Wednesday, May 17, 2006

கதை 7:நண்பனின் காதலி (3)

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

பீச் ரயில் நிலையத்தில் காலையில் இருந்து காக்க காக்க வைத்தான் நண்பன் சிரீஷ்.

"இன்னிக்கு அவ எப்படியும் வ்ருவா...இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பு அமையாது மாப்ளே.."

மதியம் உச்சி பொழுதுல்ல கொளுத்துற வெயில்ல நண்பனோடக் காதலுக்கு நீர் பாய்ச்சும் வேலைப் பாக்க வந்த என்னை நானே நொந்துக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல்ல.

மூணாவது ஓசி சிகரெட்டும் முழுசா ஊதி முடிச்சு க்டுப்பு தலைக்கேற உக்காந்து இருந்தேன். அந்நேரம் எந்த வடநாட்டுப் புண்ணியவானும் புண்ணியவாட்டியும் பெத்தெடுத்தாயங்களோ அவங்க வாழ்க.... கோதுமை அல்வா கடை ஒண்ணு... டைட்டா ஜீன்ஸ் போட்டுகிட்டு தனியா அங்கே வந்துச் சேர்ந்ததுச்சு.

அந்த கொஞ்ச நேரத்துல்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏற்ப்ட்ட தவிர்க்க முடியாத ஒருதலைக் காதல் காவியத்தைப் பத்திப் பிறகு விரிவாச் சொல்லுறேன். இப்போதைக்கு என் நண்பனின் காதல் கதையிலே கவனம் செலுத்துவோம்

அல்வாக் கடையை வாய் பிளந்துப் பாத்துகிட்டு எனக்குத் தெரிஞ்ச பிராத்மிக் ஹிந்தியிலே ஒரு மூணு ஹிந்திப் பாட்டை அதுல்ல கொஞசம் இதுல்ல கொஞ்சம்ன்னு கலந்துப் பாடிகிட்டு இருந்தேன்.

நண்பன் சிரீஷ் படு டென்சனா வர்ற போற ஒவ்வொரு ரயில் பொட்டியிலும் அவளை அதான் அவன் காதலிக்கற அவளைத் தேடிக்கிட்டு இருந்தான்...

ஒரு சின்ன பிரேக் எடுக்க நம்ம பக்கம் வந்தான். நான் பாட முயற்சி பண்ணிகிட்டு இருந்த ஹிந்திப் பாட்டுக்கு வார்த்தை எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணான். நான் வெட்கம் பார்க்காமல் தேங்க்ஸ் சொன்னேன்.

"ச்சீ... எனக்கு உதவி பண்ண வந்துட்டு....தனியா ரூட் போட்டு... தப்பு தப்பா இந்தி பாட்டுப் பாடிகிட்டு உக்காந்து இருக்க.... இதுல்ல எனக்கு தேங்க்ஸ் வேற சொல்லுற....உன்னை....."
சிரீஷ் கோபத்தையும் எரிச்சலையும் காட்ட ஒரு ஆள் தேவை. அந்த இடத்தில் என்னை விட்டால் அவனிடம் அகப்படுவார் யாரும் இல்ல.

"இந்தா மச்சி இந்த தம் போடு... அப்புறம் கூலா ஆயிடுவே..."

"அடிங்க... என் காதலுக்கு ஆப்பு வைக்கிற முடிவில்ல உறுதியா இருக்க நீயி.. அவ இப்போ வர்ற நேரம் நான் தம் பத்த வக்கணும் அதை அவ பாக்கணும்... அத்தோட எல்லாத்துக்கும் மங்களம் பாடணும் நல்ல நண்பன்டா நீயி.. வாழ்க உன் நட்பு"

ம் எனக்கும் கோவம் வந்தது.. சரி இப்போ வேணாம் அப்புறம் வச்சிக்கிறேன் உனக்கு தனி கச்சேரி. இப்போ நீ வாசிடா மகனே.. என மவுனம் காத்தேன்.

இன்னொரு சிகரெட் எடுத்து பற்ற வைக்கப் போனேன். என் உதட்டில் வைத்த சிகரெட்டை ஈவு இரக்கமின்றி பிடுங்கி எறிந்தான்.

