Friday, November 17, 2006

கவி 25:இன்னும் பெய்யும் மழை - 2

காலம்
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது
நீ எனக்குக்
காதலை
அறிமுகம் செய்தாய்....

----------------------------

கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...

---------------------------------


எனக்காக இல்லை...
என்று தெரிந்தும்
எடுத்து பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்...
நீ பாதையோரமாய்
வீசிச் செல்லும்
உன் பார்வைகளை..
-----------------------------------

வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...

---------------------------------
உன் கோபம்
எனக்குப் பிடிக்கிறது
அதன் இலக்கு
நானாக இருப்பதினால்...

----------------------------------

சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்...

-------------------------

ஒதுங்கிச் சென்றாலும்
அடிக்கடிச் சந்தித்து
சித்ரவதைச் செய்கினறன
உன் பார்வைகள்

------------------------------

பார்வைகளால்
பேசியது போதும்
இதழ்களால்
ஓரிரண்டு வார்த்தைகள்
எழுதக் கூடாதா?

-------------------------------

ம்ம்ம்
என் நிழலுக்கு
கிடைத்தப் பாக்கியம்
எனக்கு இல்லை
உன் நிழலைத்
தழுவிய படி
என் நிழல்

-----------------------------
எதையாவது கேள்
எதையாவது சொல்
...
நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி

26 comments:

pxcalis said...

அறிமுக நண்பன் தேவ் அவர்களுக்கு!
"பக்கம் 78" புளொக்கர் தலைப்பு பிரமாதம். பார்த்தவுடனே தோண்டிப் பார்க்கத் தோன்றும் தலைப்பு இது. தங்கள் ஆக்கங்கள் கண்டேன், மகிழ்ந்தேன். முடிந்தால் வலைப்பதிவில் புதிதாய் கால்பதிக்கும் என் ஆக்கத்திற்கும் கையொப்பமிடுங்கள்.
நன்றி.
"வானம்பாடி" -கலீஸ்-

செந்தழல் ரவி said...

////காலம்
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது
நீ எனக்குக்
காதலை
அறிமுகம் செய்தாய்....////

சூப்பர் !!!!!!!

Anonymous said...

"unkobam enakku pidithirukirathu athan ilakku naanaga iruppathal" wow so nice dev. kovatha kooda ivlo sportive aah love mattum than eduthukka mudiyum i think. neenga epdi ;) ======= rasigai

தேவ் | Dev said...

//தங்கள் ஆக்கங்கள் கண்டேன், மகிழ்ந்தேன். முடிந்தால் வலைப்பதிவில் புதிதாய் கால்பதிக்கும் என் ஆக்கத்திற்கும் கையொப்பமிடுங்கள்.//

நன்றி வானம்பாடி கலீஸ்.

உங்கள் பதிவுலகப் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்.

உங்கள் ஆக்கங்களுக்கான சுட்டியைத் தாங்க நிச்சயமாய் வந்து கையொப்பம் இடுகிறேன்.

தேவ் | Dev said...

//சூப்பர் !!!!!!! //

நன்றி ரவி

தேவ் | Dev said...

//wow so nice dev. kovatha kooda ivlo sportive aah love mattum than eduthukka mudiyum i think. neenga epdi ;) ======= rasigai //

ஆஹா என்னடா இன்னும் வர்றல்லயேன்னு பார்த்தேன் வந்துட்டீங்க...

வாங்க வாங்க ரசிகை

சேதுக்கரசி said...

//வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...//

வாவ்!

Anonymous said...

"paarvaigalal pesiyathu pothum..." wow really superb dev. neenga love marriage aah ;) ======= rasigai

தேவ் | Dev said...

வாங்க சேதுக்கரசி தொடர்ந்து வாங்க கருத்துக்களைச் சொல்லுங்க

தேவ் | Dev said...

நன்றி ரசிகை.. கல்யாணத்துக்கு முன்னாடி காதல் இருந்துச்சா இல்லையா அது முக்கியம் இல்ல கல்யாணத்துக்குப் பின்னாடியும் நம்ம ஆளைக் காதலிக்கணும்ங்க... நான் அந்த கட்சிங்க...

ப்ரியன் said...

