Thursday, April 27, 2006

கவி 16: ஒரு முடிவின் கதை

அன்றொரு அந்திப் பொழுதினில்
அருகினில் நீயிருந்தாய்...
ஆசையில் நானிருந்தேன்...
விரல் பட்டது
வெட்கத்தை நீ உடுத்தினாய்..
விழி சுட்டது..
வெப்பத்தில் நான் எரிந்தேன்....
மல்லிகை வாசம்...
உன்னில் பூக்க...
இதழ் தேடினேன்
இதயம் திருடினாய்....
உன்னில் தொலைத்தது
உன்னில் தேட....
என் மொத்தமும்
உன்னில் சங்கமம்....
மார்பில் பூக்கோலங்கள்..
கண்ணீரால் இதய வாசல் தெளித்தாய்...
கையளவு உலகம்
அதில் நீயும் நானும் மட்டும்..
வார்த்தைகள் வழிவிட்டு நிற்க...
உயிரெழுத்தாய் நீயும்
மெய்யெழுத்தாய் நானும்
ஆய்தெழுத்தாய் நம் காதலும்...
உன்னில் புதையவா...
உன்னில் கரையவா...
மொழிகளுக்கு மவுனம் உடுத்தி...
வளைகளுக்கு வார்த்தைப்
பயிற்சி கொடுத்ததில்
கிடைத்தக் காயங்கள்
அன்பு பரிசு....
சுவாசத்தின் ஓசைகளில்
யாருமறியாக் கவிதைகள்
இயற்றினோம்...
கவிதைகளை...
அச்சுக் கோர்க்க...
ச்சீ வெட்கம்
வேண்டாம்....
இது நமக்கான கவிதை...
அந்தக் கணத்தில்
எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்
"வாழ்க்கை எவ்வளவு அழகானது?"
மீண்டும் விழி திறந்தாய்...
உன் கண்ணீர் இம்முறை
சுடவில்லை...
மாறாக குளிர்ந்தது.....
கரம் பற்றிய படி...
விரல் பேசிய படி...
உன் விழியில் நானும்...
என் விழியில் நீயும்...
அப்படியே கரைந்துப்
போயிருக்கக் கூடாதா?
ஆ....
ஆ...
ஆ..
அந்த இரவினைக் குடித்தக்
களிப்பில்
சிவந்த சூரியன்....
சுள்ளென முகத்தில் அரைய...
விழித்துக் கொண்டேன்...
என் நிர்வாணம்
என்னை நிந்தித்தது...
உதிர்ந்த மல்லிகையும்...
புகைந்த சிகரெட்டும்...
உடைந்த மதுக் கோப்பையும்...
கண்ணீர் மறந்தக் கண்களும்....
அத்தோடு...
ஜன்னலோரமாய்
என்றோ கிழிந்து
இன்னும் தொங்கும்
என் காதலும்....

7 comments:

ILA (a) இளா said...

//ஜன்னலோரமாய்
என்றோ கிழிந்து
இன்னும் தொங்கும்
என் காதலும்....//


இதயத்தை கிழிச்சு தொங்க போட்டுருச்சு, ஜிம்ப்ளி சூப்பர்.தேவுக்குள்ள இப்படி ஒரு கவிதையா? அட்டகாசம்

Unknown said...

நன்றி இளா... காதல் இல்லாமல் வாழ்க்கையா...இருக்க முடியாது இளா...

Bharaniru_balraj said...

//உதிர்ந்த மல்லிகையும்...
புகைந்த சிகரெட்டும்...
உடைந்த மதுக் கோப்பையும்...
கண்ணீர் மறந்தக் கண்களும்....//

இதுக்கு என்ன அர்த்தம். ?

நவீன் ப்ரகாஷ் said...

//விரல் பட்டது
வெட்கத்தை நீ உடுத்தினாய்..//

//உயிரெழுத்தாய் நீயும்
மெய்யெழுத்தாய் நானும்
ஆய்தெழுத்தாய் நம் காதலும்...//

//மொழிகளுக்கு மவுனம் உடுத்தி...
வளைகளுக்கு வார்த்தைப்
பயிற்சி கொடுத்ததில்
கிடைத்தக் காயங்கள்//

மிக அருமை பாலா !

கவிதைக்கு காதலுடுத்தி
காதலுக்கு கவிதையுடுத்தியுள்ளீர்கள் !

நவீன் ப்ரகாஷ் said...

தேவ் பெயரை தவறாக பாலா என எழுதிவிட்டேன் மன்னியுங்கள் !!

Unknown said...

உதிர்ந்த மல்லிகையும்... --> காதலியின் நினைவு

புகைந்த சிகரெட்டும்...
உடைந்த மதுக் கோப்பையும்...
கண்ணீர் மறந்தக் கண்களும்... ----> காதலனின் நிலைமை

வரிகளின் விளக்கம் இது தான் நட்புக்குரிய பரணி அவர்களே

Unknown said...

//கவிதைக்கு காதலுடுத்தி
காதலுக்கு கவிதையுடுத்தியுள்ளீர்கள் !//
இந்தப் பாராட்டு வரிகள் இந்த கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது ..

நவீன் தங்கள் வருகை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது... பெயரில் என்ன இருக்கிறது... பாராட்டிய பாசம் உள்ளத்திற்கு உவகை அளிக்கிறது.. அதுவே என் பாக்கியம்