Sunday, January 28, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 1

மூணு வருஷமா விச்சு காரைக்குடிக்கு வரச் சொல்லி கூப்பிடும் போதெல்லாம் என்னால எதாவது காரணத்துன்னாலே போக முடியாமலேப் காலம் ஓடிகிட்டு இருந்துச்சு.. போன முறை அவங்க பெரிய அண்ணாக் கல்யாணத்துக்குக் கூட எங்க செட் பசங்க எல்லாரும் போயிட்டு வந்தாங்க....

விச்சுக்கு என் மேலக் கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் அதை எல்லாம் காட்டிக்க மாட்டான். எப்போவும் போல என்னைப் பார்த்தாக் கலகலப்பாத் தான் பேசிகிட்டு இருக்கான். எனக்கும் வருத்தம் தான்.. எப்படியாவது ஒரு தரமாவது விச்சு வீட்டுக்குப் போயிட்டு வந்துடுணும்ன்னு திட்டம் போட்டுகிட்டேத் தான் இருந்தேன்...அந்த நேரம் பார்த்து தான் என்னோட நெருங்குன சினேகிதன் நாகப்பனுக்கு வலையப்பட்டியிலே கல்யாணம்ன்னு கார்ட் வந்து சேர்ந்துச்சு..

வலையப்பட்டியிலே இருந்து காரைக்குடி ரொம்பப் பக்கமாச்சே... விச்சு வீட்டுக்கு போயிட்டு வந்துர வேண்டியது தான்.. முடிவும் பண்ணிகிட்டேன். விச்சு இப்போ பெங்களூர்ல்ல ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியிலே வேலையா இருக்கான். கை நிறைய சம்பளம். அவனுக்கு ஒரு போனைப் போட்டு அந்த வாரக் கடைசியிலே நான் காரைக்குடி வர்ற தகவலைச் சொன்னேன்.. விச்சுவுக்கு ஒரே சந்தோஷம்.. அவனும் கிளம்பி ஊருக்கு வர்றதாச் சொன்னான்.. ஊர்ல்ல பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனை கீழே வச்சேன்..

அடிச்சிப் பிடிச்சி வினாயகர் சதுர்த்திக்கு ரெண்டு நாள் முந்தி கோயம்பேட்டுல்ல இருந்து திருச்சிக்கு போற ஒரு டப்பா வண்டியிலே இடம் பிடிச்சு உக்காந்துகிட்டேன்...
பொதுவாப் பண்டிகை நேரத்துல்ல பாவப்பட்ட பயணிகள்ட்ட கிட்ட அகப்பட்ட வரையிலே சுருட்டணும்ங்கற முடிவுல்ல டிராவல்ஸ்காரங்க அடிக்கிற கொள்ளைக்கு நானும் தப்பல்ல.. திருச்சிக்கு 500 ரூபா டிக்கெட் செலவு... விச்சுவுக்குத் தெரிஞ்சா பொறிஞ்சுத் தள்ளிருவான்.. எதுவும் சட்டப் படி தான் செய்யணும்ன்னு தீவிரமா இருக்கிறவன் விச்சு...

விச்சுவை எனக்கு ஒரு நாலு வருஷமாத் தெரியும்.. நாங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு வருஷம் ஒரே இடத்துல்ல வேலைச் செஞ்சுகிட்டு இருந்தோம் அப்ப ஆரம்பமான நட்பு.. விச்சுக்கு அது முதல் வேலை... நெத்தியிலே பட்டை.. கழுத்துல்ல உத்திராச்ச கொட்டை.. எளிமையானக் காட்டன் சட்டை.. எப்பவும் முகத்துல்ல ஒரு அமைதி.. உதட்டோரம் தவழும் ஒரு சிரிப்புன்னு விசுவைப் பார்த்த உடனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...