"ப்ளீஸ் அவ வந்துப் போற வரைக்கும்.. என் செல்லம் இல்ல" இருகைக் கூப்பியது என் நட்பு. நான் ஒப்புக் கொண்டேன்.

"வருவாளா?" இது நான்.

"இன்னும் இருபது நிமிஷம் இருக்கு.. அடுத்த ட்ரெயின்ல்ல கண்டிப்பா வருவா" அவன் பதில் சொன்னான்.
"சரி லெட்டரை ஒரு நல்ல கவர்ல்ல போட்டுக் கொடு" நான் ஐடியா கொடுத்தேன்.

"OH MY GOD"அவன் கரண்ட் கம்பியில் கால் வைத்ததுப் போல் அலறினான்.

மொத்த பீச் ஸ்டேஷனும் திரும்பிப் பார்த்தது. ம்ம் மொத்தம்ன்னு நான் சொன்னது அங்கிருந்த ஒரு பத்து பேர். அதுல்ல என்னுடைய அல்வா கடையும் அடக்கம்... யப்பா என்ன ஒரு லுக்..அதை ரசிக்க விடாமல் படுபாவி மறுபடியும் அலறினான்.

"அந்த லெட்டர் தான் அன்னிக்கு தண்ணி அடிக்கும் போது வாங்கி நீ கிழிச்சிப் போட்டுட்டியே"
"ஆமா.. வேற லெட்டர் எழுதிட்டு வர்றல்லயா"

"அப்படின்னு லெட்டர் இல்ல... நேராச் சொல்லிடு"

"நான் மாட்டேன்"
"ஏன்"
"அது வந்து மாட்டேன்னா.. மாட்டேன்"

"ஓ.. செருப்பு டயலாக் ஞாபகம் வந்துருச்சோ"

அவன் பதில் சொல்லவில்லை.
எனக்கென்ன உங்களூக்கும் தான் காரணம் புரிந்திருக்கும்

"ஒண்ணு பண்ணு வீட்டுக்குப் போய் நிதானமா லவ் லெட்டர் எழுதிட்டு வந்து நாளைக்குக் கொடுப்போம்... இன்னிக்கு ஓர்க் அவுட் ஆகாது போ"
என் கண்கள் அல்வா கடையை வட்டம் இட்டன. யப்பா என்ன ஒரு....அவன் மறுபடியும் அலறினான்.

"நீ நினைச்சா எனக்கு உதவி பண்ணலாம்?"
"என்ன உதவி?"

"எனக்கு அவசரமா நீ ஒரு லவ் லெட்டர் எழுதி கொடுடா மாப்பூ.. உம் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா"
"பதினைஞ்சு நிமிசத்துல்ல காதல் கடிதமா? நோ..நோ..."
"ப்ளீஸ் டா.. இதை விட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்காதுடா"

அவனைப் பார்த்தால் பாவமாய் இருந்துச்சு. ஒத்துக் கொண்டேன்.

"மச்சி நான் சொல்ல சொல்ல நீ எழுதுடா"

"எனக்கு நல்ல நேரத்துல்லயே தமிழ் தகராறு.. அதுவும் இந்த நேரத்துல்ல யுத்தமே வந்துறும்டா.. ப்ளீஸ்டா"

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்ததை என்னால் மறுக்க முடியவில்லை.

ஒரு வெள்ளைப் பேப்பர்... பால் பாயிண்ட் பேனா என் கைக்கு வந்தது.
உபயம் சிரீஷ்.

அல்வா கடையைப் பார்த்ததில் எனக்குள் காதல் மழைப் பொழியத் துவங்கியது.. கூடவே கவிதையும் புயலெனப் புறப்பட்டது.

ஒரு பெண் ஒரு ஆணுக்குள் எப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறாள்.

இரு விழிகளால் ...அவன் இதயம் கிழித்து..
தனக்கென அவனில் ஒரு இடம் பிடித்து...
சின்னச் சிரிப்பினால் அவனைச் சிறையெடுத்து...
அவனைத் தன்னுடையவனாக்கி...
அவனை மெல்ல மெல்ல ஆளுகிறாள்...
இப்படி ஆளப்படுவதையே ஒவ்வொரு ஆணும் உள்ளூர விரும்புகிறான்....

