Monday, September 03, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 1

"டேய் புகாரி... அந்தப் பொண்ணை என்னப் பண்ணச் சொல்லித் தொலைடா" சுத்தி நின்னு ஒரு பத்து பேர் கேக்குறாங்க...ம்ஹூம் மூணு கோழியை முழுசா முழுங்கிட்டு முட்டையையும் ஆப் பாயில் போட்டுத் திங்க அலையறவன் மாதிரி புகாரி முழிச்சானேத் தவிர பதில் சொல்லல்ல.

நம்ம பயல்வ ரெண்டு பேர் பைக்கைச் சாத்திட்டு வேகமா இறங்கி வர்றான்வ.. கண்ணுல்ல கொல வெறி சிவப்பாத் திரண்டு நிக்குது.. மத்தவங்க எல்லாம் மிரண்டு போயிட்டோம். ஆனா நம்ம புகாரி அசரவே இல்ல.. வானத்தைப் பாத்துகிட்டு மோவாக் கட்டையத் தேயச்சுகிட்டு பரிதாபமா முழிச்சானேத் தவிர பேசவே இல்ல..

"இவனை எல்லாம் வெட்டிரணும் மாப்ளே... பிளேடு இருந்தாக் கூட போதும் கொடுங்கடா"ன்னு கோவமாப் பாஞ்சான் ஜமான்.

நம்ம பைய எதுக்கும் அசரல்லயே..

"இந்தா இங்கேப் பார் ஊர் விட்டு ஊர் வந்து இருக்கது படிக்கத் தான்.. பல்லக்குல்ல ஏறி மாப்பிள்ளையாப் போறதுக்கு இல்ல.. உங்க வாப்பா எங்களையே நம்பித் தான்டா உன்னைய மெட்ராஸ்க்கு பஸ் ஏத்துனார்.. உண்மையைச் சொல்லிரு இல்ல மகனே உனக்கு இங்கிட்டே சங்குத் தான்.." அப்படின்னு முஸ்தபா ஒரேடியாச் சிரியஸ் பேச்சு பேசுனான்.

"செல்லம்.. சொல்லிருடா.."விஜய் கொஞ்சி பார்த்தான்.

"மாப்பூடேய் உன்னிய வச்சு எங்க அம்புட்டு பேத்துக்கும் ஆப்படிச்சுருவாங்கடா"
மூர்த்தி கெஞ்சிப் பார்த்தான்.

பைய எதுக்குமே மசியல்ல.. வாயிலே சிப் வைச்சுத் தைச்ச மாதிரியே இருந்தான்.. நேரம் ஆக ஆக குட்டைச் சுவரின் மீது பிரச்சனையின் பாரம் ஏற ஆரம்பித்தது... சிகரெட்கள் புகைந்து தீர்ந்தன..

முதல்ல எங்க குட்டிச்சுவரை மீட் பண்ணுங்க...

திருவான்மியூர் பீச்ல்ல இருக்கார் நம்ம கதையின் நாயகன்.. 2001ல்ல நடந்த விஷயங்களின் விரிவானக் கொசுவர்த்தி சுத்தல் தான் இந்தக் குட்டிச் சுவரின் வரலாறு..இது மொத்தமும் கதையல்ல... நிஜம் .. வழக்கம் போல கொஞ்சம் ஏத்தம் இறக்கம் இருக்கும்..

இப்போ நம்ம புகாரியின் பிரச்சனைக்கு வருவோம்..

புகாரி மற்றும் புகாரியின் பிரச்சனைகளை அலசிக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அனைவரும் டெல்டா மாவட்டப் பகுதியில் இருந்து நம்ம சென்னைக்கு உயர் கல்வி கச்சேரி பண்ண வந்திருந்தாங்க.. அதாவது என் கல்லூரியில் எனக்கு ஜூனியர் மக்கள்.