எதாவது ஒரு புத்தகம் படிச்சிகிட்டே இருப்பான் விச்சு... ஆன்மீகத்துல்ல ஆழம் எவ்வளவு உயரம் எவ்வளவுன்னு அளக்குற முயற்சியிலே சதா சர்வ காலமும் இருந்தான் விச்சு.. கிட்டத் தட்ட ஆரம்பக் காலத்துல்ல அவனுக்கு எங்க வட்டத்துல்ல சாமியார், ஞானப் பழம்ன்னு பாசமும் பரிகாசமும் சரி சம விகிததுல்ல கலந்தப் பலப் பட்டப் பெயர்கள் இருந்தன... அதுல்ல ஞானப் பழம் என்னுடைய உபயம்..

ஒரு சனிக்கிழமை விச்சு ரூமுக்குப் போனேன்.. ஏழு மணி இருக்கும்.. அதான் விச்சு ரூமுக்கு நான் முதல் முறையாப் போனது... ரூம்ல்ல பெரிய சைஸ்ல்ல திரிஷா படங்க.. 'சாமி' மாமியின் கிளுகிளூ படங்கள் அறையெங்கும் அலங்காரமா இருந்துச்சு...

"ஏன்டா விச்சா.. ரூம்ல்ல நீ தனியாத் தானேடா இருக்க..இதெல்லாம் யார் வேலை உனக்கு முன்னாடி ரூம்ல்ல இருந்தவன் விட்டுடுப் போன மாமி படமாடா..." நான் கேட்டு வைக்க..

"அய்யோ தேவ்.. இதெல்லாம் நானேப் பார்த்து பார்த்து சேர்த்து வாங்குனப் படமாக்கும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் தலைவியை நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்.. இல்ல 2020ல்ல தமிழ் நாடு சி.எம் ஆக்கிட்டுத் தான் ஓய்வேன் இது சத்தியம்ன்னு கிட்ட வந்து என் தலையிலே கை வச்சான்.."

விச்சுவிடமிருந்து ஒரு கெட்ட வாடை வந்தது. என் பாரவையை அவன் அறையைச் சுத்தி ஓட விட்டேன்.. காலி பாட்டில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய உருண்டுக் கிடந்தன...

தேவ் யார் ஞானப் பழம்... அப்போதும் சிரித்துக் கொண்டிருந்த விச்சு என்னைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது...

காரைக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நான் சேரும் போது மணி கிட்டத்தட்ட நாலு ஆகிப் போச்சு..

மதிய வெயில் கொஞ்சமும் குறையாமச் சுள்ளௌன்னு மொகத்துல்ல அடிச்சிகிட்டு இருந்துச்சு. சர்பத் கடை ஒண்ணு கண்ணுல்ல பட்டுச்சு.. சில்லுன்னு வாங்கிக் குடிக்கவும் விச்சு வந்து என் தோள்ல்ல கை வைக்கவும் சரியா இருந்துச்சு. கூலிங் கிளாஸ்.. பேடட் ஜீன்ஸ் பேண்ட்...கமான் கெட் மீ அயாம் சிங்கிள் ( COME ON GET ME I AM SINGLE)..
அப்படின்னு எழுதுன டீ ஷர்ட்.. ஆளே மாறி போயிருந்தான் விச்சு...

"தேவ்.. நீங்க கொஞ்சம் உடம்புப் போட்டுருக்கீங்கப் போலிருக்கு.. வீட்டுல்ல எல்லரும் சுகமான்னுக் கேட்டுகிட்டே .ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்த வச்சுக்கிட்டான்.

என்னோடச் சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுதோ என்னவோ... என்னையும் டீ ஷ்ர்ட்டையும் மாறி மாறி பார்த்தான்..

"அய்யய்யோ தேவ்.. அப்படி எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துறாதீங்க... இது என் பர்த் டேக்கு எங்க டீம் பசங்க வாங்கிக் கொடுத்த கிப்ட்.. எங்க டீம்ல்ல நான் மட்டும் தான் பேச்சுலர். அதான் ஓட்டுணும்ன்னு இப்படி வாங்கிக்கொடுத்துட்டாங்க.."

இன்னொரு சர்பத் சொல்லியிருந்தேன் அதுவும் வந்தது.

