Thursday, September 28, 2006

கதை 9:ஆஷிரா

காமராஜ் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்னால் கம்பெனிக்கு சொந்தமான டாட்டா இன்டிக்கா காரின் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மேகமூட்டம் காரணமாக இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் தாமதமாக வரும் எனற எஸ்.எம் எஸ் படித்து விட்டு செல்போனைச் சட்டைப் பைக்குள் சொருகினேன்.

டெல்லியிருந்து ஆஷிரா வருகிறாள். ஆஷிரா எங்கள் குர்கான் அலுவலகத்தில் ERP பிரிவில் சீனியர் CRM CONSULTANT.வயது 27. அந்த வயதில் கிட்டத்தட்ட நான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கும் படு சாமர்த்தியசாலி. இங்கு நாங்கள் ஏற்று கொண்டு இருக்கும் ஒரு புதிய திட்டத்தைச் செயலாக்கப்படுத்தவும் எங்கள் அலுவலக ச்காக்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்னைக்கு நான்கு மாதப் பயணமாக வருகிறாள்.

பெயரைப் பார்த்தா வடநாட்டுக் காரியாத் தெரியுது. வளமைக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் அரைகுறை உடுப்புக்கும் பஞசமிருக்காது. என் மனத்திற்குள் நானே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டேன். அவசரப் படாதீங்க.. நீங்க நினைக்கும் கணக்கு அல்ல இது.. இது போன்ற பெண்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னச் செய்ய பொழப்பு அப்படியாகிப் போச்சு.. ஆஷிராவுக்காக இங்கு தேவுடு காத்து நிற்கிறேன். இன்னிக்கு ஞாயிற்று கிழ்மை. ஆபிஸ் டிரைவர் அவசர வேலையாக் கிளம்பிட்டான். அம்மணியோ ரொம்பவும் முக்கியப் புள்ளி. என் தல அதான் பாஸ் எனக்கு அன்புக் கட்டளைப் போட்டுட்டாரு...

"பன்னீர்..MAKE SURE THAT SHE REACHES THE GUEST HOUSE FROM THE AIRPORT SAFELY...SHE DOESNT KNOW CHENNAI"

போடாங்க... என்னப் பண்ண..பாஸ் உத்தரவு.. ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை காலைத்தூக்கம் போச்சு. நாலாவ்து சிகரெட் ஓயவும். டெல்லி விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. என் கையில் ஆஷிரா என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேண்டா வெறுப்பாய் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.

"டிரைவர்.. மேரா சாமான் இதர் ஹை.. வண்டி எங்கே இருக்கு?"

அழுத்தமான ஆணவப் பெண்குரல் ஒன்று என் காதுகளைக் கிழித்துச் சென்றது.
மூர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தேன். உச்சி முதல் பாதம் வரை முழுசா உக்கிரமானப் பார்வைப் பார்த்தேன். அவள் அழகு தான்.. அழகை ரசிக்க விடாமல் அவள் ஆணவம் என்னைத் தடுத்தது.

"அரே டிரைவர்.. க்யா தேக் ரஹே ஹோ.. வண்டி சீக்கிரம் எடுப்பா"

என் கை கார் இருக்கும் இடம் நோக்கி சுட்டியது.. அவள் விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தாள். நான் வேறு வழியில்லாமல் அவள் மூட்டைகளை நகர்த்தியபடி காருக்கு வந்தேன். எதுவும் பேசாமல் காரை செலுத்தினேன். கொஞ்சம் வேகமாகவே ஓட்டினேன்.

பின் சீட் கண்ணாடியை அவள் இறக்கிவிட்டாள், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை வெளியே விட்டாள்.என்னிடம் எதுவும் பேசவில்லை.

நானும் எதுவும் பேசவில்லை. காரை வேகமாக ஈ.சி.ஆர் ரோட்டை நோக்கி விட்டேன். கார் நீலாங்கரை கம்பெனி கெஸ்ட் ஹவுஸை அடைந்தது. அவள் இறங்கினாள். கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் இம்முறை என்னை மூட்டைத் தூக்கவிடாமல் காப்பாற்றினான். அவள் சல்லென்று உள்ளேப் போய்விட்டாள். வேலையாளிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு பொடி நடையாய் பஸ் ஸ்டாண்ட நோக்கி நடந்தேன்.எனக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதையும் மீறி பேருந்துப் பயணத்தில் அவள் வளைவு நெளிவுகள் என் சிந்தையில் வந்து மோதி என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை பத்து மணிக்கு தான் நான் அலுவலகம் போனேன். முன் கூட்டியே காலத் தாமத்திற்கு அனுமதி வாங்கியிருந்தேன்.என்னுடையக் கேபினை அவளுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனக்கு எரிச்சல் அதிகமானது.எரிச்சலை உள்ளுக்குள்ளேப் புதைத்துவிட்டு எனக்கு ஒதுக்கியிருந்த வேறு இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கலைந்த கேசம்... மிடுக்கானக் கண்கள்... நெற்றியில் புரளும் கற்றை முடி.. அதில் ஒரு விரல் வைத்த அவள் விளையாடியது.. கூர்மையான மூக்கு... மிருதுவான உதடுகள்.. ம்ம்மம் அம்சமாத் தான் இருக்கா.. அதான் திமிர் எனக்கு நானேச் சொல்லிக்கொண்டேன். பாஸ் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய நாள் என்னைப் பார்த்துப் பேசியதற்கான எந்த அறிகுறியும் அவள் நடவடிக்கையில் தென்படவே இல்லை.அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல் படு யதார்த்தமாகப் பேசினாள்.நானும் பாஸ் முன்னாடி சிரிச்சு வச்சேன்.

