Saturday, March 29, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 8

முந்தைய பகுதி

"நீ அவச் சொன்னதுக்கு என்னப் பதில் சொன்ன?"

சரவணன் அந்தக் கேள்வியை என்கிட்டக் கேட்டப்போ அதுல்ல கோவம் இருந்துச்சா இல்லையான்னு கூட என்னால அனுமானிக்க முடியல்ல. எல்லா விசயங்களையும் அவன் கிட்டச் சொல்லிட்டேங்கற ஒரு திருப்தி இருந்துச்சு. அடுத்து அவன் என்ன செய்வான்னு என்னால கொஞ்சம் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு இறுக்கமா உக்காந்து இருந்தான் சரவணன்.

அப்படி ஒரு நிலைமையிலே அவன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னும் எனக்குப் புரியல்ல..

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல்லயே..." சரவணன் என்னைப் பாக்காமலேக் கேட்டான்.

"தெரியல்ல சரவணா" நான் சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே அவன் எழுந்து போயிட்டான். வேகமாப் போயிட்டான். நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தேன. அதுக்கு அப்புறம் அன்னிக்கு நடந்த காலேஜ் கலாட்டாக்கள் எதுல்லயும் நான் கலந்துக்காம ஒதுங்கியே நின்னேன்.. ரஞ்சனியும் ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுட்டா.. அடிக்கடி என்னைப் பாத்துகிட்டே இருந்தா.. நான் வேணும்னே அவப் பார்வையைத் தவிர்த்தேன்...

காலேஜ் பேசன் ஷோவுல்ல நம்ம பசங்க தான் பட்டயக் கிளப்புனாங்க...வழக்கம் போல மேடைக்கு கீழே இருந்து தான்... டெல்லியில்ல இருந்து ஒரு குரூப் வந்துருந்துச்சு... ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகு... அப்போதையப் பிரச்சனையை அப்படியே ஓரம் கட்டிட்டு அந்த அழகு வெள்ளத்திலே மனசை அடிச்சுட்டு போக விட்டுட்டு கொஞ்ச நேரம் நின்னேன்..

"சிவா.. நான் வீட்டுக்குப் போகணும்... என்னக் கூட்டிட்டு போ..."

கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கிட்டு என் முன்னால் வந்து நின்னா ரஞ்சனி..

"பஸ் வரும் அதுல்ல போலாமே."

"பஸ் எடுக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.. எனக்கு அவசரமாப் போகணும்.. பசங்க கிட்ட வண்டி வாங்கிட்டு கொண்டு போய் விடு..." கிட்டத்தட்ட ஒரு கட்டளை மாதிரியே போட்டா..

ரஞ்சனியை அவென்யு வாசலில் போய் இறக்கிவிட்டேன்...

"சிவா...நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல்ல...பிடிக்கும் பிடிக்கல்ல எதுவுமே ஓ.கே தான்.. ஆனா அந்த பதில் உன் மனசுல்ல இருந்து வரணும் சிவா... புத்தியக் கேட்டு வரக்கூடாது..."

சொல்லிட்டு அவப் பாட்டுக்குப் போயிட்டா. அந்த நேரம் பாத்து சரவணனும் அங்கே வந்தான். எங்களை அவன் பார்த்த பார்வையிலே ஒரு நூறு இருநூறு கோழியை உரிச்சுப் போட்டிருந்தா அருமையான தந்தூரி கிடைச்சிருக்கும்.. அப்படி ஒரு நெருப்பு பார்வை அது..

அவன் கையிலே இருந்த டிராவல் பேக் அவன் அவசரமா ஊருக்குக் கிளம்புரான்னு சொல்லிச்சு... அவன் எதுவும் பேசிக்காம ரோட்டைப் பாத்து நடந்துப் போயிக்கிட்டு இருந்தான், நானும் அவனை அந்த நிமிசம் எதுவும் கேக்க வேணாம்ன்னு விட்டுட்டேன்...பைக்கைத் திருப்பிக் கொடுக்க காலேஜ்க்குப் போயிட்டேன்...

