Saturday, March 08, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 6

முந்தைய பகுதி படிக்க

விழா கிட்டத் தட்ட முடியும் நிலையை எட்டியிருந்தது.மேடையில் சந்தானம் அங்கிள் நன்றியரை சொல்லிகிட்டு இருந்தார்.அப்பாவைப் பார்த்தேன்.. குருமூர்த்தி அங்கிள் கிட்ட சுவாரஸ்யமாப் பேசிகிட்டு இருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை...

"எங்கேடா எந்தரிச்சிட்ட...?" சோமு கையைப் பிடிச்சு இழுத்தான்..

"வந்துடுறேன் மச்சி"

"டேய் பார்ட்டியை மறந்துடாதே...எங்க வீட்டு மாடிக்கு வந்துடு..." சோமு ஞாபகமூட்டி அனுப்பினான்.

நான் தலையாட்டிட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சேன்.

அவென்யு வாட்டர் டேங்க் பக்கம் போய் ஒரு தம் எடுத்து பத்த வச்சேன்.. அவென்யூவிற்கு வரும் போது மட்டும் என்னவளுக்குக் கொடுத்த சத்தியத்தைத் தற்காலிகமாய் மீறுவது என் வழக்கம். மெதுவாக தண்ணீ தொட்டி படிக்கட்டுகளில் ஏறி உச்சி படிகட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

திருவள்ளூர் என்.எஸ்.எஸ் கேம்ப்க்கு மீண்டும் நினைவுகள் போய் வந்தது.

அந்தக் கேம்பில் எவ்வளவோ முயன்றும் என் அண்ணன் கொடுத்த கடிதத்தை ரஞ்சனியிடம் என்னால் கொடுக்க முடியவில்லை...கேம்ப்மும் முடிஞ்சுப் போச்சு..அந்தக் கடிதம் பத்திரமாய் என்னிடமே இருந்தது...

சரவணன் என்னிடம் விசாரித்தப் போது.. கொடுத்தாச்சு என ஒப்புக்கு சொல்லி வைத்தேன்... எப்படியும் கொடுத்துடலாம் என ஒரு நம்பிக்கை தான். சரவணனும் என்னை நம்பிட்டான். இப்படியே நாட்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு... அவ்வப்போது சரவணன் அவளுக்குக் கொடுக்கச் சொல்லி எதாவது கொடுப்பான்.. நானும் கொடுப்பதாய் வாங்கி வைத்து கொள்வேன்... இது கொஞ்சக் காலம் ஓடியது...

அவ என்னச் சொன்னா அப்படின்னு கேப்பான்... இந்த ஸ்கூல் எக்ஸாம் எல்லாம் முடியட்டும்ன்னு சொன்னா காலேஜ் அட்மிஷ்ன் முடியட்டும்ன்னு சொன்னா.. இன்னும் ஒரு வாரம் போகட்டும்ன்னு சொன்னா... அடுத்த மாசம் பாக்கலாம்ன்னு சொன்னா... இப்படியே வகை வகையா பிட் போட்டு அவன் ஆசையில்ல தண்ணி ஊத்திகிட்டு வந்தேன்... அவன் ஆசை நெருப்பாயிருக்கும் தண்ணி ஊத்துனா தணிஞ்சுப் போயிரும்ன்னு நான் நினைச்சேன்... படுபாவி அண்ணனோட ஆசை செடியா இருந்திருக்கு நான் ஊத்துன தண்ணியில்ல அது பாட்டுக்கு வேர் விட்டு நிலையா வளந்துருக்கு.. இந்த விவரம் எனக்கு கொஞ்சம் லேட்டாத் தான் தெரிய வந்துச்சு...