நானும் நம்ம பங்காளிகளும் அப்போத் தான் புராஜக்ட் செய்யிறோம்ன்னு வெட்டி வாழ்க்கையின் செழுமையான பொழுதுகளை அந்தக் குட்டிச்சுவரில் கழித்துக் கொண்டிருந்தோம்.. பொழுது சாய ஆரம்பிச்சாப் போதும் அங்கிட்டு போய் மாநாடு போடறது தான் நம்ம பொழப்பு.... சரி அந்த பெருமைமிக்க மாநாடுகள் பத்தி போகப் போக இன்னும் விரிவாச் சொல்லுறேன் இப்போ நமக்குப் பத்தி எரியற பிரச்சனை புகாரியின் பிராப்ளம் தான்.

புகாரி நல்ல வெள்ளைத் தோலுகாரன்... இந்தா நம்ம சல்மான் கான், ஆமீர் கான்,
ஷாருக்கான் மாதிரி தென்னிந்தியாவுக்கு இவன் ஒரு அழகாபுரி அழகேசன்...(அப்படின்னு அவனுக்கு ஒரு நினைப்பு... ஜூனியர் மக்களும் அதை நல்லாவே ஏத்தி பில் டப்புஐ நல்லாவே மெயின்டெயின் பண்ணுனாங்க) கானை எல்லாம் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ தெரியல்ல ஆனாப் பயலுக்கு காதல் சேட்டை ஜாஸ்தி...

பொண்ணுன்னுச் சொல்லி விளக்கு கம்பத்துக்கு மிடியை மாட்டி விட்டாக் கூட அது பக்கமா போய் நின்னுகிட்டு .. ஹேய் யூ பூட்டிபூல்... யுவர் மம்மி பூட்டிபூல்.. யுவர் பாட்டி வெரி பூட்டி பூல்.. யுவர் டேடி வெரி வெரி பூட்டிபூல்ன்னு டோட்டல் பேமிலியையும் கவர் பண்ணிட்டு வந்துருவான்..

இப்படி ஒரு பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்ச அவன் வாழ்க்கையிலே விதி விதவிதமாக்
கெட் அப் போட்டு விளையாண்டதால தான் அன்னிக்கு எங்க குட்டிச் சுவர் சொம்பும் ஆலமரமும் இல்லாத ஒரு பஞ்சாயத்து சபையா உருமாற வேண்டியதாப் போச்சு

விதி வேற என்னக் கெட்டப்புல்ல வந்து கும்ம்பி அடிக்கும் எல்லாம் ஜிகிடி வேஷம் தான் போட்டுகிட்டு புறப்பட்டு வந்து பொரட்டிப் போட்டுச்சு... மாலான்னு ஒரு பொண்ணு...அவன் காலேஜ்.. பஸ்ல்ல பாத்துருக்கான்...பாக்குற எல்லாப் பொண்ணையும் பிட்டிபூல் சொல்லுறவன் நிஜமான பியூட்டியைப் பார்த்தா என்னச் சொல்லுவான்.. எதையும் யோசிக்காம சொல்லிட்டான்...

ஐ லவ் யூ.....

அட்ரா சக்க அட்ரா சக்க..ன்னு ஆளுக்காளு அவனை உசுப்பேத்தி அவன் செலவுல்ல இதே குட்டிச்சுவர்ல்ல அவன் ஐ லவ் யூ சொன்னதுக்கு பார்ட்டி கொண்டாடி பசங்க எல்லாம் தீர்த்தம் ஆடியது ஒரு பொன்மாலைப் பொழுது... அந்தப் பொன்மாலைப் பொழுதில் நல்ல வேளை சீனியர் கூட்டம் மொத்தமும் ஆப்சென்ட். அன்னிக்கு நடந்தக் கிளைக் கதையை அடுத்தாப்புல்ல சொல்லும் போது சீனியர் மொத்தமும் ஆப்செண்ட் ஆனதுக்கு நான் ஏன் சந்தோசப்பட்டேன்ன்னு உங்களுக்கு விளங்கும்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவன் காதல் கொடியாய் செடியாய் வளர்ந்தது...அந்தக் காதலுக்கு பாரியாய் இருந்து நம்ம ஜூனியர்கள் காரை தேரனேக் கொடுத்துக் காதல் பவனிக்கு உதவினார்கள்..

சீனியர்களாகிய நாங்க கதைக் கேட்பதோடு சரி...நம்ம பய வாழட்டும்ன்னு நல்ல எண்ணத்திலே எட்ட நின்னு ஆசிர்வதிச்சுட்டு இருந்தோம்.