/*கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...*/

/*வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...*/

/*உன் கோபம்
எனக்குப் பிடிக்கிறது
அதன் இலக்கு
நானாக இருப்பதினால்...*/

/*சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்...*/

/*எதையாவது கேள்
எதையாவது சொல்
...
நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி*/

இவை அருமை தேவ் வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

//கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...//

சிற்சில வரிகளில்
சிறப்பான சொல்லிட்டு
புனைந்திட்ட தங்கள்
காதல் ஹைக்கூ கண்டு
சிலாகித்து நிற்கின்றேன்.

சூப்பர்

நாமக்கல் சிபி said...

அருமையான கவிதை தேவ்!

//எனக்காக இல்லை...
என்று தெரிந்தும்
எடுத்து பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்...
நீ பாதையோரமாய்
வீசிச் செல்லும்
உன் பார்வைகளை..
//

நன்று! பல பேரின் அனுபவம் தெரிகிறது இந்த வரிகளில்!

//சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்//

பார்வைகளுக்கும் மௌனத்திற்குமான போரில் வெற்றி/தோல்வி இரண்டிலுமே சுகம்தான். அல்லவா?

//நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி
//

கவிதையின் வலி கடைசி வரிகளில் நன்றாகப் புரிகிறது தேவ்!

தேவ் | Dev said...

நான் ரசிக்கும் கவிதை வரிகளுக்குச் சொந்தக் காராம் மதிப்பிற்குரிய ப்ரியன் என் வரிகளை ரசித்து வாழ்த்தியிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி ப்ரியன்

tbr.joseph said...

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை தேவ்.. அதனால்தான் எதையும் எடுத்துக்காட்ட முடியவில்லை..

வாழ்த்துக்கள்.

இராம் said...

தேவ்,

அழகான வரிகள், அனைத்தும் அருமை.

தேவ் | Dev said...

//சிற்சில வரிகளில்
சிறப்பான சொல்லிட்டு
புனைந்திட்ட தங்கள்
காதல் ஹைக்கூ கண்டு
சிலாகித்து நிற்கின்றேன்.

சூப்பர் //

வாழ்த்துக்களுக்கு நன்றி கைப்புள்ள!!!

தேவ் | Dev said...

வாங்க சிபி நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் ரசிப்புக்குரிய விமர்சனங்களை பக்கம் 78க்குக் கொடுத்திருக்கீங்க.. நன்றி சிபி

தேவ் | Dev said...

//கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை தேவ்.. அதனால்தான் எதையும் எடுத்துக்காட்ட முடியவில்லை..

வாழ்த்துக்கள். //

நன்றி ஜோசப் சார்..

தேவ் | Dev said...

//தேவ்,

அழகான வரிகள், அனைத்தும் அருமை. //

நன்றி ராம்

Charles said...

தேவ் தங்களின் ஆக்கங்கள் கண்டு மகிழ்ந்தேன், மிக அருமை....

தேவ் | Dev said...

//தேவ் தங்களின் ஆக்கங்கள் கண்டு மகிழ்ந்தேன், மிக அருமை.... //

வாங்க சார்லஸ் உங்க முதல் வருகை நல்வருகை ஆகுக.. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.. தொடர்ந்து வாங்க...

அருட்பெருங்கோ said...

தேவ்,

எதை குறிப்பிட? எதை விட?

எல்லாமே அருமை!!!!!


( தல, இப்படியெல்லாம் உருகி உருகி கவிதை எழுதிட்டு சும்மா கிறுக்கிட்டு இருக்கவங்களப் பாத்து காதல் முரசு னு நக்கல் பண்ணலாமா? :-) )

தேவ் | Dev said...

// தல, இப்படியெல்லாம் உருகி உருகி கவிதை எழுதிட்டு சும்மா கிறுக்கிட்டு இருக்கவங்களப் பாத்து காதல் முரசு னு நக்கல் பண்ணலாமா? :-) )//

அருட்பெருங்கோ.. நாங்க எழுதறதுல்ல காதல் இருக்கும்.. ஆனா நீங்க எழுதுனா காதலே பிறக்கும்..

அதானால் தான் நீங்க காதல் முரசு.. இது உங்கள் வரிகளை ரசித்து வழங்கிய பட்டம்.

நம்ம பக்கம்78ல்ல வந்து அருமைன்னு பாராட்டியிருக்கீங்க, மிக்க நன்றிங்கோ.

Deekshanya said...

நல்லா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

தேவ் | Dev said...

//நல்லா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!//

நன்றி தீக்ஷ்ன்யா.. அப்படியே டைம் கிடைக்கும் போது நம்ம மத்த கதை கவிதைகளையும் ஒரு தடவைப் படிச்சுப் பாருங்க..