Friday, August 25, 2006

கவி 21:கல்லறை

இங்கே புதைக்கப்பட்டது
ஓர் உடல்
ஓராயிரம் கனவுகள்

மண்ணுக்கு உணவானாய் நீ
மண்ணுக்கு இன்னும் நோவாய் நான்

சில கடமைகள்
அவரசமாய் முடிக்கப்பட்டு
சிந்திய கண்ணீரினால்
அதினினும் அவசரமாய் கழுவப்பட்டன

முடிவில்லாப் பயணம்
முந்திக் கொண்டாய் நீ
முறிந்தச் சிறகுகளுக்குள்
முகம் புதைத்தப் படி நான்

உறவுகள் உன்
உறக்கத்தை
அலங்கரித்து விட்டு
அகன்றது

சில நாள் துக்கம்
சில கால ஞாபகம்
அவ்வளவு தான்
நீ அவர்களுக்கு

என் மொழியின்
நிரந்தர மௌனமடி நீ
என் மனத்தின்
ரகசிய ரணமடி நீ
ஒரு ஆயுள் கால
சேதமடி நீ எனக்கு...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...

23 comments:

துபாய் ராஜா said...

//மண்ணுக்கு உணவானாய் நீ
மண்ணுக்கு இன்னும் நோவாய் நான்

முடிவில்லாப் பயணம்
முந்திக் கொண்டாய் நீ
முறிந்தச் சிறகுகளுக்குள்
முகம் புதைத்தப் படி நான்

என் மொழியின்
நிரந்தர மௌனமடி நீ
என் மனத்தின்
ரகசிய ரணமடி நீ
ஒரு ஆயுள் கால
சேதமடி நீ எனக்கு...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...//

வலியை சொல்லும் வரிகள்.

அருமையான கவிதை தேவ்.

JUS LIKE DAT said...

tamizh suvaithadu...un kavidhai paditha pin

ALIF AHAMED said...

/./
கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...
/./

பலருக்கும் இதுதான் நடக்கிறது
சொல்லலாமா வேண்டாமா என்ற எண்ணத்தில்....மதில் மேல் பூனை போல்...

வாழ்த்துக்கள் கவிதைக்கு...

Anu said...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்.

really sad.

நாகை சிவா said...

//கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்.//

சொன்னால் தான் அது காதல்.

கைப்புள்ள said...

//கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...//

துணையாகி இருக்க வேண்டியவளைப் பிரிந்தவனின் ஒட்டுமொத்த வலியும் வேதனையும் இவ்வரிகளில் அடக்கம். நல்லாருக்கு தேவ்.

Unknown said...

ராஜா வருகைக்கும் தருகைக்கு நன்றி.

கமலேஷ் - நன்றி நன்றி

உங்கள் நண்பன்(சரா) said...

//சில கடமைகள்
அவரசமாய் முடிக்கப்பட்டு
சிந்திய கண்ணீரினால்
அதினினும் அவசரமாய் கழுவப்பட்டன//

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//பலருக்கும் இதுதான் நடக்கிறது
சொல்லலாமா வேண்டாமா என்ற எண்ணத்தில்....மதில் மேல் பூனை போல்...//

மின்னல் நம்ம சிவா சொல்லுறதைக் கேட்டீங்களா?

Unknown said...

அனிதா தங்கள் வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி

Unknown said...

கைப்பு, சிவா கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

ok

Anonymous said...

தேவ்,

நல்ல கவிதை.. உங்கள் தமிழ் அழகு..

உங்கள் கவிதையை படித்த போது எனக்குள் உதித்த சில வரிகள் உங்களுக்காக

"மறைந்த அவள்
மறிக்கவில்லை
காலனின் அழைப்பு
காதலுக்கில்லை
மொழியானாள்
உன் தமிழானாள்
மௌனத்தில் நீ பேச
உன் மனதோடு வடுவானாள்

தலைகோதும் தென்றலில்
அவள் வாசம் சுவாசிக்கப் பழகு
மழைத்துளிகள் உனைத் தழுவ
அவள் காதலில் நனைந்துருகு
நாளும் உன் நினைவிகளில்
உயிர் கொள்ளும் அவள் காதல்
கல்லறை ஒரு தடையாகுமா
இனி சொல்லித்தான் காதல் காதலாகுமா?"

- கன்யா

Anonymous said...

தேவ்,

உங்கள் தமிழ் அருமை..

இந்த கவிதையை வாசித்த போது எனக்குள் தோன்றிய சில வரிகள், இங்கு உங்களுக்காக

“மறைந்த அவள்
மறிக்கவில்லை
காலனின் அழைப்பு
காதலுக்கில்லை

மொழியானாள்
உன் தமிழானாள்
மௌனத்தில் நீ பேச
மனதோடு உறவானாள்

தலைகோதும் தென்றல்
அதில் அவள் வாசம்
சுவாசிக்கப் பழகு

மழைத்துளிகள் உனத் தழுவ
நீ கொண்ட காதலில்
நனைந்துருகு

வாடும் மலர் காணும் போது
அவள் சிந்திய புன்னகையின்
வண்ணம் அதில் தீட்டு

சிதறும் உன் இதயத்தில்
சித்திரமாய் அவள்
கனவுகளை பத்திரப்படுத்து

முடிவெல்லாம் முடிவல்ல
முடிந்துவிட்டால் அது காதலல்ல
காயங்களில் தொலையாதே
காயமே நீ கலையாதே

காதலில் அவள் வாழ
இனி எல்லாம் காதலி
கல்லறை ஒரு தடையாகுமா
சொல்லித்தான் காதல் காதலாகுமா?"

- கன்யா

gils said...

machi...aniyayathuku nalla irukuda....
kanya..ungalodathu inum top

gils said...

en comment enga poachu?

Unknown said...

கன்யா அருமையானக் கவிதை.

உங்களது அருமையானக் கவிதைகயால் பக்கம்78 இன்னும் அழகாகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி,

Unknown said...

கில்ஸ் உங்கள் கமெண்ட் எங்கேயும் போகவில்லை இங்கேத் தான் உள்ளது. சரியா!!!:)

gils said...

???ungal commenta??/dei...enanda yarnu theriyalaiya..overa mariyadailaam thara?!!! :D

Anonymous said...

dev unga kavithaila oru thudippu irukku keep it up nalla varuveenga. ma best wishes

Anonymous said...

dev unga kavithaila oru uyirin thudippu teriyuthu. romba nalla irukku. keep it up. ma best wishes :)

Unknown said...

நன்றி ரசிகை. தொடர்ந்து படிங்க.. கருத்துக்களைச் சொல்லுங்க. :)

Unknown said...

/கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்.../

ச்சே... ரொம்ப சோகமப்பா...
ஃபீலிங்சா்சாப் போச்சு போ...