சரவணன் வேலைக்குன்னு பெங்களூர் போயிட்டான்... நான் உள்ளூர்ல்லேயே நம்ம மார்க்குக்கு தகுந்த ஒரு காலேஜ்ல்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்...ரஞ்சனியும் என் கல்லூரியில் தான் சேர்ந்தாள்... அவ வேற டிப்பார்ட்மெண்ட் நான் வேற டிப்பார்ட்மெண்ட்... ஆனா இரண்டு பேரும் ஒண்ணா ஒரே பஸ்ல்ல தான் காலேஜ்க்கு போவோம் வருவோம்...அவென்யூவில்லே நான் அதிகமாப் பேச்சு வார்த்தை வச்சிக்காத ஒரே பொண்ணு ரஞ்சனி தான்...

அவளைப் பத்தி எல்லாம் நான் அதிகம் யோசிச்சதே இல்ல... ஆனா இந்த அண்ணன் சரவணன் அவளைக் காதலிக்கிறான்ன்னு தெரிஞ்சப் பின்னாடி தான் அவளை நான் கவனிக்கவே ஆரம்பிச்சேன்.. சின்ன வயசுல்ல ரஞ்சனி கூட எவ்வளவோ தடவை விளையாடி இருக்கேன்... அப்புறம் ஒரு கட்டத்துல்ல எதோ ஒரு திரை விழுந்து ரொம்ப பக்கத்துல்ல இருந்தாலும் ரஞ்சனிக்கும் எனக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாப் போயிருச்சு...பார்த்தாலும் பேசுறது இல்ல... சிரிக்கிறது இல்ல... கிட்டத்தட்ட தெரியாதவங்க மாதிரியே போயிட்டோம்... எப்படி அப்படி ஆனோம்ன்னு எனக்கும் தெரியல்ல.. அதைப் பத்தி எல்லாம் எப்பவும் நான் யோசிச்சதும் இல்ல..

ரஞ்சனிகிட்ட அப்படி என்ன இருக்குன்னு இந்த சரவணன் அவப் பின்னாடி போனான் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. இந்தக் கண்ராவி காதலை எப்படித் தான் பண்ணுறானுங்களோன்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்...

அன்னிக்கு கல்லூரியிலே எதோ பங்க்சன் போல... பொண்ணுங்க எல்லாம் சும்மா விதம் விதமா புடவைக் கட்டி கல்யாண வீட்டு ரிசப்ஷ்ன்ல்ல நிக்குறதுக்கு கிளம்புன மாதிரி வந்திருந்தாளூங்க... பசங்க எல்லாம் பத்த வச்ச சிவகாசி பூவாணம் மாதிரி வாயெல்லாம் சிரிப்பா விரிய...குஷி ஜோதிகவா தனக்கு எந்தப் பொண்ணு சிக்குவான்னு கண்களை அலை பாய விட்டுகிட்டு இருந்தாங்க.. நானும் தான்...ஒவ்வொரு பொண்ணா பாத்துகிட்டே வந்தேன்...

ஒரு மூணூ நாலு இருக்கை தள்ளி முன்னாடி இருந்த இருக்கையிலே பச்சக் கலர் புடவையிலே ரஞ்சனி...
எனக்கு எப்பவும் நாலு இருக்கைத் தள்ளி தான் ரஞ்சனி பஸ்ல்ல உக்காருவா... நானும் அதிகமா அவ இருக்க பக்கம் பாக்க மாட்டேன்..ஆனா அன்னிக்கி என்னவோ தெரியல்ல அவளைப் பாத்துட்டு கண்ணை வேற பக்கம் திருப்ப முடியல்ல....

பச்சக் கலர் சைனா சில்க் புடவை... அதுல்ல்ல அழகௌ அழகா கண்ணை டேமேஜ் பண்ணாத ஓவியங்கள்... அதுக்கு மேட்சிங்கா ரவிக்கை... ரவிக்கை ஓரம் லேசான தங்க நிறத்துல்ல கொஞ்சம் வேலைப் பாடு... காதுல்ல பச்சக் கல் வச்ச ஜிமிக்கி ரஞ்சனி அப்படி இப்படி தலையை ஆட்டும் போது எல்லாம் அது பாட்டுக்கு ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிசிடுது... அப்புறம் பஸ் போற வேகத்துல்ல ஜன்னல் வழியா நுழைஞ்ச காத்து அவ நெத்தியிலே விழ்ந்த ஒரு கற்றை முடியைக் கலைத்துப் போடுவதும் இவ ஒரு கையால அதை சரிப் படுத்துறதும்ன்னு ஒரு கலைக் கச்சேரியே நடந்துகிட்டு இருந்துச்சு.. நான் வச்ச கண் வாங்கமா இதை எல்லாம் பாத்துகிட்டே இருந்தேன்...என்னையுமறியாமல் என் முகத்துல்ல ஒரு அசட்டு சிரிப்பு தவழ்ந்தது எனக்கே தெரிந்தது...சிரிப்பை அடக்க நான் முயற்சி எதுவும் செய்யல்ல

