
கார்மேகம்
காலமெல்லாம்
சேர்த்து வைத்தக்
காதலை
இந்த மழை நாளில்
பூமிப் பெண்ணுக்கு
செலவழிக்குதோ...
காதலைச் சொல்ல
மின்னலை பூச்செண்டுக்குதோ
இடிச் சத்தத்தை
இதயத்தின் ஒலியாக்குதோ
மண்மகளை முத்தமிட
மழையெனப் பொழியுதோ
வெட்கத்தின் விழைவென
மழைத் தொட்ட
மண்மகளும் விலகி ஓடியதோ
மழையின் ஒவ்வொரு துளியிலும்
மனம் காதலைக் கொண்டாடியது
மழையின் கடைசி துளி
மவுனமாய் மனம் கிளறியது..
உயிரை உருக்கி
உணர்வைச் செதுக்கி
பத்திரமாய் உனக்க்கென உள்ளுக்குள்
பூட்டி வைத்திருந்த காதல்
மழை வாசம் முகர்ந்து
மனமெங்கும் உன் வாசம் பரப்ப
ஞாபகங்கள் நிழலாய்
நெஞ்சினில் படிய
தொண்டைக் குழிக்குள்
தொக்கியக் காதலை
இன்னுமொரு முறை
இரக்கமின்றி கொன்றேன்..
இறந்தப் போனக் காதலுக்கு
இரண்டு கண்களிலும் அழுதேன்
மழை வரும் போதெல்லாம்
மரணமும் சேர்ந்தே வருகிறது
எனக்கும்
எனக்குள் இருக்கும் காதலுக்கும்
15 comments:
நல்ல உவமையுடன் ஆரம்பித்து கடைசியில் சற்று சறுக்கி விட்டீர்கள். ஆனால் ஆரம்ப வார்த்தை விளையாட்டு நல்லா இருக்குங்க :)
nice one bro
:(((
ஜூப்பர்!
//மண்மகளை முத்தமிட
மழையெனப் பொழியுதோ
வெட்கத்தின் விழைவென
மழைத் தொட்ட
மண்மகளும் விலகி ஓடியதோ
//
இதுல "மண்மகளை"ங்கிரது எழுத்துப்பிழையா? சரியான வார்த்தைன்ன என்ன மீனிங் அண்ணா?
Nice one:)
//நல்ல உவமையுடன் ஆரம்பித்து கடைசியில் சற்று சறுக்கி விட்டீர்கள். ஆனால் ஆரம்ப வார்த்தை விளையாட்டு நல்லா இருக்குங்க :) //
அனு நான் கவிதையில் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிவிட்டதாய் தான் நினைக்கிறேன்.. இது இயற்கை வருணனையோடு ஒரு காதல் கதையினச் சொல்ல முயலும் கவிதை.. அந்தப் பார்வையில் ஒரு முறை படித்துப் பாருங்களேன்..
Thanks Sister @ thurgah
ஜி தம்பி ஏன் இப்படி சோகமுகம்... அடுத்து ஒரு கலகலப்பான கவிதைப் போட்டுருவோம்
நன்றி அனு... மண்மகள் என்பது பூமியைப் பெண்ணாய் சொல்லும் உருவகம்.. அதில் தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லையே
Thanks Raji :)
//மழை வரும் போதெல்லாம்
மரணமும் சேர்ந்தே வருகிறது
எனக்கும்
எனக்குள் இருக்கும் காதலுக்கும்//
இதென்னங்க கவிதை வாரமா? எல்லா சிங்கங்களும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நிஜமாவே நல்லா இருக்கு இந்த வரிகள்!
//இதென்னங்க கவிதை வாரமா? எல்லா சிங்கங்களும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நிஜமாவே நல்லா இருக்கு இந்த வரிகள்!//
வாங்க காயத்ரி.. எதோ பொழுதுபோகாம நாலு வரி எழுதியிருக்கோம் படிச்சிட்டு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க நன்றி.. நேரம் கிடைச்சா நம்ம பக்கத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்க.
உங்களுக்கு இப்படி ஒரு சோகம் இருப்பதை நினைக்கும் போது என்னால தாங்க முடியல தேவ்.......
மழையை ரொம்ப அழகாக வர்ணித்து உள்ளீர்கள். ஒரு சின்ன டவுட் அதை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மழை தாய் போலவும், மண்ணை மகளாகவும் உருவகப்படுத்தி உள்ளீர்கள். பின் தாய் கொஞ்சுவதை கண்டு மகள் வெட்கப்பட வேண்டுமா என்ன?
காதல் மழை சில நேரங்களில் மெல்லிய சாரலாய்...
பல நேரங்களில் "கன"மழையாய்...
உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே
En comment kaanome :(( rasigai
வார்த்தைகள் அருமை
Post a Comment