Friday, June 16, 2006

கதை 8:சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

சைக்கிளை மாங்கு மாங்கு என்று மிதித்து விவேகானந்தாக் கல்லூரி வாசலுக்கு நான் வந்து சேர்ந்தப் போது மணி சரியாய் எட்டேமுக்கால்.

அப்போ எனக்கு வயசு 17. பிளஸ் டூ முடிச்சிருந்தேன். கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். ஜீன்ஸ் பேண்ட் பிளாக் கலர் ஷ்ர்ட். கல்லூரி வாசலையே உத்து உத்துப் பாத்துகிட்டு நின்னேன். முதுகுல்ல பட்ன்னு ஒரு அடி. சுளீர்ன்னு கோபத்துல்ல திரும்புனேன். ஒரு நாலுப் பேர் வாட்டசாட்டமா நிக்குறாங்க.

அதுல்ல ஒருத்தன் விறைப்பா என்னை முறைச்சுப் பார்த்தான். நானும் திருப்பி முறைச்சேன்.

"டேய்... பர்ஸ்ட் இயரா"

" "

"த்தா.. கேக்குறோம் முழிக்கிறான் பாரு"

"மச்சி பிசிக்ஸ் ஆர்.ஆர் வர்றார்.. ராகிங்ன்னுப் பிடிச்சு டின் கட்டப் போறான்னுங்க.. வா இடத்தைக் காலி பண்ணுவோம்.. புள்ள எங்கேப் போயிடப் போகுது.. மறுபடியும் மாட்டும் அப்ப வச்சிக்கலாம் நம்ம கச்சேரியை...இப்போ பீரியா விடு"

முறைத்தவன் இன்னும் கடூரமாய் முறைத்தப் படியே நகர்ந்தான். எனக்கு லேசா உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

மறுபடியும் முதுகில் யாரோத் தட்ட கொஞ்சம் தயக்கமாய் திரும்பினேன்.

"பாஸ் ரிலாக்ஸ் நானும் பர்ஸ்ட் இயர் தான்... த்தா...****பசங்க என்ன உன்னக் கலாய்ச்சங்களா.. த்தா.. அவங்களை...." அதற்கு பிறகு அவன் பேசியது எதுவுமே அப்போது எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் என்னில் அப்போதைக்கு ஓங்கி வளர்ந்தது.

"ஆமா..பாஸ் ஏன் இப்படி முழிக்கிற? புரியல்லயா?"

"நான் இவங்களைப் பத்தி சார் கிட்ட சொல்லப் போறேன்...இது தப்பு..எங்க வீட்டுல்ல சொன்னா அவ்வளவு தான்..."

"தோடா.. பாஸ் நீ சரியான் பால் புட்டியா இருக்கே..சார் கிட்டே சொல்ல போறீயா.. அவனுங்களுக்குத் தெரிஞ்சா உன்னை உருட்டி உருட்டி அடிப் பின்னிடுவானுங்க....அவனுங்க எல்லாம் ....."
மறுபடியும் அதே அர்ச்சனையை அவிழ்த்து விட்டான். நான் லேசாய் முகம் சுளிப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும்.

"பாஸ் நீ எந்த ஏரியா?"

"மயிலாப்பூர்"

"எவ்வள்வு மார்க்?"

"87%"

"பாஸ் நீ படிக்கிற பார்ட்டியா? அதான் உனக்கு நம்மப் பேச்சு புரியல்ல"

அவன் சினேகமாய் சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.

"பாஸ் உனக்குப் பிடிச்ச நடிகர் யார்?"

"என் பேர் தேவ்... எனக்கு ரஜினி பிடிக்கும்"

"சாரிப்பா தேவ்ன்னே கூப்பிடுறேன்.. என் பேர் பாலாஜி... ராயபுரம் தான் நம்ம ஏரியா... தம் அடிப்ப இல்ல"

"அய்யய்யோ அதெல்லாம் கிடையாது" ஏறக்குறைய அலறிவிட்டேன்.

"தம் இல்லயா... அப்புறம் தலைவர் ரசிகன்னு சொல்லுற?"
நக்கலாய் சிரித்தான். " தம் அடிக்க வேணாம்.. டீக்கடைக்கு வருவே இல்ல ஒரு கம்பெனிக்கு"

நான் தலையாட்டினேன். இப்படித் தான் பாலாஜி எனக்கு அறிமுகமானான். அடுத்து வந்தக் காலங்களில் அவனே என் வாழ்வின் ஆசான் ஆனான்.

டீக் கடையில் அண்ணா நகரில் இருந்து வந்த சிவாவும், ஆவடியில் இருந்து வந்த குமாரும் ஒரு குடும்பமாய் ஒன்று சேர்ந்தோம். கோடம்பாக்கம் பழனி எப்போ எங்க குரூப்ல்ல சேர்ந்தான்னு சரியா ஞாபகம் இல்லை.

சரியா மூன்று மாசம் கழிச்சு அதே டீக்கடையில்

"மச்சி... அஞ்சு கிங்ஸ் சொல்லு"
பாலாஜி பற்ற வைத்த சிகரெட்டில் என்னுடைய சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

"எப்படி மச்சி தலைவர் ஸ்டைல்ல பிடிக்கிறேனா?"

"தோடா..." மற்ற நால்வரும் கோரசாய் சிரித்தனர்.

"த்தா ஏன்டா சிரிக்கிறீங்க... இங்கே என்ன ஷோவாக் காட்டுறாங்க"
நான் சீறினேன்.

"மச்சி அன்னிக்கு உன்னை ராக் பண்ணானே அவன் வர்றான் பாரு"

"யார் அந்த டோரி கண்ணனா.. வர்றட்டும்... ஒரு நாளைக்கு அவனுக்கு இருக்கு பாரேன்.. பிஷ்கார்டன் தாண்டி தான் வீட்டுக்குப் போறான்.. ஒரு நாளைக்கு முகத்துல்ல துணிப் போட்டு அவனை அடிப் பின்னப் போறேன் பாரேன்"

"சரி இப்போ போலாம் வா... தேவில்ல எதோ புது இந்தி படம் போட்டு இருக்கான்டா.."

"இந்தி எழவு எவனுக்கு விளங்கும்.?" சிவா சொன்னான்.

