Sunday, February 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 5

முந்தைய பகுதி படிக்க

விழா நல்லபடியா போய்கிட்டு இருந்தது...அப்பா இன்னும் பேசிகிட்டு இருந்தார். சரவணனின் பெருமைகளை ரொம்ப பெருமிதமா எடுத்துச் சொல்லிகிட்டு இருந்தார். நான் அதக் கேட்டும் கேக்காமலும் கவனத்தை எங்கெல்லாமோ அலைய விட்டுகிட்டு இருந்தேன்.

ஞாபகத்தை எங்கே நிறுத்திட்டு நிகழ்காலத்துக்கு வந்தேனோ அங்கிருந்து கிளம்பி அந்த வார இறுதி நாட்களின் நிகழ்வுகளுக்கு மறுபடியும் போய் சேர்ந்தேன்.

அன்னிக்கு காலையிலே வீட்டை விட்டு கிளம்புனவன் சாயங்காலம் வரைக்கும் பசங்களோடத் தான் சுத்திகிட்டு இருந்தேன். சாயங்காலம் எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப நான் மட்டும் தனியா ஈவினிங் ஷோ பாக்கப் போயிட்டேன்...ஷாருக்கான் நடிச்ச இந்திப் படம் தில்வாலே துல்கனியா லே ஜாயங்கே... காஜோலுக்காகவே கிட்டத் தட்ட பத்து வாட்டி நான் பாத்த படம் அன்னிக்கு எட்டாவ்து வாட்டியாப் போயிருந்தேன்...அதுக்கப்புறமும் ஒண்ணு ரெண்டு வாட்டி அந்தப் படத்துக்குப் போயிருந்தேன்... அது இப்போ தேவையில்லை...காஜோலும் ஷாரூக்கானும் திரை முழுக்க காதலைக் குழைச்சு பெயிண்ட் அடிச்சுகிட்டு இருக்க என் கவனம் படத்திலே இல்ல...என் அண்ணன் சரவணன் மேலத் தான் இருந்துச்சு...

அவன் கிட்ட என்னத் தான் உன் கதைன்னு கேட்டிரலாமா?
கேட்டாச் சொல்லுவானா?
இல்லை கேட்காம நாமளா கண்டுபிடிக்கலாமா?
என்னையேப் போட்டு குழப்பிகிட்டேன்...குழப்பம் தெளியாமப் படம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டேன்..

வீட்டுக்குப் போற வழி எல்லாம் யோசிச்சுகிட்டே தான் போனேன்.. குறுக்கே வந்த நாய் ஒண்ணு கோபமாய் குசலம் விசாரிச்சுட்டு போனதைக் கூட நான் கண்டுக்கல்ல.. சைக்கிளை ஒரே நேர்கோட்டிலே ஓட்டிகிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மணி ஒன்பது ஆகிப் போயிருச்சு.. வீட்டைத் திறந்துட்டு உள்ளேப் போனேன்... ஆள் அரவமே இல்லை... அப்படி இப்படி சுத்திட்டு... பிரிட்ஜ்ல்ல இருந்து ஜில்லுன்னு தண்ணீ எடுத்து தொண்டையிலே இறக்குனேன்... ம்ம் ஒரு மாதிரி லேசா இருந்துச்சு.. இருக்கட்டும் எதுக்கும் மாடிக்குப் போய் ஒரு தம் போட்டுட்டு இன்னும் கொஞ்சம் சீரியசா யோசிக்கலாம்ன்னு படியிலே ஏறுனேன்.

ஒவ்வொரு படியா நிதானமா ஏறும் போதே பத்த வச்சுகிட்டேன்... அக்கம் பக்கம் எல்லாம் நோட்டம் பாத்துகிட்டே மாடியில்ல கால் எடுத்து வச்சா... அங்கே சரவணன்.. என் அண்ணன் சரவணன் தான் சொன்னா நம்புங்க...

பக்கா செட்அப்போட உக்காந்து சரக்கடிச்சுகிட்டு இருந்தான்...ஒரு கணம் நம்பியும் நம்பவும் முடியாமல் நின்றவன் லேசாப் பதுங்கியப் படி அவனைப் பார்த்தேன்..

சைட் டிஷ் எல்லாம் சும்மா சொக்க வைக்கும் ஐட்டங்களா அடுக்கியிருந்தான்...வறுத்தக் கோழி தொடைக்கால்.. மசாலாக் கடலை... நெத்திலி மீன் வறுவல்...மசாலாப் போட்டு வறுத்த முந்திரி பருப்பு தனியா ஒரு பிளேட்... அதுக் கூட நம்ம ரசனைக்குரிய அணீல் பிராண்ட் லோக்கல் மாங்காய் ஊறுகா..பத்தாதுக்கு பாட்டில் பாட்டிலா சரக்கை வேற அடுக்கி வச்சிருந்தான்... மெதுவா ஒவ்வொரு கிளாசா ஊத்தி அடிச்சிகிட்டு இருந்தான்...

