
உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுதி
ரகசியமாய்
ஒளித்து வைத்திருந்தேன்
என் விழிகளுக்குள்...
பிரியும் நேரத்தில்
ரகசியம்
வெளியானது
நீ புரிந்துக் கொண்டாயா?
அது தெரியாது
எனக்கு..
எழுதிய கவிதை
இன்னும் விழிகளுக்குள்
பத்திரமாய்...
எனக்கானப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
நீள்கையில்
அந்தக் கவிதையை
இன்றும் வாசிக்கிறேன்
ரகசியமாய்.....
4 comments:
நல்லாயிருக்கு தேவ்...
அழகாய் இருக்கு..
//எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்//
நேசமுடன்..
-நித்தியா
நன்றி பாழ்... என்னாச்சு நண்பரே இப்போல்லாம் அதிகமாய் உங்கள் கவிதைகள் வாசிக்க கிடைப்பதில்லை.. நேரமின்மையா?
நன்றி நித்யா...
Post a Comment