பஸ் கல்லூரிக்குள்ளே நுழைஞ்சு நின்றது.. எல்லாரும் இறங்கி அவங்க அவங்க பிளாக் பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.. ரஞ்சனி கிளாசுக்குப் போக எங்க பில்டிங் தாண்டி தான் போகணும்...ரஞ்சனி முன்னால் நடந்துப் போயிகிட்டு இருந்தா நான் கொஞ்சம் மெதுவா அவப் பின்னாடி நடந்தேன்.. இதுக்கு முன்னாடி நான் ரஞ்சனியைப் புடைவையில் பார்த்தது இல்லை... அவென்யு விழாக்களுக்குக் கூட அவளை அப்படி பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல

புடவையை இவ்வளவு அழகாக் கட்ட முடியுமான்னு என்னை யோசிக்க வச்சிட்டா...எப்பவோ படிச்ச தேவைதக் கதை எல்லாம் ஞாபகத்துக்கு வந்துப் போச்சு... தேவதைகள் எல்லாம் புடவைக் கட்டுனா இப்படித் தான் இருக்குமோ....அப்படின்னா ரஞ்சனி தேவதையா...?

நான் இதை யோசிச்சுகிட்டே நடந்துட்டு இருக்கும் போது முன்னால் நடந்துகிட்டு இருந்த ரஞ்சனி நின்று கொண்டு இருந்தாள்..அவளைக் கவனித்தும் கவனிக்காத மாதிரி அவளைத் தாண்டி போயிராலம்ன்னு கொஞ்சம் வேகமா அடி எடுத்து போட்டேன்

சிவா.... ரஞ்சனியின் குரல் கேட்கவே... கால் அப்படியே பிரேக் போடு நின்னுருச்சு.

என் நாக்கு உள்ளுக்கு ஒட்டிக் கொண்டது... கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் தடுமாற்றம் என மெதுவாக அவப் பக்கம் நடந்துப் போனேன்... போகும் போது அவ முகம் பாக்குறதைக் கூடுமான மட்டும் தவிர்த்தேன்.. குறிப்பா அவ கண்ணை விட்டு என் கண்ணை விலக்கியே வைத்தேன்... என்னமோ தெரியல்ல அவக் கண்களை என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியல்ல...

அவ கட்டியிருந்த புடவையோட நுனி பாதையோரமா இருந்த முள்ளில் சிக்கிட்டு இருந்துச்சு...அவளால்ல அதை குனிந்து எடுக்க முடியாம நின்னுகிட்டு இருந்தா... புடவைக் கட்டிப் அதிக பழக்கமில்ல போல... முந்தானைச் சரிஞ்சுடுமோன்னு கொஞ்சம் தயங்கி நின்ன மாதிரி தெரிஞ்சுது..என் உதவி அவளுக்குத் தேவைப்பட்டதுங்கறதை அவக் கேக்காமலே நான் புரிஞ்சுகிட்டேன்..

