Tuesday, October 02, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 3

முந்தையப் பகுதி

ஒரு வழியா புகாரியின் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கண்டு இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் குட்டிச்சுவரில் அடுத்த முக்கிய கூட்டம் நடந்தது. இம்முறை எந்தப் பிரச்சனையுமில்ல..இந்தச் சிறப்புக் கூட்டத்துக்குக் காரணம் கொண்டாட்டம்... கொண்டாட்டத்துக்கு கொண்டாட்டத்துக்கு அழைப்பு வச்சது நம்ம ஜமான்...

மொத்த ஜமாவும் ஒருத்தர் பை ஒருத்தரா குட்டிச்சுவரில் ஆஜராக ஆரம்பித்தோம்.

"மும்பை எக்ஸ்பிரஸ் போயாச்சா?" சோழன் ஆர்வமாய் கேட்டான்..

"இன்னிக்கு அரை அவர் லேட் மாப்பி" குமார் பதில் சொன்னான்.

"பீச் பாசஞ்சர் போயிருச்சா?" சோழனின் அடுத்தக் கேள்வி.

"இல்லடீ மாப்பி"

"அந்த குட்ஸ் வண்டி எல்லாம் கடந்துருச்சா?"

"அதெல்லாம் எப்பவோ போயிருச்சுடா மாப்பூ"

"ஜெட் ஏர்வேஸ் டைம் இல்ல இப்போ"

"ஆமா ஆமா" குமார் அதிகப் பட்ச ஆர்வத்தோடு பதில் சொன்னான்.

"ஜெட் ஏர் வேஸ் பிளைட் இன்னிக்கு கேன்சலப்பா... " மணி பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.

"ஏன்?" எல்லோரும் ஒரே நேரத்தில் ஏக ஆர்வத்தில் அவனைப் பார்த்துக் கேட்டோம்.

"பைலட் பிளேனைக் கடத்திகிட்டுப் போயிட்டாராம்.. பயணிகள் வேற பிளேன் பார்த்துக்கோங்கன்னு சொல்லச் சொன்னார்" மணி சிரிச்சுகிட்டேச் சொன்னான்.

குழப்பம் வேணாம்.. இந்த மும்பை எக்ஸ்பிரஸ், பீச் பாசஞ்சர், குட்ஸ் வண்டி, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் எங்களுக்காகவே(??!!!) மாலை நேரங்களில் எங்கள் குட்டிச் சுவர் பக்கமாய் நடக்கும் அல்ட்ரா மாடர்ன் அழகு தேவதைகளுக்கும் அழகு தேவதைகளாய் தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கும் நாங்கள் சூட்டி அழைக்கும் பட்டங்கள்.

முக்கியமா அந்த ஜெட் ஏர்வேஸ் தேவதை இருந்தாளே.. அவளுக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கணும்.. பஞ்சாப் தேசத்து கோதுமையில் என்னவெல்லாம் ஊட்டச்சத்து இருக்குன்னு எங்களை ஆராய்ச்சியே பண்ண வச்ச அழகு அவ... சும்மா அரேபியன் குதிரை மாதிரி அவ டக் டக் டக்ன்னு நடக்குற பாணி இருக்கே.. எங்க மொத்த ஜமாவும் அப்படியே கிறங்கிப் போயிருவோம்... மணி தான் அவளைப் பத்திய மொத்த விவரங்களையும் விசாரித்தான்...

ஜெட் ஏர்வேஸில் வேலை..செம சம்பளம்.. இன்னும் கல்யாணம் ஆகல்ல... பொண்ணு தண்ணி தம்முன்னு செம ஷோஷியல்... ஒரே ஒரு பாய் பிரண்ட் பைலட்டாம்... மணி இருந்த பிளாட்டில் அடுத்த பிளாக்கில் தான் அவளும் குடியிருந்தாள். மணி பாதி உண்மையும் மீதி வன்மையாகவும் அவளைப் பற்றி எடுத்து விடும் கதைகளுக்காகவே மணிக்கு எங்க ஜமாவில் தனி மரியாதை உருவாகி வந்தது.

"டேய் அப்போ இன்னிக்கு பிளைட்டும் போச்சா.. பார்ட்டின்னு வரச்சொல்லிட்டு பயபுள்ள ஆளை இன்னும் காணும்" கவுரி பேசினான்.

