Wednesday, October 31, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 5

இது வரை குட்டிச் சுவரில் நடந்தக் கதை

"சீனியர் இதெல்லாம் நல்லால்லங்க... கலகலப்பா இருந்தவங்க நீங்க.. இப்படி ஒரு சின்னப் பிரச்சனைக்காக பேசாம இருக்கது நல்லாயில்ல... நான் வேணும்ன்னா சோழன் சீனியர் கிட்டப் பேசட்டுமா" முஸ்தபா அன்றைய குட்டிச் சுவர் சபையிம் மவுனத்தை முதலில் கலைத்தான்.

எனக்கும் குமாருக்கும் என்னப் பதில் சொல்வதென்று புரியவில்லை. ஒன்றும் பேசமுடியாமல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"சொல்லுங்க சீனியர்.. என்ன இருந்தாலும் ஒண்ணுக்குள்ளா ஒண்ணாப் பழகிட்டீங்க...சின்னப் பிரச்சனை..பேசித் தீக்க முடியாதப் பிரச்சனைன்னு எதுவும் இல்லையே.." ஜமானும் கூடச் சேர்ந்துக் கொண்டான்.

குமார் அங்கிருந்து எழுந்து நடந்தான். நான் நடக்கக் கூடத் தோன்றாமல் குமார் போகும் திசையைப் பார்த்தப் படி இருந்தேன்.

"சோழன் சீனியர் கோவத்துல்ல எதோப் பேசிட்டார்.. நட்புக்குள்ளே இதெல்லாம் சகஜம் தானே... கை நீட்டியிருக்கக் கூடாது தான்... ஆனாலும் உங்க பிரண்ட் தானே...மறந்துரலாமே சீனியர்... இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த வாழ்க்கை..." முஸ்தபா தன் கருத்தை அழுத்தினான்..

அதற்கும் நான் பதில் பேசாமல் இருந்தேன்.. உண்மையில் என்னப் பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை.

குமார் அலை வாசலில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தேன். என் மவுனம் முஸ்தபாவுக்கு சங்கடம் கொடுத்ததோ என்னவோ தெரியவில்லை..

"சீனியர் அதிகமாப் பேசியிருந்தா மன்னிச்சுருங்க.. மனசுக் கேக்கல்ல அதான் பட்டதைச் சொல்லிட்டேன்..." என்று அவனும் மவுனம் ஆனான்.

அங்கு மிகவும் கனத்த மவுனம் நிலவியது... எங்களைக் கடந்து மும்பை எக்ஸ்பிரஸ்..குட்ஸ் வண்டி... ஏன் ஜெட் ஏர்வேஸ் கூடப் போனது... அன்று யார் கவனமும் அதில் இல்லை.... சரி முழுமையாக அதில் இல்லை...நான் தான் மவுனத்தைக் கலைத்தேன்.

"கவுரி கார் எப்போ வருது.?"

"இன்னிக்குக் கிளம்புறான் சீனியர்... காலையிலே போன் பண்ணி பேசினேன்... சாயங்காலம் சென்னை வந்துருவான்" திருநா பதில் சொன்னான்.

"எங்கேயாவது டூர் போலாம்ப்பா... இந்தப் புராஜக்ட் டென்சன்.. அது இதுன்னு ரொம்ப ஓவராப் போயிருச்சு...என்னச் சொல்லுறீங்க?" நான் கேட்டேன்.

"நல்ல ஐடியா சீனியர்... ஊட்டி போயிருவோம்.. குன்னூர்ல்ல நம்ம மாமாவுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு" திருநா சொன்னான்.

"என்னப்பா ஊட்டி ஓ.கேவா?"

"ஓ.கே. சீனியர்" ஜமான் முதல் ஆதரவு ஓட்டுப் போட்டான்,

"எத்தனைப் பேர்?" திருநா கணக்கு எடுக்க ஆரம்பித்தான்.

"நான்...குமார்...மணி..சபரி...உங்கப் பசங்க நாலு பேர்...அப்படி இப்படிப் பார்த்தா பத்து பேர்ப்பா" நான் கணக்குச் சொன்னேன்.

"ரைட்.. வெள்ளிக் கிழமைக் கிளம்பிருவோம்... போயிட்டு சனி, ஞாயிறு., திங்கள் இருந்துட்டு செவ்வாய் ரிட்டன் கிளம்பிருவோம்" திருநாவும் நானும் கிட்டத்தட்டப் பேசி முடித்தோம்.