எழுதினேன்... வார்த்தைகளை அப்படி இப்படின்னு புரட்டிப் போட்டு.. என்னமா எழுதினேன் தெரியுமா?

கிட்டத்தட்ட எழுதி முடித்த நிலையில மறுபடியும் அவனிடமிருந்து ஒரு அலறல்...

"அவ வந்துட்டா டா"
நான் லெட்டரை அவனிடம் நீட்டினேன். அவன் வாங்கிக் கொண்டு ஓடினான்.

"டேய் ஒரு தடவப் படிச்சுப் பாத்துட்டு கொடுடா"

"நீ எழுதுனாச் சரியாத் தான் இருக்கும்"
சொல்லிக்கிட்டே அவளை நோக்கி ஓடினான். எனக்குள் ஒரு பெருமிதம்.
நட்பின் பெருமிதம்.

பெருமித உணர்வினில் இருந்து விடுபட்டு அல்வாக் கடைப் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

அங்கே....

ஜாங்கிரி கல்ர்ல்ல ஒரு சேட்டு பையன் அல்வா கடை இடுப்பை வளைச்சி என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு.

அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்ன்னு.. அது எனக்கே எனக்கு சொன்னார் போலன்னு பாக்கெட்டுல்ல கைவிட்டு சிகரெட் தேடுனேன்.

நான் சிகரெட் தேடவும் சிரீஷ் ஓட்டமா வந்து என்னை இடிக்கவும் சரியா இருந்துச்சு..

பின்னாடி செருப்பு வருதான்னு தலையைச் சாய்ச்சி டவுட்டா நான் பாத்தேன். அப்படி எதுவும் இல்ல.

ஷிரீஷ் சிகரெட் பற்ற வைத்தான் எனக்கும் சேர்த்து. இரண்டு பேரும் படிக்கட்டு மறைவினில் அம்ர்ந்தோம்.

"லெட்டரைக் கொடுத்துட்டேன்"

"என்னச் சொன்னா?"

"எங்கப்பா உங்களுக்குப் பின்னாடி வந்துட்டு இருக்கார்.. அப்படியே போயிடுங்கன்னு சொன்னா"

"அப்புறம்"

"அதான் பாத்தி இல்ல.. ஓடி வந்துட்டேன்..நீ என்ன நினைக்கிற?"

"ம் சோ.. செருப்புத் தூக்கல்ல... உன்னை அவங்க அப்பா கிட்டப் போட்டும் கொடுக்கல்ல..."

"ஆமா"

சிரீஷின் கன்னங்கள் ஆப்பிளாய் சிவந்தன். பொண்ணு வெக்கப் படுறதைவிட ஒரு ஆண் வெட்கப்படுறது இன்னும் அழகு தான். காதலித்தால் ஆணுக்கும் வெட்கம் வரும் போலும்.

மாடிப் படிகளில் ஏறி போன ரஞ்சனி அங்கிருந்து சிரீஷ் தென்படுகிறானா என கண்களை நாலுபுறமும் சுழல விட்டாள்...அவனைக் காணாமல் அவள் முகம் சுருங்கியது. காதலுக்கே உரிய உலக குணங்கள் அவள் முகத்தில் தென்பட்டன.

நான் சிரீஷ் பக்கம் திரும்பினேன்.

சிரீஷ் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திருப்தியில் சிக்ரெட்டை ஆழமாய் சுவைத்து வானம் பார்த்து ஊதினான். தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அவன் சந்தோஷம் என்னையும் தொற்றிகொண்டது.

அப்போதைக்கு ஒலிம்பிக்ல்ல ஓடி கோல்ட் மெடல் வாங்கியிருந்தாக் கூட அவ்வள்வு சந்தோஷப் பட்டிருப்போமோ என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லுவேன்.

" யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" இருவரும் ஒரே சத்தமாய் கத்தினோம்...

நாங்கள் கத்தி முடிக்கவும் .. அந்த அல்வா கடை அவளுடன் இருந்த ஜாங்கிரி தோளில் சாய்ந்துக் கொண்டு எங்களைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது.