நான் அவனைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்.. அதுக்கு மேல முடியல்ல...அவன் என்னைப் பாக்குற மாதிரி அவனுக்கு எதிர்பக்கம் போய் திரும்பி நின்னேன்...பேச்சு எதுவும் கொடுக்கல்ல..

"ஷீவா.. மை பிரதர்... இங்கே வாடா...." சரவணன் தான் என்னைக் கூப்பிட்டான்... அண்ணன் முக்கால் போதையில் முழு வீரனாய் எழுந்து நின்றான்.நான் நிதானமாய் திரும்பினேன்.

"டேய் நான் உன் அண்ணன்டா....வாடா இங்கே..." கையில் கோப்பையோடு அண்ணன் என்னைப் பார்த்து புன்னகைத்தான்..

ஆகா அண்ணா சரவணா.. உன்னை கையிலே எத்தனையோ கோப்பையோட எல்லாம் பாத்துருக்கேன்டா அப்போ எல்லாம் கிடைக்காத பரவசமும் சந்தோசமும் இப்போ எனக்குள்ளேப் பொங்கி வழியுதேடா அப்படின்னு எனக்கு நானே உள்ளுக்குள்ளே சொல்லிகிட்டேன்... ம்ம்ம் ஆனாலும் வாயை திறக்கல்ல

என் கையைப் பிடிச்சி இழுத்து உக்கார வச்சான் சரவணன்.. அப்புறம் அப்படி ஒரு பாசக் கச்சேரி அரங்கேறிடுச்சுங்க..அதை எல்லாம் என்னன்னு சொல்லுரது எப்படின்னு சொல்லுறது.. தமிழ் மட்டும் இல்ல... உலக மொழியிலே அந்த பாசத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லன்னு அந்தப் போதையில்ல அன்னிக்கு தோணிச்சு.. அது ஒரளவு உண்மையும் கூட..சரக்கை ஊத்தி என் வாயிலே வச்சு இறக்குனதும்.. கோழி காலை வாயிலே ஊட்டி விட்டதும்.. புரையேறுனப்போ தலையிலே தட்டணுதும்ன்னு... அத்தனைக் காலமும் சரவணன் தேக்கி வச்சிருந்த சகோதரப் பாசத்தை அப்படியே வெள்ளமா என் பக்கம் திருப்பி விட்டான். நான் கிட்டத் தட்ட மூழ்கி மூச்சு முட்டிப் போயிட்டேன்...

"தம்பி தங்க கம்பி.. என் தம்பி தங்க கம்பி...." பாட்டெல்லாம் வேற பாடி கலக்குனான் சரவணன்... என் மடியிலே தலை வச்சு படுத்துகிட்டான்....நான் அவன் தலையைக் கோதிவிட்டேன்...

"டேய் சிவா... அண்ணனுக்கு நீ ஒரு பாட்டு பாடுரா.. உனக்கு நான் பாடுனேன் இல்ல..." சரவணனின் நேயர் விருப்பம்.

"டேய் அண்ணா.. சரவணா.. எனக்கு பாட எல்லாம் தெரியாது உன்னை மாதிரி... நீ நல்லா பாடுறடா... சூப்பர் வாய்ஸ்டா உனக்கு...."

"உண்மையாவாடா.. இதை எல்லாம் ஏன்டா என்கிட்ட நீ முன்னாடியே சொல்லல்ல..நீ கூடத் தான் அன்னிக்கு கானா எல்லாம் கலக்கலாப் பாடுன.... நல்லாயிருந்துச்சுடா டேய் தம்பி... நீயும் நானும் ஒரே வீட்டுல்ல ஒண்ணா வளர்ந்திருந்தா... இப்படித் தான் ஜாலியா இருந்திருப்போம் இல்லையாடா... எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம்டா நாம... இனி மிஸ் பண்ணக் கூடாதுடா தம்பி.. மிஸ் பண்ணக்கூடாது.. சொல்லிட்டேன்..."

"ஆமா ஆமா..." தலை ஆட்டுவதை பிரதானக் கடமையாய் நினைத்து சும்மா பூமி அதிர தலையாட்டினேன் நான்.. ரொம்ப சந்தோசமாயிருந்துச்சு அந்தப் பொழுது...