"இருங்க சீனியர் நான் கவுரிகிட்டப் பேசி ஓ.கே பண்ணிடுறேன்... செல் போனை எடுத்துக் கொண்டு ஓரமாய் போனான் திருநா.

குமார் அதற்குள் அலை ஓரமிருந்து திரும்பி வந்தான். மணியும் சபரியும் அப்போது தான் வந்துச் சேர்ந்தார்கள். அவர்களிடமும் ஊட்டி ட்ரிப் பிளான் பற்றி சொன்னோம்..எல்லாரும் ஒரு மாதிரி ஓ.கே சொல்லி விட்டார்கள். அடுத்தக் கட்டமாய் செலவுக்கான ஏற்பாடுகள் என பயணத் திட்டம் என முழுவீச்சில் உருவாக்கம் பெற ஆரம்பித்தது. கவுரியின் புது சென், மற்றும் திருநாவின் ஆம்னி என இரண்டு வண்டிகளில் கிளம்புவதாய் முடிவானது.. யார் யார் எந்த வண்டிகளில் போவது என்பது வரை பக்காவாய் பேசி வைத்துக் கொண்டோம். இதற்குள் போன் பேசி முடித்த திருநா குதூகாலமாய் திரும்பி வந்தான்.

"கவுரியும் அவங்க அப்பாவும் கிளம்பிட்டாங்களாம்... இன்னும் இரண்டு மூணு நேரத்துல்ல சென்னை வந்துருவாங்களாம்.. அவங்க கோயில் பிளானை அடுத்த வாரத்துக்கு மாத்தியாச்சாம்... அதுன்னால இந்த வாரம் அவங்க வண்டி நமக்குக் கிடைச்சுடும் நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டான்.. சோ ஊட்டி கன்பர்ம்ட்" திருநா சொல்லவும் எல்லோருடைய உற்சாகமும் இன்னும் ஒரு படி அதிகமானது.

முஸ்தபா மட்டும் அவ்வளவு ஆர்வமாய் இல்லை என்பது எனக்குப் புரிந்தது..

"முஸ்தபா..என்ன ஆச்சு?" நான் கேட்டேன்.

"ஒண்ணுமில்ல சீனியர்.."

"புகாரி விசயமா...?"

"இல்ல சீனியர்"

"சரி... எனக்கும் சோழனும் எந்தப் பிரச்சனையுமில்ல... எனக்கு இப்பவும் அவன் நண்பன் தான்.. ஊட்டி ட்ரிப்க்கு சோழனைக் கூப்பிடலாம்.. என்ன குமார் சொல்லுற?" நான் குமாரைப் பார்த்தேன். லேசாகத் தயங்கிய குமார்.. சோழன் வருவதில் தனக்கு எதிர்ப்பு இல்லை என மெல்ல தலையை மட்டும் அசைத்துச் சொன்னான். முஸ்தபாவின் முகத்தில் அப்போது தான் சந்தோசம் பொங்கியது.

"தேங்க்ஸ் சீனியர்" என்றான் முஸ்தபா.

அதற்கு பிறகு குட்டிச் சுவரில் வழக்கமான ரகளை ஆரம்பம் ஆகியது... சிகரெட்கள் புகைந்தன.. புது புது பட்டங்கள் வழங்கப் பட்டு நடைப் போடும் அழகுகள் ஆராதிக்கப்பட்டன.. ஒரு இடைவேளைக்குப் பின் குட்டிச் சுவரின் கலகலப்புத் திரும்பியது..

"இன்னிக்கு நைட் ஜமான் தான் நமக்கு ட்ரீட்...எல்லாரும் ரெடியா இருங்க" என்றான் திருநா.

"எதுக்கு?"

"இந்த சட்டைக்காக தான் சீனியர்...பைய இந்த ஒரே சட்டையை லீவ் விட்டதுல்ல இருந்து தோய்க்காம கொள்ளாம இன்னிக்கு வரைக்கும் எட்டாவது நாளாப் போட்டிருக்கான்..."

"அப்படி என்னச் சட்டை இது?"

"ஷாலினி வாங்கிக் கொடுத்தச் சட்டை சீனியர்"

"அதுக்குன்னு அதை இப்படியாக் கொடுமைப் படுத்தறது.. நீ தான் குளிக்க மாட்டேங்குர.... அதையாவது குளிக்க வை...நாத்தம் தாங்கல்லடா சாமி" திருநா மூக்கைப் பொத்திச் சிரித்தான்.