இது நடந்து ஆறு மாசம் ஆயிருச்சு.. அது வரைக்கும் சரவணன் வீட்டுக்கே வர்றல்ல.. ஆபிஸ்ல்ல வேலை அதிகம்ன்னு காரணம் சொன்னதா வீட்டுல்ல பேசிகிட்டாங்க. அவனுக்குப் பொண்ணு பாக்கப் பேச்சு எடுத்தப்போவும் அவன் எதுவும் பிடி கொடுக்கல்லன்னு சொல்லிகிட்டாங்க....

என் அண்ணன் சரவணும் நானும் ஆரம்பகாலத்துல்ல எப்படி இருந்தோமோ அந்த நிலைமைக்கே மறுபடியும் போயிட்டோம்.... முன்னாடி மாதிரி இல்லாம இப்போ என் மனசை எதோ ஒரு பாரம் அழுத்துச்சு...சரவணன் கூடப் பேசணும்..கலகலப்பா இருக்கணும்ன்னு எதோ ஒண்ணு எனக்குள்ளே ஏங்குற மாதிரி இருந்துச்சு...

ரஞ்சனியை விட்டு எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி வந்தேன்...

நான் அவனுக்கு துரோகம் பண்ணல்லன்னு சரவணன் புரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்... ஆனா அதை எப்படி அவனுக்கு சொல்லுறதுன்னு புரியல்ல...

எப்படியோ ஒரு விடுமுறைக்கு அம்மாவுக்கு உடம்பு முடியல்லன்னு சொல்லி அவனை வர வச்சாங்க... வந்தவனுக்கு ராஜ உபச்சாரம்... வகை வகையா விருந்து வச்சு அவனை திணறடிச்சாங்க... இரண்டு பேரும் ஒண்ணா உக்காந்து தான் சாப்பிட்டோம்.. அவனுக்கு இரண்டு நாட்டு கோழி முட்டை எனக்கு பாதி முட்டை.. இன்னொரு பாதி எங்கப்பாவுக்கு அதையும் அவர் அவனுக்கே வச்சது பெரியக் கொடுமை... முட்டைக் கொடுமையே போதும் மத்த மெனு வெல்லாம லிஸ்ட் போட்டா பதிவு தாங்காது அதுன்னால்ல விடுறேன்..

அவனாப் பேசுவான்னு நான் காத்திருந்து கடுப்பானது தான் மிச்சம்... பொறுத்துப் பாத்துட்டு நானே அவன் முன்னாடி போய் நின்னேன்...

"சரவணா..."

"ம்ம்ம்" அவன் தலையைக் கூடத் தூக்காம முனகுனான்...

"நான் என்னத் தப்பு பண்ணேன்... ஏன் என்னை விரோதி மாதிரி நடத்துற?"

"ம்ம்ம்ம்ம்" தலையை நிமித்துனவன் முகத்தில் அப்படி ஒரு மூர்க்கம். நான் ஒரு நிமிசம் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அடுத்த நிமிசமே மறுபடியும் முகத்தை தரையிலேத் தொங்கப் போட்டுகிட்டான்..

குனிஞ்சத் தலை நிமிரமாலே கேட்டான்....

"ரஞ்சனியை நீ காதலிக்கிறியான்னு அன்னிக்கு நான் உன்னை கேட்டதுக்கு என்னப் பதில் சொன்ன சிவா?"

"தெரியல்லன்னு சொன்னேன் சரவணா"

"உன் கேள்விக்கும் என் பதில் அது தான்..." அப்படின்னு சொல்லிட்டு எந்தரிச்சுப் போயிட்டான்.

கடைசிக் கட்டப் பேச்சு வார்த்தையும் முறிந்த நிலையில் நான் மனத்தை ஆற்ற ஒரு தம் பற்ற வைத்து மாடியில் போய் நின்றேன்.