"அடேய்.. இந்தி விளங்காட்டி பரவாயில்ல. அங்கே படம் பார்க்க வர்ற சேட்டு குட்டிங்களோட நடை உடை விளங்குனாப் போதாது" பழனியின் கருத்து.

"என்ன இழவுடா அந்த மைதா மாவு மூஞ்சிகளையே எவ்வளவு நேரம் பாக்குறது... வேஸ்ட்டா" குமார் சொன்னான்.

"மூஞ்சியை ஏன்டா பாக்குறீங்க" பாலாஜி எடுத்துவிட்டான்.

"நான் வர்றல்ல.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு"
சிவா ஜகா வாங்கினான். மற்ற நான்கு பேரின் சந்தேகப் பாரவையும் சிவாவின் மீது படிந்தது.

"தோடா கிளாஸ் கட் அடிச்சிட்டு வந்து உக்காந்து இருக்கோம்.. உனக்கு என்னடா பெரிய மசுரு வெட்டுற வேலை" பழ்னி சீண்டினான்.

"மச்சி அது ஒண்ணும் இல்லடா... அந்த எத்திராஜ் காலேஜ் திவ்யா சாயங்காலம் கம்யூட்டர் கிளாஸ்க்கு வருவா.. நம்ம மச்சான் போய் வெளியே நின்னு ஆஜர் கொடுப்பார்.. நம்ம கூட படத்துக்கு வந்தா அந்தப் பொன்னான வாய்ப்பு மிஸ் ஆயிடுமே அதான் வர்றல்ல" நான் சொன்னேன்.

"எத்திராஜ் காலேஜ் திவ்யான்னா... அந்த 27டி பிகரா.. அன்னிக்குக் கூட அபிராமி போறப்போ நீ காட்டுனிய அதுவா.. அந்த ஹட் பிகரையா மாமா நீ லுக் விடுற?" குமார் கொஞ்சம் எகத் தாளமாய் பேசிவிட்டான்.

"டேய் குமார்.. இது என் பர்சனல் மேட்டர்..இன்னொரு வார்த்தை அவளைப் பத்திப் பேசுன.. மவனே உன் கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்டா"

சிவா டக்கென எழுந்து அங்கிருந்து வேகமாய் நடந்தான். எங்களுக்கு அவனைத் திருப்பிக் கூப்பிடணும்ன்னு தோன்றவே இல்லை. குமாரின் கண்கள் சட்டேனக் கலங்கி விட்டன. குமார் அழுதது மனசுக்கு ரொம்பவே கஷ்ட்டமாப் போச்சு.

"டேய் அவன் என்னப் பேசிட்டுப் போறான் பார்த்தீயா... உங்களை எல்லாம் எனக்கு மூணு மாசமாத் தான் தெரியும் அவன் என் கூட பிரைமரி ஸ்கூல்லருந்துப் படிச்சான்டா.. ஒரு பொண்ணுக்காக என்னை கொன்னுடுவேன்னு சொல்லுறான்டா"

பாலாஜி தோள்ல்ல குமார் சாய்ஞ்சுக்கிட்டான். அன்னிக்கு நாங்க சினிமாவுக்குப் போகல்ல. முதல் முறையா பாருக்குப் போனோம். நண்பனுடைய துக்கம் எங்க துக்கம்ன்னு முடிவு பண்ணி முதல் முதலாத் தண்ணியடிச்சோம். எவ்வளவு ஒரு கசப்பான அனுபவம். பாலாஜி அவன் மோதிரத்தை அடகு வச்சு எங்களுக்கு தாராளமாத் தண்ணீ ஊத்துனான்.
குமாருக்கு முன்னாடியே லைட்டாப் பழக்கம் இருக்கவே.. குடிச்சுட்டு கும்மாளமாப் பாட்டு பாட ஆரம்பிச்சான். கூட்வே பாலாஜியும் பக்கவாத்தியமா பார் பெஞ்ச்சுல்ல தாளம் கட்டுனான். நானும் பழ்னியும் மோந்துப் பாத்தவுடனேயே மட்டையாகிட்டோம்.

அடுத்த நாளும் நாங்க காலேஜ்க்குப் போகல்ல. சிவாவைப் பார்க்கவே இல்லை. வாரம் தவறாம தண்ணிப் போட ஆரம்பிச்சோம். வாரம் ஒரு காரணம். என்னிக்கோ செத்துப் போன பாலாஜி தாத்தாவுக்கெல்லாம் துக்கம் கொண்டாடி தண்ணியடிச்சோம். அப்படி வளர்ந்தோம்.
அந்த நேரம் காலேஜ் ஒரே போராப் போச்சு. சிவா அவ்வளவாக் காலேஜ்க்கு வர்றதே இல்ல. ஒரு ஓரமா வருத்தப் பட்டாலும் குமாருக்காக அந்த வருத்ததை அமுக்கி வச்சிக்கிட்டோம்.

எங்க காலேஜ்க்கு பக்கத்துல்ல இன்னொரு காலேஜ்க்கும் தகராறு வந்து கலவ்ரமான நேரம்.
"மச்சி ஒரு ரெண்டு பஸ் கண்ணாடியாவது உடைக்கணும்டா... அப்போத் தான் நம்ம பவரைக் காட்ட முடியும்" குமார் சொன்னான்.

" மச்சி நான் கூட ஒரு போலீஸ்காரன் மண்டையாவது உடைக்கணும்டா" பழனியின் ஆசை இது.

"இது தான் சான்ஸ் அந்த ஆர்.கே வாத்தியார் ஸ்கூட்டரை போட்டு உடைக்கணும்டா" என்னுடைய நீண்ட நாள் கோவம் அது.

"ஏன்டா அந்த ஆள் மேல அவ்வளவு கோவம்"

" மச்சி நான் பெயிலான அல்ஜிப்ரா பேப்பரை கிளாஸ்ல்ல வச்சு எல்லாருக்கும் காட்டி என்னை அவமானப் படுத்துன அந்தாளைப் பழிக்குப் பழி வாங்கியே தீரணும்டா" நான் பொங்கினேன்.

அடுத்து அப்படி இப்படி என் ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு வாசலில் இரண்டு போலீஸ் வேன்கள் நிற்பதாய் கேள்விப்பட்டு பம்மி பின் வாசல் வழியாக அவரவர் வீடு போனது வேறு விஷயம். சிவா கல்லூரி பக்கம் வந்து ஒரு மாசம் ஆச்சு.

