
(இந்தக் கவிதை என் தாத்தாவின் நினைவாக எழுதப் பட்டது...புகைப்படங்களில் நான் காணக் கிடைத்த அந்த மனித அடையாளங்கள் என் தாத்தா என்பதை நான் நம்புவதற்கே எனக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது...)
வாழ்ந்தும் வாழும் முதியவர்களுக்கு இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்...
ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாய் பாலில் கழுவியெடுத்தப்
பச்சிளம் பூமுகம்
மழலையின் திரவியம் பூசிய
சிறு பிள்ளை முகம்
பருவத்தின் வாசலில்
பருக்கள் பூத்த முகம்
பால்யத்தைத் தொலைத்துத்
தடுமாறி தவித்த முகம்
இளமையில்
இரும்பு முகம்
இப்படி
எத்தனை முகங்கள்
மணமாலைக்குள்
மணக்கும் முகம்
சிரிப்பைச் சூடிய
சிங்கார முகம்
வாரிசை
வரவேற்ற பெருமை முகம்
முகம் மாற்றி
முகம் மாற்றி
முகவரி கிடைத்ததில்
முகத்திலும் வரிகள்
வாழ்க்கையில் ஏறுமுகம்
வாழ்ந்ததில் வற்றிப் போன முகம்
இறுகிப் போன
இயந்திர முகம்
இற்றுப் போன
இனறைய முகம்
ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாத்தாவின் புகைப்படங்களைத்
தூசுத் தட்டிப் பார்த்து முடித்தேன்...
10 comments:
மிக அருமையான வரிகள். என் தாத்தா நினைவுக்கு வந்து போனார்.
பூபதி,
//என் தாத்தா நினைவுக்கு வந்து போனார். //
ரொம்ப சந்தோஷம்
நல்லாயிருக்கு தேவ்
பாழ் என்னாச்சு? புதுப் பதிவு எதுவும் போடல்லியா? நேரமின்மையா?
வழக்கம் போல் வந்து உற்சாகப் ப்டுத்தும் உங்களுக்கு நன்றிங்கோ
மிகவும் நன்றாக இருக்கிறது தேவ்!
வாழ்த்துக்கள்..
ஜோசப் சார்.. நீங்க என் கவிதையைப் படிக்கிறீங்கங்கறது எனக்குச் சந்தோஷம்.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.
//முகம் மாற்றி
முகம் மாற்றி
முகவரி கிடைத்ததில்
முகத்திலும் வரிகள்
வாழ்க்கையில் ஏறுமுகம்//
அழகு வரிகள்!
வாங்க பாலு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
தேவ் அருமையான பல சிந்தனைகளை உங்கள் கவிதையில் காண்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது
Positive Rama,
நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்... மேலும் உற்சாகமானப் ப்திவுகளை உங்களிடமிருந்து ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..
//அருமையான பல சிந்தனைகளை உங்கள் கவிதையில் காண்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது //
வாழ்த்துக்களுக்கு நன்றி...
Post a Comment