என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எங்க அவென்யு தண்ணித் தொட்டி தெரியும்.. அந்தத் தண்ணித் தொட்டிப் படிகளில் உச்சியில் சரவணன் நின்று தம்மடித்து கொண்டிருந்தான்.. இரண்டு பேர் விட்ட புகைக் கூட நேர் எதிர் திசைகளில் பயணித்தன.. அதை யோசிக்கும் போது எனக்கு லேசானச் சிரிப்பு வந்துச்சு...

"என்னடா இது... நான் பாட்டுக்குப் போயிட்டு இருந்தேன்... நூல் இல்லாத பட்டம் மாதிரி... அண்ணனும் இல்ல ஆட்டுக்குட்டியும் இல்லன்னு... தொட்டாலே தகாதுன்னு தள்ளித் தானே நின்னோம்... நீ திருட்டுப் பய மாதிரி அன்னிக்கு ஓடி வர.. எனக்கும் உனக்கும் இனிஷியல் கொடுத்த ஒரு அப்பாவுக்காக உன்னை நான் ஊர் மாத்துல்ல இருந்து காப்பாத்துனேன்... கொஞ்சூண்டு சகோதரப் பாசமும் தான்....பயபுள்ள நீ தானேடா உன் காதலைச் சொல்லி கரையேத்துன்னு என் கிட்டச் சரக்கெல்லாம் வாங்கிக் கொடுத்து ரெக்கமெண்டு கேட்டு நின்ன.... உன் கெட்ட நேரம்.... உன்ன அவளுக்குப் பிடிக்கல்ல... என் கெட்ட நேரம் என்ன அவளுக்குப் பிடிச்சுப் போச்சு... எனக்கும் லேசா அவளைப் பிடிச்சுத் தொலைச்சுருச்சு... ஆனாலும் தம்பி நான் ஜெண்டில் மேன்டா...அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்... நீ தான் தம்பியைத் தப்பா.......

நடந்த விசயத்தை எல்லாம் கோர்வையா மனசுல்ல அப்படியே ரீல் ஓட்டிகிட்டு வரும் போது இந்த இடத்துல்ல வந்து தட்டிச்சு

"தம்பியா... ஆகா... நீ என்னைத் தம்பியாவே நினைக்கல்லயேடா.. உன் லவ்வைச் சொல்ல ஒரு போஸ்ட்மேனாத் தானே வச்சுருந்து இருக்க... இத்தன வருசம் இல்லாத பாசம் புதுசாப் பொங்குன உடனே நானும் அண்ணன் அண்ணன் காதல்ன்னு மறுகிட்டேன்.... நீ என்னைக் கேவலம் சரக்குக்கு விலைப் போற சல்லி பயலா இல்லப் பாத்து இருக்க...சரவணா... உனக்கு எப்பவும் எதுல்லயும் ஜெயிக்கணும்... அதுக்கு எதையும் யாரையும் வளைக்கலாம் நெளிக்கலாம்..தம்பி கூட உனக்கு வெறும் ..I HAVE BEEN USED BY YOU TO WIN OVER A GIRL " நினைக்க நினைக்க எனக்கே என் மீது அருவெருப்பாய் வந்தது

"ஆனாலும் உன்னாலே ஜெயிக்க முடியல்லயே சரவணா" இந்த எண்ணம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

அடுத்த நாள் மதியம் மேட்னி ஷோ படம் முடித்து சுற்றி விட்டு அவென்யு வந்து சேரும் போது எங்க வீடு பூட்டியிருந்துச்சு...

"சிவா.. உங்க அண்ணன் சரவணன்.. தண்ணி தொட்டியில்ல இருந்து கால் தவறி கீழே விழுந்துட்டான்.. நிறைய ரத்தம் போயிருச்சு..ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க..." பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க...

