Tuesday, November 07, 2006

கவி 24:இன்னும் பெய்யும் மழை - 1

என்னில் இருந்து
உன்னையும்
உன் நினைவுகளையும்
வேரோடுப் பிடுங்கி
எறிந்து விட்டதாய்
நினைத்து
உன்னைப் பார்த்தேன்
உன் பார்வையால்
உன்னை மீண்டும்
எனக்குள்
விதைத்து விட்டு
மழைக்கால மின்னல் போல்
புன்னகைத்தாய்...

-----------------------------

ம்ம் குடை எதற்கு
என் தாவணி போதும்
நம் இருவருக்கு

மழைக்குக் குடை
விரிக்கப் போன
என் மீது கோபப்பட்டாய்...

-------------------------------

சில புயல்கள்
கரையைக் கடப்பதில்லை
தெரியுமா உனக்கு?

அப்படியா?
அகல விரிந்த
உன் விழிகள்
பார்த்து சொன்னேன்..

என் இதயத்தில்
மையம் கொண்டிருக்கும்
நீயும் ஒரு புயல் தானே..

---------------------------


மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்
-----------------

ஒரு வார்த்தைச்
சொல்லிட்டுப் போ

போதுமா!!!

என் உதடுகளில்
ஒரு வாக்கியமே
எழுதிவிட்டு

கேலியாய் கேட்டாய்
என்னிடம்..

-----------------------------

மழைக் காலப் பரிசா
ஏதாவது கொடுக்கச்
சொல்லிக் கேட்டாய்...

கவிதை வேண்டுமா
என்றேன்...

ம்ம்ம் சரி என்றாய்..

மழலைகளை விட
சிறந்தக் கவிதை
வேறு உண்டோ
என்றேன்...

நீயோ
ச்சீ போடா
என்றாய்...
----------------------------

மழை இன்னும் பெய்யும்......

38 comments:

Naveen Prakash said...

//உன் பார்வையால்
உன்னை மீண்டும்
எனக்குள்
விதைத்து விட்டு
மழைக்கால மின்னல் போல்
புன்னகைத்தாய்...//

//இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்//

கவிதை மின்னல்
வெட்கவண்ணத்தை மலர்களில்
ஏந்தி புன்னகைக்கிறது தேவ்!!
இன்னும் பெய்யட்டும் மழை!
நனைய காத்திருக்கிறேன் :))

Hari said...

உங்கள் காதல் வெற்றியா என்ன? கவிதையை படிக்கும் போது அவ்வாறு தோன்றுகிறது.

இது எப்படி என்று சொல்லவும்:

பெற்றோருக்கும் நண்பனுக்கும்
தேக்கிய கண்ணீரையும்
உன் காலடியில்
சேர்த்து விட்டேன்,
என்னை காதலித்துவிடு.

பின்குறிப்பு : இது கவிதையாக இருக்கும்பட்சத்தில் Publish-அவும்.

Anitha Pavankumar said...

wow Dev
Really nice
Wish i read it again sitting near the window when its drizzling outside...

Anonymous said...

லேசாய் நனைந்து விட்டேன்
உங்களின் இந்த தூரலில்
இனி முக்காடெதற்கு
கொட்டட்டும் காத்திருக்கிறேன்

கன்யா

மனதின் ஓசை said...

சீ சீ.. மழை நல்லாவே இல்ல.. நனைஞ்சா சளி பிடிச்சிடும்..(அப்புரம் பொண்டட்டிக்கு தெரிஞ்சிடும்.. ஹும்!!!)

கவிதைகள் நல்லா இருக்கு தேவ்.. மழை தொடரட்டும்.

செந்தழல் ரவி said...

//மழலைகளை விட
சிறந்தக் கவிதை
வேறு உண்டோ
என்றேன்...//

நல்லா சொன்னீங்க..

தேவ் | Dev said...

வாங்க நவீன் உங்களைப் போன்ற கவிஞர் நம்ம கவிதையைப் படிச்சுட்டு ஓ.கே சொன்னாலே நமக்கு சந்தோஷ்ம் தான். இது டபுள் சந்தோஷம்ங்கோ.

நாகை சிவா said...