"யே லோக் பாகல் ஹெய்ன்" என்று குச் குச் ராணி குரலில் அவனிடம் குறிப்பாக என்னைக் காட்டிச் சொன்னாள்.

"அடிங்க..." என்று எழுந்த சிரீஷின் கையைப் பிடிச்சு இழுத்து உட்கார வைச்சேன்.

"என்னடா?" என்று பரிவாய் கேட்டான் சிரீஷ்.

"விடுடா.. அவளை நான் லவ் பண்ணிட்டேன் .. பொழைச்சுப் போகட்டும் "

நான் சிரியசாச் சொன்னான். படுபாவி சிரீஷ் விழுந்து விழுந்து சிரித்தான். இப்படி அன்று மாலைக் கும்மாளமாய் வீடு திரும்பினோம்.

அது நடந்தது 2000ஆம் வருடம் மே மாதம்....
அன்னிக்கு பீச் ஸ்டேஷ்னில் ரஞ்சனியைப் பாத்ததுக்கு அப்புறம் அவளை சிரீஷ் ம்றுபடியும் பாத்தது...கதையின் முதல் பகுதிக்குப் போங்க...

தன் அலுவலகத்தில் தனக்கு மேலதிகாரியாக தான்...

இடையில் என்ன நடந்திருக்கும்....

எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும் விளங்கல்ல.

அதுக்கு மறுநாள் சிரீஷ் எதோ இன்டர்வியூன்னு அலைஞ்சுட்டு இருந்தான். அவனுக்கு அந்த இன்ட்ர்வியூ கிளிக்காகி மும்பையிலே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திலே வேலைக் கிடைச்சுது.

அந்த நல்ல செய்தியைச் சொல்ல அவளைத் தேடி அவ அட்ர்ஸ் கண்டுப் பிடிச்சு அவ வீட்டுக்கேப் போனான். அவங்க வீட்டோட சம்மருக்கு கும்பகோணம் போயிருக்காங்கன்னு தெரிஞ்சது.

சரி ஒரு மாசம் வந்துறுவாங்கன்னு மனசைத் தேத்திகிட்டு மனசை வேற விஷயத்துல்ல செலுத்திகிட்டு சம்மரை ஜாலியாக் கழிச்சான்.

அவன் மும்பைக் கிளம்புற நாளும் வந்துச்சு...அவக் கும்பக்கோணத்துல்ல இருந்து திரும்பல்ல. அப்போக் கூட நான் தான் அவன் மனசைத் தேற்றி ஒரு வழியா பிளைட் ஏத்தி அனுப்பினேன்..

"மச்சி.. அவளுக்கு என்னைப் பிடிக்கல்லயாடா?" பாவமாய் கேட்டான் சிரீஷ்.
"அப்படி எல்லாம் இல்லடா"

"அவங்க வீட்டுல்ல வேற எதாவது நடந்திருக்குமா?" பதட்டத்தில் சிரீஷ்.
"மாப்பு... சும்மா குழம்பாதே... இப்போ நீ உன் ஜாப்ல்ல கவனம் வை... மும்பைக்குத் தானேப் போற.. நினைச்சாத் திரும்பி வந்துடலாம்... நீ நெக்ஸ்ட் டைம் திரும்பி வரும் போது ஏர்போர்ட்க்கு உன்னை ரீசிவ் பண்ணவே அவ வருவாப் பாரேன்"
இப்படி அவன் மனசுக்கு மருந்துப் போட்டு அனுப்பி வைச்சேன். அவனும் போனான். போய் அடிக்கடி போன் பண்ணுவான். அவனைப் பத்திப் பேசுறதை விட அவளைப் பத்தி அதிகம் பேசுவான்.