அந்த வினாடியில் எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.... படம் முடிஞ்சு வந்த மொத்த டீமும் அப்படியே ராயப்பேட்டை நோக்கி கிளம்புனோம்... யார் வண்டியிலே நான் உக்காந்துப் போனேன்ங்கற விசயம் இப்போ வரைக்கும் என் நினைவுக்கு வரவே இல்ல.. அதை யோசிச்சு நினைவுக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் நான் விட்டு ரொம்பக் காலம் ஆச்சு.

அப்பாவோட ரகசிய அழுகை... அம்மாவின் கதறல்.... சரவணன் ஒரு மரக்கட்டை போல் படுத்திருந்த அந்த ஆஸ்பத்திரி அறை... ஒரு பத்து நாட்கள் இப்படியே ஓடிப் போச்சு....

யார் யாரோ வந்து பாத்துட்டுப் போனாங்க... அப்பா கையைப் பிடிச்சு ஆறுதல் சொன்னாங்க.. அம்மா மட்டும் அழுதுகிட்டே இருந்தாங்க... முதல் முறையா அப்பா என் தோளைப் பிடிச்சுகிட்டு ஒரு பத்து நிமிசம் நின்னார்... அவரோட கை ரெண்ட்டும் என் தோளை அழுத்துன விதத்துல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்... MY LIFE WAS NEVER GOING TO BE THE SAME..

அப்பாவோட பேங்க் பேலன்ஸ் கணிசமாக் குறைஞ்சது...ஆனாலும் சரவணன் அசையவும் இல்ல.. பேசவும் இல்ல....

ஒரு பத்து நாளுக்கு அப்புறம் அவென்யுக்குப் போனேன்... ஆள் அரவமில்லாத மதிய நேரம்...மதிய தூக்கம் பழக்கமில்லாதக் காரணத்தாலே.. அப்படியே எழுந்து நடந்தேன்... எதேச்சையாத் தண்ணீர் தொட்டி பக்கம் போனேன்.. சரவணனை நான் கடைசியாப் பாத்த இடம்... சரவணன் கால் தடுக்கி விழுந்த இடம்... மெதுவா படிகள் ஏறி மேலப் போனேன்...

இங்கேத் தான்... இங்கே இருந்து தான் சரவணன் கால் தடுக்கி....அந்த சுவத்தையும் அதனை ஓட்டி இருந்த உச்சிப் படிக்கட்டின் கீழ் ஓரத்தில் மறைவாய் சிக்கியிருந்த அந்தப் பொருளையும் கவனித்த என்னால் அவன் கால் தடுக்கி தான் விழுந்திருப்பான் என சத்யமா நம்ப முடியாமல் போனது...

________________________________________________________________________

நாட்கள் நீண்டு.. வாரங்கள் விரைந்தன... மாதங்கள் கரைந்தன... சரவணன் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை...
"NOW HE IS IN DEEP COMA BUT THERE IS A CHANCE OF HIM SURVIVING IF YOU BELIEVE IN MEDICAL MIRACLES"

எங்க தூரத்து உறவுக்கார டாக்டர் ஒருத்தர் பாக்க நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருப்பார்... எங்க கிட்டச் சொன்னார்...சரவணனைத் தன்னோட மருத்துவமனையிலே வச்சு கவனிக்கறதுமாச் சொன்னார்.. எதோ ரிசர்ச் ரிசன் அப்படின்னு அவருக்கு அதுல்ல ஒரு லாபம்... அப்பா அம்மா இரண்டு பேரும் மெடிக்கல் மிராக்களோ.. என்னவோ பெத்தப் புள்ள கண்ணைத் தொறப்பான்ன்னு நம்புறாங்க..வருசங்கள் ஓடிப் போயிட்டே இருக்கு....