இந்த நிலைமையிலேத் தான் ஒரு நாள் அந்தச் செய்தி எங்கக் காதுக்கும் வந்துச்சு.. வாங்க தேவ் நீங்களும் பஞ்சாயத்துக்குன்னு கூப்பிட்டு அனுப்புனாங்க.. மறுக்க முடியுமா? போய் நின்னோம்..

விஷயம் இது தான் மாலாவோட அப்பா நம்ம ஆளை அவர் பொண்ணைச் ஒரு வாரத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிக்கோ இல்லன்னு என் பொண்ணூ செத்துப் போயிருவான்னு இன்னொரு ஜூனியரை நேராக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கார்... அதுவும் காலேஜ்க்குப் போய்..

நம்ம பசங்க பயலைக் கூப்பிட்டு என்னடா ஆச்சு.. எதுக்கு அவங்க அப்பன் காலேஜ் வந்து அப்படி பேசிட்டுப் போறார்... பொண்ணு வேற செத்துப் போறேன்னுச் சொல்லுதாம்.. டேய் மண்டையா சொல்லுடா எதாவது தப்பு கிப்பு பண்ணித் தொலைச்சிட்டியான்னு...விடிய விடிய உக்கார வைச்சி விசாரிச்சு இருக்கான்வ

விடிய விசாரணை முடிஞ்சதுல்ல ஆறு பாட்டில் பீர், பத்து அவிச்ச முட்டை, சிக்கன் சட் டிஷ்ன்னு விசாரணைச் செலவு அதிகமாய் போனது தான் மிச்சமாம்.

இனி சரிப்படாதுன்னு தான் குட்டிச் சுவருக்கு விசாரணையை மாத்திட்டான்வ.. எங்களையும் கூப்பிட்டனுப்பி ம்ம்ம்ம் இப்போ முதல் வரியைப் படிங்க...

எங்களுக்கும் பொறுமை எல்லைத் தாண்டி எக்ஸ்பிரஸ் வேகத்திலேப் போயிட்டு இருந்துச்சு... அப்புறம்...

குட்டிச் சுவரின் வரலாறு இன்னும் வரும்

14 comments:

கோபிநாத் said...

ஆஹா...அடுத்த கொசுவத்தியா!!! ;))
கலக்குங்க அண்ணே.

கொசுவத்தி புகழ் தேவ் அண்ணே வாழ்க ;)

இலவசக்கொத்தனார் said...

கதை ரொம்ப ஜெர்க் ஆவுதே. நல்ல ஒட்டத்தோட எழுதுங்க.

தேவ் | Dev said...

//ஆஹா...அடுத்த கொசுவத்தியா!!! ;))
கலக்குங்க அண்ணே.

கொசுவத்தி புகழ் தேவ் அண்ணே வாழ்க ;)

//

ஆகா விட்டா நம்மளை மார்ட்டீன், டார்ட்டாயீஸ் பிராண்டுகளுக்கு அம்பாஸிடர் ஆக்கிருவீங்கப் போலிருக்கு.. ம் அதுவும் நல்லது தான்.. :)))

தேவ் | Dev said...

//கதை ரொம்ப ஜெர்க் ஆவுதே. நல்ல ஒட்டத்தோட எழுதுங்க. //

கொத்ஸ் வாங்க,
குட்டிச்சுவர்ன்னாலே ஜெர்க் நிறைய இருக்கும் கொத்ஸ்.. இப்போத் தானே ஆரம்பிச்சுருக்கோம்... போக போக ஜெர்க் குறையும் பாருங்க..

Anonymous said...

"மாப்பூடேய் உன்னிய வச்சு எங்க அம்புட்டு பேத்துக்கும் ஆப்படிச்சுருவாங்கடா"
மூர்த்தி கெஞ்சிப் பார்த்தான்.

?????

வல்லிசிம்ஹன் said...

தேவ், இது எந்தக் குட்டிசுவர்.???
கல்லூரித்
தபால் ஆபீஸ் பக்கத்தில இருக்கிறதா.

இல்லை உதி க்ளினிக் பக்கத்தில இருக்கிறதா?
விளக்கமாகச் சொல்லவும்:)))

தேவ் | Dev said...