மத்தியானம் லஞ்சுக்கு வெளியேப் போயிருந்தோம். சாப்பிட்டு முடித்த உடன் தம் அடிக்க நான் வெளியே ஒதுங்கினேன். அவளும் வந்தாள். பற்ற வைக்க வத்திப் பெட்டி இல்லாமல் அக்கம் பக்கம் பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தாள். வந்துக் கேட்டாக் கண்டிப்பாக் கொடுக்க கூடாது. எனக்குள் ஒரு வைராக்கியம் நுழைத்துக் கொண்டு இறுக்கமாய் நின்றேன். அவள் என் பக்கமாய் வந்து என்னைக் கேட்காமலே என் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாவகாசமாய் புகையை விட்டாள். என் கோபம் என் கட்டுப்பாட்டினை மீற துடித்தது.

"சோ இந்த் ஆபிஸ்ல்ல வாங்குற சம்பளம் உங்களுக்குப் பத்த மாட்டேங்குது அப்படித் தானே? என்று கேட்டு விட்டு தலையை ஸ்டலாக் ஒரு புறம் பார்த்து தாழ்த்தினாள்.
"எனக்குப் புரியல்ல.." என்று நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

"இல்லை வீக் டேஸ்ல்ல SOFTWARE ஜாப். வீக் என்ட்ஸ்ல்ல டிரைவர் ஜாப்... வருமானம் நல்லாத் தான் இருக்கும் என்று கிண்டலாய் சிரித்தவள்... பட் யூ நோ.. யூ ட்ரைவ் த கார் வெல்" என்றாள்.
எனக்குக் கடுப்பு அதிகமானது. வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் டைட் ஜீன்ஸை என் ஓரக் கண்ணால் அளவெடுத்தேன். அவள் இடுப்பில் சட்டைக்கும் ஜின்ஸ்க்கும் ஒரு நூல் அளவு இடைவெளி. அந்த இடைவெளியில் என் பார்வைப் பதிந்து நின்றது.

மாலை அலுவலக்ம் விடும் நேரத்துக்கு முன்பாக என்னையும் என் சகா கார்த்தியையும் பாஸ் கூப்பிடனுப்பி மாலையில் எங்களுக்கு என்ன வேலை என வினவினார்.
கார்த்தி எப்பவுமே உஷார் பார்ட்டி.. " பாட்டிக்கு கேட்ரக்ட் ஆப்பரேஷ்ன் சார்.. இன்னிக்குப் பாக்கப் போறேன்" டக்குன்னு அள்ளிவிட்டான்.
நான் சாதுவா ஒண்ணுமில்ல சார் என்று தலையாட்டி நின்றேன்.
"மச்சி பெரியப்பா எதாவது டாகுமெண்ட் வேலையை உன் தலையிலேக் கட்டப் போகுதுப் பார்" எனக் கிசுகிசுத்தான் கார்த்தி.

பாஸ் சொன்ன விஷ்யமே வேறு. ஆஷிரா மாலையில் சென்னையில் எங்கோப் போக வேண்டுமாம். அதுக்கு காவலாளி வேலைப் பார்க்க ஆள் வேண்டும். நான் தான் மீண்டும் சிக்கினேன். கார்த்தி கொந்தளித்துவிட்டான்.
"ம்ம் உனக்கு மச்சம்டீ.. அரேபியக் குதிரையை ஓட்டிட்டுப் போறே... ம்ம்ம்" அவன் விட்ட பெருமூச்சை சிலிண்டிரில் பிடித்து வைத்திருந்தால் ஒரு மாதம் சமையலுக்கு ஆகும்.மறுபடியும் அதே இன்டிக்கா... டிரைவர் சீட். இம்முறை அவள் பின்னால் உட்காராமல் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். செம பர்ப்யூம் வாசனை. மனுஷனைக் கும்முன்னு தூக்கிச்சு.

அதிசயமாச் சிகரெட் பிடிக்கவில்லை. கபாலிஸ்வரர் கோயிலுக்குப் போகணும்ன்னு சொன்னாள். வண்டியை மயிலாப்பூருக்கு விட்டேன்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. அவள் என்னைக வரச் சொல்லி கூப்பிடவுமில்லை, காரணுமும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்து இருந்தேன். வந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு, பிரசாதம் கையில் ஏந்தி , தலையில் ஒரு முழம் மல்லிகைச் சூடி ஜின்ஸ் அணிந்த ஒரு தேவதையாய் வந்தாள்.