அப்படி இப்படி அவ போன் நம்பரையும் மெயில் ஐடியையும் அவனுக்கு வாங்கிக் கொடுத்தேன்...அவன் அனுப்புன எந்த மெயிலுக்கும் அவ பதில் அனுப்பல்ல. அவன் எனோ பிடிவாதமாப் போன் பண்ண மறுத்துட்டான். ( அது அவங்கப் பக்கத்து வீட்டு போன்.. செல் எல்லாம் அப்போ ஏது)
இப்படியே காலம் உருண்டுப் போச்சு...எனக்கும் ஒரு வேலைக் கிடைச்சு அதுல்ல அல்லாடி தள்ளாடி தடுமாறி முன்னேறிகிட்டு இருந்தக் காலம். சிரீஷ் மும்பைப் போன மூணாவது மாசம் இங்கிலாந்துப் போனான் அப்படியே அங்கேயே நாலு வருஷம் இருந்தான். வருஷம் ஒரு தடவ வருவான். அப்படி வரும் போதெல்லாம் அவளைப் பாக்க முயற்சி செய்வான். அது தோல்வியில் முடியும். பின்னர் ஒரு குவார்ட்டர் கண்ணீரிலும் ஊறுகாய் புலம்பலிலும் முடியும்.

இப்படி ஒரு முறை வந்தப் போது சுனிதாவின் புகைப்படததை என்னிடம் காட்டி
"பொண்ணு எப்படி இருக்கா?" என்று கருத்துக் கேட்டான்.
"நல்லா இருக்கா... ஆனா..."
"இவத் தான் எனக்கு எங்க வீட்டுல்ல எனக்குப் பார்த்து இருக்க பொண்ணு... அடுத்த மாசம் கல்யாணம்" என்னைப் பேசவிடாமல் அவனேச் சொல்லி முடித்தான்.

"அப்போ ரஞ்சனி..."
"யார் அவ? எதோ வந்தா... போனா... என்ன போகும் போது காயப்டுத்திட்டுப் போயிட்டா அவ்வளவு தான்"

என்னப் பேசுவதென்று தெரியவில்லை. அது அவன் காதல்...அவன் வாழ்க்கை... நான் .. I KNOW EVERY FRIENDSHIP HAS ITS LIMITS I DIDNT WANT TO CROSS IT.

"எப்பவும் நீ கூப்பிடுவே.. இப்போ நான் கூப்பிடுறேன் வாடா .. போய் மூச்சு முட்ட குடிச்சுட்டுக் கொண்டாடலாம்"

சிரீஷின் அழைப்பை ஏற்று மவுனமாய் அவனைப் பின் தொடர்ந்தேன்.
சிரீஷ் அன்று இஷ்ட்டத்திற்கு குடித்தான்.. நான் அவனைத் தடுக்கவில்லை.

"டேய் மாமா... ஒண்ணு சொல்லுறேன் கேளு.. இது என் சொந்தச் சரக்கு இல்ல எங்கியோ கேட்டது..ஆனா ரொம்பக் க்ரெக்ட்டான மேட்டர் மாமா...ஆமா கேளு....

IF U LOVE SOMETHING SET IT FREE
IF IT COMES BACKTO YOU
IT BELONGS TO YOU

IF IT DOES NOT.. DONT WORRY IT NEVER BELONGED TO YOU...

போதையில் நான் உதிர்த்த தத்துவம் தான்...

"இப்போ இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் வருவாடா.... ம்ம்ம் நீ கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்காத வேளையிலே வருவாப் பாருடீ...."

சிரீஷின் கண்களில் கண்ணீர்... நானும் அழுதேன்....

இதோ அதுக்கு அப்புறம் சிரீஷிற்கும் சுனிதாவுக்கும் கல்யாணம் ஆச்சு. சந்தோஷமா வாழ்க்கைப் போகுது. அழகான குழந்தை.

பிளாஷ் பேக் ஓவர்.

ட்ரிங்..ட்ரிங்.... சிரீஷ் கால் தான்.

"ஹாய் மச்சி...சொல்லுடா.. உன் புது பாஸ் என்னச் சொல்லுறா?"
"எங்க புரொஜக்ட் முடிஞ்சுப் போச்சுடா... இன்னிக்கு டீம் மீட்டிங்... அவப் பேசுனாடா..."
"டீம் மீட்ன்னா டீம் லீட் பேசத் தானேச் செய்வா...அதுல்ல என்ன ஆச்சரியம்"
"எல்லாரையும் தேங்க் பண்ணிப் பேசுனா... அவளுக்கு கல்யாணமாம்டா.. அவ வுட்பீ கூட வந்திருந்தான்.. ஆள் நல்லாத் தான் இருக்கான் அவளுக்குப் பொருத்தமா...மீதிய டிஜில்ல எடுத்து வச்சுருக்கேன் வாயேன் பாக்கலாம் " என்றான்.