"அவன் சொன்னான்னு சொல்லித் தான் இன்னிக்கு புராஜக்ட்க்குக் கூட பங்க் அடிச்சுட்டு வந்துருக்கோம்.." சபரி சொன்னான்.

நேரம் ஆறரையைக் கடந்தது... லேசான இருட்டோடு மழை மேகமும் வானில் சூழத் தொடங்கியது.

"என்னாத்துக்கு பார்ட்டி எதுக்கு பார்ட்டின்னு கேக்குற பழக்கமே நம்ம வெ.ஆ. சங்கத்துக்கே கிடையாதே...ஓசியிலே மோர் ஊத்துறாங்கன்னு சொன்னாலே ஓம்போது கிலோ மீட்டர் கால் வலிக்க நடந்தேப் போய் லிட்டர் கணக்குல்ல குடிச்சுத் தீக்கறவங்க நாம.. பய பீர் ஊத்துறேன் வாங்கன்னு கூப்பிட்டு விட்டா ஏன் எதுக்குன்னு கேக்க முடியுமா?" பழம் பெருமையைப் பேசினான் மணி.

ஜமான் வரக் காத்திருந்தக் கேப்பில் சிகரெட்கள் புகைந்தன... எங்களைக் கடந்த அம்சமான அழகுகளின் காந்த சக்தியில் அவ்வப்போது ஈர்க்கப்பட்டு பார்வைகளை சிதற விட்டு இதயங்களைப் பதற விட்டு குட்டிச்சுவரில் நகராமல் அமர்ந்திருந்தோம்.

ஏழு மணி வாக்கில் திருநாவின் ஆம்னி வேன் சரட்டென வந்து குட்டிச்சுவர் முன்னால் பிரேக் அடித்தது... கதவைத் திறந்து ஜமான் பின் சீட்டில் இருந்து அந்த இருட்டிலும் அசத்தலானக் கருப்பு கண்ணாடிப் போட்டுக் கிட்டு இறங்கினான்...

"ஹாய் சீனியர்ஸ் அன்ட் ஹாய் மாப்பிஸ் " ஜமான் பயங்கர துள்ளலோடு குட்டிச்சுவரில் ஏறி உட்கார்ந்தான்.

திருநா ஆம்னியை ஓரம் கட்டிவிட்டு பின்னாலே வந்துச் சேர்ந்தான்..

"டுடே அ யாம் வெரி வெரி ஹேப்பி மாப்பிஸ்.." ஜமான் காற்றில் கைகளைச் சுழல விட்டு செம எமோஷனலாப் பேசினான்.

"எருமை மாடு கூலிங் கிளாஸ் போட்டு டிஸ்கவரில்ல இது வரைக்கு எதாவது படம் காட்டியிருக்கானா?" முஸ்தபா என்னிடம் கேட்டான்.

"இல்லய்யா" இது என் பதில்.

"இருங்க சீனியர்..இந்த எருமை மாடு இன்னிக்கு பண்ற சலம்பல் மொத்தத்தையும் இந்த கேமிராவில்ல கவர் பண்ணி மனித உருவில் ஒரு எருமையின் அட்டகாசங்கள்ன்னு டிஸ்கவரிக்கு வித்து டாலர் பார்க்கலாம்" முஸ்தபா கையோடு இருந்த சிங்கப்பூர் டிஜியை ஆன் செயதான்.

"முஸ்தபா இங்கே என்னய்யா நடக்குது?"

"சீனியர் கலர் மீன் ஒண்ணு நம்ம குளத்து ஓரமா நின்னு குட்டையைக் கலக்குன எருமை மாடு ஒண்ணைப் பார்த்து கண் அடிச்சுருச்சாம்.. அதான் நடந்துருக்கு" முஸ்தபா பூடகமாகவே பேசினான். கேமிராவில் அவன் தீவிரமானான்.

"சீனியர்ஸ் அன்ட் மை பேட்ச் மாப்பீஸ்... இன்னிக்கு டுடே.. ஷாலினி என் கூட லஞ்ச் சாப்பிட்டா...அவ வீட்டுல்ல இருந்து கொண்டு வந்த எலுமிச்ச சாதத்தை ஒரு தட்டுல்ல போட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தா.. நானும் அவளும் ஒண்ணாச் சாப்பிட்டோம்"

யூ நோ ஐயாம் வெரி ஹேப்பி..." ஜமான் கண்ணாடியைக் கழட்டாமலே ஆகாயம் பார்த்தான். ஆகாயம் ஏற்கனவே இருட்டிப் போயிருந்தது...

