
வானத்தில் அந்தியின்
நாணக் கோலங்கள்
அந்தப் பொழுதில்
அரை நிலாவின்
அலங்கார வெளிச்சத்தில்
முழு நிலாவாய்
பக்கத்தில் நீயிருந்தாய்..
மறக்க முடியவில்லை..
நெஞ்சாம் கூட்டில்
பொன் முகம் புதைத்து
பொல பொலவென நீ
வடித்தக் கண்ணீர்..
இன்றும்
இமை மூடினால்
கண்ணுக்குள்
குளம் கட்டுதே...
பூவிரல் தூரிகையால்
என் மார்பின் மத்தியில்
நீ எழுதிய எழுத்து
உளியாய் உள்ளுக்குள்ளே
இறங்கி நிற்குதே...
மறக்க முடியவில்லை..
மரணம் என்னை
மொத்தமாய் விழுங்கும் வரை
மறக்கவும் முடியாத
நிமிடங்கள்...
அந்தி மாலையும்
அரும்பிய இரவும்
ஆரத் தழுவிய
ஆசை நிமிடங்கள்
வானம் வெறித்து
பார்க்க...
மொழி மறந்து
மௌனம் உடையாக
வார்த்தைகள் தொலைந்து
விழிகளில் தேட..
இதழ்கள் வழியே
இதயங்கள் இணைக்கும்
முயற்சியில்
நீயும் நானும்...
உன் மூச்சுகாற்று
உள்ளத்தைஉலையிலிட..
உள்ளும் புறமும்
உன் வாசம் படர..
உணர்வுகள் இடர...
ஒரு வினாடி
மின்னலாய்..
உன் பார்வை
உரசிப் போக....
இடை நெளிந்தாய்...
இருகரம் நடுவினில்
இடைவெளி
ஒரு கரம் உனது...
மறுகரம் எனது....
என் பெருமூச்சுகள்
என் அனுமதியின்றி
உன்னிடம் விடைக் கோரி நிற்க
என் பார்வையில் வெறுமை...
சூரியக் கூட்டுக்கு கதிர்கள்
திரும்பிக் கொண்டிருக்க
அன்று நான்
கண்டதும் உணர்ந்ததும்
இரண்டு அஸ்தமனங்கள்
நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்
வெற்று பார்வை
நிறைக்கும்
உன் பாதச்சுவடுகள்...
விடியலுக்கு முன்பொழுது
இருட்டில் நானும்
எனக்கு துணையாக
உன் கூந்தல் விட்டுச் சென்ற
உதிர்ந்த ரோஜாவும்....
8 comments:
//நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்
வெற்று பார்வை
நிறைக்கும்
உன் பாதச்சுவடுகள்...//
அழகிய வரிகள்...
//நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்//
all i can say is ... wonderful!!!!
//விடியலுக்கு முன்பொழுது
இருட்டில் நானும்
எனக்கு துணையாக
உன் கூந்தல் விட்டுச் சென்ற
உதிர்ந்த ரோஜாவும்.//
:-( nice poem..!!
பாலு,
உங்கள் ரசனை எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது. உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில சமயங்களில் மெனக்கெட்டுப் பின்னூட்டம் இடுவதும் பல சமயங்களில் அலுவல் காரணமாக பின்னூட்டம் இட தவறி விடுவதுமாய் இருந்தாலும் உங்கள் பதிவுகளைப் படித்து ரசிக்காமல் இருப்பதில்லை....
பாழ்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. உங்கள் அடுத்தப் படைப்பை ஆவலோடு நான் எதிர்பார்த்திருக்கிறேன்... சீக்கிரம் படையுங்கள்
சுடுவானச் காதலியே வாங்க...
ஏன் சோகமுகம்? புன்னைக்க மறந்தது ஏனோ?
Dev said:
சுடுவானச் காதலியே வாங்க...
ஏன் சோகமுகம்? புன்னைக்க மறந்தது ஏனோ?
:-)
நித்தியா,
புன்னகைக்கு நன்றி.
Post a Comment