"ARE U AN ATHEIST?" அவள் கேட்டாள்
"நோ.. அடுத்து எஙகப் போகணும்? " என்று கேட்டேன்.
"அடையார் கேன்சர் இன் ஸ்டியூட்டிட்"
"அங்கே யார் இருக்கா?"
"அங்கேப் போகணும்" உறுதியானக் குரல் பதிலாய் வந்தது. அவள் கையில் ஒரு ரோஜாப் பூ இருந்தது. நான் வண்டி நிறுத்துமிடத்தில் நின்று கொண்டேன்.

அவள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னப் புன்னகைப் புதிதாய் பூத்திருந்தது.
"அடுத்து எங்கே?"
"நல்ல ரெஸ்டாரெண்ட் போலாம்"
"நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்குவேன்"
"ரிலாக்ஸ் உங்களைப் பில் எல்லாம் கட்டச் சொல்லமாட்டேன்"
அவள் சிரித்தாள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.
"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"

ஹோட்டலில் சைவ வகைகளை ஆர்டர் செய்தாள். நான் ஜீஸ் சொன்னேன்.

"எப்படியிருக்காங்க?"

"யார்?"

"கேன்சர் இன் ஸ்டிடியூட்ல்ல பாக்கப் போணீங்களே அவங்க.."

"ஓ அதுவா? அங்கே இப்போ யாரும் இல்ல. எங்க அப்பா அங்கே இருந்தார். கடைசியா எட்டு மாசம். வார்ட் நம்பர் 13. அப்போ எனக்கு எட்டு வயசு. நிறைய சிகரெட் பிடிப்பாராம். போயிட்டார். அவருக்கு ரோஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்க,, அதான் அவர் கடைசியா இருந்த ரூம்ல்ல ஒரு ரோஸ் வச்சுட்டு வந்தேன்" என்ற படபடப்பாய் பேசி முடித்தாள்.

"நீங்களும் நிறைய ஸ்மோக் பண்றீங்க?"

"அப்பா கிட்ட போகணும் அவர் கூட மிஸ் பண்ண சைல்ட்ஹூட் டேஸ் எல்லாம் மறுபடியும் வாழணும்ன்னு ஒரு ஆசை.. அதான் நானும் பிடிக்குறேன்.." என்று கலகலவெனச் சிரித்தாள்.எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆர்டர் செயத் அயிட்டங்கள் பரிமாறபட்டன. அவள் ஒவ்வொன்றாய் எடுத்து ருசிக்க ஆரம்பித்தாள்.

"ஜோக் மேன்... காலேஜ் டேஸ்ல்ல ஜாலியா அப்படியே ஆரம்பிச்ச பழக்கம் இப்போ அப்படியே போகுது,,, நீ எப்படி மேன்? ரொம்ப மூடி டைப்பா இருக்கே?"

நீங்க தேயந்து நீயானது. அவள் கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன்.

"உங்க..உனக்கு தமிழ் எப்படி தெரியும்? " நானும் வேண்டுமென்று மரியாதைத் தவிர்த்தேன். என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"நான் தமிழ் பொண்ணு தானே.. அப்பாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம். ஆனா இது வரை தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னைச் சென்னைப் பக்கம் விட்டதே இல்லை"

ஒரு நீருற்றாய் வார்த்தைகள் அவளை விட்டு புறப்பட்டன. அருவியாய் அவள் பேச்சு பொங்கியது. ஒரு நதியாய் என் காதுகளில் அவள் மொழி நடந்தது. ஒரு சில நிமிடங்களில் அவளைப் பற்றிய என் அபிப்பிராயங்கள் மாறத் துவங்கின. என்னவெல்லாமோ பேசினாள். ஆனால் எதிலும் அவள் தன் தாயைப் பற்றி மறந்தும் குறிப்பிடவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் என்று உறுத்தியது. ஆனாலும் கேட்கவில்லை.

அலுவலகம் வந்து விட்டால் வேலையில் கில்லியாய் நிற்பாள். வேலையைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அவளிடம் இருக்காது. வேலைச் சொல்லிக் கொடுப்பதிலும் அவள் கெட்டிக்காரி.

ஒரு சனிக்கிழமை மாலை என்னை அவள் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நானும் போனேன்.
கதவைத் திறந்தவள் கால்சட்டையும் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஒரு நல்ல ஓட்டப் பந்தைய வீராங்கனைக்குரிய கால்களை அவள் பெற்றிருந்தாள்.

"கம் இன்"

அவள் அறையில் புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன. பாதிக்கும் மேல நமக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் கிடந்தன.

"புக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மொழி பேதமில்லாமல் படிப்பேன்... படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"

நான் கையில் கிடைத்தப் புத்தகங்களைப் புரட்டினேன்.இசைத் தட்டுகளை ஆராய்ந்தேன். சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்தேன். அதில் ஒரு படத்தில் ஒரு அழகானச் சிறுமி இருந்தாள். அது ஆஷிராவாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் குடும்ப படம் இருந்தது. ஆஷிராவின் அம்மா படமும் இருந்தது. ஆஷிராவின் அம்மா கிட்டத்தட்ட ஆஷிராப் போலவே இருந்தாள்.