அக்கம் பக்கம் அவ வகுப்பு தோழிகள் வேற யாரும் இல்ல.. ரொம்பத் தயங்கித் தான் என்னக் கூப்பிட்டிருக்கான்னும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.. நான் அவக் கால் பக்கம் குனிஞ்சு.. ரொம்ப பக்குவமா அந்த முள்ளுல்ல இருந்து அவப் புடவையை விடுவிச்சேன்.. அக்கம் பக்கம் போனவங்க யாராவது பாக்குறாங்களோன்னு ஒரு சின்ன எச்சரிக்கை வேற எனக்குள்ளே ஓடுச்சு,,,

முள்ளை எடுக்கும் போது தான் அவ பாதங்களை எதேச்சையாப் பாத்தேன்... பாதம் மேல மெல்லிய கொலுசு... பூ வேலைப் பாடு எல்லாம் பண்ணி பிரமாதமா இருந்துச்சு... கலிங்.. கலிங்ன்னு ரொம்ப மெல்லிய ஓசை... காது வச்சுக் கேட்டாத் தான் கேக்கும் போல... அப்புறம் நகத்துல்ல எல்லாம் ஒலிவ் பச்சை நெயில் பாலிஷ் .. நேரம் எடுத்து போடிருக்கா போல... அழகா இருந்துச்சு... இதை எல்லாம் பாக்க கிடச்ச சில் வினாடிகளில் பாத்து ரசித்து சிலாகிச்சுட்டேன்...

"தேங்க்ஸ் சிவா" தெத்துப் பல் தெரிய ஒரு சிரிப்பொடச் சொன்னாப் பாருங்க... ரஞ்சனி சிறு வயசுல்ல பல் கிளிப் இல்ல போட்டிருப்பா.... இப்போ ஒரு சிரிப்புல்லயே கொடைக்கானல் சில்வர் பால்ஸ் காட்டுறாளேன்னு நினைச்சிகிட்டேன்...


அவப் போய் வெகு நேரம் வரை நான் வேற எதோ ஒரு உலகத்துல்ல திரிஞ்சிகிட்டு இருந்தேன்...

எனக்கு பக்கத்துல்லயே இத்தனை வருசம் இருந்த ரஞ்சனி அன்னிக்குத் தான் எனக்கு புதுசா அறிமுகம் ஆனதுபோல இருந்துச்சு.. இந்த அனுபவம் எனக்கு ரொம்பவே புதுசு... கொஞ்சம் கிறுக்குத்தனமா இருந்துச்சு.. ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு....


இந்த கிறுக்குத் தனத்துக்குப் பேர் தான் காதலோ... காதல்ங்கற வார்த்தை என் சிந்தனையில்ல விழ்ந்த உடனே நடுமண்டையிலே சுத்தியல்ல அடி வாங்குன மாதிரி இருந்துச்சு..

ரஞ்சனியை நான் எப்படி காதலிக்க முடியும்... என் அண்ணன் சரவணன் இல்ல ரஞ்சனியைக் காதலிக்கிறான்...

இது துரோகம் இல்லையா..எதோ ஒரு கோவத்தில் என் கையை அழுத்தினேன்... ரஞ்சனி புடவையில்ல சிக்கியிருந்த முள் இன்னும் என் கையில் தான் இருந்துச்சு... அது என் விரல்ல குத்தி ரத்தம் வந்துச்சு...

அன்னிக்கே அந்த லெட்டரைக் கொடுத்துருக்கலாம்... இல்ல சரவணன் கிட்டவாது... டேய் அண்ணா இந்த லெட்டர் எல்லாம் கொடுக்குற பொழப்பு நமக்கு சரி வராது ஆளை விடுன்னு சொல்லி ஆட்டத்தை முடிச்சிருக்கலாம்...

என்னமோ புடிக்கப் போய் என்னமோ ஆனக் கதையால்ல இது போவுது....

அன்னிக்கு முழுக்க வகுப்புல்ல எனக்கு எந்த கவனமும் இல்ல... அண்ணனுக்கு நல்ல தம்பியா இருக்கணும்டா... புடவை...ஜிமிக்கி... கொலுசுன்னு... குப்புற கவிழக் கூடாது... கூடவே கூடாது...இது ஒரு சின்ன சத்யச் சோதனைதாண்டா சிவா... இதுல்ல சிலிப் ஆகிடாதே....

