
அழுத்தமாய் பதித்த முத்தத்தில்
உறைந்த உதடுகளின் ஓரம்
உயிர்த்தெழுந்தது காதல்..
கலைந்தக் கனவுகளின் சூட்டில்
அன்றைய பொழுது
அவசரமாய் விடிந்தது..
போர்வைக் குவியலுக்குள்
புதைந்துக் கிடந்தோம்
நானும் என் காதலும்
காதலைக் கட்டிலில்
கட்டிப் போட்டு
கால்கள் விரைந்தன
காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..
இன்னொரு பனிக்காலம்
இலைகளின் நுனியிலிருந்து
கண் சிமிட்டியது..
27 comments:
ரொம்ப நாளாச்சுப்பா உன் லவ்ஸ் கவிதையெல்லாம் படிச்சு. ஆனா இன்னும் அந்த குஜால்ஸ் மட்டும் குறையலை. ஒரே கில்பான்சியா இருக்குதுப்பா.
:)
அழகான கவிதை!
வாழ்த்துக்கள்! :-)
கவிதை நல்லா இருக்குங்கண்ணா.
நல்லாயிருக்கு ;)
சூப்பர் கவிதை சார்...
வாழ்த்துக்கள்....
தல கைப்புள்ள சொன்னதே தான்.
அப்படி வழிமொழிகிறேன்..
வயசு ஆனாலும் இன்னும் அந்த கில்பான்ஸ் அப்படியே இருக்கு உங்கிட்ட :)
\\காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..\
அட்டகாசம்! கலக்குறீங்க அண்ணா, பாராட்டுக்கள்!
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் 'காதல்' கவிதைகள் வெளிவந்திருக்கு, என்ன விசேஷம்???
//கைப்புள்ள said...
ரொம்ப நாளாச்சுப்பா உன் லவ்ஸ் கவிதையெல்லாம் படிச்சு. ஆனா இன்னும் அந்த குஜால்ஸ் மட்டும் குறையலை. ஒரே கில்பான்சியா இருக்குதுப்பா.
:)//
வாப்பா..ரொம்ப நாளுக்கு பிறகு இப்போத் தான் கவிதை எழுத முடிஞ்சுதுப்பா....கொஞ்சம் பீல் குறைஞ்சிருக்குமோன்னு நினைச்சேன்.. என் சந்தேகத்தை உன் பின்னூட்டம் தீர்த்து வைச்சிருச்சு..நன்றி நண்பா.
//CVR said...
அழகான கவிதை!
வாழ்த்துக்கள்! :-)//
நன்றி சிவிஆர் :)
//J K said...
கவிதை நல்லா இருக்குங்கண்ணா.//
நன்றி JK
//கோபிநாத் said...
நல்லாயிருக்கு ;)//
நன்றி கோபி
//விக்னேஸ்வரன் said...
சூப்பர் கவிதை சார்...
வாழ்த்துக்கள்....//
நன்றி விக்னேஸ்வரன்..அப்புறம் இந்த சாரெல்லாம் வேணாம் தேவ் போதும்ங்க.:))
//நாகை சிவா said...
தல கைப்புள்ள சொன்னதே தான்.
அப்படி வழிமொழிகிறேன்..
வயசு ஆனாலும் இன்னும் அந்த கில்பான்ஸ் அப்படியே இருக்கு உங்கிட்ட :)//
நான் பச்சக் குழந்தையா இருக்கும் போது என்னப் பாத்துகிட்டு வர்றவர் நீ(ங்க)... அதுன்னால்ல நீ (ங்க) சொன்னா ரைட்டாத் தா(ங்க)ன் இருக்கும்:-----)))))))))
//காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..//
நீண்ட நாட்களுக்குப்பிறகு
தேவின் கைகளில் காதல் !!
அழகான உணர்வுகள் மிகவும் அருமை தேவ் !! :))
Arumayana kavidhai
Melum... Kadaisi 3 vari ;)
//நீண்ட நாட்களுக்குப்பிறகு
தேவின் கைகளில் காதல் !!
அழகான உணர்வுகள் மிகவும் அருமை தேவ் !! :))//
வாங்க நவீன்... காதல் எங்கிருந்தாலும் அங்கு நவீனும் இருப்பது நிச்சயம் என இன்னொரு முறை நிருபித்து விட்டீர்கள்..:)))) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க
//Marutham said...
Arumayana kavidhai
Melum... Kadaisi 3 vari ;)//
மருதம் வாங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..
பாசு எல்லா கதைலையும்காதல் தோல்வி தாண்டவம் ஆடுது?
Arumayana Kavidhai varigal....
Meendum oru panikalam ;)
தல எப்படி இருக்கீங்க? ஆளையே காணோம்?
Divya said...
\\காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..\
அட்டகாசம்! கலக்குறீங்க அண்ணா, பாராட்டுக்கள்!
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் 'காதல்' கவிதைகள் வெளிவந்திருக்கு, என்ன விசேஷம்???//
பனிக்காலம் வந்துருச்சு அது பெரிய விசேஷம் இல்லையா :)))
காலத்திற்கும் காதலுக்கும் போராட்டம். காலம் கடந்து கொண்டே இருக்கிறது. காதல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
வாழ்த்துகள்
//Joe said...
பாசு எல்லா கதைலையும்காதல் தோல்வி தாண்டவம் ஆடுது?//
அப்படியாச் சொல்லுறீங்க ஜோ.... ம்ம்ம் காதல்ங்கறது ஜெயிக்கிறதும் தோக்குறதுக்கும் ஒண்ணும் பந்தயம் இல்லைங்க.. ஒரு உணர்வு அவ்வளவு தான்...பெரும்பான்மையான பக்கம்78 கதைகள் அதைத் தான் பேசும்...
//Marutham said...
Arumayana Kavidhai varigal....
Meendum oru panikalam ;)//
ஆகா மீண்டும் வாங்க படிங்கன்னு சொன்னது மத்தக் கதைகளியும் கவிதைகளையும் ஆனா நீங்க ஒரே கவிதையை பலத் தரம் படிச்சு பின்னூட்டம் போட்டு பின்னுறீங்களே.. நன்றிங்க மருதம்
//இனியவன் said...
தல எப்படி இருக்கீங்க? ஆளையே காணோம்?//
வாங்க இனியவன்...என்னங்க பண்ணுறது ஆபிஸ்ல்ல பிளாக் போடுறதை நிறுத்திட்டு வேலைப் பாக்கச் சொல்லிட்டாங்க... அந்த வேலை எல்லாம் முடிச்சுட்டு சீக்கிரம் புதுப் பொலிவோடு வந்துடுறேன்ங்க... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ங்க
நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- தீக்ஷ்
//Deekshanya said...
நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- தீக்ஷ்//
நன்றி தீக்ஷ்ண்யா.. நீண்ட நாட்களுக்குப் பின் வந்துருக்கீங்க.. புத்தாண்ட்டு நல்வாழ்த்துக்கள்
Post a Comment