
என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்
யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...
வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..
உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..
என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..
முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...
அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..
சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்
வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்
ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி
33 comments:
தேவ்,
நல்ல அருமையான கவிதை. கற்பனையா அல்லது அநுபவமா?
Very Good
தேவ்...
காதலை ஏன் இப்படி புழியிறீங்க..:P
இந்த கவிதைக்கு என்னோட மறு கவிதை...
காதலி உன்னைப் பிரிந்திருக்கலாம்
காதல் பிரியவில்லை
சோகம் உன்னை சூழ்ந்திருக்கலாம்
உன் சுகங்கள் மறையவில்லை
நினைவுகளின் சுமைகளும்
நிஜத்தின் பொய்களும்
உன்னோடு பேசுமா?
உன் காதலைச் சொல்லுமா?
தேடலில் ஒரு சுகமுண்டு
தொலைதலில் ஒரு சுகமுண்டு
தொலைந்தவளைத் தேடாமல்
உன்னோடு தொலைபவளைத் தேடு
வாழ்க்கைச் சுகமாகும்!!
வாழ்த்துக்கள் தேவ்
கன்யா
//என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்//
நானும் என் தனிமையும்
நடக்கின்ற வீதிகளில்
எதற்கடி உங்க அண்ணனும்
நடந்து வருகின்றான்?
//யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...//
உற்றுப்பாருங்கள்
வீசப்பட்டது
காதல்பார்வையா இல்லை
கல்லா?
//உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..//
நெருக்கத்தின் புழுக்கம் என்ற வார்த்தைகளில் மனம் நொந்து போகின்றது. மனதில் யாரோ சோகத்தை தடவுகின்றார்கள்.
//வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்//
மிகவும் அருமையாக இருக்கின்றது தேவ். கண்டிப்பாக அனுபவங்களின் உணர்வுகளில் தோன்றிய வார்த்தை வெளிப்பாடுதான் இது.
அய்யோ அழுகாச்சி அழுகாச்சியா வருதே..
தேவ், அற்புதமான கவிதை...
சீக்கிரம் உங்கள் வீதியில் தேவதை திரும்பட்டும்..
//உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..//
தனிமையை தனிமையாய் உணர்ந்து,
இடைவெளிவிட்ட ஒரு எதிர்ப்பார்ப்பும்,
மனதை கசிய வைத்த நினைவுகளும் அருமை.
//என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்// எடுத்த எடுப்பிலே டாப் கியரில் போய் விடிகிறது கவிதை
//வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்// பிரமாதம்... வலி கலந்த உணர்ச்சிகளை எளிமையாக சொல்லிவிட்டீர்கள் அருமை!...
சரி எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் கலாய்ச்சல் திலகங்கள் எல்லோருமே எப்படி ஃபீலிங்ஸ் பார்ட்டியாவும் இருக்காங்க? பதில நீங்க சொன்னாலும் சரி சங்கத்துல கேட்டு சொன்னாலும் சரி!
//அய்யோ அழுகாச்சி அழுகாச்சியா வருதே..//
எனக்கும் தான். எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதறீங்க? சூப்பர்.
:)
semma hot machi :D nalla kavidhai
//ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி//
விரல்களின் இடுக்கில் அவள் விரல்களை இணைத்துக்கொண்டு பிணைந்து கைக்கோர்த்து நடக்கும் சுகம்... காதலித்து பார் புரியும். அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
//நல்ல அருமையான கவிதை. கற்பனையா அல்லது அநுபவமா?//
நன்றி வெற்றி. அனுபவங்களே கற்பனைகளின் அடித்தளங்கள்.
அனானி - பாராட்டுக்களுக்கு நன்றி
வாங்க கன்யா
//காதலை ஏன் இப்படி புழியிறீங்க..:P//
காதலின் சாறு இனிக்கிறது.. புழிய புழியப் பொழிகிறது
//தொலைந்தவளைத் தேடாமல்
உன்னோடு தொலைபவளைத் தேடு
வாழ்க்கைச் சுகமாகும்!!//
இந்த வரிகள் நல்லாயிருக்கு கன்யா:)
வாங்க நிலவு நண்பன்,
//நானும் என் தனிமையும்
நடக்கின்ற வீதிகளில்
எதற்கடி உங்க அண்ணனும்
நடந்து வருகின்றான்?//
ஒரு வேளை அவன் காதலியை அவன் தேடுகிறானோ என்னவோ? :)))
//உற்றுப்பாருங்கள்
வீசப்பட்டது
காதல்பார்வையா இல்லை
கல்லா?//
கற்களாயிருந்தால் கூட காயங்களைத் தாங்கிக் கொள்ளலாம் நண்பா.. பார்வைகள் ஏற்படுத்தும் காயங்கள் கொடுக்கும் வலியினைத் தான் தாள முடியாது
//மிகவும் அருமையாக இருக்கின்றது தேவ். கண்டிப்பாக அனுபவங்களின் உணர்வுகளில் தோன்றிய வார்த்தை வெளிப்பாடுதான் இது.