"சரி என்ன ட்ரிங்க் வேணும் விஸ்கியா ஜஸ்ட் பியரா?"
"நோ தாங்க்ஸ்"
"குடிக்க மாட்டியா? வெறும் தம்மு தானா?"
"இல்ல இப்போ வேணாம்"
"ஓ ஓஓஓஓ... ஏன்? " அவள் குரலில் நக்கல் இருந்தது.

அவள் விஸ்கி ஊற்றி கொண்டாள். கோப்பையிலிருந்து மெதுவாக எடுத்து பருகினாள்.
அவ்ள் கண்களில் ஒரு வித சோகம் இழையோடியது.

"ஹே.. ஒரு அழகான பொண்ணு..நான் அழகாத் தானே இருக்கேன்?"
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"அப்புறம் அந்த அழகான பொண்ணு செக்ஸியான டிரெஸ்ல்ல.. தண்ணியடிச்சுட்டு இருக்கா.. அதுவும் தனியா இருக்கா.. உனக்கு செக்ஸ் எண்ணம் வரலியா?"

நான் உள்ளுக்குள் அதிர்ந்துப் போனேன். நம்ம மனசுக்குள்ளே இவ எட்டிப் பாக்குறாளான்னு ஒரு வினாடி திகைச்சுப் போயிட்டேன்.

"ஹே ரிலாக்ஸ் உங்க தமிழ் படத்துல்ல எல்லாம் அப்படித் தானே காட்டுவாங்க... தம் தண்ணி இதெல்லாம் ஒர் பொண்ணு அடிச்சா அவ எதுக்கும் தயார் அப்படி தானே உங்க நினைப்பு"

ஆஷிரா அதுக்கும் மேல் எவ்வளவோ பேசினாள். நான் ம்ம் கொட்டி வைத்தேன்.

"ஹே நீ யாரையாவ்து லவ் பண்ணி இருக்கீயாடா?"
"ம்ம் பண்ணியிருக்கேன்"
அவள் எக்காளமாய் சிரித்தாள்.
"இந்த சுடு மூஞ்சிய யார்ப்பா லவ் பண்ணா?"
"என் காலேஜ் மேட் அவப் பேர் ரஞ்சனி. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. யு.எஸ்ல்ல இருக்கா. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்"

கோப்பையில் இருந்த மதுவை மெல்ல விழுங்கினாள்.

"அவ பையனுக்கு உன் பெயரா வச்சுருக்கா? உன் காதலி" அவள் பேச்சில் ஒரு விட்டேத்தித் தனம்.

"இல்லை"
"ரொம்ப லவ் பண்ணீயோ?"
"ம்ம்"
"நானும் லவ் பண்ணேன்.. ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நிறைய வாட்டி..இப்போ ஒரு ஆம்பிளைக் கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியும் " என்று என் அருகில் வந்தாள்.

நெற்றி முடியினைக் கையில் பிடித்தப்படி என் விழி பார்த்துச் சொன்னாள்.
"தைரியம்டா.. அது உங்க எவன்கிட்டயும் இல்லடா.. இருட்டல்ல இருக்க தைரியம் வெளிச்சம் வந்தா உங்களுக்குப் போயிடுதுடா..."

என் கன்னத்தில் பளீரென்று யாரோ அறைவதுப் போலிருந்தது. அந்த விடிந்தும் விடியாதுமான இரவினில் ரஞ்சனியை அவள் உறவுக்காரர்கள் வந்து இழுத்துப் போனதும்.. அவரகளுக்குப் பயந்து ரஞ்சனியின் கை உதறி நான் புதருக்குள் போய் பம்மியதும் நினைவுக்கு வந்தது..

"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.

"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

46 comments:

ILA (a) இளா said...

//அது உங்க எவன்கிட்டயும் இல்லடா//
கடைசி வரைக்குமே அந்த தைரியம் இல்லாது இருப்பதுதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. இன்னுமா இப்படிப்பட்ட பசங்க இருக்காங்க.
I dont think so. குத்திக்காட்டினா ஒரு மண்ணும் வராது, அது தைரியாமாக இருந்தாலும் சரி.

ஜயராமன் said...

அற்புதமான கதை. இல்லை, ஒரு ஓவியமாக வரைந்திருக்கிறீர்கள். படித்து ரொம்ப நேரம் ஆகியும் தாக்கம் போகவில்லை...

தேர்ந்த ஒரு கலைஞனின் கைவண்ணம் தெரிகிறது. அருமையான கரு! அழகாக படைத்துள்ளீர்கள்.

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு உருப்படியான பதிவு படித்த திருப்தி.

மேலும் எழுதுங்கள்....

நன்றி


பிகு: எனக்கும் நன்னிலம்தான். ஆஷிராவை கேட்டதாக சொல்லவும்

ஆவி அம்மணி said...

கதை ரொம்ப நல்லா இருக்குதுங்க தேவ். அடுத்த பகுதி எப்போ?

