
என் மனசு
வெள்ளையாய் தான் இருந்தது..
நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....
------------------------------------------------
உன் கண்ணில்
தூசு விழுந்தாலும்
கலங்கிப் போவதென்னவோ
நான் தான்..
உன் கருவிழி குளத்திற்குள்
கலங்கலாய் என் உருவம்..
-------------------------------------
சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..
---------------------------------------------
உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......
18 comments:
தேவ், நல்லா இருக்கு.
நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்
அன்புடன்...
சரவணன்.
சூப்பர் தேவ்!
/*உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......*/
அழகு கவிதை தேவ் :)
/*சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..*/
இதுவும் அழகு
//நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....//
//அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை//
அழகு தேவ் !! மேலும் கவியுங்கள் ! :)
ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே?
ஆனாலும் நல்லாத் தான்யா இருக்கு.
//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே?
//
கவிதை இரசிக்கும்படியா இருந்தது!
கைப்புள்ளயின் பின்னூட்டம் ரசிக்கும்படியா இருக்குது!
வாங்க நன்மனம்,
நன்றி.. அப்படியே நேரம் கிடைக்கும் போது பக்கம் 78ஐ சுத்திப் பாத்து உங்கக் கருத்தைச் சொல்லுங்க.:-)
வாங்க சரவணன்,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நீங்க இந்தப் பக்கம் வந்ததில் உங்க கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான்ப் பதிவுகள். தொடருங்கள் நண்பரே.
சிபி,
ஒத்தச் சொல் சொன்னாலும் உச்சி மொத்தமும் குளிரும் சொல்லைச் சொல்லிப்புட்டீங்க:-)
//அழகு கவிதை தேவ் :) //
//இதுவும் அழகு //
நன்றி ப்ரியன்
Hi Maanavan,
Hope u got my message. Welcome to blog world.
//அழகு தேவ் !! மேலும் கவியுங்கள் ! :)//
நான் உங்கள் ரசிகன் தலைவா!!!!
//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு சின்னப் பில்லங்களை வேற கெடுக்குறே? படிக்கிற பில்லங்களைத் தூண்டி விடுறே//
அய்யா கைப்புள்ள... நம்ம கவிதைக்குக் கருத்துச் சொல்லிட்டீங்க..நீங்க அர்த்த ராத்திரியிலே மால்கேட் மொட்டை மாடியில் ரகசியமா எழுதியக் கவிதைகளைப் பதிவுலகம் படித்து ரசிக்க சீக்கிரம் வெளியிடுமாறு இந்த நண்பன் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.. செய்வீங்களா?
//ஆனாலும் நல்லாத் தான்யா இருக்கு. //
தாங்க்ஸ்டா மோகன்.
உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.
Link: http://binarywaves.blogspot.com/2004_11_01_binarywaves_archive.html
//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு//
கெட்டு போக கைப்பு ரெடியா?
உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.
Link: http://binarywaves.blogspot.com/2004_11_01_binarywaves_archive.html
//ரேஸ்கல்! நீ கெட்டது போதாதுன்னு//
கெட்டு போக கைப்பு ரெடியா?
தபூ சங்கரதான் பார்க்கிறேன், தப்பா பார்க்கிறது யாரு?
//உனக்குள்ள ஒரு தபூ. சங்கர பார்க்குறேன் தேவு.//
வேளாண் தமிழா உன் அன்புக்கு ஒரு அளவே இல்லையா? நானும் ஒரு தபூ சங்கர் ரசிகன் அவ்வளவே!!!
Post a Comment