முஸ்தபா அந்தக் கணத்தைக் கிட்டத்தட்ட பி.சி.சிரிராமாவே மாறி கேமிராவில் அடைத்துக்கொண்டிருந்தான்.

"ஒரு எலுமிச்ச சாதம் தந்ததுக்காடா இந்த பார்ட்டி" சபரி கேட்டான்.

"சீனியர்.. அது வெறும் சாதம் இல்ல...அதுல்ல என்ன எல்லாம் இருந்துச்சு தெரியுமா?"

"அடப் பாவி ட்ரீட்ன்னு கூப்பிட்டு அந்த மீந்துப் போன எலுமிச்சம் சாதத்தைப் பொட்டலம் கட்டிக் கொண்டாந்துட்டீயா..கொய்யாலே" கவுரி சங்கர் மெய்யாலுமே பதறி விட்டான்..

"மிச்சம் இருக்கு அதை நான் எனக்கு எடுத்து வச்சிருக்கேன்" தன் பாக்கெட்டைத் தடவினான் ஜமான்.அப்படியே ஒரு ஏகாந்த நிலைக்குப் போன மனநிலையில் காட்சியளித்தான் ஜமான்.

முஸ்தபா கேமிராவை நிறுத்திவிட்டு சரியா முகம் பக்கம் போய்.. ச்சூ....இந்தக் காக்காத் தொல்லைத் தாங்கல்லடா சாமி.. ச்சூ ச்சூ... என்று விரட்டி ஜமான் இன் தியான நிலையைக் கலைத்தான்.

"என்ன முஸ்தபா.. பாவம் பைய பிலீங்க்ஸா இருக்கான்..அதைப் போய் நக்கல் பண்ணிகிட்டு நல்லாவா இருக்கு" நான் ஜமானுக்கு பரிந்துப் பேச...

"அட என்ன சீனியர் நீங்க... பொதுவா.. சாப்பிடறதுக்கு முன்னாடி காக்காவுக்கு எல்லாம் ஒரு வாய் சோறு போடுவாங்க இல்ல.. அதை மாதிரி அந்தப் புள்ள இந்த காக்காவுக்கு கொஞ்சமாக் கொடுத்துருக்கும்.. இது அதுல்ல பாதியைத் தெரியாம பொட்டலம் போட்டு மடிச்சு வேற கொண்டாந்துருக்கு.. அதைப் போய் பிலீங்க்ன்னு தப்பா கணக்குப் பண்ணுறீங்களே"

"அட இல்லப்பா எப்படியோ...அவன் அந்தப் புள்ளையை விரும்புறான்... சின்னப் புள்ள மனசு நொந்துறப் போவுதுப்பா"

"அய்யோ சீனியர்...இது மாதிரி இவன் பார்ட்டி கொடுக்கறது இது எத்தனாவது தரம் தெரியுமா?"

"ஆமா சீனியர் போன ட்ரிப் ஜீன் ஸ் படம் ரீலிஸ் ஆனப்போ திருச்சியிலே மொத நாள் செகண்ட் ஷோ அதைப் பாத்துப்புட்டு என் மனசுக்கு ஏத்தப் பொண்ணு கிடைச்சுட்டான்னு ராத்திரி பீர் ஊத்தி பய பண்ண சலம்பல் இருக்கே..." கவுரி பிளாஷ் பேக் சொல்ல...

"அது மட்டுமா.. அங்கே பைனல் இயர்ல்ல.. காலேஜ் லெக்சரர் ஒண்ணைப் பார்த்து.. எதோ ஒரு நாள் அவங்க யதார்த்தமா.. ஜமான் யூ ஆர் வெரி அப்படின்னு சொல்ல.. இந்தப் பன்னி அதை வச்சுகிட்டு அன்னிக்கு ராத்திரி என் செயினை அடமானம் வச்சு பீர் ஊத்தினான்.. இதுல்ல வேடிக்கை என்னான்னா அந்த லெக்சரருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு கொழந்தங்க வேற இருக்கு"


"சீனியர்.. இது மனிதக் காதலே இல்லை....சீனியர்... சரி வாங்க நாம ஆரம்பிக்கலாம்.." கவுரி அழைப்பு விடுக்க.. மணி, சபரி, சோழன், முஸ்தபா, எல்லோரும் ஆம்னிக்குள் போனார்கள்.