யாரும் கவலைப் படவே இல்லை. ஸ்டைரக் தீவிரமாப் போன டைம். எங்களுக்கு என்னச் செய்யுரதுன்னு தெரியாத நேரம்.

"மச்சான்... எதாவது படம் போலாமாடா? " பாலாஜி ஆரம்பித்தான்.

"என்ன படம் ஓடுது எல்லாம் கடி படம்" இது நான்.

"அடுத்த வாரம் நம்ம தளபதி படம் ரிலீஸ்...காதலுக்கு மரியாதை... அக்கா ஷாலினி ஜோடி.. கண்டிப்பா ரீலிஸ் அன்னிக்கேப் பார்த்து தியேட்டரை அல்லோல்லப் படுத்தணும் ஓ.கேவா" பழனி தீவிர விஜய் ரசிகனாய் உருவாகி கொண்டிருந்தான்.

"அது அடுத்த வாரம்.. இப்போ இந்த டைனமிக்ஸ் வாத்தி லொள்ளூ தாங்க முடியாது சொல்லுங்கடா" குமார் ஏறக்குறைய கதறினான்.

"என்னடா கெயிட்டிப் போலாமா?" பாலாஜி கண்ணடித்தான்.

"டேய் நான் வர்றல்ல... போன வாரம் அந்தப் பக்கம் போனப்போ எங்க அண்ணன் பிரண்ட் ஒருத்தன் பாத்துப் பெரும் பிரச்சனையகிப் போச்சு" குமார் கும்பிட்டுச் சொன்னான்.

"டேய்.. கெய்ட்டி.. எல்லாம் வேலைக்கு ஆவாது. இன்ட்ர் நெட் போவோம்.. நிறைய மேட்டர் சைட் இருக்காம்... ஒரு மணி நேரத்துக்கு நாப்பது ரூபா... ஒரு ரெண்டு மணி நேரம் குஜால்ஸாப் போகும் என்னச் சொல்லுறீங்க?"

"செல்லம்டா நீ பழனி.. என்னமா ஐடியா கொடுக்குறே?"

"ஆனா பணம்...." பாலாஜி கேட்டான்.

"ஏன்டா உன் கிட்ட இல்லையா?"

"தோடா.. மோதிரத்துல்லருந்து.. எல்லாத்தையும் வித்து கலக்கியாச்சு.. மிச்சமா இப்போ ஒண்ணும் இல்ல.. வீட்டுல்ல எல்லாம் தொலைஞ்சுப் போச்சுன்னு சீன் போட்டிருக்கேன்.. அடுத்த மாசம் எங்க அப்பாவுக்கு எதோ பிசினஸ்ல்ல ஒரு அமவுண்ட் வருதாம் அதுல்ல செயினே செஞ்சிப் போடுறேன்னு சொல்லியிருக்கார்.. அது வரைக்கும் நான் ஆண்டி தான்"

"தேவ் உன் பாக்கெட்ல்ல இருக்க பணம்..அது எக்ஸாம் பீஸ்டா"

"ஒரு எம்பது ரூபா தாண்டா.. நம்ம எல்லார் சந்தோஷமும் உன் கையிலேத் தான் இருக்கு"
நண்பர்களின் சந்தோஷம் முக்கியம், அதற்கு முன்னால் எக்ஸாமவது பீசாவது.. எண்பது ரூபாய்க்கு என்ன கணக்கு சொல்லலாம் வீட்டில் என மூளை முக்காடுப் போட்டு யோசிக்க ஆரம்பித்தது.

அதற்குள் பழனி இணைய உலகில் இன்ப வீதிகளின் விலாசம் தாங்கிய ஒரு நீளப் பட்டிய்லோடு வந்துச் சேர்ந்தான். அடுத்த ரெண்டு மணி நேரத்தை மையிலாப்பூரின் ஒரு முக்கு சந்து இன்டர்நெட் கபேவில் கழிக்க கிளம்பினோம்.

"அடச்சே எந்த சைட் போனாலும் கிரடிட் கார்ட் கேக்குறான்டா"

"எதாவது ஒரு நம்பர் போடுடா"

"போட்டுப் பார்த்துட்டேன்டா.. ஒண்ணும் வேலைக்கு ஆகல்ல"

"மச்சி நான் சொல்லுற மாதிரி செய்... அந்த வெள்ளைப் பொட்டியிலே நாங்க எல்லாம் ஏழைக் குடும்பத்துப் பசங்க.. எதோ எவ்வளவு இலவசமாக் காட்ட முடியுமோ அவ்வளவுக் காட்டுங்கன்னு இங்கீலீஷ்ல்ல டைப் அடிச்சுக் கேளுடா"
இது இன்று இணைய வளர்ச்சியினால் சோத்துப் பாட்டை நகர்த்தும் அன்றைய எனது கணிணி அறிவின் வெளிப்பாடு.

அதையும் நம்ம ஆள் ஒருத்தன் இலக்கணமெல்லாம் சரிப்பார்த்து கீபோர்டில் தட்டி PLEASE ENTER VALID INPUT என்று ஸ்கீரின் தூப்பியதைப் பார்த்துக் கோபம் வேறு கொண்டான்.

"த்தா இன்டர்நெட் எல்லாம் ஏமாத்து வேலை ஒழுங்கா கெயிட்டிக்கு போய் சுவப்பன சுந்தரியின் இந்திர இரவுகள் படம் பார்த்து இருக்கலாம்"
என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் பாலாஜி. எல்லாரும் அந்த ஏக்கப் பெரூமூச்சில் கலந்துக் கொண்டோம்.

மறு நாள் சிவாவை ஹெச்.ஓ.டி ரூம் வாசலில் பார்த்து நாங்கள் லேசாக் கலவரமானோம். ஒன்றரை மாசத்துக்கு அப்புறம் கல்லூரிக்கு வந்திருந்தான். அவனைப் பார்த்துப் பேசுவதா வேண்டாமா எங்களுக்கும் தயக்கம் அவனுக்கும் தயக்கம். பேசவில்லை.

