
நாட்காட்டியின்
மெலிந்த தேகம்
முடியப் போகும்
ஒரு வருடத்தின்
அடையாளமாய்
வரவேற்பறையில்
சவரம் தேடும்
மோவாயைத்
தடவியபடி
விட்டம் பார்த்த
விழிகளில்
எஞ்சி நிற்கும் ஞாபகங்கள்
கைப்பேசியின்
மெல்லிய ஒலியழைப்பு
வரப் போகும் வருடத்துக்கான
வாழ்த்துக்களை
விடாது சொல்லிக் கொண்டிருந்தன
கணிணியின்
அஞ்சல் பெட்டியில்
ஆறாங்கிளாஸ் வரை
ஒன்றாய் படித்து
இடையில் தொலைந்து
ஆர்குட்டில் மீண்டு கண்டெடுத்த
நண்பன் ஒருவன்
குடும்ப படம் போட்டு
புது வருட மெயில் அனுப்பியிருந்தான்..
விடியலின் வெளிச்சத்தைப்
போதையின் இருளில்
கூத்தாடும் மனத்தைக்
கட்டவிழ்த்து விட்டு
கூட்டமாய் வரவேற்க
நட்புக் கூட்டம் ஒன்று
குரூப் சேட்டிங்கில் வந்து
திட்டம் போட்டது..
இந்த வருசாமவாது...
ஒவ்வொரு வருடமும்
விடாது ஒலிக்கும்
பெற்றவளின் பக்தி மணி
காதுக்குள் கணீரென
எக்கோ எபெக்ட்டில்
அதிர்ந்து அடங்கியது...
ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்
எதை ஏற்பது
எதை தவிர்ப்பது
சிந்தனைச் செய்ததில்
சூடா ஒரு கப் காபி
மட்டுமே
அப்போதைக்கு
தீர்வானது..
மின்விசிறியின்
தாள லயத்தில்
நெற்றியில் நாட்டியமாடிய
வியர்வைத் துளியினைத்
துடைந்தெறிந்த விரல்
விசைப் பலகையில்
தட்ட நினைத்த
உனக்கானக் கவிதையின்
கடைசி வரி முட்டியது
முற்று பெறாத
கவிதையும்
விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...
15 comments:
எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துகள் தல.
அந்த கவிதைய அடுத்த வருசமாவது முடிச்சுடுங்க ;-)
//விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...//
எனக்குள்ளும் ஏகப்பட்ட கேள்விகள் :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)
vazthuku nandri... arumaiyana kavithai tholare...
அப்பிடி என்ன சலிப்பு? இப்போதே என் புத்தாண்டு வாழ்த்துக்கள் .......அப்புறமா படிப்பிங்களோ இல்லை சவரம் பண்ணவா வேண்டாமா என்பதிலே ஒரு வருடம் கழிந்து விடப் போகிறதோ ........பத்திரம் ......இந்த வருடத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ......
அருணா
//ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்//
இதுதானே நிதர்சனம் தேவ் :). கவிதை நல்லா இருக்கு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை படிக்க கூடாது ராசா..
\\ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்
எதை ஏற்பது
எதை தவிர்ப்பது\\
நிதர்சனம்!
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவ் அண்ணா!
//அருட்பெருங்கோ said...
புத்தாண்டு வாழ்த்துகள் தல.
அந்த கவிதைய அடுத்த வருசமாவது முடிச்சுடுங்க ;-)//
வாப்பா அருள்..சிலக் கவிதைகளை முடிக்காமல் விடுவதே நலம்..கவிஞனுக்கு நான் மேலும் விளக்கத் தேவை இல்லை...உனக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
//ஆயில்யன் said...
//விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...//
எனக்குள்ளும் ஏகப்பட்ட கேள்விகள் :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)//
வாங்க ஆயில்யன்..உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
//vikneshwaran.A. said...
vazthuku nandri... arumaiyana kavithai tholare...//
நன்றி விக்னேஷ், உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
//aruna said...
அப்பிடி என்ன சலிப்பு? இப்போதே என் புத்தாண்டு வாழ்த்துக்கள் .......அப்புறமா படிப்பிங்களோ இல்லை சவரம் பண்ணவா வேண்டாமா என்பதிலே ஒரு வருடம் கழிந்து விடப் போகிறதோ ........பத்திரம் ......இந்த வருடத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ......
அருணா//
வாங்க அருணா.. சலிப்பு எல்லாம் இல்லைங்க... சும்மா வருட முடிவில் ஏற்பட்ட எண்ணங்களை தொகுத்து போட்டேன்... புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்
//ILA(a)இளா said...
//ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்//
இதுதானே நிதர்சனம் தேவ் :). கவிதை நல்லா இருக்கு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை படிக்க கூடாது ராசா..//
வாங்க இளா...இதெல்லாம் நம்ம கவிதை இல்லையா:)
//Divya said...
\\ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேடங்கள்
எதை ஏற்பது
எதை தவிர்ப்பது\\
நிதர்சனம்!
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவ் அண்ணா!//
வாம்மா திவ்யா மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிதர்சனக் கவிதை !!!
புத்தாண்டில் ஏன்..?:)))
புத்தாண்டி நல்வாழ்த்துக்கள் தேவ் !!!
முற்று பெறாத
கவிதையும்
விடைத் தெரியாதக்
கேள்வியும் என
இதோ
இந்த வருடமும்
இன்னொரு வருடமாய்
முடியத்தான் போகிறது...
F A N T A S T I C C C C . . . .
Post a Comment