையின் மறு கோடியில்ல இருக்கு..ஐடி கம்பெனி எல்லாம் மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு வசதி எல்லாம் பண்ணிக் கொடுக்க தோதா வருமான வரி விலக்கோட தொழில் நடத்த சென்னைக்கு ரொம்பவே கொஞ்சமா தள்ளி ஒரு தொழில் பூங்கா அமைச்சுருக்க இடம் தான் இந்த சிறுசேரி....என் கதை நடந்த காலத்துல்ல அது ஒரு பொட்டல் காடு...ஏன் சுடுகாடுன்னு கூட ஒரு கதை உண்டு...ராத்திரில்ல ஆபிஸ்ல்ல எல்லாம் எப்போவோ செத்து போன மக்கள் எல்லாம் உலா வந்து போவதா சிறுசேரி பத்தி பீதி கிளப்பும் கதைகள் ஏராளமா கேள்விபட்டதுண்டு..இப்போ கதையை நீங்க படிக்கிற காலத்துல்ல இருக்க சிறுசேரி ரியல் எஸ்டேட்டின் சொர்க்கபுரி...ஐடி மனிதர்களின் தொழில் சாம்ராஜ்ஜியம்...சரி கதைக்கு வருவோம்


எப்படி கிளம்பி எந்த ரேஸ் பைக்ல்ல காத்தை கிழிச்சுட்டு போனாலும் 30 நிமிச கெடுவுக்குள்ளே போய் சேருவது ரொம்ப ரொம்ப கஷ்ட்டம்..

ஆனாலும் தேவர் மகன்ல்ல கமல் சொல்லுவாரே நமக்குள்ளே தூங்கிட்டு இருக்க மிருகம் அதாங்க சிங்கம்...அந்த சிங்கத்தோட என்னைச் சும்மா இருக்க விடுல்ல...

"ஐ வில் பி தேர் இன் 30 மினிட்ஸ்(I will be there in 30 minutes) "அப்படின்னு சொல்லிட்டு அவ பதிலுக்கு காத்திருக்காம போனைத் துண்டிச்சுட்டு படுவேகமா கிளம்புனேன்...லிப்டை கூட எதிர்பாக்காம நாலாவது மாடியில் இருந்து பல படி தாவி இறங்கி பார்க்கிங்கை நோக்கி ஓடுனேன்..நான் செய்த ஒரே நிதானமான விசயம் கையோட ஹெல்மேட்டை எடுத்து வச்சுகிட்டது தான்னு நினைக்குறேன்..

யமஹாவை மெதுவா ஒரு தட்டு தட்டிக் கொடுத்துட்டு ஒரே தாவா தாவி ஏறி உக்காந்து கிக் ஸ்டார்ட்டை ஒரே உதை உதைச்சேன்...என் அவசரம் புரிஞ்ச என் யமாஹா தோழன் சர்ர்ர்ன்னு சீறுனான் அவனை இன்னும் கொஞ்சம் லாவகமா முறுக்கி பார்க்கிங் குறுக்காக ஓட்டுக்கிட்டு மெயின் ரோட்டில் பாஞ்சேன்..


போற வழியில் இருந்த எந்த சிக்னல் ரெட் லைட்டும் என் கண்ணுக்கு தெரியவே இல்லை...


"டேஏஏஏஏஏய் சாவுகிரக்கி..வூட்ல்ல சொல்லிட்டு வந்துட்டீயா....." சைதாப்பேட்டை மேம்பாலம் பக்கம் ஒரு சைக்கிள்காரர்


"பாதியில்ல பாடை ஏற போறியாடா பன்னாட..." கிண்டி திருப்பத்தில் சீறும் பாம்பை நம்பு சிரிக்காதான்னு மிகப் பெரிய தத்துவம் சுமந்த ஒரு ஆட்டோவுக்கு சொந்தக்காரர்


"அடிங்கொய்யாலே யமாஹா தானே ஓட்டுற ஏரோப்ளேன் ஓட்டுறா மாதிரி போற எங்கேயாச்சும் போய் சொருகிக்காதே சோ......ரி" முடி குறைந்த ஒரு மினி லாரி டிரைவர்


"ஸ்டுபிட் கிரிப்..... (Stupid Creep)" ஒரு காலேஜ் பிகர்...ஒரு நொடி நிறுத்தி திருப்பி பாத்து சாரி கேக்குறதுக்கு அது ஒர்த் தானான்னு அதே ஒரே நொடியிலே ஒரு முடிவுக்கு வந்து சாரி கேட்டுட்டு மீண்டும் வண்டியை விரட்டிட்டு போனேன்


இப்படி வகைவகையா வசவை எல்லாம் வாங்கி கட்டி வாரி சுருட்டிகிட்டு அண்ணாசாலை துவங்கி மத்தியகைலாஷ் சிவன் கோயில் வரை எங்கேயும் நிக்காமல் போயிகிட்டு இருந்தேன்...
இன்னிக்கு ஐடி உலகின் கனவு பாதையா இருக்க ராஜீவ் காந்தி சாலை அப்போத் தான் உருவாக்கத்தில் இருந்ததுச்சு...அதிகமா கூட்டமில்ல.. சாலையும் யமஹாவை விரட்டுற தரத்தில் இல்ல...அத எல்லாம் யோசிச்சு நிதானம் கடைப்பிடிக்குற தெளிவுல்ல சத்தியமா நானும் இல்ல...