குமாருக்கும் எனக்கும் ஆளுக்கொரு பெப்ஸி மற்றும் செவன் அப் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தான் திருநா.

"சீனியர்... அவங்கச் சொல்லுறதை எல்லாம் கேர் பண்ணாதீங்க... அப்போ அப்படி எல்லாம் நான் இருந்தது என்னவோ உண்மை தான்... ஆனா அது வேற... இப்போ எனக்கு வந்துருக்கது உண்மையானக் காதல்... ஷாலினியை நான் சீரியசா லவ் பண்ணுறேன்..." ஜமான் கண்களில் கனவு மிதக்கப் பேசினான்.

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல அவன் துக்கத்தை அங்கேயே சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான் அதான் அவனுக்கு மட்டும் அங்கேயே பீர் ஊத்திட்டேன்"

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல என் சந்தோசம் அவனுக்கு துக்கமாப் போயிருச்சு..."

"என்னச் சொல்லுற?"

"ஆமா அவனும் ஷாலினியை லவ் பண்ணுறான்.. நட்புக்கும் காதலுக்கு நடுவுல்ல அவன் ஊஞ்சல் ஆடுகிட்டு இருக்கான்..."

பெப்சியைத் திறக்கவும் அது பொங்கியது...அதை விட எனக்கும் குமாருக்கும் சிரிப்பு அதிகமாய் பொங்கியது.

வானத்தில் சூழ்ந்த மேகங்கள் பெரும் சீற்றமெடுத்து மழையைப் பொழிய ஆரம்பித்தது.. பீச்சிலிருந்தக் கூட்டம் மொத்தமும் கலைய ஆரம்பித்தது..

மொபைல் பாராக மாறிய ஆம்னியில் நம்ம மக்களின் அலம்பல் அல்லோலப்பட்டது...

"மாம்ஸ் பீச்சேக் காலியாவுது..கிளம்பலாம்ய்யா" ஜமான் குரல் கொடுக்க..

"என் மைக் லீக்குது நான் மொட்ட படியாது..." மணி குழற...

"ஒண்ணும் இல்ல.. மணியோட பைக் நிக்குதாமா அதை அவன் ஓட்ட முடியாதுன்னு சொல்லுறான்" அப்படின்னு மணியின் வாக்கியத்தை சபரி மொழிபெயர்த்தான்.

மொத்த ஜமாவும் வண்டிக்குள் மழைக்கு ஒதுங்க...நான் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்தேன்.. கொஞ்சம் மழை விட்டதும் மணி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என திட்டம்.. வாட்ச்சைப் பார்த்தேன் மணி ஓன்பதரையைத் தாண்டி விட்டது.. மழையோ குறைவதாய் தெரியவில்லை..

பத்து மணியை நெருங்கியது.. மழை பேயாட்டம் ஆடியது..

வண்டிக்குள் பீரோட்டம்.... வண்டிக்கு வெளியே மழை நீரோட்டம் என நிலைமை ஒரு மாதிரி எக்குதப்பாப் போயிகிட்டு இருந்துச்சி... இடையிலே திருநா வேற சவுண்ட்டா அழ ஆரம்பிக்க..சொல் சிலம்பாட்டம் வேற தொடங்கிடுச்சு...

நடக்கிறது நடக்கட்டும் என நான் வண்டியைக் கிளப்ப முற்படுகையில்..

டேய் தேவ்.. என் மைக் என் மைக்... அப்படின்னு மணி கத்த ஆரம்பிச்சான்..

அது மட்டுமின்றி எதிரில் பிரகாசமான லைட் அடித்தப் படி மாநகர காவல் ரோந்து வண்டி வந்துக் கொண்டிருந்தது... பீச்சில் வேற யாரும் இல்லாத நிலையில் மழையில் நின்ற எங்கள் வண்டி அவர்களின் சந்தேகத்திற்கு இலக்கானதில் எந்த வியப்பும் இல்லை....

கொட்டும் மழையைத் தாண்டியும் குமாருக்கும் எனக்கும் வேர்த்தது...

புல் பீம்ல்ல ஹெட் லைட்டை வண்டி மீது செலுத்தியவாறு ரோந்து வண்டி எங்கள் பக்கம் வந்து நின்றது..