லஞ்ச் பிரேக்கில் கேன்டீனில் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றான்.நாங்கள் கவனிக்காததுப் போல் எங்கள் உணவு டப்பாக்களைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தோம். எங்க எல்லோருடைய மனசும் கனத்துக் கிடந்தது. ஒருத்தருடைய இதயத்துடிப்பு இன்னொருத்தனுக்குக் கேட்டது.
"நான் லஞ்ச் கொண்டு வர்றல்ல" சிவா மெதுவானக் குரலில் சொன்னான்.
""
"உங்க கிட்டேத் தான் சொல்லுறேன்.. நான் லஞ்ச் கொண்டு வர்றல்லன்னு" அதிகப்படியான சத்தத்தில் கத்தினான் சிவா.

குமார் அவசர அவசரமாய் தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்து மூடியில் சாப்பாட்டைத் தட்டி சிவா பக்கம் எடுத்து வைத்தான். அடுத்த சில வினாடிகளில் எல்லாருடைய சாப்பாடும் சிவாவுக்கு பரிமாறப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் கலகலப்பாய் மதிய உணவை உண்டு முடித்தோம்.

அன்று மாலை நண்பன் ரூமில் அவன் உபயத்தில் தீர்த்தமாடியப் பொழுதினில் சிவா வாயைத் திறந்தான்.

" அவ இல்லாமல் என்னால வாழ முடியாது மச்சி... ஐ லவ் திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா"
நான் கொஞ்சம் அதிகமாய் ஊற்றினேன்.

"அவளும் உன்னை லவ் பண்றாளாடா"

"இல்லியே... அவ என்னைத் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்குறாளே...."
சிவா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

"அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயாடா உன்னை லவ் பண்ண மாட்டாளாமா.. அவளை...சாரி மச்சி நான் அவளைத் திட்ட மாட்டேன்.. அவளைத் திட்டுனா உனக்குப் பிடிக்காது எனக்குத் தெரியும்...சாரி"
குமார் உளறினான்.

"மச்சி அவளை உனக்குச் சேத்து வைக்கிறோம்டா... நாங்கச் சேத்து வைக்கிறோம்"
இது நான்.

"ஆமாடா மாப்பூ... இப்போ நீ டென்ஷன் ஆவாதே ...கூலா இரு.. அவன் அப்பன் என்னப் பெரிய...*****'"
பாலாஜியின் பைந்தமிழ் செவிகளைத் தீய்த்தது.

"மச்சி எங்கப்பா என்ன படி படின்னு உயிரை வாங்குராருடா... அவர் படிக்காத்தை எல்லாம் என்னப் படிக்கச் சொன்னா என்ன மாப்பூ நியாயம்...நான் மட்டும் பெயில் ஆனா அடுத்த வருஷம் என்னை தஞ்சாவூருக்கு என் மிலிட்டிரி மாமான் வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டுராருடா"
பழனி அவன் சோகத்தை சைடில் சொருகினான்.

"கவலைப்படாதே.. பிட் அடிச்சாவது நீ பாஸ் பண்ணுறே.. உன்னைப் பாஸ் பண்ண வைக்கிறது என் பொறுப்பு...ஆமா உன் மிலிட்டிரி மாமாவுக்கு பொண்ணு இருக்கா?"
நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன் பழனி மட்டையாகி விட்டான்.

அன்றையப் பொழுது அப்படியே முடிந்தது... கல்லூரி நாட்கள் வேகமாய் ஓடி முடிந்தன..

இன்று நான் ஒரு மென்பொருளாராய் எதோ வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...

பழனி அவனுடைய மிலிட்டிரி மாமாப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு பாரிசில் ஒரு ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வச்சிருக்கான். இரண்டு குழந்தைங்க.

குமார் இப்போ அமெரிக்காவில்ல ஒரு கணிணி நிறுவனத்துல்ல உயர் அதிகாரியா இருக்கான். இன்னும் கல்யாணம் ஆகல்ல அவன் வீட்டுல்ல பொண்ணுப் பார்த்துகிட்டு இருக்காங்க...

பாலாஜியைக் கடைசியாப் பார்த்தது...ஆங் பெரம்பூர்ல்ல

பாலாஜி முதல் வருஷத்தோடக் கல்லூரி படிப்பை நிறுத்திட்டான். எதுக்குன்னு எங்க யாருக்குமே காரணம் தெரியாது. அவன் கூட வர்ற அவன் ஏரியாப் பசங்களை விசாரிச்ச வரைக்கும் ஒரு விவரமும் தெரியல்ல.
எங்க அஞ்சுப் பேர் வட்டத்துல்ல மையப் புள்ளியா இருந்தாப் பாலாஜி எங்க வாழ்கையிலே இருந்துச் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போயிட்டான். ஆரம்பத்துல்ல நாங்க அதைத் தாங்கிக்க முடியாமல் தவிச்சுப் போயிட்டோம். அவனைப் பத்தியே பேசுவோம்... அந்தப் பேச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு ஒரு கட்டத்துல்ல சுத்தமா நின்னுப் போயிடுச்சு...

அப்படி ஒரு நாள் தான் நாங்கப் பாலாஜியைப் பெரம்பூர்ல்ல பார்த்தோம். ஆமா நாலு பேரும் தான் பார்த்தோம். பிருந்தாத் தியேட்டர் வாசல்ல எதோ ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நிக்கும் போது ..


ஒரு அழுக்கு காக்கி டவசர்.. ஒடுங்கி ஒல்லியாப் போன அந்தப் பையன் எங்கப் பாலாஜி தான். ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டோம். நாலுப் பேருக்கும் வாயிலே இருந்து வார்த்தை வர்றல்ல.

"எதிரே இருக்க கேரேஜ்ல்ல தான் வேலை செய்யுறேன்டா"
பாலாஜியின் வேகம் காணாமல் போயிருந்தது. அவன் பேச்சு நடவடிக்கை எதுவுமே எங்களுக்குப் பிடிபடவில்லை.