அய்யோ அழுகாச்சி அழுகாச்சியா வருதே..//
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பா
//தேவ், அற்புதமான கவிதை...
சீக்கிரம் உங்கள் வீதியில் தேவதை திரும்பட்டும்.. //
நன்றி பொன்ஸ், தேவதையின் வரவுக்குக் காத்திருக்கிறேன் :)
//தனிமையை தனிமையாய் உணர்ந்து,
இடைவெளிவிட்ட ஒரு எதிர்ப்பார்ப்பும்,
மனதை கசிய வைத்த நினைவுகளும் அருமை.//
நண்பனின் உணர்வை நண்பன் அறிவான் போலும் :)
//எனக்கும் தான். எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதறீங்க? சூப்பர்.//
கைப்புள்ள நன்றி
//semma hot machi :D nalla kavidhai//
கில்ஸ் டாங்க் யூ மா
//விரல்களின் இடுக்கில் அவள் விரல்களை இணைத்துக்கொண்டு பிணைந்து கைக்கோர்த்து நடக்கும் சுகம்... காதலித்து பார் புரியும். அருமையான கவிதை வாழ்த்துக்கள். //
வாங்க ஜெஸிலா, உங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
தமிழ் மணத்தை உங்கள் கவிதைகள் அலங்கரிக்க கண்டிருக்கிறேன். உங்கள் வாழ்த்துப் பின்னூட்டத்தால் இந்தக் கவிதையை அலங்கரித்து இருப்பதற்கு நன்றிங்க.
தேவ்,
மிகவும் ரசிக்க வைத்த அருமையானக் கவிதை இது...
வாழ்த்துக்கள்...
மேலும் பல கவிதைகளை எதிர்பார்த்து,
அருட்பெருங்கோ.
//சரி எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் கலாய்ச்சல் திலகங்கள் எல்லோருமே எப்படி ஃபீலிங்ஸ் பார்ட்டியாவும் இருக்காங்க? பதில நீங்க சொன்னாலும் சரி சங்கத்துல கேட்டு சொன்னாலும் சரி!//
வாங்க ராசுக்குட்டி தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
இப்படி எக்கச்சக்கமாக் கேள்விக் கேட்டா என்னங்க பதில் சொல்லுறது? :))))
//மிகவும் ரசிக்க வைத்த அருமையானக் கவிதை இது...
வாழ்த்துக்கள்...
மேலும் பல கவிதைகளை எதிர்பார்த்து,
அருட்பெருங்கோ.//
வாங்க அருட்பெருங்கோ, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்ன்னு நினைக்கிறேன். உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நிச்சயமா இந்தப் பக்கத்தில் நீங்கள் இன்னும் பலக் கவிதைகளை எதிர்பார்க்கலாம். நன்றி.
நன்றாக இருக்கிறது கவிதை.
நன்றாக இருக்கிறது கவிதை.
மனம் உருகிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கப்புறம் மனதை நெகிழச்செய்த காதல் கவிதை. காதல் கவிதைகள் என்றென்றும் இனிமை தான். உங்கள் கவிதை மிகவுன் ரசிக்கும்படியாக இருக்கிறது. மறுபடியும் மறுபடியும் படித்துக்கொண்டேயிருக்கிறேன்.அழத்தோன்றுகிறது.
>>என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்
ஆனால் இப்படி உருகி உருகி காதலித்த மக்கள் பிரிகிறார்களே என்று நினைக்கும்போது எரிச்சல் எரிச்சலாக வருகிறது. உங்கள் கவிதையிலிருக்கும் காதலர்கள் ஏன் பிரிந்தார்கள்?
உணர்வுகளை
உருக்குலையாமல் வார்த்தெடுத்துள்ளீர்...
பத்திரமாய் சுமந்து செல்கிறேன் காதல் கருவை.
நன்றி ராதாராகவன்.
வாங்க முத்து
மிகவும் ரசித்து நீங்கள் அளித்திருக்கும் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. நீங்கள் காதல் பற்றி சொல்லியிருக்கும் கவிதைகளை நானும் ஏற்று கொள்கிறேன்.
முத்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கான பதில்கள் என்னிடம் இல்லை.:) பதில்கள் தெரியாமல் இருப்பதே நல்லது.
//உணர்வுகளை
உருக்குலையாமல் வார்த்தெடுத்துள்ளீர்...
பத்திரமாய் சுமந்து செல்கிறேன் காதல் கருவை. //
வாங்க சிவாஜி. சுமைப் பாராமாக இல்லையா?
dev itz really superb is it ur experience? keep it up :)
//dev itz really superb//
Thanks !!!
//is it ur experience? keep it up :) //
:))))
Test comment :)
Post a Comment