//என் இதயத்தில்
மையம் கொண்டிருக்கும்
நீயும் ஒரு புயல் தானே..//

உண்மை... உண்மை

தேவ் | Dev said...

//உங்கள் காதல் வெற்றியா என்ன? கவிதையை படிக்கும் போது அவ்வாறு தோன்றுகிறது.//

காதல்ங்கறது அப்படின்னு ஆரம்பிச்சு தத்துவம் எல்லாம் பேச நினைச்சாலும் பாருங்க பேச்சு வர மாட்டேங்குது.. காதல் ஒரு அனுபவம் அவ்வளவு தான் அனுபவிக்கணும்.. அதுல்ல வெற்றி தோல்விங்கறதை எப்படி சொல்லுவதுன்னு தெரியல்ல

தேவ் | Dev said...

//பெற்றோருக்கும் நண்பனுக்கும்
தேக்கிய கண்ணீரையும்
உன் காலடியில்
சேர்த்து விட்டேன்,
என்னை காதலித்துவிடு.

பின்குறிப்பு : இது கவிதையாக இருக்கும்பட்சத்தில் Publish-அவும். //

PUBLISHத்து விட்டேன்ங்கோ

தேவ் | Dev said...

//wow Dev
Really nice
Wish i read it again sitting near the window when its drizzling outside... //

அனிதா எங்க ஊர்ல்ல விடாம பெய்யும் ஒரு மழைக்காலத்தில்ல ஜன்னலோரமா உக்காந்துகிட்டு எழுதுனது தாங்க இந்த மொத்தக் கவிதைகளும்

Divya said...

"ம்ம் குடை எதற்கு
என் தாவணி போதும்
நம் இருவருக்கு"

அருமையான வரி,

தற்போதைய பெண்கள் ' என் துப்பட்டா போதும்னு' சொல்லுவாங்க, உங்க ' Heroine' தாவணி அணியும் குத்து விளக்கு போலிருக்கிறது!!!

தேவ் | Dev said...

//லேசாய் நனைந்து விட்டேன்
உங்களின் இந்த தூரலில்
இனி முக்காடெதற்கு
கொட்டட்டும் காத்திருக்கிறேன்//

கன்யா, சென்னையிலே பெய்யும் மழையைப் பார்த்தா ஜன்னலோரமாய் கையிலே ஒரு கோப்பைத் தேனீரோட உக்காந்தாப் போதும்ங்க.. கவிதைத் தன்னாலே கொட்டும் பாருங்க..

தேவ் | Dev said...

//சீ சீ.. மழை நல்லாவே இல்ல.. நனைஞ்சா சளி பிடிச்சிடும்..(//
ஜலதோஷம் பிடிச்சா என்னப்பா மருந்து தரவா?

//கவிதைகள் நல்லா இருக்கு தேவ்.. மழை தொடரட்டும். //

நன்றி ஓசையாரே.. கட்டாயம் தொடர முயற்சி பண்ணுறேன்..

தேவ் | Dev said...

//
நல்லா சொன்னீங்க.. //

நன்றி ரவி. உங்க காதல் பயணத்திலும் நல்லாவே சொல்லிகிட்டு வர்றீங்க.. தொடரட்டும் பயணம்.

தேவ் | Dev said...

சிவா மையம் கொண்டிருக்கும் புயல் உள்ளூர் புயலா? இல்ல வெளியூர் புயலா.. விளக்கம் தேவை

தேவ் | Dev said...

//தற்போதைய பெண்கள் ' என் துப்பட்டா போதும்னு' சொல்லுவாங்க,//
பாவம் ஜீன்ஸ் அணியும் பெண்களைக் காதலிக்கும் அன்பர்கள்.


//உங்க ' Heroine' தாவணி அணியும் குத்து விளக்கு போலிருக்கிறது!!! //

குத்து விளக்கைக் கொஞ்சம் திருத்திச் சொல்லுங்கள் குல விளக்கு என்று..

ILA(a)இளா said...

//சில புயல்கள்
கரையைக் கடப்பதில்லை
தெரியுமா உனக்கு?//
மனசுக்குள் மழைச்சாரல்.
நல்லா இருக்கு கவிதை.

கொட்டாங்கச்சி said...

"மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்"

நல்லா இருக்கு!

Seenu said...

anaithu kavithaikalum arumai...

செந்தழல் ரவி said...

super !!!!!!!!!!!!

Anonymous said...

மழை அருமை! தொடரட்டும்..வாழ்த்துக்கள்

தேவ் | Dev said...

//மனசுக்குள் மழைச்சாரல்.
நல்லா இருக்கு கவிதை.//

நன்றி இளா

தேவ் | Dev said...

//நல்லா இருக்கு! //

கொட்டாங்கச்சி கவிதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி

தேவ் | Dev said...

//anaithu kavithaikalum arumai... //

வாங்க சீனு..கவிதையை ரசிச்சௌ வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி

தேவ் | Dev said...

//super !!!!!!!!!!!! //

Thanks Ravi :)

தேவ் | Dev said...

வாங்க தூயா உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

மழையின் தொடர்ச்சியையும் படிச்சிட்டு சொல்லுங்க

சேதுக்கரசி said...

//மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்//

அழகாக இருக்கிறது..

தேவ் | Dev said...

வாங்க சேதுக்கரசி உங்க முதல் வருகை நல்வருகையாகுக பாராட்டுக்களுக்கு நன்றிங்க

விடாதுகருப்பு said...

பெய்யெனப் பெய்யும் மழைன்னு முன்பு ஒரு கவிதை படித்தேன். அதேபோல இதுவும் வெகு அருமை.

ப்ரியன் said...

/*மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்*/

அருமை தேவ்!

வாசித்து முடித்தப்பின்னும்
சாரலாய் உம்
கவிதைத் துளிகள்
எம் மனதில்

தேவ் | Dev said...

//பெய்யெனப் பெய்யும் மழைன்னு முன்பு ஒரு கவிதை படித்தேன். அதேபோல இதுவும் வெகு அருமை//

வாங்க கருப்பு.. பெய்யெனப் பெய்யும் மழை என்பது கவிபேரரசுவின் வைர வரிகளைத் தாங்கிய கவிதைகள்... நான் சிறு தூறல் மட்டுமே

தேவ் | Dev said...

//அருமை தேவ்!

வாசித்து முடித்தப்பின்னும்
சாரலாய் உம்
கவிதைத் துளிகள்
எம் மனதில் //

நன்றி ப்ரியன்

Anonymous said...

கவிதானுபவம் பெற்றேன்... (மீண்டும்))

மறுபடியும் சொல்கிறேன்... உங்களுக்குள் இருக்கும் அந்தக் கவிஞன் ஒரு சமுதாயக் கலைஞன் மட்டுமல்ல... ஒரு சமுதாயப் போராளியும் கூட...

வாழ்த்துக்கள்... இன்னும் சுவைக்கக் காத்திருக்கிறேன்...

Anonymous said...

Nanba Dev,
Nice ones da. I can see that u have really enjoyed while writing them.

தேவ் | Dev said...

//கவிதானுபவம் பெற்றேன்... (மீண்டும்))//

நன்றி நண்பரே

//மறுபடியும் சொல்கிறேன்... உங்களுக்குள் இருக்கும் அந்தக் கவிஞன் ஒரு சமுதாயக் கலைஞன் மட்டுமல்ல... ஒரு சமுதாயப் போராளியும் கூட...//

ம்ம் எதை வச்சு இந்த முடிவுக்கு வந்தீங்கன்னு தெரியல்ல... கவிஞன் அப்படின்னு சொன்னதே சந்தோஷ்மா இருக்குங்க...

//வாழ்த்துக்கள்... இன்னும் சுவைக்கக் காத்திருக்கிறேன்...//
தொடர்ந்து வாங்க சுவையுங்க.. கருத்தினைப் பகிருங்க நன்றி

தேவ் | Dev said...

//Nanba Dev,
Nice ones da. I can see that u have really enjoyed while writing them. //

வா நண்பா நான்.. ம்ம் புரியுது இது நீ காதல் கவிதைகளை ரசிக்கும் நேரம்டா.. ம்ம் ஜமாய்
அப்புறம் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

அருட்பெருங்கோ said...

எல்லாமே மழைச்சாரல்... வேறென்ன சொல்ல?