"இல்லை சீனியர் டெய்லி பர்ப்யூம் போடுறேன் சீனியர்... நாத்தம் எல்லாம் இல்ல... நீங்க வேணும்ன்னா..." ஜமானின் அந்த முயற்சி எங்கள் அனைவரையும் கலவரப்படுத்த தெறித்து ஓடினோம். "ஜமான் அங்கேயே நில்லு...இல்ல கொலை முயற்சியிலே கேசு கொடுத்துருப்வோம்டா" முஸ்தபாவின் மிரட்டலையும் மீறி ஜமான் முன்னேற முயற்சிக்க ஓட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினோம்...

அப்போது சர்ரென்று வந்த பைக்கின் குறுக்கே போய் விழுந்தான் குமார்...பைக்கில் இருந்தது சோழன். கீழே விழுந்த குமார் ரோட்டின் ஓரத்துக்கு உருண்டான். பைக் அப்படியே போட்டு விட்டு குதித்தச் சோழன் குமாரை நோக்கி ஓடினான்.

குமாரைச் சோழன் தூக்கி விடவும் நாங்கள் அங்கேப் போய் நிற்கவும் சரியாக இருந்தது.. சோழனும் குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.

"பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா....." ஜமான் அந்த இடத்தில் ராகம் போட... சட்டெனத் திரும்பி எல்லாரும் அவனைத் துரத்த ஆரம்பித்தார்கள்...

வேகமாக ஓடும் போது என் தோளோடு தோள் உரசிய சோழன் கிசுகிசுப்பாய் என் காதில் சொன்னான்...

"மாப்பூ கை நீட்டிட்டேன் மன்னிச்சுரு..."

"ஆங் எனக்குக் கேக்கல்ல.." ஓடிக்கொண்டே நானும் சொன்னேன்.

சட்டென என்னை இழுத்துப் பிடிச்சு நிறுத்திய சோழன் மீண்டும் அதே மாதிரி சட்டையைப் பிடித்துச் சத்தமாச் சொன்னான்..

"அன்னிக்கு இப்படி உன் சட்டையைப் பிடிச்சுட்டேன்...எதோ கோவத்துல்லப் பிடிச்சுட்டேன்..தப்புன்னு இப்போ ஒத்துக்குறேன்...மன்னிப்புக் கேட்டா ஓவரா சீன் போடுற... ஒழுங்காச் சொல்லு மன்னிப்பீயா மாட்டீயா... " அவன் கையில் என் சட்டை இருந்தது..அந்தச் சட்டைக்குள் நான் இருந்தேன்.

"சரி சரி... மன்னிப்புத் தானே வச்சிக்கோ..எடுத்துக்கோ...இப்போ என் சட்டையை விடு... நாங்க எல்லாம் சட்டையைத் தினம் தோய்ச்சுப் போடுற டைப்...." நான் சவுண்ட் விட மீண்டும் இருவரும் ஓட ஆரம்பித்தோம்.

அன்றும் மழை வந்தது....

"மன்னிப்பு எல்லாம் இருக்கட்டும்... நீ சொன்னது உண்மையா?" நான் கேட்டேன்.

"எது உண்மையான்னு கேக்குற?"

"நித்யாவை நீ லவ் பண்ணுறதாச் சொன்னது..."

"ஆமா உண்மை.. நீ தான்டா எனக்கு வில்லன்"

"நானா.. நான் என்னடா பண்ணேன்?" ஓட்டத்தை நிறுத்தாமலேக் கேட்டேன்.

"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."

"என்னது?" அப்படியே முன்னால் ஓடிக்கிட்டு இருந்தவன் பின்னாலே ஓட ஆரம்பிச்சேன்...

"டேய் உண்மையாத் தான் சொல்லுறேன்.. உன்னைத் தான் நித்யா விரும்புறா...உன்னைத் தான் கல்யாணம் பண்ணப் போறாளாம்.. கைப்பட எழுதிக்கொடுத்திருக்காப் பாக்குறீயா?" சோழன் முன்னால் ஓடிக் கொண்டேக் கேட்டான். நான் பின்னாலே நின்றேன்.

அதற்கு முன்னால் ஓடியவர்கள் அதற்குள் ஜமானைப் பிடித்து விட்டிருந்தார்கள்.