வேந்தன் said...

good .....
what next>>>

கதிர் said...

//படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"//

இந்த வரிகள் அழகா இருக்கு!

விஷயங்கள கோர்வையா அழகா சொல்லி இருக்கிங்க.

//"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.//

அடப்பாவி, அங்க இருந்து எஸ்கேப் ஆக நினைச்சதே தப்பு, இதில அம்மா திட்டுவாங்கன்னு சொன்னா அந்த பொண்ணு என்ன நினைக்கும்.

சொதப்பிட்டயே தல :(

ஜயராமன் said...

////கடைசி வரைக்குமே அந்த தைரியம் இல்லாது இருப்பதுதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. ////

இந்த தைரியம் வேண்டாமே!! படித்து தன் குடும்பம், தன் தங்கை, தாய், வளர்ச்சி பெறுவோம் என்று நம்பும் மற்றோர் எல்லோரையும் வெறுத்து தற்காலிக வேதியல் ஆசையில் வாழ்க்கையை தொலைத்து பின்னர் நாய் வாழ்க்கை வாழும் தைரியம் வேண்டாமே. நம் ஆட்கள் இன்னும் படிப்பு, சமுதாயத்தில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட்டும். அதற்கு ஆசைப்பட்ட்டும். இந்தமாதிரி இழுத்துக்கொண்டு ஓட தைரியம் வேண்டாம். ஆஷிரா மாதிரி சீர்கெட்டு போய்விடவேண்டாம்.


நன்றி

உங்கள் நண்பன்(சரா) said...

ரெம்ப நாள் கழித்து அனுபவித்து ரசித்த பதிவு தேவு!

//ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு உருப்படியான பதிவு படித்த திருப்தி.//

இதில் எனக்கு உடன்பாடு இல்லை!,
வேண்டுமானால "வழக்கம் போல்" நல்லா எழுதி இருக்கீங்க, என்று சொல்லலாம்.

அதிலும் ஆஷிராவை கால்சட்டை- டீ சர்ட்டில் பார்த்ததும் எனக்கே ஒரு மாதிரிஆயிடுச்சு நீ என்னடான ஒன்னுமில்லைனு சொல்லுர சரி என்ன பன்னுரது நம்ம பயலா வேற போய்ட்ட நம்பித்தானே ஆகனும்!:)))

அன்புடன்...
சரவணன்.

கைப்புள்ள said...

தேவ்,
வித்தியாசமான கதை. நல்ல நடை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

//"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.//

ஆனா இந்த நிகழ்வு எதனால நடக்குதுன்னு கொஞ்சம் விவரிச்சிருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

தேவ்,
அட்டகாசமான கதை... தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணம் தெரிகிறது.

இன்னும் நிறைய வேணும்னு தோனுது ;)

நவீன் ப்ரகாஷ் said...

மிக அழகான பெண்ணைப்பற்றி இயல்பான உணர்வுகளை அவள் ஜீன்ஸ் போலவே ஜிவ்வென்று சொல்லி இருக்கிறீர்கள் தேவ் !

ஆனாலும் முடிவை ஒரு வரையரைக்குட்படுத்தி விட்டீர்கள் ! ம்ம்ம் என்ன செய்ய ?:)))

Anonymous said...

enakku eno endha madhiri kadhai ellam .. puriyalai.. hero wanted sex from her , then he felt he has done some mistake in the past and didnot the mistake of having sex.

Nee nalla ezhuthierukku.. because i kept reading till the end. ana kadhai nalla ellai. nee enna solla varennu enakku puriyalai

Srivats

G.Ragavan said...

நல்லதொரு கதை தேவ். படித்தவுடன் கதை மாந்தர் அத்தனை பேரின் மேலும் ஒரு பரிவுதான் பிறந்தது. அடுத்த கதைக்குக் காத்திருக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

தேவ், நல்லா இருக்குன்னு சொல்லறவங்க மத்தியில நான் இப்படிச் சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க. விளம்பரத்துக்காக இல்லை. என் மனதில் பட்டது.

அதாவது அந்த காமராஜின் கேரக்டர் எனக்குப் புரியவே இல்லை. சரி ரஞ்சனியைத்தான் காதலித்தான். மணம் புரிய முடியாமல் போய் விட்டது. அந்த சூழ்நிலைகள் பற்றி நமக்குத் தெரிய வரவில்லை. அதனால் அவன் மேல் கோபம் வர வேண்டுமா, பச்சாதாபம் வர வேண்டுமா? புரியவில்லை.

அந்த உணர்வு வராததனால் கடைசியில் ஒரு புரிதல் இல்லாமல் ஒரு வெற்றுணர்வே எஞ்சி நிற்கிறது.

அப்புறம் அவன் ஒரு முறை காதலியை இழந்து இவள் மேல் ஒரு உணர்வு ஏற்பட வருகிறான். அவளோ ஒரு ஆணிடம் என்ன வேண்டும் எனத் தெளிவாக இருக்கிறாள். இதனால் அவர்களுள் எழும் எண்ணங்கள் சரியாக வெளி வரவில்லை.