"வழக்கமான் டீம் மீட்ன்னா விடியோ எல்லாம் எடுக்க மாட்டோம் ... எங்க கம்பெனிக்கெ பெரிய மைல்ஸ்டோன்டா இந்த புரொஜ்க்ட் சக்ஸஸ். இதுன்னாலே எங்க லாபம் எங்கியோ போகப் போகுது."

ரஞ்சனி புடவைக் கட்டி அழகாய் வந்திருந்தாள். கம்பீரமானப் பெண்.
வழக்கமான் நன்றிகளைச் சொன்னாள். தன் வருங்காலக் கணவனைப் பற்றி சொன்னாள். கடைசியாக...சிரீஷ் கம்ப்யூட்டர் வால்யூமைக் கூட்டினான்...
" Now I should thank and appreciate the most important man of this project.. The ever admirable Sirish Ragahavan(இந்த இடத்தில் கரவொலிகளும் உற்சாகக் குரல்களும் ஏராளமாய கேட்டன.) My college senior... blah blah..........I think hes the most right person to lead this project in the coming years "என்று முடித்தாள்.

முடித்தப் பின் சிரீஷை அவள் பார்த்த பார்வை எனக்குப்
பீச் ஸ்டேஷ்னில் சிரீஷை அவள் தேடிய அந்தச் சிலக் கணங்களை ஞாபகப் படுத்தியது.

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னடா?" என்றான் சிரீஷ்.

"ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல...ப்ச் தண்ணி அடிக்கிறதை நீ நிறுத்திட்டே இல்லன்னா இன்னிக்கு ஒரு பார்ட்டி வச்சு ஜமாய்ச்சுடலாம்" என்றேன்.

அவன் சிரித்தான். நானும் சிரித்தேன்.

ஒரு நெடுநாளையக் கேள்விக்குத் திருத்தாமான விடைக் கிடைச்சிருச்சே.
ம்ம் இந்த விடை எனக்கும் இதைப் படிக்கும் உங்களுக்கும் மட்டும் தெரிந்த ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்..

சிரீஷ்க்கு தெரிய வேணாம்... ப்ளீஸ்...

நன்றி....:)

33 comments:

நாகை சிவா said...

சீக்கிரம் update பண்ணுப்பு.

நாமக்கல் சிபி said...

//(WILL BE UPDATED SHORTLY)//

..............!?

நாமக்கல் சிபி said...

//வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு//

.....Superb!

:-)))))

அருட்பெருங்கோ said...

நிறைவுப் பகுதின்னுப் போட்டுட்டு இப்படி முடிக்காம விட்டா எப்படி????

சீக்கிரம் முடிச்சு வைங்க!!!!

அன்புடன்,
அருள்.

கவிதா|Kavitha said...

//(WILL BE UPDATED SHORTLY)//

please dont take much time to update ..insteresting.. post it soon..

ஜொள்ளுப்பாண்டி said...

//கோதுமை அல்வா கடை ஒண்ணு... டைட்டா ஜீன்ஸ் போட்டுகிட்டு தனியா அங்கே வந்துச் சேர்ந்ததுச்சு.//

எல்லாரும் அல்வா கொடுத்து தேத்தப் பார்த்தா அல்வா கடையவே தேத்தப் பார்த்திருக்கீயளே !!:))

//அதுல்ல என்னுடைய அல்வா கடையும் அடக்கம்... யப்பா என்ன ஒரு லுக்..//

கவலையேபடாம மானாவாரியா ஜொள்ளை அள்ளித் தெளிச்சிருக்கீங்கண்ணா !!!


//"டேய் ஒரு தடவப் படிச்சுப் பாத்துட்டு கொடுடா"//

தேவண்ணா இதுலே ஏதோ உள்குத்து இருக்கோ??