அண்ணன் கிட்ட போய் எல்லா உண்மையையு சொல்லிரணும்... அவன் நாலு அடிச்சாக் கூட வாங்கிக்கணும்...உன் காதலை நீயே பாத்துக்கோடா... நமக்கு இந்த காதல் எல்லாம் சரிபடாது சாரின்னு சரண்டர் ஆகி ஜாமீன் வாங்கணும்... என் அண்ணன் என்னை மன்னிச்சுருவான்....

அப்புறம் இனி இந்த ரஞ்சனி பக்கம் திரும்பவே கூடாது.... திரும்பவே கூடாது.... எனக்கு நானே சொல்லி தலையை வேகமாய் ஆட்டினேன்... அது தெர்மோ டயனமிஸ் கிளாஸ்.. நான் தலை ஆடுனது எந்த தெர்மோடயனமிக்ஸ் சிலபஸ்க்குள்ளும் வராத காரணத்தால் குழம்பிய பேராசிரியர் என்னை எழுப்பி விட்டார்.

"என்ன மேன் இங்கெ சீரியசா லெக்சர் போகும் போது.. நோ.நோன்னு மண்டையை ஆட்டுறே..DO U HAVE ANY COUNTER ARGUEMENTS FOR THE CONCEPT I JUST EXPLAINED" அவர் என்ன சொல்லுறார்ன்னே தெரியாமா பல்ப் ஸ்டாண்ட்டில் மிஸ் பிட் ஆன பல்ப் போல நின்றேன்...

"I am Feeling feverish sir" அப்படின்னு பாவமாய் உளறினேன்.

அந்த சமயம் பார்த்து சரியாய் லஞ்ச் மணி அடித்தது. நான் தப்பித்தேன்..

மதியமே வீட்டுக்கு கிளம்ப முடிவெடுத்து நடக்க ஆரம்பிச்சேன்....

"சிவா...." மறுபடியும் ரஞ்சனியின் குரல் கேட்டு அப்படியே நின்னேன்..

திரும்பக் கூடாது திரும்பக் கூடாது அப்படின்னு புத்தி சொன்னாலும் கால் தானாத் திரும்பி அவப் பக்கம் நடக்க ஆரம்பிச்சது..

"எங்கேக் கிளம்பிட்டே?"

"லஞ்ச்" திக்கி திக்கிச் சொன்னேன்...

"நானும் வரலாமா...." ரஞ்சனியின் இந்தக் கேள்வியில் என் மொத்தமும் கலங்கிப் போனது...

தொடரும்

15 comments:

G.Ragavan said...

ஆகா... ரூட்டு மாறுதே.... ம்ம்ம்... அண்ணன் எப்ப வேலைக்குப் போவான்னு தம்பி காத்திருந்தாப்புல இருக்கு...

feverishனு சொன்னீங்களே....நான் காலேஜ்ல படிக்கிறப்போ கிளாஸ்ல புரபசரைக் கிண்டலடிச்சுச் சிரிச்சிக்கிட்டிருந்தேன். அவர் என்ன ஏதுன்னு தெரியாம.. என்னாச்சுப்பான்னு கேட்டாரு. அவரப் பொருத்த வரைக்கும் நானெல்லாம் நல்ல பையனாம். வாந்தி வருது சார்னு சொன்னேன். அவரு பெர்மிஷன் குடுத்து அனுப்பி வெச்சுட்டு. போர்டுல ராகவன் வந்தா இந்த மருந்தச் சாப்பிடச் சொல்லுங்கன்னு ஒரு பேரை எழுதி வெச்சிருந்தாரு. :)

தேவ் | Dev said...