//தேவ், இது எந்தக் குட்டிசுவர்.???
கல்லூரித்
தபால் ஆபீஸ் பக்கத்தில இருக்கிறதா.

இல்லை உதி க்ளினிக் பக்கத்தில இருக்கிறதா?
விளக்கமாகச் சொல்லவும்:))) //

வல்லியம்மா, இது திருவான்மியூர் கடற்கரையோரம் இருக்கும் குட்டிச்சுவர்.. இப்பவும் இருக்குங்க...

ஆமா கல்லூரி பக்கம் இருக்க குட்டிச் சுவர்ன்னா எதை சொல்லுறீங்க? உதி கண் மருத்துவமனை பக்கமும் குட்டிச்சுவர் இருக்கா விசாரிக்கணுமே....

இராம் said...

ஆஹா நல்லாயிருக்கு...... சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க.... :)

தேவ் | Dev said...

//ஆஹா நல்லாயிருக்கு...... சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க.... :) //

ராம் தம்பி.. திங்கட்கிழமை தோறும் குட்டிச் சுவரின் வரலாறு வர மாதிரி பாத்துக்குறேன்.. படிச்சுட்டு உன் மேலான ஆதரவைக் கொடுக்கணும்ன்னு கேட்டுக்குறேன்.

Kanya said...

Hi dev,

Romba naal kazhichu blogs pakkam varen.. nalla start... aana introduction'a sequence nadula nadula nozhaichu irukeenga.. plus.. ithai apparam paakum poothu puriyum'nu munnadiyum pinnadiyam pooguthu.. may be neenga sonna maathiri aarambamgurathunala appadi iruko ennavo.. but ithai kuraichudunga..

illana flashback'la flashback vechu present state'ku vara marantha padam maathiri aagirum!!

waiting to read more..

தேவ் | Dev said...

//Hi dev,

Romba naal kazhichu blogs pakkam varen.. nalla start... aana introduction'a sequence nadula nadula nozhaichu irukeenga.. plus.. ithai apparam paakum poothu puriyum'nu munnadiyum pinnadiyam pooguthu.. may be neenga sonna maathiri aarambamgurathunala appadi iruko ennavo.. but ithai kuraichudunga..

illana flashback'la flashback vechu present state'ku vara marantha padam maathiri aagirum!!

waiting to read more..//

Hope to fulfill your expectations in the coming episodes

G.Ragavan said...

ஒரு குட்டிச் சுவரின் தல புராணமா :)))))

கொசுவத்திச்சுருள் ஒரிஜினல் டார்டாய்ஸ்தானே? ;)

புகாரின்னு ஓட்டல் பேர் இருக்கு. அண்ணாசாலைலா. முந்தி ரொம்பப் பிரபலமா இருந்த ஓட்டல். இப்ப ஏதோ ஓடிக்கிட்டிருக்கு.

தொடரட்டும் கதை. அதுல யாருக்கு விழப் போகுதோ உதை.

தேவ் | Dev said...

//G.Ragavan said...
ஒரு குட்டிச் சுவரின் தல புராணமா :)))))

கொசுவத்திச்சுருள் ஒரிஜினல் டார்டாய்ஸ்தானே? ;)//

ஒரிஜினல் கொசுவர்த்தி தான் கொஞ்சம் ஏறக்குறைய இருக்கும் :))

//புகாரின்னு ஓட்டல் பேர் இருக்கு. அண்ணாசாலைலா. முந்தி ரொம்பப் பிரபலமா இருந்த ஓட்டல். இப்ப ஏதோ ஓடிக்கிட்டிருக்கு.//
இந்த புகாரி கூடப் போய நானும் அந்த புகாரியில் சாப்பிட்ட அனுபவம் உண்டு :))


//தொடரட்டும் கதை. அதுல யாருக்கு விழப் போகுதோ உதை.//

ஆகா டி.ஆரை பேட்டியெடுத்த ஜி.ஆர் ஆச்சே அந்த எபெக்ட் இல்லாமலா:))

Anonymous said...

முதல் பாகத்தையே இப்போதான் படிச்சேன் அண்ணா,அடுத்த பகுதியைப் படிச்சுட்டு சொல்லுறேன்