இப்படியேப் போயிகிட்டு இருந்தப்போ சந்தோசத்துக்கு சங்கு ஊதுற மாதிரி திடீர்ன்னு சரவணன் கேவி கேவி அழ ஆரம்பிச்சான்...எனக்கு சட்டுன்னு என்னப் பண்ணுறதுன்னு புரியல்ல... கூடச் சேர்ந்து அழதுரலாமான்னு ஒரு கணம் யோசிக்க வேற செஞ்சேன்..... அவன் அழுகையோடு பேச ஆரம்பிச்சான்....

"சிவா... நான் அவளை லவ் பண்றேன்.... உண்மையா.... லவ் பண்ணுறேன்... எனக்கு என்னக் கொறைச்சல்...இன்னும் மூணு மாசத்துல்ல நான் வேலைக்குப் போக போறேன்... என்னை அவளுக்குப் பிடிக்கல்லயாம்.... ஏன் சிவா? .... நான் அவளை நல்லா பாத்துப்பேன்டா.. அவளுக்கு யாராவது சொல்லிப் புரிய வைக்கணும்டா.... சொன்னா புரிஞ்சிக்குவா....சொன்னா புரிஞ்சிக்குவா தானே சிவா... சொல்லுடா...' எனக்குப் போதை சுத்தமாய் இறங்கிப் போனது..

"சொல்லு சிவா... புரியாமத் தானே என்னை பிடிக்கல்லன்னு சொல்லுறா... புரிய வைக்கணும்...நீ புரிய வப்பீயாடா?"

நான் உள்ளுக்குத் தள்ளியிருந்தக் கடைசி பெக் வாயில் இருந்து குப்பென்று கொப்பளித்து வெளியேறியது. என் முகம் அப்படியே கரண்ட் கம்பியில் கால் வைச்ச எபெக்ட்டுக்கு மாறிப்போச்சு. கொஞ்சம் சுதாரிச்சு நான் முதலில் எழுந்துக் கொண்டேன்.. ராத்திரி கரைஞ்சுப் போயிருந்தது.. மணி ரெண்டு இருக்கும்...

"சரவணா.. கீழே போலாமா....நேரமாச்சு..." அவனை எழுப்பப் பார்த்தேன்.

"ம்ஹூம்... நான் நீ புரிய வைக்குறேன்னு சொல்லாட்டி வரமாட்டேன்... எனக்கு யாரும் இல்லடா.. நீ தான் உதவணும்...அவ புரிஞ்சுக்கல்லன்னா நான் செத்துப் போயிருவேன்டா... உண்மையாச் சொல்லிட்டேன்..."

ஆகா இதென்னடா வம்பாப் போச்சு... இப்போ நடந்த எல்லா விவரமும் எனக்கு முழுசாப் புரிய மூணு வருசம் ஆவும் போலிருக்கு.. இதுல்ல நான் யாருக்கு எதை புரிய வைக்கணும்ன்னு தெரியல்லயே...புரிய வைக்கிறேன்ன்னு சொல்லாமா சாமி மலை இறங்காது போலிருக்கே... சரக்கு வாங்கி தந்து சர்க்கஸ் எல்லாம் காட்டச் சொல்லுறானே என எனக்குள்ளேயே புலம்பிகிட்டேன்.

"சரி நான் புரிய வைக்குறேன்ப்பா அண்ணா.. இப்போ வாப்பா போலாம்.. விடிஞ்சா ஊர் போனவங்க திரும்பிருவாங்க..."

அவனை வலுக்கட்டாயமா பிடிச்சு இழுத்து படியில் இறங்கினேன்... அவனை படுக்க வச்சுட்டு நான் படுக்கும் போது பொழுது மெதுவா விடியத் துவங்கியிருந்தது... அதுக்கு அடுத்து இரண்டு நாட்களில் எங்க பள்ளி என்.எஸ்.எஸ் சார்பாக திருவள்ளூர் பக்கம் ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் விசிட்க்கு நாங்க எல்லாம் கிளம்புனோம்...

நான் கிளம்பிகிட்டு இருக்கும் போது சரவணன் என் பக்கம் வந்தான்.. என் கையில் ஒரு காகிதத்தை திணித்தான்...நான் என்ன ஏதுன்னு அப்பிராணியாய் அவனைப் பார்த்து முழித்தேன்...

"நீ தான் புரிய வைக்கணும்.... எப்படியாவது புரிய வை.. இதுல்ல எல்லாம் எழுதியிருக்கேன்... அவக் கிட்டக் கொடுக்கணும்.. புரியுதா?...." அவன் அவசரமாய் கட்டளைகள் போட்ட வண்ணம் இருந்தான்.