"டீ சாப்புடுறீங்களா?"
எங்களுக்கு நாக்கு உள்ளுக்குப் போய் ஒட்டிக் கொண்டது

"சாரிடா.. உங்க யார் கிட்டயும் சொல்ல முடியல்ல.. அப்பா தீடிரென்னு சூசைட் பண்ணிக்கிட்டார். பிசினஸ்ல்ல லாஸாம். ஒண்ணும் புரியல்ல. ஓவர் நைட்ல்ல வீதிக்கு வந்துட்டோம். எதுவும் தோணல்ல... அக்கா..தங்கச்சி.. நான் மட்டும் தான் பையன். அம்மா ஒரு ஓரமா உக்காந்து அழுவுறாங்க... எல்லாரும் செத்துப் போயிடலாம்ன்னு சொல்லுறாங்க... எனக்கு என்னப் பண்ணுறதுன்னு தெரியல்ல..எங்கப்பா மாதிரி முட்டாத்தனம் பண்ண எனக்கு மனசு வர்றல்ல.. அதான் இப்படி எங்க மாமா கேரேஜ் தான்.. இப்போ பரவாயில்ல.. அக்காவுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்.. பத்திரிக்கை வைப்பேன் கட்டாயம் வர்றணும்..."

பாலாஜி எங்களை விட்டு எங்கோ போய்விட்டான் என்பது எங்களுக்குப் புரிந்தது. அவன் பேசினான். நாங்கள் ஆறிய டீயை மெல்ல உறிஞ்சினோம். பேசுவதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை. நாங்கள் தம் அடித்தோம். அவன் அடிக்கவில்லை. ஏனோ அவனை அடிக்கச் சொல்லி நாங்கள் யாரும் வற்புறுத்தவில்லை.

அவனிடம் விடைப் பெறும் போது தவிர்க்க முடியாமல் கேட்டே விட்டான்.
"மச்சி பாலா.. ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுறடா.. எனக்கு ஒண்ணுமேப் புரியல்லடா"

அவன் சிரித்தான். அவன் அக்காவுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையாத் தெரியாது. அவன் எங்கள் யாருக்கும் பத்திரிக்கை அனுப்பவில்லை. அதற்கு பிறகு இன்று வரை நான் பாலாஜியைச் சந்திக்கவில்லை.

அப்புறம் சிவா...

கடைசி வரைக்கும் சிவாவை திவ்யா காதலிக்கவே இல்லை. அந்த ஏக்கத்தில்ல சிவா ஒரு நாள் ஆவடி டிரெயின்ல்ல போய் விழுந்துச் செத்துப் போயிட்டான்.

அவன் முகத்தைப் பாக்கக் கூட எங்களுக்குக் கொடுத்து வைக்கல்ல. சிவா செத்தப்போ அவன் வீட்டுல்ல அவங்க அம்மா அழுததது இன்னும் நினைவிருக்கு. அந்த ஞாபகம் வரும் போதெல்லாம் அடிவயிறே புரளுது...

"அய்யா... இதுக்கா உன்னைப் பெத்தேன்... பாத்துப் பாத்து வளத்தேன்.... ஏன்ய்யா.. எதுக்குய்யா இப்படிப் பண்ணிக்கிட்டே...."

என் விடலைப் பருவம் என்கிட்டே இருந்துப் போயிடுச்சா இல்ல இன்னும் இருக்கான்னு தெரியல்ல ஆனா..பாலாஜியை அந்த அழுக்கு டவுசர்ல்லப் பார்த்தப்போவும் சிவா செத்தப் போவும்.. எனக்குள்ளே எனக்கே தெரியாம என்னவெல்லாமோ நடந்துப் போனது உண்மை... ஒரு உளி சத்தம் உள்ளுக்குள்ளே ஒலிக்க ஆரம்பிச்சது அப்போத்திலிருந்து தான்னு நினைக்கிறேன்.

52 comments:

நன்மனம் said...

தேவ்... bye bye adolosensa.... ok ok :-)))

Naveen Prakash said...

நெகிழ்ச்சியான நினைவுகளை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள் தேவ் ! ஏதோ செய்கிறது மனதை :)

sivagnanamji(#16342789) said...

ஸூப்பர்.....வர்ரதை யாரும் தடுக்கமுடியாது;போரதை யாரும் நிறுத்த முடியாது

நாமக்கல் சிபி said...

போர்க்களத்துச் சிங்கமென போட்டிக் களத்தில் குதித்த சங்கத்துச் சிங்கமே, என் தங்கமே
என் வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

தேவ், நல்லா இருக்கு.. உங்க வழக்கமன இயல்பான நடை.. அழுத்தம் குறையுதோ? நிறைய கதா பாத்திரங்களால? போட்டிக்கு அனுப்பிட்டிங்களா?

இலவசக்கொத்தனார் said...

என்ன தேவு. நீ கூட போட்டிக்கு கத எளுத ஆரம்பிச்சிட்டையா. நல்லா இருடே.

நாகை சிவா said...

//ஒரு உளி சத்தம் உள்ளுக்குள்ளே ஒலிக்க ஆரம்பிச்சது அப்போத்திலிருந்து தான்னு நினைக்கிறேன். //

விடலை பருவம், விடை தெரியாத பருவம். உங்களுக்கு விடை உங்கள் நண்பர்கள் மூலம் கிடைத்தது.
ஒரு சிலருக்கு அது இன்னும் கிடைக்காமலே இருக்கின்றது.

நன்றாக உள்ளது.

சிறில் அலெக்ஸ் said...

பார்ட்னர்,
செம வெயிட் கதை... கொஞ்சம் நீளமாயிருந்தாலும் என்ன சொல்ல வர்றாருன்னு படிக்க வைக்குது..

கடைசில கனமா முடிச்சுருக்கீங்க.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Mr.Gary Supertron said...

supertronrandom.blogspot.com

மின்னுது மின்னல் said...

//இதுவும் வெற்று காகிதம் தான்... முடிந்தால் ஒரு கையெழுத்து போடுங்கள்//

வாழ்த்துக்கள்

Vijayababu Boopathy said...

Good Post. I got so emotional when i read "ஒரு அழுக்கு காக்கி டவசர்.. ஒடுங்கி ஒல்லியாப் போன அந்தப் பையன் எங்கப் பாலாஜி தான்".

நிலா said...

தேவ்

நல்ல ப்ளாட். நிறைய பேரை முன்வைக்காமல் பாலாஜியை மட்டும் எடுத்துக்கிட்டு சுருங்கச் சொல்லிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்

கைப்புள்ள said...

நல்லாருக்கு மச்சி. சென்னையில் படிக்கும் மாணவர்களின் இயல்பான பேச்சு நடையைக் கதையில் கொண்டு வந்துள்ளாய். கதையின் முடிவும் அழுத்தமாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற என் வாழ்த்துகள்.

மனதின் ஓசை said...

யதர்த்தமா, அழுத்தமா இருக்கு தேவ்...