"ஆகா ரொம்ப் நேரம் படியிலே உக்காந்துட்டேன் போலிருக்கே.... அதே இடம்... இப்பவும் அந்த சுவத்தைத் தான் பாத்துகிட்டு இருக்கேன்.... அதுல்ல சரவணன் கையெழுத்துல்ல
சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்....." அப்படிங்கற கவிதை...
கவிதையைப் படிச்சுட்டு என் பாக்கெட்டுக்குள்ள கைவிட்டு நான் அன்னிக்கு இதே இடத்துல்லப் பாத்த... அந்தப் பொருளை... அந்த உடைந்த வெள்ளிக் கொலுசு மணியை எடுத்து நிலா வெளிச்சதுல்ல பாக்குறேன்... ஒரு பொழுதினில் ரஞ்சனியின் கால்களை அலங்கரித்து என் சித்தம் கொள்ளைக் கொண்ட கொலுசு மணி ஆச்சே அது..."

பிகு: சரவணன் ஆஸ்பத்திரியிலேச் சேந்த அடுத்த நாள் ரஞ்சனி அவென்யு விட்டுப் போயிட்டா. காலேஜ் பைனல் செம் பரீட்சைக்கும் வர்றல்ல. செப்டம்பர்ல்ல எழுதுனதாப் பின்னாடி கேள்விபட்டேன். பின்னாடி அவக் குடும்பமும் மெதுவாக கேரளாவுக்கு இடம்பெயர்ந்துட்டாங்க.. அவென்யு தோழிகள் ஒண்ணு ரெண்டு பேர் கிட்ட எப்போவாது தொடர்பு கொள்ளுரான்னு கேள்வி படுறது உண்டு...அவக் கல்யாணம்... குழந்தை எல்லாம் இப்படி காத்து வாக்குல்ல வந்த செய்திகள் தான்...

நான் , ரஞ்சனி, சரவணன் மூணு பேர் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வுகள்ல்ல எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லிட்டேன்... எனக்குத் தெரியாத விசயம் ஒண்ணு தான்.. அதைச் சொல்லுற நிலைமையிலே சரவணன் இல்ல... ரஞ்சனி சொல்லுவாளா தெரியல்ல.... ஆனா எனக்குத் தெரிஞ்சிக்கணும் என்னப் பண்ணலாம் சொல்லுங்க...?

Thats all for now folks...

36 comments:

கப்பி பய said...

ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பு குறையாமல் அருமையா கதை சொன்னீங்க!! கலக்கல்!! :)

கோபிநாத் said...

நானும் அவென்யுல ஒருத்தனாக கூடவே இருந்தது போல இருக்கு அண்ணே ;)

கதை சொல்லுறதுல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைன்னு மறுபடியும் நிருபிச்சிட்டிங்க அண்ணே ;))

கோபிநாத் said...

\\கப்பி பய said...
ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பு குறையாமல் அருமையா கதை சொன்னீங்க!! கலக்கல்!! :)
\\

ஒரு ரீப்பிட்டே ;))

Anonymous said...

பொறமை உச்ச கட்டத்துல இருக்கு :))
தேவ் அண்ணா மாதிரி எனக்கு எல்லாம் கதை எழுத வருமான்னு நினைச்சா அப்படிதான் தோனுது.அண்ணா கதை அருமை.வேற என்ன சொல்லுறதுன்னே தெரியவில்லை.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப கனமான கதை. ஆனா இதை எல்லாம் மறந்து இன்னிக்கு நீ குழந்தை குட்டின்னு செட்டில் ஆனது பார்த்து சந்தோஷமா இருக்கு. அண்ணன் கூட கொஞ்சம் அவசரப்படாம இருந்த இந்த மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா. Time heals everything அப்படின்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.

sathish said...

என்ன அருமையான கதை ஓட்டம் அண்ணா!!

Divya said...

கதையோடு ஒன்றிபோக வைப்பதில்..உங்களுக்கு நிகர் யாரும் இல்லை தேவ் அண்ணா!

ஒவ்வொரு பகுதியும் அருமை......அதிலும் இந்த பகுதி....மனதை கணமாக்கியது!

Divya said...

\\அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்\\

நச்சென்று இருக்கு...

Divya said...

\\நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தான். \\

தேவ் அண்ணா,

உக்காந்து'இருந்தேன்'.....இப்படி வரும்:)

தேவ் | Dev said...

//கப்பி பய said...

ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பு குறையாமல் அருமையா கதை சொன்னீங்க!! கலக்கல்!! :)//

நன்றி கப்பி தம்பி

தேவ் | Dev said...

//கோபிநாத் said...

நானும் அவென்யுல ஒருத்தனாக கூடவே இருந்தது போல இருக்கு அண்ணே ;)

கதை சொல்லுறதுல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைன்னு மறுபடியும் நிருபிச்சிட்டிங்க அண்ணே ;))//

நன்றி கோபி தம்பி

தேவ் | Dev said...

//கோபிநாத் said...

\\கப்பி பய said...
ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பு குறையாமல் அருமையா கதை சொன்னீங்க!! கலக்கல்!! :)
\\

ஒரு ரீப்பிட்டே ;))//

எங்கேடா கோபியோட பஞ்ச் கமெண்ட்டைக் காணுமேன்னு பாத்தேன் :-)

தேவ் | Dev said...

//துர்கா said...

பொறமை உச்ச கட்டத்துல இருக்கு :))
தேவ் அண்ணா மாதிரி எனக்கு எல்லாம் கதை எழுத வருமான்னு நினைச்சா அப்படிதான் தோனுது.அண்ணா கதை அருமை.வேற என்ன சொல்லுறதுன்னே தெரியவில்லை.//

ம்ம்ம்ம் அடுத்து அண்ணன் தங்கச்சி வச்சு ஒரு கதை எழுதியிருவோமா

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...

ரொம்ப கனமான கதை. ஆனா இதை எல்லாம் மறந்து இன்னிக்கு நீ குழந்தை குட்டின்னு செட்டில் ஆனது பார்த்து சந்தோஷமா இருக்கு. அண்ணன் கூட கொஞ்சம் அவசரப்படாம இருந்த இந்த மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா. Time heals everything அப்படின்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.//

COMMENT ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் தலைவரே இருக்கு ஆனா பினீசீங் தான் முட்டுது.. இது கதை இல்ல நிஜம்ன்னு நான் எப்போச் சொன்னேன் :)))

தேவ் | Dev said...

//sathish said...

என்ன அருமையான கதை ஓட்டம் அண்ணா!!//

நன்றி சதீஷ் தம்பி

தேவ் | Dev said...

// Divya said...

கதையோடு ஒன்றிபோக வைப்பதில்..உங்களுக்கு நிகர் யாரும் இல்லை தேவ் அண்ணா!

ஒவ்வொரு பகுதியும் அருமை......அதிலும் இந்த பகுதி....மனதை கணமாக்கியது!//

நன்றி திவ்யா

தேவ் | Dev said...

//Divya said...

\\அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்\\

நச்சென்று இருக்கு...//

:)))

தேவ் | Dev said...

//Divya said...

\\நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தான். \\

தேவ் அண்ணா,

உக்காந்து'இருந்தேன்'.....இப்படி வரும்:)//'

மாத்திருவோம் :)

துளசி கோபால் said...

ஹப்பா............ என்ன சொல்றதுன்னே தெரியலை....

சூப்பர் நடை.

CVR said...

Moral of the story!
உணமையை சொன்னா குழப்பங்கள் இல்லை!!

Narration எல்லாம் top class!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

சத்தம் போடாம எல்லாப் பகுதிகளையும் படிச்சிட்டிருந்தேன். முழுக்கப் படிச்சதும் சத்தம் போடாம போக முடியல. முடிவு எதிர்பார்த்திருந்தாலும், அருமையான நடை, கட்டிப் போடுது. எல்லாரும் இப்படி சுமக்கிறோம்ல!? வாழ்த்துக்கள்.

தேவ் | Dev said...

//துளசி கோபால் said...

ஹப்பா............ என்ன சொல்றதுன்னே தெரியலை....

