Tuesday, December 15, 2009

பனி தேசத்துப் பக்கங்கள்

விரல்கள் உறையும் வினாடிககளில்
ஆறாவது விரலின் புகையினோடு பரவும் எதோ நினைவுகள்
ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் ஈரத் துளிக் கோலங்கள்
விழி முனைகளில் உதிர்ந்து விழும் கனவுகளின் மிச்சங்கள்
இலைத் தொலைத்த மரங்கள் கருகி தொங்கும் கிளைகள்
இதயச் சுவர்களில் மெல்ல படியும் வெறுமையின் எச்சங்கள்
வீதியோரம் வெளிறிய புற்செடிகளின் நடனங்கள்
தூரச் சூரியனின் கதகதப்பு தேடும் தேகத்தின் தாகங்கள்
இணைத் தேடும் பறவையின் காதல் பரபரப்பு
இனம் புரியாத எதோ ஒரு பரிதவிப்பு
அந்தியில் பூக்கும் பனிதேசத்து வானம்
மனதோரம் அழுத்தும் ஒரு வித பாரம்
மேகம் போர்த்திய விண்வெளி
தூக்கம் கலைந்த பின்னிரவு
கட்டியணைத்து காமம் தெளிக்கும் குளிர்
கசங்கிய போர்வைக்குள் தீயென தகிக்கும் தனிமை
முத்தமிட்டு மோகம் விதைக்கும் பனிக்காற்று
தொட்டு விடும் தூரத்தில் என் ஆசைகள்
சில்லென சில்லென பனிமழை....
இன்னொரு இரவு....இன்னும் நீளுகிறது....
பனித்தேசத்தின் பக்கங்கள் கையொப்பம் கேட்க...
வெற்று தாளாய் இந்தப் பக்கமும் புரண்டு ஓடுகிறது...

10 comments:

ஆயில்யன் said...

உள்ளேன் ஐயா! :)

viccy said...

தேவ்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு பக்கம் வந்துருகீங்க... நான் வலைபதிவு படிக்க ஆரம்பிச்சதுக்கு உங்க தென்கிழக்கு வாசமல்லி, என் அண்ணன் பேரு சரவணன் போன்ற கதைகள் தான் முக்கிய காரணம்... உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்..

viccy said...
This comment has been removed by the author.
viccy said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

நல்லா இருக்கு

thiyaa said...

நல்வாழ்த்துகள்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அண்ணே ;)

thiyaa said...

அருமை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Thenammai Lakshmanan said...

//ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் ஈரத் துளிக் கோலங்கள்
விழி முனைகளில் உதிர்ந்து விழும் கனவுகளின் மிச்சங்கள்
இலைத் தொலைத்த மரங்கள் கருகி தொங்கும் கிளைகள்//

அருமை தேவ்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Anonymous said...

new york naharam...thothupochu