அடப்பாவி நீ வாங்கிக் கொடுத்த சரக்கும் சைட் டிஷ்க்கும் கடனை வாங்கியாவது கொடுத்துடுரேன்டா..அதுக்குன்னு என்னை இப்படி போஸ்ட் மேன் வேலை எல்லாம் பாக்க வைக்காதேடா... சொல்ல முடியாமல் வார்த்தைகளை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தேன்...

"உன்னைத் தான்டா நம்பியிருக்கேன்... நீ என் தம்பிடா"

"தம்பிக்குக் கொடுக்குற வேலையாடா இது... வெக்கம் கெட்ட அண்ணா சரவணா" மீண்டும் பாசம் பிரேக்கடித்து போர் மேகம் சூழ ஆரம்பித்தது...

"சரி இதை நான் யார்கிட்டக் கொடுக்கணும்.....?"

"சிவரஞ்சனி கிட்ட..."

"என்னதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ? எங்க சயின்ஸ் சிவரஞ்சனி மிஸ் ஐயா நீ லவ் பண்ணுற....?

என்னை மொத்தமா சூப் வைக்க சூதாத் திட்டம் போடுறீயா நீ..." நான் கொஞ்சம் பொங்கி விட்டேன்.. பின்னே... இப்படி ஒரு அண்ணன் கிடைத்தால் என்ன ஆகும்...

"அடச்சே.. உன் கூட படிக்குறாளே நம்ம அவென்யூ சிவரஞ்சனிடா ..."

இந்தப் பதில் என்னை இன்னும் உசுப்பேத்தியது...இதுக்கு நீ எங்க சயின்ஸ் மிஸ் ஐயே லவ் பண்ணியிருக்கலாம்... இவளை எல்லாம் போய்....என் பரம் விரோதிகிட்டப் போய் நான் வளைஞ்சு நெளிஞ்சு உனக்காக லவ் லெட்டர் கொடுக்கறதா.......?

என் கொள்கையை அவன் அன்பு தளர்த்தியது....அவன் அன்பு என் பாக்கெட்டை நிறைத்தது... இருந்தாலும் ரஞ்சனிகிட்ட நான் போய் லெட்டர் கொடுப்பதை நினைத்தால் எனக்கு தாங்க முடியவில்லை தான்.... என்னச் செய்யறது அண்ணனின் வளமான அன்பு முன்னால் என் கொள்கை முக்காடு போட்டு கும்பிடு போட்டது....

சரக் சரக் என அஞ்சு அம்பது ரூபாய் தாள்களில் அண்ணன் சரவணனின் அன்பு முகம் தெரிந்தது...

என் அண்ணன் சரவணனுக்காக கையில் கடிதம் எடுத்துக் கிளம்பினேன்...

தொடரும்

13 comments:

CVR said...

ஓஹோ!!
கதை அப்படி போகுதா!!
அப்புறம்?? ;)

கோபிநாத் said...

\\என் அண்ணன் சரவணனுக்காக கையில் கடிதம் எடுத்துக் கிளம்பினேன்...\\

ஆகா..சிங்கம் ஒன்னு சிங்கம் ஒன்னு புறப்பட்டதே..கையில் லவ் லெட்டர் ரோடு ;))

Divya said...

விறு விறுப்பாக போகிறது , தேவ் அண்ணா,

அடுத்த பகுதியாவது லேட் பண்ணாமல் போட முயற்சி பண்ணுங்க அண்ணா!

\\குறுக்கே வந்த நாய் ஒண்ணு கோபமாய் குசலம் விசாரிச்சுட்டு போனதைக் கூட நான் கண்டுக்கல்ல.. \\

உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் narrate பண்ண முடியும்,

\\வறுத்தக் கோழி தொடைக்கால்.. மசாலாக் கடலை... நெத்திலி மீன் வறுவல்...மசாலாப் போட்டு வறுத்த முந்திரி பருப்பு தனியா ஒரு பிளேட்... அதுக் கூட நம்ம ரசனைக்குரிய அணீல் பிராண்ட் லோக்கல் மாங்காய் ஊறுகா\\

இவ்வளவு 'சைட் டிஷ்'????
ஹப்பாடி...!!

டயலாக்ஸில் ஆங்காங்கே, உங்கள் அக்மார்க் 'தேவ்' டச் கம்மியாயிருக்குங்கண்ணா!!

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்....வெயிட்டிங்க்ஸ்!!

Anonymous said...