கதையைப் படித்த போது காமராஜின் இடத்தில் சூர்யாவை கற்பனை செய்து படித்து வந்தேன். அவனை இப்படி கையாலாகாதவனாய் காண்பித்ததால் கூட எனக்கு இந்த ஏமாற்றம் இருக்கலாம். :)

குறைகள் மட்டுமே சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அதான் நிறைகளை எல்லாரும் சொல்லிவிட்டார்களே. உங்கள் எழுத்தில் மெருகு கூடி வருகிறது. அது நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.

//உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.//

அன்புமணி அண்ட் கோ கோபப்படப் போறாங்க பார்த்து. அப்புறம் தமிழ்நாட்டுல உங்க வலைப்பூ தெரியாம போயிடப் போகிறது. :D

Anonymous said...

@dev.... nijama sollunga aashira'va yaara base panni ezhuthuneenga... ava dialogue ellam erkanave engayoo ketta maathiri irukke...;)

nalla post dev... kathaila karu'nu onnu illa... verum emotions mattume.. kovam... judgement.. apparam athai maathikira inconsistency... ethartham .. guilt... ippadi ellathaiyum oru kalavaiya koduthu irukeenga....

it is hard to have a start and end to such story lines.. aana neenga ithai romba azhaga handle panni irukeenga.. 100% unmai.. aangalukku iravil irukkum thairiyam vidinja poidumngurathu...

udane ellarum defensive'a comment poodaatheenga.. neenga exception'a irunda santhoshamthaan.. :)

good luck

Anonymous said...

@ila...

innuma ippadipatta pasanga irukaangannu kettu irukeenga... ithai ponnunga kitta kelunga...

kandippa irukkaanga.. athilaiyum ippo athingamave ippadithaan irukaanga.. kathalukkum bayappaduraanga.. sex'nalum bayapaduraanga... oru kaalathula ponnunga insecured'a feel panninaanga pasanga vittuttu poiduvaangannu

ippo ellam pasanga insecured'a feel panranga.. ponnunga vitamaataangalo'nu.. :P

நாமக்கல் சிபி said...

தேவ்,

கதை நன்றாக இருக்கிறது.

இந்த காலத்து பெண்கள் ஆண்களிடம் நிறைய தைரியத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயம் தைரியம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் பையன்களும் தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் சமயோசிதமாக எஸ்கேப் ஆகிறார்கள்.

மனதின் ஓசை said...

நல்ல கதை, அதைவிட நல்ல நடை... ஒரு வித காந்தம் போல் ஆரம்பம் முதல் முடியும் வரை கூடவே இழுத்துச் செல்கிறது..

இந்த மாதிரி கதையெல்லாம் நீ ரொம்ப அழகா, அனுபவிச்சி எழுதற மாதிரி இருக்கே.. எப்படி?

அப்புரம், ஆமா.. யார் அது ரஞ்சனி? அடிக்கடி உன் கதையில அந்த பேர் வருதே? உண்மைய சொல்லு (மாட்டிகிட்டியா?!!!)

நாகை சிவா said...

தேவ்!
எல்லாரும் கூறியதை போல் கதை நன்றாகவே உள்ளது. முடிவை தவிர. ஏதோ சட்னு முடித்து விட்ட மாதிரி,

இதை படித்தவுடன் சட்டென்று தோன்றியது என்னவென்றால் எழுத்து நடையின் அழகு, வார்த்தை உபயோகம்.....

ஒரு சின்ன சந்தேகம் தேவ், ஒரு இடத்தில் நீங்கள் அவள் தாயை பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்று வார்த்தையை உபயோகப்படுத்தியதை வைத்து ஏதோ மேட்டரு இருக்க போல என்று நினைத்தேன். அதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.....

SierrA ManiaC said...

Am gonna think and write......something to think for the night and i show my link cos ye can know who i am how aer ye sir?

SierrA ManiaC said...

The story is nice but am not gonna comment now cos moderation is enabled......

and i am letting u see my page because u should know who i am I don't wanna eb a stranger to ye. But tamil is very ahrd to read....

Unknown said...

இளா, வருகைக்கும் உங்க "காட்டமானக்" கருத்துக்கும் நன்றி

//குத்திக்காட்டினா ஒரு மண்ணும் வராது, அது தைரியாமாக இருந்தாலும் சரி. //

மேல நீங்கச் சொல்லியிருக்கும் குத்திக்காட்டல் எதைப் பற்றி என்று தெளிவுபடுத்தினால் என்னால் அதுப் பற்றி பேச முடியும்:)

Unknown said...

ஜயராமன், அமானுஷ்ய ஆவி, வேந்தன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

Unknown said...

வாங்க தம்பி,

//அடப்பாவி, அங்க இருந்து எஸ்கேப் ஆக நினைச்சதே தப்பு, இதில அம்மா திட்டுவாங்கன்னு சொன்னா அந்த பொண்ணு என்ன நினைக்கும்.