திருவான்மியூர் பக்கம் வரும் போது மழை பிடிக்க ஆரம்பிச்சது...சாலை ஓர மரங்களாப் பாத்து பைக் ஓட்டுறவங்க எல்லாம் ஒதுங்க ஆரம்பிச்சாங்க...

புத்தி காட்டுற வழியிலே போனா வாழ்க்கையிலே சேதாரம் கம்மி..ஆனா மனசுன்னு ஒரு குரங்கு இருக்கே அது இழுக்குற இழுப்புக்கு போனா இழப்பு தான்..புத்தி மரத்தைக் காட்டி ஒதுங்குன்னு சொல்லிச்சு..ஆனா மனசு மசமசன்னு நிக்காம கிளம்பு....இன்னும் 13 நிமிசம் தான் இருக்குன்னு உசுப்பி விட்டுச்சு
.
யமஹா லேசா இருமிக் காட்டிச்சு...அதயே உறுமலா எடுத்துகிட்டு திரும்பவும் சிறுசேரிக்கு சாகசமாப் புறப்பட்டேன்..


பெருங்குடியைத் தாண்டும் போது மழை ரொம்பவே வலுக்க ஆரம்பிச்சிருச்சு... தானா குறைஞ்ச வேகத்தை குறையமாக் கூட்டுறதுல்லயே தான் என் கவனம் இருந்துச்சு...ஹெல்மெட் வைசர் வழியா மழைத் தண்ணி முகத்துல்ல வழிய ஆரம்பிச்சது அத துடைக்க கூட நிக்கமா போயிட்டே இருந்தேன்..


யார்கிட்ட திமிரு காட்டுற....30 நிமிசம் என்ன நான் மனசு வச்சா 30 செகண்ட் போதும் வந்து சேர....அவ முகம் பாத்து விரலை சொடுக்கி சொல்லிட்டு இருந்தேன்....

ஐயாம் சாரி....அந்த தேன் தொட்ட குரல்ல அவ குழைஞ்சு நெளிஞ்சு சொல்லுறதக் கேக்க கொடுத்து வச்சிருக்கணும்...

அவ்வளவு என்ன ஒரு பொண்ணுக்கு ஆணவம்...ஒரு ஆம்பளை கிட்ட பேசும் போது எப்படி பேசணும்ன்னு தெரியாம வளந்துருக்கா...சொல்லிக் கொடுப்பேன்ல்ல...

வேலை வெட்டி இல்லையா நீ கூப்பிட்டா வர்றதுக்குன்னு கேக்குற...அன்னிக்கு நீ போன் பண்ணி கூப்பிட்டன்னு தானே சனிக்கிழமைன்னு கூட பாக்கமா காலையிலே 8 மணிக்கு எல்லாம் ஆபிஸ் வாசல்ல வந்து நின்னோம்....எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா....

இப்படி எல்லாம் மனசுக்குள்ளே மாறி மாறி ஓடிட்டுருந்த மொத்த ரீலும் ஒரே கணத்துல்ல அறுந்து தொங்கிச்சு...என்ன ஆச்சுன்னு நான் முழுசா புரிஞ்சுக்கறதுக்குள்ளே..

யமஹா ஒரு பக்கம்...ஒரு பக்கம்ன்னு...சிதறி தெறிச்சுட்டுருந்தோம்...கண்ணை மூடி திறந்தப்போ எதோ ஒண்ணு பெருசா மொத்த பார்வையும் மூடிருச்சு... முகத்துல்ல வழிஞ்ச ரத்தத்தை கைல்ல லேசா தொட்ட மாதிரி இருந்துச்சு.....அப்படியே கண் எல்லாம் இருட்டிட்டு வந்துருச்சு...

அய்யோ யாரு பெத்தப் புள்ளயோ.... ஒரு குரல் லேசா காதுல்ல விழுந்துச்சு....அது ஒரு வயசானப் பாட்டி குரலாத் தான் இருக்கணும்...அதுக்கு மேல காதுல்லயும் எதுவும் விழல்ல

சில பேரு கும்பலா வந்து என்னைத் தொட்டு தூக்குற மாதிரி இருந்துச்சு...அந்த உணர்வு அடுத்த சில வினாடிகள்ல்ல கொஞ்சமா கொஞ்சமா குறைஞ்சு மொத்தமா ஒரு சூனியத்துக்குள்ளே நான் போயிட்டேன்...

சாதரணமாச் சொல்லணும்ன்னா வேகமா போன என் யமாஹாவும் நானும் ஒரு பள்ளத்துல்ல தடுமாறி நிலை சரிஞ்சு....விபத்துல்ல சிக்கிட்டோம்....