சும்மாவா சொன்னாங்க தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று
அடுத்த பதிவு எப்போ தள ?

ramesh said...

சும்மாவா சொன்னாங்க தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று
அடுத்த பதிவு எப்போ தள ?

Anonymous said...

சும்மாவா சொன்னாங்க தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று
அடுத்த பதிவு எப்போ தள ?

தேவ் | Dev said...

//CVR said...
ஓஹோ!!
கதை அப்படி போகுதா!!
அப்புறம்?? ;)//

அப்புறம் என்ன... கடிதமும் கையுமா நம்ம ஆள் கிளம்பிட்டார்ய்யா கிளம்பிட்டார் :-)

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
\\என் அண்ணன் சரவணனுக்காக கையில் கடிதம் எடுத்துக் கிளம்பினேன்...\\

ஆகா..சிங்கம் ஒன்னு சிங்கம் ஒன்னு புறப்பட்டதே..கையில் லவ் லெட்டர் ரோடு ;))//

ஆமா கோபி சிங்கம் சீறி கிளம்பிருச்சு.. அதுக்கு காலம் நேரம் கனிஞ்சு வந்துச்சன்னு பாத்துருவோம்:-)

தேவ் | Dev said...

//Divya said...
விறு விறுப்பாக போகிறது , தேவ் அண்ணா,

அடுத்த பகுதியாவது லேட் பண்ணாமல் போட முயற்சி பண்ணுங்க அண்ணா!

\\குறுக்கே வந்த நாய் ஒண்ணு கோபமாய் குசலம் விசாரிச்சுட்டு போனதைக் கூட நான் கண்டுக்கல்ல.. \\

உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் narrate பண்ண முடியும்,

\\வறுத்தக் கோழி தொடைக்கால்.. மசாலாக் கடலை... நெத்திலி மீன் வறுவல்...மசாலாப் போட்டு வறுத்த முந்திரி பருப்பு தனியா ஒரு பிளேட்... அதுக் கூட நம்ம ரசனைக்குரிய அணீல் பிராண்ட் லோக்கல் மாங்காய் ஊறுகா\\

இவ்வளவு 'சைட் டிஷ்'????
ஹப்பாடி...!!

டயலாக்ஸில் ஆங்காங்கே, உங்கள் அக்மார்க் 'தேவ்' டச் கம்மியாயிருக்குங்கண்ணா!!

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்....வெயிட்டிங்க்ஸ்!!//

வேலை கொஞ்சம் டைட்டாப் போவுது இருந்தாலும் தங்கையின் விருப்பத்தின் படி சீக்கிரம் அடுத்த அடுத்தப் பகுதிகளைப் போட்டு கதையை நகர்த்த கண்டிப்பா முயற்சி செய்யிறேன்.

ஆகா அது என்ன அக்மார்க் தேவ் டச்சஸ் .. காமெடி கீமெடி பண்ணல்லயே :-))))

தேவ் | Dev said...

//Anonymous said...
சும்மாவா சொன்னாங்க தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று
அடுத்த பதிவு எப்போ தள ?//

ரமேஷ்... ஆக காதலும் போரும் ஒண்ணும் தான் சொல்ல வர்ற ரைட்டா.... ஆனா இந்த தம்பி படையை ஒழுங்கா நடத்துனான்னு பொறுத்திருந்து தான் சொல்லணும்ய்யா

இலவசக்கொத்தனார் said...

ஆஹா, இதைப் பார்க்காம விட்டுட்டேனே. இப்போ அடுத்த பகுதி வழியா வந்தேன்!!

1) ஒழுங்கா வாரா வாரம் ஒரே கிழமையில் எழுது. ஞாபகம் இருக்கும்.

2) இல்லை இப்படி ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறைதான் எழுதுவேன்னு அடம்பிடிச்சா எழுதின கையோட ஒரு நோட்டீஸ் அனுப்பு. புரியுதா?

இலவசக்கொத்தனார் said...

ஒருத்தனே ஒருத்தன் தண்ணி அடிக்க அம்புட்டு பாட்டில் அண்ட் அம்புட்டு சைட் டிஷ்ஷா?

Divya said...

\\ஆகா அது என்ன அக்மார்க் தேவ் டச்சஸ் .. காமெடி கீமெடி பண்ணல்லயே :-))))\\

என்ன அண்ணா இப்படி கேட்டுபுட்டீக.......உங்களை வைச்சு காமெடி பண்ணுவாளா உங்க தங்கச்சி!!!

சொன்ன மாதிரியே நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் போட்டுட்டீங்க அண்ணா,
தேவ் அண்ணான்னா , தேவ் அண்ணாதான்!!