//ஜாங்கிரி கல்ர்ல்ல ஒரு சேட்டு பையன் அல்வா கடை இடுப்பை வளைச்சி என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு.//

அல்வாவை ஜாங்கிரி தேத்தீடுச்சே !!!
:((

காதலர்கள் back dropல் டைட்டானிக் படம் மாதிரி காதல்கதைக்கு ஊடால ஒரு கிளைக்கதைன்னு ஜாமாய்ச்சிட்டீங்கண்ணா !!

பொன்ஸ்~~Poorna said...

ஏம்பா பாண்டி, அந்த மெயின் கதைய நீ படிக்கவே இல்லையா?!!!

தளபதி சிபி, ஒட்டு மொத்த கதையிலயும் உங்களுக்கும் இது தான் பிடிச்சிருக்கா!! சரி தான்.. கட்சிய பாண்டி கிட்ட விட்டுட்டு வந்தது தப்பா போச்சே.. எல்லாரையும் மாத்திடுவான் போலிருக்கே!! சிபி, உங்க வீட்ல ஊர்லேர்ந்து வந்துட்டாங்க.. நியாபகம் இருக்கா?!!

தேவ், கதை சூப்பர்.. நல்ல விடை... நல்ல ரகசியம்.. உங்க நண்பர் சீரிஷைப் பார்த்தா நான் நிச்சயம் சொல்ல மாட்டேன்.. நம்ம பசங்க தான் அந்தப் பகுதியைப் படிக்கவே இல்லை போலிருக்கே.. கவலை வேண்டாம் :)

நாகை சிவா said...

அருமையாக நிறைவு செய்து உள்ளீர்க்கள்

தேவ் | Dev said...

UPDATE செய்தாச்சு முழுசாப் படிச்சுப் பாத்துட்டு நீங்கத் தான் உங்க கருத்தைச் சபைக்குச் சொல்லணும் வந்து சொல்லுங்க சிவா...

தேவ் | Dev said...

//(WILL BE UPDATED SHORTLY)//

..............!?
Done Sibi

Waiting for your Opinion:)

தேவ் | Dev said...

//வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு//

.....Superb!

:-)))))

Thanks Thalapathy:)))

தேவ் | Dev said...

வாங்க அருள்... உங்கப் பதிவும் மனத்தை வருடுதுங்கோ...

ஆங் அப்புறம்.. நிறைவு செய்யணும்ங்க்ற முடிவுல்ல தான் எழுத ஆரம்பிச்சேன்... ஆனாப் பாருங்க நடுவுல்ல வேலை வந்து நிக்க போக வேண்டியதாப் போச்சு...

இப்போ முழுப் பதிவும் போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்தச் சொல்லுங்க.

நன்றி அருள்

தேவ் | Dev said...

Kavitha,

Post updated.. waiting for the readers verdict.. pls psot ur comments.. Thnaks

ஜொள்ளுப்பாண்டி said...

//நம்ம பசங்க தான் அந்தப் பகுதியைப் படிக்கவே இல்லை போலிருக்கே.. கவலை வேண்டாம் :) //

தேவு என்னாதிது கடைசி பகுதி யெங்கே?? பொன்ஸக்கா மட்டும் படிச்சது எப்படி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!! ஏன் இந்த பாரபட்சம்? எங்களுக்கு அதைப்படிக்கும் கொடுப்பினை இல்லையா? அய்யகோ சங்கக் கொழுந்தே ஏன் ஏன்????

தேவ் | Dev said...

பாண்டி என்ன சொல்லுறது... ம்ம் நம்ம பதிவு படிச்சுட்டு அப்படியேப் பிரிச்சு மேய்ஞ்சுட்ட...:))))

மிக்க மிக்க நன்றி

தேவ் | Dev said...

// கதை சூப்பர்.. நல்ல விடை... நல்ல ரகசியம்.. உங்க நண்பர் சீரிஷைப் பார்த்தா நான் நிச்சயம் சொல்ல மாட்டேன்.. //

நன்றி பொன்ஸ் ஒரு விதத்துல்ல இது கதை அல்ல நிஜம்.... சிரீஷ் பொய் இல்லை ஒரளவு உண்மை..

அப்புறம் உங்க பயணம் நல்ல படியா அமைந்ததா?

sivagnanamji(#16342789) said...