//feverishனு சொன்னீங்களே....நான் காலேஜ்ல படிக்கிறப்போ கிளாஸ்ல புரபசரைக் கிண்டலடிச்சுச் சிரிச்சிக்கிட்டிருந்தேன். அவர் என்ன ஏதுன்னு தெரியாம.. என்னாச்சுப்பான்னு கேட்டாரு. அவரப் பொருத்த வரைக்கும் நானெல்லாம் நல்ல பையனாம். வாந்தி வருது சார்னு சொன்னேன். அவரு பெர்மிஷன் குடுத்து அனுப்பி வெச்சுட்டு. போர்டுல ராகவன் வந்தா இந்த மருந்தச் சாப்பிடச் சொல்லுங்கன்னு ஒரு பேரை எழுதி வெச்சிருந்தாரு. :)//


வாங்க ஜிரா ,

நீங்க நல்ல பையர்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த புரொபசர் அநியாயத்துக்கு நல்லவரா இல்ல இருந்து இருக்கார்... :-)

கப்பி பய said...

ஆகா...அப்புறம் சரவணனுக்கு ஆப்பு-ரம் தானா??

அடுத்த பாகத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யலைனா திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் எதிர்ல டீக்குடிக்கற போராட்டம் நடக்கும் :))

கோபிநாத் said...

ஆஹா...அண்ணே நல்லா விறுவிறுப்பாக இருக்கு...;))

தேவ் | Dev said...

//கப்பி பய said...
ஆகா...அப்புறம் சரவணனுக்கு ஆப்பு-ரம் தானா??

அடுத்த பாகத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யலைனா திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் எதிர்ல டீக்குடிக்கற போராட்டம் நடக்கும் :))//

போராட்டத்தில் எனக்கும் ஒரு ஸ்பெஷல் டீ சொல்லுப்பா :-))))

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
ஆஹா...அண்ணே நல்லா விறுவிறுப்பாக இருக்கு...;))//


பாவம் பயபுள்ள சிவா நிலைமை கிறுகிறுப்பா இல்ல போயிட்டு இருக்கு :-))

CVR said...

ஒரு கதைன்னு வந்தா அந்த கதையின் கதாநாயகன் நம்மல மாதிரி சிந்திக்கனும்,நாம செய்யறத செய்யனும்னே நெனைச்சு பழகிட்டோம்!!
We like to identify ourselves with the protaganist of a story.

ஹ்ம்ம்!! அதான் முதலிலேயே பின்னூட்டம் போட தோன்ற வில்லை!

தம்பி என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!! :-)

இலவசக்கொத்தனார் said...

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - இது தெரியும்.

அண்ணனும் நோக்கினான், தம்பியும் நோக்கினான் இல்ல இங்க நடக்குது!! நல்லா இருங்கடே!!!

Divya said...

ஆஹா அண்ணா.......கதை இப்படி ரூட் மாறுது????

\\பச்சக் கலர் சைனா சில்க் புடவை... அதுல்ல்ல அழகௌ அழகா கண்ணை டேமேஜ் பண்ணாத ஓவியங்கள்... அதுக்கு மேட்சிங்கா ரவிக்கை... ரவிக்கை ஓரம் லேசான தங்க நிறத்துல்ல கொஞ்சம் வேலைப் பாடு... காதுல்ல பச்சக் கல் வச்ச ஜிமிக்கி ரஞ்சனி அப்படி இப்படி தலையை ஆட்டும் போது எல்லாம் அது பாட்டுக்கு ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிசிடுது... \\

சான்ஸே இல்லண்ணா...உங்களை மாதிரி இப்படி வர்ணிக்க யாரால்லும் முடியாது, கலக்கல்ஸ்!!!

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்க்ஸ்.....
சட்டு புட்டுன்னு நெக்ஸ்ட் பார்ட் போடுங்கண்ணா....அம்புட்டு ஆவலாக வெயிட்டிங்!!

Anonymous said...

அப்படி போடு அருவாள !
அடுத்து அண்ணன் கொடுத்த லெட்டர்ல உங்க பெயர போட்டு கொடுத்துடுவிங்க போல , நல்லா கெலபரிங்க போதைய

தேவ் | Dev said...

//CVR said...
ஒரு கதைன்னு வந்தா அந்த கதையின் கதாநாயகன் நம்மல மாதிரி சிந்திக்கனும்,நாம செய்யறத செய்யனும்னே நெனைச்சு பழகிட்டோம்!!
We like to identify ourselves with the protaganist of a story.