"டேய் மாப்பி உனக்கும் எனக்கும் தான் போட்டி...பாத்துரலாமா ஒரு கை.." சோழன் சிரித்துக் கொண்டேக் கேட்டான்..

"போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது

தொடரும்..

20 comments:

அனுசுயா said...

//போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது//
சூப்பர் டயலாக் எனக்கு பிடிச்சதும் கூட

சரி சரி கதை இப்டி போகுதா தேவ் எழுதற கவிதைகளுக்கு காரணம் இதுதானா? சொல்லவேயில்ல :)

CVR said...

சூப்பரு ட்விஸ்ட்!!
அதான் சட்டையை பிடிச்சானா சோழன்????
காதல் கண்ணை மறைக்குது!
என்ன சொல்ல!! :-)

கோபிநாத் said...

\\"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."\\

ஆஹா..அண்ணே போட்டிங்க பாருங்க ஒரு போடு யப்பா..:))

கோபிநாத் said...

\அனுசுயா said...
//போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது//
சூப்பர் டயலாக் எனக்கு பிடிச்சதும் கூட

சரி சரி கதை இப்டி போகுதா தேவ் எழுதற கவிதைகளுக்கு காரணம் இதுதானா? சொல்லவேயில்ல :)\\

ஆஹா அண்ணே அப்போ குட்டிச் சுவரிலும் கவிதை எல்லாம் வருமா !!? ;)

வெட்டிப்பயல் said...

கதை அருமையா போகுது... அப்படியே கண்டினியூ பண்ணுங்க. ஆனா வாரத்துக்கு ஒண்ணுனு போடறது சரியில்லை :-(

Divya said...

சூப்பர் ட்விஸ்டுங்கண்ணா!! குட்டிச் சுவரின் கதை இப்போ தான் சூடு பிடிக்குது!!!

\\"டேய் உண்மையாத் தான் சொல்லுறேன்.. உன்னைத் தான் நித்யா விரும்புறா...உன்னைத் தான் கல்யாணம் பண்ணப் போறாளாம்.. கைப்பட எழுதிக்கொடுத்திருக்காப் பாக்குறீயா?" சோழன் முன்னால் ஓடிக் கொண்டேக் கேட்டான். நான் பின்னாலே நின்றேன்.\\

இதை எழுதிவேற கொடுப்பாங்களா???

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் நண்பரே... பதிவுகள் மிக மிக அருமை... நினைவுகள் மனதின் கல்வெட்டிற்கு அழைத்துச் செல்கின்றன.. அன்மையில் நண்பர் ஒருவர் உங்கள் பதிவினை அறிமுகம் செந்தார். எல்லா கதைகளையும் படித்தேன்... ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்...

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா
டைரிக்குறிப்புகள் நல்லா இருக்கு, ஆனா இம்புட்டு இடைவெளி விட்டா திரும்ப முதலில் இருந்து படிக்க வேண்டியதா இருக்கு. கொஞ்சம் வெரசா போடுப்பா.

G.Ragavan said...

:(((((((((((((((((((((((((((((((((((((((

ஹி ஹி...வில்லன்.....சூப்பர்

ஊட்டி திட்டம்லாம் பயங்கர திட்டமாயிருக்குது. ஒன்னும் நடக்கப் போறதில்லை போல..

Unknown said...

//சரி சரி கதை இப்டி போகுதா தேவ் எழுதற கவிதைகளுக்கு காரணம் இதுதானா? சொல்லவேயில்ல :)//

வாங்க அனு, கதை கதை தான் அதையும் கவிதையையும் எல்லாம் போட்டுக் குழப்பக் கூடாதுங்க :-)

Unknown said...

//CVR said...
சூப்பரு ட்விஸ்ட்!!
அதான் சட்டையை பிடிச்சானா சோழன்????
காதல் கண்ணை மறைக்குது!
என்ன சொல்ல!! :-)//

காதலுக்கு "விதிகள்" கிடையாதுங்க:-)

Unknown said...

//கோபிநாத் said...
\\"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."\\

ஆஹா..அண்ணே போட்டிங்க பாருங்க ஒரு போடு யப்பா..:))//

சரியான் காமெடியாயிருச்சுப்பா.. இதுல்ல வில்லத்தனம் எல்லாம் வெறும் பில்டப்பு தான் :-)

Unknown said...

//கோபிநாத் said...
\\"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."\\

ஆஹா..அண்ணே போட்டிங்க பாருங்க ஒரு போடு யப்பா..:))//

சரியான் காமெடியாயிருச்சுப்பா.. இதுல்ல வில்லத்தனம் எல்லாம் வெறும் பில்டப்பு தான் :-)

Unknown said...

