Thursday, August 17, 2006

கவி 20:வாழ்க்கை ஒரு சிறு குறிப்பு

கான்கிரீட் காடுகளில்
கட்டடக் கூடுகள்...
உயரங்களின் தனிமையில்
உள்ளது என் முகவரி...

தொட்டு விடும் தூரத்தில் வானம்
தொலைவினில் எனக்கு நான்...
சாதனையின் தோரணங்கள்
என் வாசலுக்கு வெளியே...
சாகடிக்கும் வேதனைகள்
என் சுவாசத்தின் உள்ளே...

சில்லறைகளின் சிதறலில்
சிக்கிச் சிதறிய என் வாழ்க்கை
கல்லறைக்குப் போகும் வரை
தடுக்க முடியாது அதன் போக்கை

திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பவும் முடியுமா
தெரியவில்லை....

நின்று நிதானிக்க
நான் நினைத்ததில்லை
நிற்கவும் இல்லை...

எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை...

பற்ற வைத்த சிகரெட்
புகைந்துக் கொண்டே இருக்கிறது
அதினும் வேகமாய்
அவ்வப்போது நானும்...

ஆரம்பம் உண்டென நம்பினால்
ஆண்டவனும் உண்டெனு நம்பு
ஆரோச் சொன்னார்
அப்போது யோசிக்கவில்லை...

இப்போது மட்டும் என்ன?
இன்னும் கொஞ்சம் நேரம்தான்
இதிலாவது வாழ்ந்து விடு
இதயத்தின் வேண்டுகோள்

கேட்கட்டுமா?
கேட்டுத் தான் பார்க்கட்டுமா?

காடு விட்டு மறு காடு
கிளம்பும் அந்த தருணம்..
கண்கள் தேடியது..
பொன்னை அல்ல
பொருளை அல்ல
புகழை அல்ல..

பெருமூச்சு எழும்பி
பெரிதாய் அடங்கியது

"பெரியவர் உறவுக்காரங்க ஆராவது இருந்தா...
பார்த்துடச் சொல்லுங்க..
போகுற உயிர் சந்தோஷமாப் போகும்"


கடைசி வார்த்தைககள்
காதினில் ஒலிக்க
கனவுகள் ஓய்ந்தன..
கதம் கதம்...

18 comments:

டிபிஆர்.ஜோசப் said...

எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை//

இந்த வரிகள் நல்லாருக்குங்க..

தொடர்ந்து எழுதுங்க..

Anu said...

wow Dev
Toooo good

நாகை சிவா said...

தேவ் சூப்பர்ம்மா
//எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை//
அருமையா வரிகள். எதையோ அடைய முயற்சித்து பலவற்றை இழந்து கொண்டு இருக்கின்றோம் நம்க்கே தெரியாமல்.

கைப்புள்ள said...

//"பெரியவர் உறவுக்காரங்க ஆராவது இருந்தா...
பார்த்துடச் சொல்லுங்க..
போகுற உயிர் சந்தோஷமாப் போகும்"//

டேங்ஸுங்கோ! பத்தி பிரிச்சதும் எனக்கே புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னா பாத்துக்கங்களேன்.

//காடு விட்டு மறு காடு
கிளம்பும் அந்த தருணம்..
கண்கள் தேடியது..
பொன்னை அல்ல
பொருளை அல்ல
புகழை அல்ல..//
இது எனக்கு பிடிச்ச வரிகள்.

துபாய் ராஜா said...

அருமையான கவிதை குறிப்பு.அனைத்து
வரிகளுமே அருமை.வாழ்த்துக்கள்.

தேவ்,78-ம் பக்கத்தில் அடிக்கடி எழுதுங்கள்.

ILA (a) இளா said...

//பற்ற வைத்த சிகரெட்
புகைந்துக் கொண்டே இருக்கிறது
அதினும் வேகமாய்
அவ்வப்போது நானும்...//
என்னத்த சொல்ல. கடைசியில் இப்படி கூட தோணுமா? அப்படி சொல்லவும் தோணுமா? நட்பே, இந்த கவிதை உன்னுடைய கவிதைத்தொகுப்புக்கு ஒரு மைல் கல்

Unknown said...

தொடர்ந்து எழுதுங்க..--> ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி ஜோசப் சார். முயற்சிகள் நிச்சயம் தொடரும்

Unknown said...

Anitha, Thanks for your continous appreciations and support

Unknown said...

தேவ் சூப்பர்ம்மா -->நன்றி சிவா

அருமையா வரிகள். எதையோ அடைய முயற்சித்து பலவற்றை இழந்து கொண்டு இருக்கின்றோம் நம்க்கே தெரியாமல்--> அது தானே சிவா வாழ்க்கை நமக்கு போட்டுக் காட்டும் கணக்கு

Unknown said...

//டேங்ஸுங்கோ! பத்தி பிரிச்சதும் எனக்கே புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னா பாத்துக்கங்களேன்.// சந்தோஷம் கைப்புள்ள

//தேவ்,78-ம் பக்கத்தில் அடிக்கடி எழுதுங்கள். // உங்கள் ஆதரவு தொடரும் வரை நிச்சயமா எழுதுறேன் ராஜா

Unknown said...

என்னத்த சொல்ல. கடைசியில் இப்படி கூட தோணுமா? அப்படி சொல்லவும் தோணுமா? நட்பே, இந்த கவிதை உன்னுடைய கவிதைத்தொகுப்புக்கு ஒரு மைல் கல் --> இன்னும் பயணத்தின் தூரம் அதிகம் என்பதை நினைவுப் படுத்தியமைக்கு நன்றி இளா

உங்கள் நண்பன்(சரா) said...

தேவு இப்போல்லாம் அதிகமா கவிஜ எழுத ஆரம்பிச்சுட்ட!
இந்த கவிதை அருமை தொடர்ந்து நல்ல பல "78 பக்கங்கள்" எழுதவும் நண்பா!


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பவும் முடியுமா
தெரியவில்லை....
//

இந்த வரிகள் தானே ஜோசப் சாருக்குப் பிடிக்கும்?::)))))

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//இந்த கவிதை அருமை தொடர்ந்து நல்ல பல "78 பக்கங்கள்" எழுதவும் நண்பா!//
நண்பனின் கருத்துக்கு மறுகருத்து சொல்லமுடியுமா.. நிச்சயம் நண்பா

Anonymous said...

fantastic lines
i can't mention the lines
which i liked most, becos i like entire lines,
touched heart and melted

Unknown said...

Thanks Anony for your appreciation:)

Anonymous said...

intha kavithaila vaazhkaiya evlo etharthama solli irukenga? itz really very nice dev. romba nalla irukku. rasigai :)

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ரசிகை.