ஹ்ம்ம்!! அதான் முதலிலேயே பின்னூட்டம் போட தோன்ற வில்லை!

தம்பி என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!! :-)//

ம்ம்ம் சிவிஆர் அதே மாதிரி யோசிக்கலாம் தப்பு இல்ல... தம்பியா நீங்க இருந்தா அடுத்து என்னப் பண்ணுவீங்கன்னு யோசிங்க... சொல்லுங்க....

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - இது தெரியும்.

அண்ணனும் நோக்கினான், தம்பியும் நோக்கினான் இல்ல இங்க நடக்குது!! நல்லா இருங்கடே!!!//

நோக்கியா நோக்கியா......அண்ணனுக்கும் தம்பிக்கும் வெட்டு குத்து பாக்கியான்னு இல்ல கதைப் போயிட்டு இருக்கு :-)

தேவ் | Dev said...

//ஆஹா அண்ணா.......கதை இப்படி ரூட் மாறுது????

\\பச்சக் கலர் சைனா சில்க் புடவை... அதுல்ல்ல அழகௌ அழகா கண்ணை டேமேஜ் பண்ணாத ஓவியங்கள்... அதுக்கு மேட்சிங்கா ரவிக்கை... ரவிக்கை ஓரம் லேசான தங்க நிறத்துல்ல கொஞ்சம் வேலைப் பாடு... காதுல்ல பச்சக் கல் வச்ச ஜிமிக்கி ரஞ்சனி அப்படி இப்படி தலையை ஆட்டும் போது எல்லாம் அது பாட்டுக்கு ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிசிடுது... \\

சான்ஸே இல்லண்ணா...உங்களை மாதிரி இப்படி வர்ணிக்க யாரால்லும் முடியாது, கலக்கல்ஸ்!!!

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்க்ஸ்.....
சட்டு புட்டுன்னு நெக்ஸ்ட் பார்ட் போடுங்கண்ணா....அம்புட்டு ஆவலாக வெயிட்டிங்!!//

என்னப் பண்ணுறது மனுசப் பைய வாழ்க்கை ஒரே ரூட்ல்லயா போவுது நம்ம சிவாவும் சரவணனும் மட்டும் விதி விலக்கா என்ன... என்ன ஆவுதுன்னு பாப்போம்...

அடுத்தப் பகுதியோட கதை முடியுது... இந்த வாரம் கண்டிப்பா அடுத்தப் பகுதி வந்துரும்ம்மா

தேவ் | Dev said...

//Anonymous said...
அப்படி போடு அருவாள !
அடுத்து அண்ணன் கொடுத்த லெட்டர்ல உங்க பெயர போட்டு கொடுத்துடுவிங்க போல , நல்லா கெலபரிங்க போதைய//

இதுக்கு தம்பி சிவா தான் பதில் சொல்லணும்... அடுத்தப் பகுதியில்ல கண்டிப்பாச் சொல்லுவான் பாருங்க

Divya said...

\\பாதம் மேல மெல்லிய கொலுசு... பூ வேலைப் பாடு எல்லாம் பண்ணி பிரமாதமா இருந்துச்சு... கலிங்.. கலிங்ன்னு ரொம்ப மெல்லிய ஓசை... காது வச்சுக் கேட்டாத் தான் கேக்கும் போல... அப்புறம் நகத்துல்ல எல்லாம் ஒலிவ் பச்சை நெயில் பாலிஷ் .. நேரம் எடுத்து போடிருக்கா போல... அழகா இருந்துச்சு... இதை எல்லாம் பாக்க கிடச்ச சில் வினாடிகளில் பாத்து ரசித்து சிலாகிச்சுட்டேன்...\\

தேவ் அண்ணா, இந்த வரிகள் படிப்பதற்காகவே மறுபடவும் உங்கள் பதிவிற்கு வந்தேன்.......ரொம்ப ரொம்ப அழகா இருக்குதுங்கண்ண வர்ணனை!!

அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்கண்ணா!!