அப்பாவின் கட்டாயதினால் கல்லூரியில் சேர்ந்த, தன்னால் நிச்சயம் படிக்க முடியாது என்று உருதியாய் நம்பிய என் சக வகுப்பு தோழன் ஞாபகம் வருகிறது...அவன் college director-இடம் எனக்கு TC குடுக்கறியா இல்லயா என எல்லார் முன்னிலும் கேட்டது அப்பொது அரட்டை அடிக்க/சிரிக்க ஒரு விஷயம் கிடைத்ததாகத்தான் பட்டது..பின்னாளில் அவன் சரவனா ஸ்டோர்சில் வெலை செய்வதாக கேள்விப்பட்டது + சில மாதம் கழித்து அவன் தற்கொலை பண்ணிக்கொண்டபொதுதான் நெஞ்ஜில் அறைந்தது...

தேவ் | Dev said...

//தேவ்... bye bye adolosensa.... ok ok :-)))//

நன்மனம் கதையைப் படிச்சிருப்பீங்க.. இனி நீங்கத் தான் விடையைச் சொல்லணும்...

தேவ் | Dev said...

//நெகிழ்ச்சியான நினைவுகளை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள் தேவ் ! ஏதோ செய்கிறது மனதை :) //

வாங்க நவீன்,

சில நினைவுகள் செதுக்கிய சிற்பங்களாய் நெஞ்சினில் நின்று விடுகின்றன.

நன்றி நவீன்.

தேவ் | Dev said...

சிவஞானம்ஜி,

//வர்ரதை யாரும் தடுக்கமுடியாது;போரதை யாரும் நிறுத்த முடியாது
//

சரியாச் சொன்னீங்க.
வாழ்த்துக்கு நன்றி.

தேவ் | Dev said...

வாங்க சிபி உங்க ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

தேவ் | Dev said...

//என்ன தேவு. நீ கூட போட்டிக்கு கத எளுத ஆரம்பிச்சிட்டையா. நல்லா இருடே. //

கொத்ஸ் எல்லாம் உங்க ஆசிர்வாதம். தங்கள் வாழ்த்துக்கள் என் பாக்கியம்.

தேவ் | Dev said...

//விடலை பருவம், விடை தெரியாத பருவம். உங்களுக்கு விடை உங்கள் நண்பர்கள் மூலம் கிடைத்தது.
ஒரு சிலருக்கு அது இன்னும் கிடைக்காமலே இருக்கின்றது. //

சிவா எனக்கும் கூட இன்னும் விடைக் கிடைத்ததாய் தெரியவில்லை.. விடைத் தேடும் விருப்பமும் இல்லை. அந்த நண்பர்களால் வாழ்க்கையின் அடுத்த கட்டம் எனக்கு அறிமுகமானது மட்டும் நிச்சயமான உண்மை.

தேவ் | Dev said...

வாங்க பார்ட்னர்,

//பார்ட்னர்,

செம வெயிட் கதை... கொஞ்சம் நீளமாயிருந்தாலும் என்ன சொல்ல வர்றாருன்னு படிக்க வைக்குது..

கடைசில கனமா முடிச்சுருக்கீங்க.

வெற்றி பெற வாழ்த்துக்கள் //


நன்றி சிறில்.

தேவ் | Dev said...

வாங்க மின்னல்,

//வாழ்த்துக்கள் //

நன்றி மின்னல்.

தேவ் | Dev said...

வாங்க பூபதி,

//Good Post. I got so emotional when i read "ஒரு அழுக்கு காக்கி டவசர்.. ஒடுங்கி ஒல்லியாப் போன அந்தப் பையன் எங்கப் பாலாஜி தான்". //


நன்றி பூபதி

தேவ் | Dev said...

//நல்லாருக்கு மச்சி. சென்னையில் படிக்கும் மாணவர்களின் இயல்பான பேச்சு நடையைக் கதையில் கொண்டு வந்துள்ளாய். கதையின் முடிவும் அழுத்தமாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற என் வாழ்த்துகள். //

நன்றி மோகன்ராஜ்.

தேவ் | Dev said...

//யதர்த்தமா, அழுத்தமா இருக்கு தேவ்//

நன்றி ஹமீத்

அப்பாவின் கட்டாயதினால் கல்லூரியில் சேர்ந்த, தன்னால் நிச்சயம் படிக்க முடியாது என்று உருதியாய் நம்பிய என் சக வகுப்பு தோழன் ஞாபகம் வருகிறது...அவன் college director-இடம் எனக்கு TC குடுக்கறியா இல்லயா என எல்லார் முன்னிலும் கேட்டது அப்பொது அரட்டை அடிக்க/சிரிக்க ஒரு விஷயம் கிடைத்ததாகத்தான் பட்டது..பின்னாளில் அவன் சரவனா ஸ்டோர்சில் வெலை செய்வதாக கேள்விப்பட்டது + சில மாதம் கழித்து அவன் தற்கொலை பண்ணிக்கொண்டபொதுதான் நெஞ்ஜில் அறைந்தது... //

நேற்றைய விளையாட்டுத் தனம் இன்றைக்கு வலிப்பது தான் விடலைத் தனம் விடைப்பெற்றதன் அடையாளமா?

துபாய்வாசி said...

தேவ் You too? என கேட்கும் படி கதையெல்லாம் எழுதுகிறீர்கள்?

கதையை படிச்சேன். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் இப்படி பட்ட நிகழ்வுகளுக்கு சாத்தியமே இல்லை தேவ் அண்ணே! ராகிங் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது (17 வயது காலத்தில்!).

என்றாலும், மற்ற நிகழ்வுகள் எல்லாம் நம்பத்தகும்படியே இருக்கின்றன்.

மேலும் கலக்க வாழ்த்துக்கள்!

தேவ் | Dev said...

துபாய்வாசியாரே,

//தேவ் You too? என கேட்கும் படி கதையெல்லாம் எழுதுகிறீர்கள்?//


எதோ எழுதுவேண்ணா. டைம் கிடைக்கும் போது பக்கம் 78 ஐ கொஞ்சம் புரட்டுங்க...புரட்டிப் பாத்துட்டு கருத்தும் சொன்னா ரொம்பச் சந்தோசப் படுவேண்ணா.

தேவ் | Dev said...

//மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் இப்படி பட்ட நிகழ்வுகளுக்கு சாத்தியமே இல்லை தேவ் அண்ணே! ராகிங் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது (17 வயது காலத்தில்!).//

துபாய்வாசியாரே விவேகானந்தாக் கல்லூரி பற்றி அறிந்து வைத்திருப்பதற்கு நன்றி.
முன்னாள் மாணவரா நீங்க?

நான் படித்தக் காலகட்டம் 1996 - 1999 வரை...

1996இன் ஆரம்பத்தில் நான் கல்லூரியில் நுழைந்த சமயம் நடந்த ஒரு நிகழ்வைத் தான் சொல்லியிருக்கிறேன்.
ஒரு சீனியர் மாணவன் கொஞசம் தோரணையாய் ஜீனியர் மாணவனைப் பார்த்து என்னக் கேள்விக் கேட்டாலும் போதும் அதை ராக்கிங் என்று எண்ணிய காலமது... அதை அப்படியேச் சொல்லியிருக்கிறேன்.

சீனியர் மாணவர்கள் தங்கள் கெத்தைக் காட்டுவதற்கு எங்களைக் கூப்பிட்டு கேள்விகளால் வேள்வி செய்த நிகழ்வுகள் எல்லாம் நிறைய உண்டு. அந்த நிகழ்வுகளுக்குப் பயந்து கல்லூரி கிரவுண்ட் பக்கம் போகாமலே கல்லூரியின் முதல் சில வாரங்களை ஓட்டியதெல்லாம் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

அது ராகிங் என்பது எங்கள் விடலைப் பருவ நம்பிக்கை. இல்லை என நீங்கள் சொல்லித் தெரிய இதோ அதுவும் எனக்கு டாட்டாக் காட்டுகிறது பாருங்க:-)

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி துபாய்வாசியாரே.

தேவ் | Dev said...

//தேவ், நல்லா இருக்கு.. //

நன்றி பொன்ஸ்

//போட்டிக்கு அனுப்பிட்டிங்களா? //

ஆச்சு

தேவ் | Dev said...

//நல்ல ப்ளாட்.//

நன்றி நிலாக்கா

தேவ் | Dev said...

//அழுத்தம் குறையுதோ? நிறைய கதா பாத்திரங்களால? //

//நிறைய பேரை முன்வைக்காமல் பாலாஜியை மட்டும் எடுத்துக்கிட்டு சுருங்கச் சொல்லிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும் //

நிலாக்கா,
பொன்ஸ்,

இருவரும் ஒரே மாதிரியான கருத்தை முன வைத்துள்ளீர்கள். இது இந்தச் சிறுகதைக் குறித்தப் பெண்களின் பொதுவானப் பார்வை எனக் கொள்ளலாமா?

ஒரு சராசரி ஆணின் விடலைப் பருவம் என்பது அவன் நட்பைச் சார்ந்தே இருக்கும்.. அது மறுக்க முடியாத ஒரு விஷ்யம்.

அவன் நட்புலகமே அவன் வாழ்க்கை.. அப்படித் தான் இந்தக் கதையில் வரும் நண்பர்களும்.

அந்த நட்புலகில் எங்களுக்கே உரித்தானப் பலச் சிறுபிள்ளைத்தனைகளும், பெரிய மணுஷத் தனம் என் நாங்கள் அக்காலத்தில் நம்பிய விஷயங்களும் அடக்கம்.

காரணங்கள் இன்றி சண்டைப் போடுவதும்..பின் கட்டிப் பிடிப்பதும்.. ஒரு பெண்ணின் ஈர்ப்பினால் நட்புச் சங்கிலி அறுபடுவதும் விடலைக் காலத்தில் எங்களைப் பெரிதும் தாக்கும் வேதனைகள்..( இப்போ நினைச்சுப் பார்த்தா எல்லாம் தமாசு)

இந்தக் கதையில் தனி ஒரு நாயகனோ...வில்லனோ கிடையாது...

சில நிகழ்வுகளை ஒன்றுமே செய்ய முடியாமல் வேதனையோடு வேடிக்கைப் பார்த்த நிமிடங்களில் விடலைத் தனம் என்னை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சத்தமின்றி கடத்திப் போய் இறக்கி விட்டு விட்டு டாட்டா காட்டிய அந்தக் கணங்களைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

நன்றி.

ramachandranusha said...

தேவ், நடை நன்றாக சல் என்று போகிறது. பாத்திரங்களிலும் குழப்பமொன்றும் இல்லை. நான் இம்முறை தோற்றாலும், தரமான
படைப்புகளுடன் போட்டி போட்டேன் என்ற நிறைவே போதும். வெற்றி பெற வாழ்த்துகிறேன்

தேவ் | Dev said...

//தேவ், நடை நன்றாக சல் என்று போகிறது. பாத்திரங்களிலும் குழப்பமொன்றும் இல்லை. நான் இம்முறை தோற்றாலும், தரமான
படைப்புகளுடன் போட்டி போட்டேன் என்ற நிறைவே போதும். வெற்றி பெற வாழ்த்துகிறேன்//

நன்றி உஷாக்கா.

நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்களிடம் இருந்துப் பாராட்டு கிடைச்சிருக்கு.. சந்தோஷ்மாயிருக்கு.

ILA(a)இளா said...

மனச தொட்டுட்ட தேவ், வார்த்தைகளே வரவில்லை

தேவ் | Dev said...

நன்றி இளா.

யாத்திரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

tamilatamila said...

சொல்லி அடிச்ச கில்லி!!! யதர்த்தம்!மனதை ஏதோ செய்கிறது கதை..நல்லா இருக்கு. கொஞ்சம் நீளம்.வெற்றி பெற வாழ்த்துக்கள் .

செல்வன் said...

ரொம்ப நல்லா இருக்கு தேவ்.

யதார்த்தம் தான் இதோட பலமும் பலவீனமும்.கல்லூரி வாழ்வை சொல்லும்வரை சுவாரசியமா போகுது.அதன்பின் நடந்ததை சொல்லும்போது ஏதோ ஒட்டாமல் இருக்கு.ஒரே கதாபாத்திரத்தை சொல்லி கதை ஓட்டம் மாறாமல் அதன் முடிவை சொல்லியிருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் என தோன்றுகிறது.