சரியாக அதே நேரத்தில் முழு மப்பில் இருந்த திருநா பெரும் குரல் எடுத்து

"பிளடி இங்கே ஒருத்தன் பீலிங் தெரியாம எவன்டா அவன் வெளியே இருந்து லைட் அடிச்சு டார்ச்சர் பண்றது.. பிளடி WHO IS THAT DISTURBANCE I SAY..." அப்படின்னான்.

ஆகா... கிரவுண்ட்டை லெவல் பண்ணிட்டான் பைய... இனி இன்ஸ்பெக்டர் வந்து மொசைக் போடணும் அது தான் பாக்கி" அப்படின்னு பிரமைப் பிடிச்சுப் போய் சீட்டில் அமர்ந்து வினாடிகளை நகர்த்தினேன்...

குட்டிச் சுவர் இன்னும் வரும்...

28 comments:

இனியவன் said...

இப்பதாண்ணே த்ரில் படம் பாக்கிற எபெக்ட் வருது...

இராம்/Raam said...

சூப்பரு...... அடுத்த பாகத்துக்காக வெயிட்டிஸ்.... :)

கோபிநாத் said...

சூப்பர் ;-))

Divya said...

\குழப்பம் வேணாம்.. இந்த மும்பை எக்ஸ்பிரஸ், பீச் பாசஞ்சர், குட்ஸ் வண்டி, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் எங்களுக்காகவே(??!!!) மாலை நேரங்களில் எங்கள் குட்டிச் சுவர் பக்கமாய் நடக்கும் அல்ட்ரா மாடர்ன் அழகு தேவதைகளுக்கும் அழகு தேவதைகளாய் தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கும் நாங்கள் சூட்டி அழைக்கும் பட்டங்கள்./

நிஜம்மா இந்த வரிகள் வாசிக்கும் வரைக்கும், ரெயில் வண்டி பெயர்கள் என நினைத்து குழம்பி போய்விட்டேன்.

Divya said...

\"அட என்ன சீனியர் நீங்க... பொதுவா.. சாப்பிடறதுக்கு முன்னாடி காக்காவுக்கு எல்லாம் ஒரு வாய் சோறு போடுவாங்க இல்ல.. அதை மாதிரி அந்தப் புள்ள இந்த காக்காவுக்கு கொஞ்சமாக் கொடுத்துருக்கும்.. இது அதுல்ல பாதியைத் தெரியாம பொட்டலம் போட்டு மடிச்சு வேற கொண்டாந்துருக்கு.. அதைப் போய் பிலீங்க்ன்னு தப்பா கணக்குப் பண்ணுறீங்களே"\

ROTFL, ரொம்ப சிரிச்சேன் தேவ் இந்த வரிகள் வாசிக்கிறப்போ.

குட்டிச் சுவர் கலாட்டாவ போய்கொண்டிருந்தது.......இப்போ ரொம்ப திரில்லிங்கா இருக்கு....அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்.

[\குமாருக்கும் எனக்கும் ஆளுக்கொரு பெப்ஸி மற்றும் செவன் அப் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தான் திருநா./ -> அப்படியே நம்பிட்டேன் அண்ணா!]

CVR said...

:)
அடுத்தது எப்போ??

தேவ் | Dev said...

//இனியவன் said...
இப்பதாண்ணே த்ரில் படம் பாக்கிற எபெக்ட் வருது...//
வாங்க இனியவன்.. த்ரில்லரே தான் சைட்ல்ல மழை... வானத்துல்ல இருட்டு... இடி மின்னல்.. வெளியே போலீஸ்.. உள்ளே சரக்கு... அதை அடிச்சுட்டு பசங்க பண்ண அலம்பல்.. அடுத்து என்னாச்சுன்னு அடுத்த வாரம் சொல்லுறேங்க...வந்து படிங்க..

தேவ் | Dev said...

//இராம்/Raam said...
சூப்பரு...... அடுத்த பாகத்துக்காக வெயிட்டிஸ்.... :)//

வாய்யா மதுரல்ல இது மாதிரி குட்டிச் சுவர் ஒண்ணு இருந்துச்சாம்ல்ல.. அந்த ஞாபகம் எல்லாம் அப்படியே கண்ணு முன்னாலே தெரியுதா.. சென்னைக் குட்டிச் சுவரின் வரலாற்றில் அடுத்து வரும் கதையை அடுத்த வாரம் சொல்லுறேன்.. அது வரைக்கும் வெயிட்டீஸ்:)))

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
சூப்பர் ;-))//

கோபி தம்பி ராயபுரத்துல்ல இல்லாத குட்டிச் சுவரா... ம்ம்ம் நீ சூப்பர் சொல்லுற வேகம் பார்த்தா உன் மனசுல்லயும் ராமு தம்பிக்கு கேக்குற அதே நியாபகம் வருதே பாட்டு தான் ஓடுது போல... ம்ம்ம் நாம் எல்லாரும் ஓரினம் அல்லவா அடுத்த வாரம் வரலாற்றின் அடுத்தக் கட்டத்தில் சந்திப்போம்ய்யா

தேவ் | Dev said...