எத்தனை நாள்...எத்தனை வாரம் எதுவும் ஞாபகம் இல்ல....ஆஸ்பத்திரில்ல இருந்து இருக்கேன்...தலையிலே அடியாம்...ஆனாலும் காப்பாத்தி இருக்காங்க...கம்பெனி இன்சுரன் ஸ் உதவியிருக்கு...

அப்பா அம்மா டாம் மூணு பேரும் இருந்தாங்க....பேசணும்ன்னு நினைச்சு வாயைத் திறந்தா பேச்சு வர்றல்ல...சிரமப்படுத்திக்க வேணாம்ன்னு சொன்னாங்க...

"பைக்கை கொண்டு போய் அப்படி விட்டுருக்க....குடிச்சுருந்தியாக் கேட்டாங்க போலீஸ்ல்ல..அப்படி என்ன அவசரம் உனக்கு என்கிட்டக் கூட சொல்லாம எங்கே கிளம்புன..." டாம் கைல்ல ஆரஞ்சு ஜூஸ் கிளாஸ் எனக்கு குடுக்காம அவனே முழுசையும் குடிச்சுட்டு பேசிட்டே இருந்தான்

அம்மா அப்பா பாக்கவேக் கஷ்ட்டமா இருந்துச்சு...எதுவும் பேச முடியல்ல....அப்பா ஆதரவாத் தலையை வருடிட்டி எழுந்து வெளியே போனார்...அம்மா அழுதாங்க....

ரேடியோவைப் போடச் சொல்லி சைகை காமிச்சேன்....நேரங்கெட்ட நேரத்துல்ல எனக்கு பிடிச்ச பாட்டைப் போட்டான் சூரியன் எப் எம்ல்ல...

"நான் உள்ளே வரலாமா.....?" அந்த தேன் தொட்ட குரல்...அவளே தான்....

தலையைத் திருப்ப முடியாம அவ முகம் பாக்க சிரமப்பட்டேன்..

"தம்பி...எவ்வளவு வருசமாச்சு...ஆனாலும் நம்மளை எல்லாம் ஞாபகம் வச்சிருக்காப்பா...தேவதை மாதிரி வந்து உதவியிருக்காப்பா...ஆசுபத்திரில்ல இருந்த அஞ்சு வாரமும் தவறாம வந்து விசாரிச்சாப்பல்ல எல்லா விதத்துல்லயும் துணையா இருந்தாப்பா....ஆனா நீ தான் ஒரு வார்த்தையும் சொல்லவே இல்லப்பா"

அம்மா சொல்ல சொல்ல ஒண்ணும் புரியாம கண்ணை உருட்டுனேன்... சந்தன வாசம் அப்படியே காத்துல்ல தவழ்ந்து வந்து நாசியிலே நிரம்பி நின்னுச்சு....

அவ கிட்ட வந்துட்டா...சரசரன்னு பட்டு புடவை...லேசா ஒலி எழுப்புற கொலுசு....கொஞ்சமா குலுங்குற வளையோசை.முகத்துல்ல விழுந்து கத்தை முடியை ஒத்த விரல் வச்சு வழிச்சு அவ விசிறி விட்டதுல்ல நிலாவுல்ல பனித்துளி பட்டு தெறிச்சா எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு...மிச்ச முடியையும் தள்ளிவிட்டு என் பக்கமா முகம் திருப்புனப்போ...ஒரு கணம் என் உயிர் என்னைவிட்டு போயேப் போச்சு....

ர ஞ் சனி.. சத்தம் வராமல் என் உதடு மட்டும் அசைஞ்ச அதே பொழுதுல்ல...

ஹாய்...ஆர்.பி....ஹியர்..... சிரிச்சுகிட்டே என்னைப் பாத்தா....

என்னம்மா பட்டுப் புடவை எல்லாம் கட்டிகிட்டு கல்யாண பொண்ணு மாதிரி அமர்களமா இருக்கே..." அம்மா கேட்டாங்க

ஆமா ஆன்ட்டீ கல்யாணம் தான்...அடுத்த மாசம் 26ஆம் தேதி....இதோ பத்திரிக்கை...கொடுத்துட்டு சாரையும் பாத்துட்டு போலாம்ன்னு தான் கோயில் போயிட்டு நேரா வர்றேன்...இந்தாங்க பிரசாதம்..."

அப்புறம் கல்யாண பத்திரிக்கை...கண்டிப்பா வரணும்....முக்கியமா சார் வரணும் அவர் வர்றல்ல எப்படி என் கல்யாணம் நடக்கும்" சிரிச்சிட்டே இருந்தா....

எத்தனை வருசம்....எவ்வளவு நாள்....மறுபடியும் உன்னை சந்திப்பேன்னு நான் நினைக்கவே இல்ல...அதுவும் இப்படி.....

ரேடியோவில் பாட்டு முடிஞ்சுது....என் மனசுல்ல பாட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஓட ஆரம்பிச்சது...

தொடரும்