சொதப்பிட்டயே தல :( //

இங்கு குறிப்பிட்டு காட்டியிருக்கும் சொதப்பல்கள் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அல்லவா!!! என்னச் செய்ய :)

Unknown said...

//இந்த தைரியம் வேண்டாமே!! படித்து தன் குடும்பம், தன் தங்கை, தாய், வளர்ச்சி பெறுவோம் என்று நம்பும் மற்றோர் எல்லோரையும் வெறுத்து தற்காலிக வேதியல் ஆசையில் வாழ்க்கையை தொலைத்து பின்னர் நாய் வாழ்க்கை வாழும் தைரியம் வேண்டாமே. //

ஜயராமன் சார் உங்க கருத்தை நல்லாவேச் சொல்லிட்டீங்க.

//பிகு: எனக்கும் நன்னிலம்தான். ஆஷிராவை கேட்டதாக சொல்லவும் //
நிச்சயமாச் சொல்லிடுறேன்.

Unknown said...

உங்கள் நண்பன் சரவணா... வழ்க்கம் போல உன் பின்னூட்டமும் நல்லாவே இருக்குய்யா:)

Unknown said...

//"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.//

ஆனா இந்த நிகழ்வு எதனால நடக்குதுன்னு கொஞ்சம் விவரிச்சிருக்கலாம்.
கைப்பு சில நிகழ்வுகலை மேலும் விவரிப்பதோ இல்லை விளக்கம் கொடுப்பதோ நாகரீகம் ஆகாது. சில விஷ்யங்களை வாசிப்பவரின் புரிதலுக்கு விட்டு விடுவது நலம் எனப்து என் பதில்

Unknown said...

வெட்டி, நவீன், வத்ஸா, ஜி.ரா உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

//அதாவது அந்த காமராஜின் கேரக்டர் எனக்குப் புரியவே இல்லை//

ஆகா கேரக்டர் பெயரையே மாத்திட்டீங்களே நியாமா கொத்ஸ் ?

//சரி ரஞ்சனியைத்தான் காதலித்தான். மணம் புரிய முடியாமல் போய் விட்டது. அந்த சூழ்நிலைகள் பற்றி நமக்குத் தெரிய வரவில்லை. அதனால் அவன் மேல் கோபம் வர வேண்டுமா, பச்சாதாபம் வர வேண்டுமா? புரியவில்லை. //
இந்தக் கேள்விக்கு நீங்கத் தான் நாட்டாமை.. தீர்ப்பை உங்காளிடமிருந்து ( வாசிப்பவர்) தான் எதிர்பார்க்கிறேன்.. நீங்களே குழம்புனா எப்படி?

Unknown said...

கன்யா கருத்துக்கு நன்றி.

இந்தக் கதையில் வரும் ஆஷிரா தனிப்பட்ட ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்ட பாத்திரம் அல்ல.
இந்த வசனங்கள் உபயம் கன்யா நன்றின்னு ஒரு வரி போட்ரலாமா? சொல்லுங்க

இளாவின் கருத்துக்களுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதில் கருத்துக்கு பதிலை நண்பர் இளாவிடமே விட்டு விடுகிறேன்.

Unknown said...

தளபதியாரே கருத்துக்கு நன்றி.

ஓசையாரே கருத்துக்கு நன்றி.
ரஞ்சனி வெறும் ஒரு பெயர் தான்ன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க,. இருந்தும் சொல்லுறேன் அது வெறும் பெயர் தான்.

Unknown said...

//ஒரு சின்ன சந்தேகம் தேவ், ஒரு இடத்தில் நீங்கள் அவள் தாயை பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்று வார்த்தையை உபயோகப்படுத்தியதை வைத்து ஏதோ மேட்டரு இருக்க போல என்று நினைத்தேன். அதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே..... //

சில முடிச்சுக்கள் அவிழ்க்கபடமால் விட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்தேன்..

Unknown said...

//The story is nice but am not gonna comment now cos moderation is enabled......//

Welcome and Thanks Prassanaa

ராசுக்குட்டி said...

//"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"//
புதுசா இருந்தது.

மத்தபடி கதையில் நல்ல தேர்ந்த எழுத்தாளர்களின் நடை... தொடர்ந்து எழுதுங்கள் தேவ்... பக்கம் 78-க்கு பக்கத்துலேயே இருக்கோம் நாங்களெல்லாம்

Santhosh said...

நல்லா எழுதி இருக்கே மாப்பி,
எல்லாருக்கும் இருக்குற அதே சந்தேகம் தான் எனக்கும் அந்த ரஞ்சனி யாரு அன்னிக்கி chatல சொன்னியே அந்த பொண்ணோட நிக் நேமா இது :))? எதோ நம்மாள முடிஞ்சது.

மனதின் ஓசை said...

//அந்த ரஞ்சனி யாரு அன்னிக்கி chatல சொன்னியே அந்த பொண்ணோட நிக் நேமா இது :))? //

சந்தொஷு.. உன்கிட்ட விளக்கமா வேற சொல்லி இருக்கரா?
என்கிட்ட ஆரம்பிச்சி உடனே நிருத்திடாறு.. தேவு.. வாசகர்கள் கிட்ட மறைக்கதப்பா.. யாரு அது.. என்ன பிரச்சினையினால பிரிஞ்சுட்ட? வூட்ல இது தெரியுமா?

