Monday, January 22, 2007

கவி 27: இன்னும் பெய்யும் மழை - 3


மழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்

சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...

என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..

சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...

நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..

இன்னும் பெய்யும் மழை - 1 படிக்க

இன்னும் பெய்யும் மழை - 2 படிக்க

22 comments:

இராம் said...

தேவ்,

கவிதை நல்லா இருக்கு :)

தேவ் | Dev said...

//தேவ்,

கவிதை நல்லா இருக்கு :) //நன்றி ராம்

மனதின் ஓசை said...

காதல் சொட்டும் வரிகள்..

Naveen Prakash said...

//ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..

நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
//

:)))))))
மீண்டும் மீண்டும் பெய்யும் மழை இதயம் நனைக்கிறது தேவ் !! பொழியட்டும் இன்னும் மழை !!! :))

தேவ் | Dev said...

//காதல் சொட்டும் வரிகள்.. //

காதல்- மனதின் ஓசை தானே!!!!

தேவ் | Dev said...

//மீண்டும் மீண்டும் பெய்யும் மழை இதயம் நனைக்கிறது தேவ் !! பொழியட்டும் இன்னும் மழை !!! :))//

வாங்க நவீன்பிரகாஷ்.. கவிஞரின் ஆசை என் விருப்பம்.. மழை கொஞ்சம் விட்டு கட்டாயம் பொழியும்..:)

சேதுக்கரசி said...

:-)
(நல்லா இருக்குன்னு அர்த்தம்)

நாமக்கல் சிபி said...

சூப்பர்...

சான்ஸே இல்லை...

Anonymous said...

so romantic....

தேவ் | Dev said...

//:-)
(நல்லா இருக்குன்னு அர்த்தம்)//

வாங்க சேதுக்கரசி.. நல்ல வேளை அர்த்தமும் சேர்த்தேப் போட்டுட்டீங்க...
வெறும் :-) மட்டும் பார்த்து எதோ காமெடி ஆயிருச்சோன்னு யோசிக்க் ஆரம்பிச்சுருப்பேன்.

தேவ் | Dev said...

//சூப்பர்...

சான்ஸே இல்லை... //


தாங்க் யூ வெட்டி!!!! :)

தேவ் | Dev said...

//so romantic....//

வாங்க துர்கா.. Thanks for the comments.. :)

Deekshanya said...

நல்ல கவிதை! மழையில் சொட்ட சொட்ட நனைந்த ஒரு feeling! இன்னும் பெய்யட்டும் மழை!

தேவ் | Dev said...

//நல்ல கவிதை! மழையில் சொட்ட சொட்ட நனைந்த ஒரு feeling! இன்னும் பெய்யட்டும் மழை! //

வாங்க தீக்ஷ்ன்யா, வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க... கண்டிப்பா இன்னும் மழை பெய்யும் என்ன கொஞ்சம் விட்டு விட்டு பெய்யும் :)

Anonymous said...

dev, unga arumaiyaana kavithai mazhaiyil nanaya vechiteenga :) romba nalla irukku ---- rasigai

Anonymous said...

vittu vittu peithaal thaanga mazhai... thodarnthu peithaal athu puyal :D ----- rasigai

தேவ் | Dev said...

//dev, unga arumaiyaana kavithai mazhaiyil nanaya vechiteenga :) romba nalla irukku ---- rasigai //

நன்றி ரசிகை.. ரொம்ப நனைஞ்சீட்டீங்க.. நல்லா தலையைத் துவட்டிக்கோங்க.. ஜலதோஷம் பிடிச்சரப் போகுது..

தேவ் | Dev said...

//vittu vittu peithaal thaanga mazhai... thodarnthu peithaal athu puyal :D ----- rasigai //

விட்டு விட்டு பெய்தா அது தூறல்ன்னு சொல்லுவாங்க.. புயல்ன்னா காத்து வீசும்ன்னு தான் நான் கேள்விப் பட்டிருக்கேன்.. என்னமோ புதுசாச் சொல்லுறீங்க.. கேட்டுக்குறேன்ங்க..:))

சுந்தர் / Sundar said...

படித்து முடித்தவுடன் - இன்ப மழை பெய்ந்து ஒய்ந்தது போல உண்ர்ந்தேன் !

வாழ்த்துக்கள்.

ILA(a)இளா said...

//உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?//

இந்தக் கவிதையில எனக்கு புடிச்ச வரிங்க இது. நல்ல தொடர், இன்னும் எவ்வளவு மழை பெய்யும்?

தேவ் | Dev said...

//படித்து முடித்தவுடன் - இன்ப மழை பெய்ந்து ஒய்ந்தது போல உண்ர்ந்தேன் !

வாழ்த்துக்கள்.//


நன்றி சுந்தர்...இந்த மழை இப்போதைக்கு ஓயாது.. இன்னும் பெய்யும்...:)

தேவ் | Dev said...

////உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?//

இந்தக் கவிதையில எனக்கு புடிச்ச வரிங்க இது. நல்ல தொடர், இன்னும் எவ்வளவு மழை பெய்யும்?//

நன்றி இளா.. மனத்தில் இதமானக் காதல் காற்று வீசும் வரை இந்த மழைப் பெய்துக் கொண்டே தான் இருக்கும் :)