//நிஜம்மா இந்த வரிகள் வாசிக்கும் வரைக்கும், ரெயில் வண்டி பெயர்கள் என நினைத்து குழம்பி போய்விட்டேன்.//

திவ்யா கண்ணு.. இப்போவும் அதே குட்டிச் சுவர் அங்கே இருக்கு.. இதே மாதிரி ஒரு குரூப் அங்கே இருக்கு இப்போ எல்லாம் அவங்க ரயில் பெயர் சொல்லுரது இல்ல... காலம் தான் மாறுது... கோலம் அப்படியேத் தான் இருக்கு

தேவ் | Dev said...

//ROTFL, ரொம்ப சிரிச்சேன் தேவ் இந்த வரிகள் வாசிக்கிறப்போ.

குட்டிச் சுவர் கலாட்டாவ போய்கொண்டிருந்தது.......இப்போ ரொம்ப திரில்லிங்கா இருக்கு....அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்.//

சந்தோசம்... ரசிச்சு நல்லா சிரிங்க அதுக்குத் தானே நடந்த கதை எல்லாம் இங்கே சொல்லுறது...

அப்புறம் உண்மையைச் சொல்லும் போது நம்பித் தான் ஆகணும்.. சத்யமேவ ஜெயதே !!!!

[\குமாருக்கும் எனக்கும் ஆளுக்கொரு பெப்ஸி மற்றும் செவன் அப் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தான் திருநா./ -> அப்படியே நம்பிட்டேன் அண்ணா!]//

தேவ் | Dev said...

//:)
அடுத்தது எப்போ??//

கண்டிப்பா அடுத்த வாரம்

நாகை சிவா said...

அருமை அருமை அண்ணாத்த....

இரண்டு பாகமும் படிச்சுட்டேன்...

நம்ம பசங்களோட இது போல ஒரு நண்பர் வீட்டு குட்டி சுவரில் வர்காந்து அடித்த லூட்டிகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது...

இந்த போலிஸ் மேட்டரும் நமக்கு நடந்து இருக்கு... எப்படி சமாளிச்சிங்க என்பதை தெரிய ஆவலா இருக்குகேன்...

நாகை சிவா said...

//இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா//

இது இரண்டு தடவை வந்து இருக்கு தல...

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
அருமை அருமை அண்ணாத்த....

இரண்டு பாகமும் படிச்சுட்டேன்...

நம்ம பசங்களோட இது போல ஒரு நண்பர் வீட்டு குட்டி சுவரில் வர்காந்து அடித்த லூட்டிகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது...

இந்த போலிஸ் மேட்டரும் நமக்கு நடந்து இருக்கு... எப்படி சமாளிச்சிங்க என்பதை தெரிய ஆவலா இருக்குகேன்...//

வா சிவா, ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு குட்டிச்சுவர் கட்டாயம் இருக்கும் சிவா.. அந்த ஞாபகங்கள் பசுமையானவை..

போலீஸைச் சமாளித்தக் கதையும் போலீஸா மாறுனக் கதையும் பின்னாடி வருது படிச்சுப் பாரு...

தேவ் | Dev said...

நாகை சிவா said...
//இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா//

இது இரண்டு தடவை வந்து இருக்கு தல...//

தவறை சரி பண்ணிட்டேன் சிவா. நன்றி சிவா.

G.Ragavan said...

நக்கல் வசனங்கள். :)))))))))) ஜெட் ஏர்வேசு, எலுமிச்சம்பழச் சாதம்னு...

ஒங்களுக்காவது ரோந்து வண்டி...பெங்களூர்ல ரெண்டு பயக. தெரிஞ்ச பயகதான். பைக்க எடுத்துக்கிட்டுப் போய் நிதானமேயில்லாம போனானுக. அவ்ளோ தண்ணி. அவங்களுக்கு நிதானம் வந்தப்ப ஆஸ்பித்திரீல கட்டில்ல படுத்திருந்தாங்க. பயங்கர ஆக்சிடெண்ட்டு...அப்பப்பா...குடிச்சிப்புட்டு ஓட்டாதீங்கடே...வண்டிய.