//கோபிநாத் said...
\அனுசுயா said...
//போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது//
சூப்பர் டயலாக் எனக்கு பிடிச்சதும் கூட

சரி சரி கதை இப்டி போகுதா தேவ் எழுதற கவிதைகளுக்கு காரணம் இதுதானா? சொல்லவேயில்ல :)\\

ஆஹா அண்ணே அப்போ குட்டிச் சுவரிலும் கவிதை எல்லாம் வருமா !!? ;)//

கதையில்ல கவிதை வேணுமா.. ம்ம்ம் யாராவது நல்ல கவிஞர்கள் இதைப் படித்தால் கோபியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்:-)

Unknown said...

//வெட்டிப்பயல் said...
கதை அருமையா போகுது... அப்படியே கண்டினியூ பண்ணுங்க. ஆனா வாரத்துக்கு ஒண்ணுனு போடறது சரியில்லை :-(//

வெட்டி புது மாப்பி வாங்க, என் அனுபவத்தில் இந்தக் கதை தான்ப்பா இப்படி இழுத்துகிட்டேப் போவுது அலுவலக வேலை கொஞ்சம் அதிகமானதால் டைம்க்கு ரிலீஸ் பண்ண முடியாமல் போயிடுது.. அதுன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ

Unknown said...

//Divya said...
சூப்பர் ட்விஸ்டுங்கண்ணா!! குட்டிச் சுவரின் கதை இப்போ தான் சூடு பிடிக்குது!!!

\\"டேய் உண்மையாத் தான் சொல்லுறேன்.. உன்னைத் தான் நித்யா விரும்புறா...உன்னைத் தான் கல்யாணம் பண்ணப் போறாளாம்.. கைப்பட எழுதிக்கொடுத்திருக்காப் பாக்குறீயா?" சோழன் முன்னால் ஓடிக் கொண்டேக் கேட்டான். நான் பின்னாலே நின்றேன்.\\

இதை எழுதிவேற கொடுப்பாங்களா???//

என்னப் பண்றது எழுதிக் கொடுத்ததாச் சொல்லித் தான் பீதியக் கிளப்புனாங்க :-)

Unknown said...

P.A.விக்னேஷ்வரன் said...
வணக்கம் நண்பரே... பதிவுகள் மிக மிக அருமை... நினைவுகள் மனதின் கல்வெட்டிற்கு அழைத்துச் செல்கின்றன.. அன்மையில் நண்பர் ஒருவர் உங்கள் பதிவினை அறிமுகம் செந்தார். எல்லா கதைகளையும் படித்தேன்... ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்...//

நன்றி விக்னேஷ்.. கொஞ்சம் தாமதமாகத் தான் உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லுறேன்.. தொடர்ந்து உங்க ஆதரவைக் கொடுங்க.. கதைகளைப் படிங்க..கருத்துக்களை முன் வையுங்கள்..இணைந்திருப்போம்..அடிக்கடி இந்தப் பக்கத்தைப் புரட்டுங்க.

Unknown said...

//இலவசக்கொத்தனார் said...
யப்பா ராசா
டைரிக்குறிப்புகள் நல்லா இருக்கு, ஆனா இம்புட்டு இடைவெளி விட்டா திரும்ப முதலில் இருந்து படிக்க வேண்டியதா இருக்கு. கொஞ்சம் வெரசா போடுப்பா.//

தலைவரே உங்களுக்குத் தெரியாதது இல்ல.. ஆபிஸ்ல்ல ஆணி கொஞ்சம் அதிகம் அதான் இந்தக் கேப்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :-)

Unknown said...

//G.Ragavan said...
:(((((((((((((((((((((((((((((((((((((((

ஹி ஹி...வில்லன்.....சூப்பர்

ஊட்டி திட்டம்லாம் பயங்கர திட்டமாயிருக்குது. ஒன்னும் நடக்கப் போறதில்லை போல..//


ஜி.ரா. இப்படி எல்லாம் போட்டுக் கொடுத்தா எப்படி :-)

நாகை சிவா said...

அடங்கொக்காமக்கா..

அவனையா நீ.. உன்னைய நான் ரொம்ப நல்லவன் என்றுல நினைச்சேன்.. சைட்ல கிடா வெட்டுற ஆளா நீ...