நன்றாக இருந்தது...வேகமான(ஸ்பீடான) நடை...நல்ல முடிவு.
தண்ணி தொட்டி தேடிப்போகும்
கண்ணுகுட்டி என்ன சொல்றார்?

Anonymous said...

:-)வார்த்தை வரவில்லை
:-)


நேசமுடன்..
-நித்தியா

தேவ் | Dev said...

//தேவு என்னாதிது கடைசி பகுதி யெங்கே?? பொன்ஸக்கா மட்டும் படிச்சது எப்படி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!!//

பாண்டி,

கதையோட முடிவு பகுதி இது தான். இதுல்ல உனக்கு எந்த வித குழ்ப்பமும் வேண்டாம். நிதானமாப் படிச்சுப் பார்.. என் விளக்கம் உனக்குப் புரியும். உனக்குத் தெரியாமல் நான் எப்படி பாண்டி தனிப் பதிவு எல்லாம் போடமுடியும் நீயே சொல்லு.

தேவ் | Dev said...

//அருமையாக நிறைவு செய்து உள்ளீர்க்கள் //

நன்றி சிவா,

கதைகளில் தான் இப்படிப் பட்ட முடிவுகளை நம்மால் ஏற்றுகொண்டு ரசிக்க முடிகிறது. நிஜத்தில் ஏனோ முடிவதில்லை:)

தேவ் | Dev said...

வாஙக ஜி,

//நன்றாக இருந்தது...வேகமான(ஸ்பீடான) நடை...நல்ல முடிவு.//

மிக்க நன்றி.

//தண்ணி தொட்டி தேடிப்போகும்
கண்ணுகுட்டி என்ன சொல்றார்? //

ஆமா அது யாருங்க அந்தக் கன்னுக்குட்டி? சொல்லுங்க?

தேவ் | Dev said...

//:-)வார்த்தை வரவில்லை//
நன்றி நித்யா

பொன்ஸ்~~Poorna said...

//நிஜத்தில் ஏனோ முடிவதில்லை:)//
அடுத்தக் கதை தயாராகிக்கிட்டு இருக்கா? :)

தேவ் | Dev said...

பொன்ஸ் இப்படி எழுத நிறைய கதை இருக்குங்க..... இதுக்கு எல்லாம் முன்ன சொன்ன மாதிரி முடிவே கிடையாதுங்க:)

தேவ் | Dev said...

இந்தக் கதைக்குப் பின்னூட்டம், தனிமடல், செல்பேசி, எஸ்.எம்.எஸ் மூலம் ஆதரவளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

விமலன் said...

கலக்குறீங்க போங்க....

Kuppusamy Chellamuthu said...

நல்லா இருக்குங்க.

-குப்புசாமி செல்லமுத்து

மனதின் ஓசை said...

//சிரீஷின் கண்களில் கண்ணீர்... நானும் அழுதேன்....//
நட்பை அழகாக சொன்ன வரிகள்..நெஞ்ஜில் நின்ற வரிகள்.. இந்தக் கதையில் என்னை முழுக்க முழுக்க ஈர்த்தது உங்கள் நட்பு தான்..
அந்த உரையாடல்கலும் அருமை..நட்பும் குறும்பும் கலந்து இனிக்கிறது..
மனதுக்கு நிறைவான கதை..
உங்களின் உண்மையான நண்பர்களுக்கு என் பராட்டுக்கள்.

இந்த பக்கத்துக்கு இதுவரை வந்ததில்லை... போட்டி கதை படிக்க வந்தேன்.. அப்படியே மற்றவைகலும்...

தேவ் | Dev said...

ஹமீத், உங்கள் வருகைக்கும் த்ருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து பக்கம் 78 ஐ புரட்டுங்கள்...:)

Anonymous said...

Superb...Pinniteenga ponga.

தேவ் | Dev said...

//Superb...Pinniteenga ponga. //

நன்றி அனானி.

தேவ் | Dev said...

//விமலன் said...
கலக்குறீங்க போங்க....//

நன்றி விமலன்

தேவ் | Dev said...

//Kuppusamy Chellamuthu said...
நல்லா இருக்குங்க.

-குப்புசாமி செல்லமுத்து//

நன்றி குப்புசாமி செல்லமுத்து