"ம்ம் கோயிலுக்கு எல்லாம் போற இல்ல?"

"மனமே கோயில் அதுல்ல இருக்க சிந்தனையே இறைவன்... நீங்க படிச்சது இல்லையா... படிக்கணும் தேவ்.." என்ற படி சிரித்தான் விச்சு.

சர்பத்தும் சிகரெட்டும் ஒரே நேரத்தில் முடிந்தன.. விச்சு எனக்கும் சேர்த்து காசுக் கொடுத்தான். சான்ட்ரோ கார் ஒன்று பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்றது. அதில் விச்சுவைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

கார் காரைக்குடி வீதிகளில் சீறி ஓடியது...

"ம்ம் காரைக்குடி நல்லாத் தான் இருக்கு.. பெரிய பெரிய வீடு... ஹே வேட்டையாடு விளையாடு.. புது படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகுமா?"

"தேவ்.. என்ன நினைச்சிங்க எங்க காரைக்குடி பத்தி... நேருவே நேர்ல்ல வந்துட்டுப் போயிருக்கார் தெரியும் இல்ல.. அழகப்பா செட்டியார் நேரு வரும் போது அவர வர்வேற்க தனியா சிமெண்ட ரோடே போட்டார்ன்னாப் பாருங்க.. எங்க ஊர் பெருமைய..." விச்சு உற்சாகமாச் சொல்லிகிட்டு வந்தான்.

விச்சுவின் வீடு அழகாயிருந்துச்சு. வீட்டு வாசலில் இருந்த பெரிய நாயைப் பார்த்தாக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. விச்சு ராம்போ என்ற அந்த நாயைப் பற்றி ஏற்கனவே என்னிடம் பலக் கதைகள் சொல்லியிருந்தான். ராம்போவிடம் என்னைப் பற்றி சொல்லியிருப்பானோ என்னவோ.. அது என்னைப் பார்த்து வாலாட்டியது.

விச்சுவின் பெற்றோர் அறிமுகம்.. வீட்டைச் சுற்றி பார்க்கும் படலம் என அரை மணி நேரம் செலவானது.. மாடியில் இருக்கும் விச்சுவின் அறைக்க்குப் போய் கால் நீட்டி உட்கார்ந்தோம்.

"அப்புறம் விச்சு.."

"என்ன தேவ் சொல்லணும்.. பெங்களூர் வாழ்க்கையும் அங்கேப் பொங்கி வழியுற டிராப்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிப் போயிருச்சு.. ஆபிஸ் அம்சமா இருக்கு..மாமா வீட்டுச் சாப்பாடு.. ஐ பாட்ல்ல நம்ம இளையராஜா பாட்டு..சுஜாதாவோட திருவரங்கத்து தேவதைகளை நாலாவது வாட்டியாப் படிக்கிறேன்.. வாழ்க்கைப் போயிட்டு இருக்கு.." விச்சு சிரித்தான்.

"அண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு.. நீ மட்டும் தான் பாக்கி... எப்போ உனக்கு?" நான் மெதுவாக் கொக்கிப் போட்டேன்.

"என்ன அவசரம் தேவ்... மெதுவாப் பண்ணுவோம்..இப்போ இந்தாங்க ஈ.எஸ்.பி.என் பாருங்க.. ஓங்க மெட்ராஸ்ல்ல எல்லாம் இந்த சேனல் வராது..பெஸ்ட் ஆப் லாரா போடுறான் பாருங்க.." என டிவியில் மூழ்கினான் விச்சு..

"ஒரு வேளை நம்ம ஆபிஸ் வனிதா ஓ.கே சொல்லியிருந்தா.. இன்னேரம் ஒரு புள்ளக்கு நீயும் அப்பன் ஆகி இருப்பியோ" நான் அடுத்த கொக்கியைப் போட்டேன்..