Anonymous said...

இந்த குட்டிச்சுவரு கதை எல்லாம் புதுசா இருக்கு அண்ணா.எங்க ஊரில் குட்டி சுவரில் எல்லாம் பசங்க இருக்க மாட்டங்க:P

TBCD said...

அருமை..! அருமை...!...சென்னை 28 படம் பார்த்த போது கிடைச்ச ஃபீல் இதுல கிடைக்குது...

.:: மை ஃபிரண்ட் ::. said...

மூனு பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சுட்டேன். இரண்டாவது பாகம் டாப்.. best among the best. மூனாவது ஒரு சில இடத்துல எனக்கு புரியல, :-S

அடுத்த பாகம் எப்போது????

Divya said...

சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்கண்ணா!

siva gnanamji(#18100882083107547329) said...

//அடுத்த பதிவு சரியான தருணத்தில்//

//அடுத்தவரம்......//

அக்டோபர் 2......இன்று அக்19
இன்னும் வரல்லே

தேவ் | Dev said...

//துர்கா|thurgah said...
இந்த குட்டிச்சுவரு கதை எல்லாம் புதுசா இருக்கு அண்ணா.எங்க ஊரில் குட்டி சுவரில் எல்லாம் பசங்க இருக்க மாட்டங்க:P//

அப்படியா குட்டிச் சுவர் இல்லாத வாழ்க்கையா.. பாவம்மா மலேசியா பசங்க :)

தேவ் | Dev said...

//G.Ragavan said...
நக்கல் வசனங்கள். :)))))))))) ஜெட் ஏர்வேசு, எலுமிச்சம்பழச் சாதம்னு...

ஒங்களுக்காவது ரோந்து வண்டி...பெங்களூர்ல ரெண்டு பயக. தெரிஞ்ச பயகதான். பைக்க எடுத்துக்கிட்டுப் போய் நிதானமேயில்லாம போனானுக. அவ்ளோ தண்ணி. அவங்களுக்கு நிதானம் வந்தப்ப ஆஸ்பித்திரீல கட்டில்ல படுத்திருந்தாங்க. பயங்கர ஆக்சிடெண்ட்டு...அப்பப்பா...குடிச்சிப்புட்டு ஓட்டாதீங்கடே...வண்டிய.//

ம்ம்.ஜி.ரா அதே மாதிரி கொடுமை நம்ம குட்டிச் சுவர்ல்ல வரும் நண்பன் ஒருத்தனுக்கும் நடந்துச்சு அதைப் பத்திய விவரத்தை அடுத்து வரும் பகுதிகளில் படிப்பீங்க !!

தேவ் | Dev said...

//TBCD said...
அருமை..! அருமை...!...சென்னை 28 படம் பார்த்த போது கிடைச்ச ஃபீல் இதுல கிடைக்குது...//

வாங்க TBCD தொடர்ந்து படிச்சு உங்க கருத்தைச் சொல்லுங்க நன்றி TBCD.

தேவ் | Dev said...

//:: மை ஃபிரண்ட் ::. said...
மூனு பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சுட்டேன். இரண்டாவது பாகம் டாப்.. best among the best. மூனாவது ஒரு சில இடத்துல எனக்கு புரியல, :-S

அடுத்த பாகம் எப்போது????//

நன்றி மை ஃபிரண்ட் அடுத்தப் பாகம் போட்டாச்சு :))

தேவ் | Dev said...

//Divya said...
சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்கண்ணா!//

திவ்யா சாரி பார் த டிலே :))

தேவ் | Dev said...

//siva gnanamji(#18100882083107547329) said...
//அடுத்த பதிவு சரியான தருணத்தில்//

//அடுத்தவரம்......//

அக்டோபர் 2......இன்று அக்19
இன்னும் வரல்லே//

அய்யா தாமத்தைப் பொறுத்துக் கொண்டதுக்கு நன்றி.. என்னப் பண்றது அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பளு கொஞ்சம் அதிகமாகியிருச்சு.. எப்படியும் இனி வரும் பாகங்களை அதிக இடைவெளியின்றி போட்டு விடுகிறேன்,