இன்னும் சந்தேகங்கள் தொடரும்.

//எதோ நம்மாள முடிஞ்சது. //
ஏதோ என் பங்குக்கு.

Unknown said...

//மத்தபடி கதையில் நல்ல தேர்ந்த எழுத்தாளர்களின் நடை... தொடர்ந்து எழுதுங்கள் தேவ்... பக்கம் 78-க்கு பக்கத்துலேயே இருக்கோம் நாங்களெல்லாம் //

ராசுக்குட்டி வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

உங்கள் ஆதரவு தான் நம்ம எழுத்துக்கு ஊக்கமும் ஊட்டச்சத்தும் தரும். பக்கம் 78 நிச்சயம் உங்கள் ஊக்கத்தோடு தொடரும்.

Unknown said...

வாங்க சந்தோஷ்,

இந்த வரி எனக்கு சந்தோஷம்
//நல்லா எழுதி இருக்கே மாப்பி,//


//எல்லாருக்கும் இருக்குற அதே
சந்தேகம் தான் எனக்கும் அந்த ரஞ்சனி யாரு அன்னிக்கி chatல சொன்னியே அந்த பொண்ணோட நிக் நேமா இது :))? எதோ நம்மாள முடிஞ்சது. //

இதெல்லாம் உனக்கு சந்தோஷ்ம்.. ம்ம்ம் நீ நடத்து மாப்பி

Unknown said...

//சந்தொஷு.. உன்கிட்ட விளக்கமா வேற சொல்லி இருக்கரா?
என்கிட்ட ஆரம்பிச்சி உடனே நிருத்திடாறு.. தேவு.. வாசகர்கள் கிட்ட மறைக்கதப்பா.. யாரு அது.. என்ன பிரச்சினையினால பிரிஞ்சுட்ட? வூட்ல இது தெரியுமா? //

ஓசையாரே.. கதையைப் பத்திப் பேசுங்கய்யா கதை எழுதுனவனைப் பத்தி ஏன்ய்யா இப்படி அலசுறீங்க...

சந்தேகங்கள் அமைதியான வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல..அதனால் சந்தேகம் தவிர்த்துச் சந்தோஷமாய் வாழுங்கள்:)

ILA (a) இளா said...

//இந்த தைரியம் வேண்டாமே!! படித்து தன் குடும்பம், தன் தங்கை, தாய், வளர்ச்சி பெறுவோம் என்று நம்பும் மற்றோர் எல்லோரையும் வெறுத்து தற்காலிக வேதியல் ஆசையில் வாழ்க்கையை தொலைத்து பின்னர் நாய் வாழ்க்கை வாழும் தைரியம் வேண்டாமே//
இது காதலுக்கு எதிராகவா?

ரவி said...

நல்ல திறமை உங்களுக்கு...ஒரே மூச்சில் படிக்கவைத்துவிட்டீர்...

Unknown said...

இளா இந்தக் கதையில் காதல் ஆதரவோ அல்லது அதற்கான எதிர்ப்போ என்ற சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பு இல்லையே.

Unknown said...

ரவி உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

Dr.Srishiv said...

நச் கதை ஐயா
பிச்சி எடுக்கறீங்க உங்க நடையில் :)
வாழ்த்துக்கள், இப்போதான் ஒவ்வொரு கதையா பார்க்கின்றேன்...:)
இன்னும் எழுதுங்கள்
ஸ்ரீஷிவ்...

Unknown said...

//நச் கதை ஐயா
பிச்சி எடுக்கறீங்க உங்க நடையில் :)
வாழ்த்துக்கள், இப்போதான் ஒவ்வொரு கதையா பார்க்கின்றேன்...:)
இன்னும் எழுதுங்கள்//

நன்றி ஸ்ரீஷிவ். உங்க ஊக்கமளிக்கும் வாழ்த்துக்கள் நிச்சயமா எனக்கு இன்னும் நிறைய எழுத கண்டிப்பா ஒரு டானிக் மாதிரி.. தொடர்ந்து வாங்க..

G.Ragavan said...

நல்லாருக்கு. உண்மையிலேயே நல்லாருக்கு. செருப்பால அவன் அடி வாங்கீருக்கலம். இந்தக் கதைய முந்தி படிச்சிருக்கேன். பின்னூட்டம் போடாம விட்டிருக்கேன். அந்தக் குறைய இன்னைக்குத் தீத்தாச்சு. :)

Unknown said...

//G.Ragavan said...
நல்லாருக்கு. உண்மையிலேயே நல்லாருக்கு. செருப்பால அவன் அடி வாங்கீருக்கலம். இந்தக் கதைய முந்தி படிச்சிருக்கேன். பின்னூட்டம் போடாம விட்டிருக்கேன். அந்தக் குறைய இன்னைக்குத் தீத்தாச்சு. :)//

நன்றி ஜிரா :-)