"அஹா அந்த மேட்டரை இன்னும் நீங்க மறக்கல்லியா..விடுங்க தேவ் அந்தப் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு.. அதுவுல்லாமல் அப்படி எல்லாம் எனக்கு வனிதா மேல எந்த ஆசையும் கிடையாது.. சும்மா நீங்களும் பசஙக்ளும் சேர்ந்து என்ன ஓட்டுறதுக்கு அவ பெயர் ஒண்ணு மாட்டிகிச்சு.." அவன் மறுபடியும் டிவியில் லாரா விளாசுவதை கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தான்.

தட்டில் இருந்த குழி பனியாரங்களின் சுவையில் நாக்கு சற்று களைத்துப் போயிருந்தது. நல்ல ருசி.. செட்டி நாட்டு பக்கம் பலகாரத்துக்கு குறைவு இருக்காதுன்னு தெரிஞ்சவ்ங்கச் சொன்னது சரியாத் தான் இருக்கு.விச்சுவின் ஸ்கூல் போட்டோக்களைப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட அவன் பள்ளி நண்பர்கள் எல்லாரையும் பற்றி அவன் என்னிடம் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறான் என்பதால் ஆர்வத்தோடு படங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. எல்லாப் படங்களிலும் விச்சு பக்தி பழமாய் புன்னகைப் பூத்துக் கொண்டிருந்தான்...

"யார்டா இந்தப் பொண்ணு.. உனக்கு ஸ்கூல் காலத்துல்ல பொண்ணுங்க சினேகிதம் எல்லாம் உண்டா..? அதுவும் இவ்வளவு கிட்டக்க நின்னு எடுத்துக்குற அளவுக்கு நெருங்குன சினேகிதமா?" இது கொக்கியா எனக்கேத் தெரியாத போதும் கேட்டேன்.

"இந்த்ப் போட்டோ இங்கேயா இருக்கு.... நந்தினியோடப் போட்டோவாச்சே...தேவ் அது ஒரு பெரியக் கதை..." விச்சுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு பளிச்சிட்டது. என்னால் அது என்ன வென்று அறிந்துக் கொள்ள முடியவில்லை..

வெயிட்டீஸ் படிக்கிற உங்களூக்கும் சந்தேகம் வந்து இருக்குமே.. இது விச்சுவின் கதைன்னு சொல்லிட்டு இப்போ நந்தினி ஒரு பெரியக் கதைன்னு டிராக் மாறுதேன்னு.. இன்னும் கொஞ்சம் வெயிட்டீஸ்ங்க...

நந்தினியின் கதையும் சொல்லுறேன்...சீக்கிரமாவேச் சொல்லுறேன்.. கதை விரைவில் பக்கம் 78ல் வெளிவரும்...

இது விச்சுவின் கதை - பகுதி 2

24 comments:

Thurgah said...

this is a real life story?or just a imagination?

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருந்த பையனைக் கெடுத்துட்டீரே!!!

தேவ், நல்ல அழகா எழுதறீங்க. ஒவ்வொரு கதையிலும் முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

அட(அப்) பாவி விச்சு,
இப்படி 'டபுள் ரோல்' பண்ணிக்கிட்டு இருக்கீரே....... நாயமா?

தேவ் | Dev said...

//this is a real life story?or just a imagination? //

வாங்க துர்கா.. கதை முடியும் வரைக் காத்திருங்கள் ப்ளீஸ்:)

தேவ் | Dev said...

//நல்லா இருந்த பையனைக் கெடுத்துட்டீரே!!!//

ஆகா.. அபாண்டம் அய்யா அபாண்டம்

//தேவ், நல்ல அழகா எழுதறீங்க. ஒவ்வொரு கதையிலும் முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள். //

கொத்ஸ..U MADE MY DAY!!!

தேவ் | Dev said...

//அட(அப்) பாவி விச்சு,
இப்படி 'டபுள் ரோல்' பண்ணிக்கிட்டு இருக்கீரே....... நாயமா? //

வாங்க துளசி டீச்சர்...

இன்னும் விச்சு கதைப் பாக்கி இருக்கு ..அதுக்குள்ள விச்சுவைப் பத்தி ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க.:)

Naveen Prakash said...