இயல்பான நடை,யதார்த்தமான எழுத்து,நிஜ கல்லூரி வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வர்ணனை முறை ஆகியவையே இக்கதையின் பெரும் பலம்.பரிசு பெற நிச்சயம் நல்ல வாய்ப்புண்டு.ராஜேஷ் குமார் சொன்னது போல் நிஜவாழ்வு கதைகளை சொல்லும்போது திடீர் திருப்பங்களையும் சினிமாத்தனமான முடிவுகளையும் எதிர்பார்த்தல் இயலாது.

Real life is always different from reel life.

great job

anbudan
selvan

தேவ் | Dev said...

//நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..//

அருமையானப் பதிவு யாத்திரீகன். அடுத்த முறை நீங்கள் கட்டாயம் போட்டியில் பங்குப் பெற வேண்டும்.

//உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!//

யாத்திரீகன் வாழ்த்துக்களுக்கு நன்றி

தேவ் | Dev said...

//சொல்லி அடிச்ச கில்லி!!! யதர்த்தம்!மனதை ஏதோ செய்கிறது கதை..நல்லா இருக்கு. கொஞ்சம் நீளம்.வெற்றி பெற வாழ்த்துக்கள் .//

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழா

பாண்டி said...

நல்லாருக்கு தேவ்.

சனியன் said...

தேவ்,

நன்றாய் வந்திருக்கிறது. பாலாஜியை மட்டுமே வைத்து கதை சொல்லியிருந்திருந்தால் எப்படியும் முடிவில் பாலாஜிக்கு எதாவது நேரும் என்று முடிவை ஊகித்திருப்பேன். கதையிலும் சுவாரசியம் குறைந்திருக்கும்.

முதலில் மனதை மிகவும் லேசாகி விட்டு...அவரவர்களுடைய இளமைக்காலங்களை அசை போட வைத்து...கடைசியில் ஒரு யதார்த்த கனத்தை மனதில் அழுத்தி....அருமை. வாழ்த்துக்கள்.

என்றுமே தன்னை கதையில் ஒரு பாத்திரமாக வைத்துப் பார்த்து விட்டாலே வாசகனுக்கு படைப்பு பிடித்துப் போகும்.

- சனியன்

கவிதா|Kavitha said...

தேவ், ரொம்ப நல்லா இருக்கு, இப்படியெல்லாம் பசங்க பேசிக்குவாங்கன்னு சினிமாவுல கொஞ்சம் தெரியும்.. இப்போ உங்க பதிவிலும் யதார்த்தம்.. நிறைவு தான் மனதை...

செந்தழல் ரவி said...

அப்படியே நீங்க என்பத்தேழு பர்சண்டேஜி வாங்கியதை உள்ளே நுழைச்சிட்டீங்க...

பரவாயில்லை - கதையிலயாவது வாங்க முடியுதே..

ஹி ஹி

தேவ் | Dev said...

//யதார்த்தம் தான் இதோட பலமும் பலவீனமும்.//

//கல்லூரி வாழ்வை சொல்லும்வரை சுவாரசியமா போகுது.அதன்பின் நடந்ததை சொல்லும்போது ஏதோ ஒட்டாமல் இருக்கு.//

//ஒரே கதாபாத்திரத்தை சொல்லி கதை ஓட்டம் மாறாமல் அதன் முடிவை சொல்லியிருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் என தோன்றுகிறது.//

செல்வன் உங்க ஆழமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி. ஒரே கதாபாத்திரம் விஷய்த்தை இன்னும் சில நண்பர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தக் கதையைப் பொருத்தவரையில் கல்லூரி வாழ்ககையைப் பகிர்ந்த ஒரு நெருங்கிய நண்பர்கள வட்டத்தைப் பற்றி மட்டுமே சொல்ல விழைந்துள்ளேன். வரும நான்கு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு ஒன்று சரியான அளவு சொல்லப் பட்டால் மட்டுமே சொல்ல வந்தச் சம்பவங்களை முழுமையாகச் சொல்லியிருக்க முடியும் எனபதனால் அப்படி சொல்லியிருக்கிறேன்.

தேவ் | Dev said...

//வாழ்வு கதைகளை சொல்லும்போது திடீர் திருப்பங்களையும் சினிமாத்தனமான முடிவுகளையும் எதிர்பார்த்தல் இயலாது.//

சரியாச் சொன்னீங்க செல்வன்...

மீண்டும் நன்றி செல்வன்

தேவ் | Dev said...

வருகைக்கும் தருகைக்கும் நன்றி பாண்டி

தேவ் | Dev said...

வாங்க சனியன் ( உங்கப் பெயர் காரணம் என்னவோ)

கருத்துக்களுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.

தேவ் | Dev said...

//ரொம்ப நல்லா இருக்கு, இப்படியெல்லாம் பசங்க பேசிக்குவாங்கன்னு சினிமாவுல கொஞ்சம் தெரியும்.. இப்போ உங்க பதிவிலும் யதார்த்தம்.. நிறைவு தான் மனதை... //

வருகைக்கும் தருகைக்கும் நன்றி கவிதா

தேவ் | Dev said...

ரவி வாங்க... எப்பவும் எதிலும் உங்களுக்கு தமாஸ் தாங்க...:)

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி ரவி

Nandha said...

அப்பா......... இந்த கதையை எப்படி இவ்ளோவ் நாளா படிக்காம விட்டேன்னு தெரியலை. ரொம்ப டீப்பா உள்ள பூந்து அது அப்படி. இது இப்படின்னு சொல்ல முடியலை.

உங்க கதை கரு அதை எல்லாத்தையும் மறக்க அடிச்சிடுச்சு. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

தேவ் | Dev said...

//அப்பா......... இந்த கதையை எப்படி இவ்ளோவ் நாளா படிக்காம விட்டேன்னு தெரியலை. ரொம்ப டீப்பா உள்ள பூந்து அது அப்படி. இது இப்படின்னு சொல்ல முடியலை.

உங்க கதை கரு அதை எல்லாத்தையும் மறக்க அடிச்சிடுச்சு. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். //

வாங்க நந்தா,

உங்க ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.. நேரம் கிடைக்கும் போது மத்தப் பதிவுகளையும் ஒரு பார்வைப் பாருங்க.. உங்க உற்சாகமும் ஊக்கமும் தான் நம்ம ஆக்கங்களை இன்னும் செழுமைப் படுத்தும் நன்றி..