அருமையான நடை !!
தேவ் கதை எதிர்பார்ர்புகளை தூண்டுகிறது. சீக்கிரம் எழுதுங்கள் காத்திருக்கிறேன் !! :))

Anonymous said...

vichu yaaru namma anniyan ambi yaa :O

Anonymous said...

yen per poda maranthu poche :O ========= rasigai :D

வெட்டிப்பயல் said...

கதை எப்படி போகும்னே யூகிக்க முடியலை :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

kilambiddaanyaa kilambiddaan..

naan appave sonnen.. i cant wait to read your stories..
but u stopped in suspense..

:-(

eppo intha suspens udaipeengga?

தேவ் | Dev said...

//அருமையான நடை !!
தேவ் கதை எதிர்பார்ர்புகளை தூண்டுகிறது. சீக்கிரம் எழுதுங்கள் காத்திருக்கிறேன் !! :)) //

வாங்க நவீன்.. சீக்கிரமா எழுதப் பாக்குறேன்.. நம்ம விச்சு கதையை சீக்கிரமாச் சொல்லணும்ங்கறது தான் என் ஆசையும்..

தேவ் | Dev said...

//vichu yaaru namma anniyan ambi yaa :O //

உங்களுக்கு ஏன் இப்படி ஒரு டவுட்??!!!

தேவ் | Dev said...

//yen per poda maranthu poche :O ========= rasigai :D //

ஆஹா :)

தேவ் | Dev said...

//கதை எப்படி போகும்னே யூகிக்க முடியலை :-) //

வெட்டி உன்னாலேயே யூகிக்க முடியல்லயா? !!!! :)

தேவ் | Dev said...

//kilambiddaanyaa kilambiddaan..

naan appave sonnen.. i cant wait to read your stories..
but u stopped in suspense..

:-(

eppo intha suspens udaipeengga? //

என்னங்க பண்றது மை பிரெண்ட்.. நானும் சீக்கிரம் எழுதி முடிக்கணும்ன்னு தான் பாக்குறேன்,, ஆனா நேரம் கிடைக்கணுமே... சோ கொஞ்சம் வெயிட் ப்ளீஸ் :)

மனதின் ஓசை said...

தேவ்.. சீக்கிரம் எழுதி முடிப்பா.. நல்லா வந்து இருக்கு..

நித்யா பழனியப்பன் said...

சிறந்த நடை..அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

அருட்பெருங்கோ said...

இது விச்சுவின் கதையா நந்தினியின் கதையா?


அடுத்தப் பகுதி பதிந்ததும் மெயிலனுப்பவும் ;-)

தேவ் | Dev said...

//தேவ்.. சீக்கிரம் எழுதி முடிப்பா.. நல்லா வந்து இருக்கு.. //

மனதின் ஓசையைத் தட்ட முடியுமா.. அதும் நல்லா வந்து இருக்குன்னு பாராட்ட வேற செய்யுற.. கதையின் இரண்டாம் பகுதி வெளியிட்டாச்சு படிச்சுட்டுச் சொல்லு

தேவ் | Dev said...

//சிறந்த நடை..அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..//

முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.. அடுத்தப் பகுதியும் போட்டாச்சுங்க..

தேவ் | Dev said...

//இது விச்சுவின் கதையா நந்தினியின் கதையா?//
அடுத்தப் பகுதியும் படிச்சுட்டு நீங்கத் தான் சொல்லணும் அருட்பெருங்கோ :)


//அடுத்தப் பகுதி பதிந்ததும் மெயிலனுப்பவும் ;-) //

அடுத்தப் பகுதி பதிஞ்சாச்சு மெயிலும் தட்டியாச்சு :)

Srikanth said...

Hi Dev, your style of narration is very nice...simple and yet captivating. Makes the reader feel part of the narration. Keep going!!

தேவ் | Dev said...

//Hi Dev, your style of narration is very nice...simple and yet captivating. Makes the reader feel part of the narration. Keep going!! //

Thanks Srikanth for your kind words of encouragement. Pls do go thru my other posts too as and when u have free time.. keep coming again thanks.