சூப்பர் நடை.//

துளசி அக்கா நான் உங்க திருவேங்கடம் ஹரி ஆன கதையைப் படிச்ச எபெக்ட்ல்ல இருந்தே இன்னும் வெளியே வரல்ல .. அப்படி ஒரு அருமையான கதையைக் கொடுத்த நீங்க என் கதையைப் பாராட்டியிருப்பது என் பாக்யம... நன்றி அக்கா:)

தேவ் | Dev said...

//CVR said...

Moral of the story!
உணமையை சொன்னா குழப்பங்கள் இல்லை!!

Narration எல்லாம் top class!//

உள்ளதை உள்ளபடி உணமையைப் பட்டுன்னு சொல்லுவதும் அவ்வளவு சுலபம் இல்ல போலிருக்கே... நன்றி சிவிஆர்

தேவ் | Dev said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

சத்தம் போடாம எல்லாப் பகுதிகளையும் படிச்சிட்டிருந்தேன். முழுக்கப் படிச்சதும் சத்தம் போடாம போக முடியல. முடிவு எதிர்பார்த்திருந்தாலும், அருமையான நடை, கட்டிப் போடுது. எல்லாரும் இப்படி சுமக்கிறோம்ல!? வாழ்த்துக்கள்.//

நன்றிங்க.. சுமைகள் சில சமயம கதைககளாக இறக்கிகியும் வைக்கிறோம்... நம்ம சுமைகள மட்டும் இல்ல அடுத்தவங்கச் சுமைகளும் நம்மால்ல் கதையாவதும் உண்டு .

Ramya Ramani said...

தேவ் அண்ணா கலக்கீடீங்க.

ILA(a)இளா said...

சோகத்த புழுஞ்சிட்டீயேய்யா, அருமையா இருந்துச்சு கதை :)

M.SARAVANA KUMAR said...

உங்கள் பதிவுகளை படித்தேன்..
மிக அருமை.. மிக மிக அருமை..
சில கதைகள் ஒரு அழகான வேறு ஒரு உலகில் வாழ செய்தது..
இன்னும் சில பதிவுகளை படிக்க வேண்டியுள்ளது..
உங்கள் கவிதைகளும் மிக அருமை..

ஆனால் சமீப காலங்களில் (மார்ச்சுக்கு பிறகு) பதிவுகள் இடவில்லையே..
மிக விரைவில் பதிவிடுங்கள்..

மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்..:)

Sri said...

உங்களுடைய குட்டிச் சுவரின் வரலாறு படித்தேன், மிக அருமை..!! :-)
அண்ணா கதை சொல்றதுல உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல‌...!! :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

Superrrr....

நல்ல படம் பார்த்த ஃபீலிங்.. ;-)

சரவணனுக்கும் ரஞ்சனிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியப்படுத்தாமல் சுஸ்பென்ஸ்ல முடிச்சதே சூப்பரான ஒரு எண்டிங்கா இருக்கு. :-)

தேவ் | Dev said...

//Ramya Ramani said...

தேவ் அண்ணா கலக்கீடீங்க.//
நன்றி ரம்யா

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...
சோகத்த புழுஞ்சிட்டீயேய்யா, அருமையா இருந்துச்சு கதை :)//

வாங்க பார்மர் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க

தேவ் | Dev said...

// M.SARAVANA KUMAR said...
உங்கள் பதிவுகளை படித்தேன்..
மிக அருமை.. மிக மிக அருமை..
சில கதைகள் ஒரு அழகான வேறு ஒரு உலகில் வாழ செய்தது..
இன்னும் சில பதிவுகளை படிக்க வேண்டியுள்ளது..
உங்கள் கவிதைகளும் மிக அருமை..

ஆனால் சமீப காலங்களில் (மார்ச்சுக்கு பிறகு) பதிவுகள் இடவில்லையே..
மிக விரைவில் பதிவிடுங்கள்..

மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்..:)//

வாங்க சரவண குமார்... உங்க பாராட்டுக்கு நன்றி... சிக்கீரமே அடுத்த கதை ஒண்ணு வெளிவரும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

தேவ் | Dev said...

// Sri said...
உங்களுடைய குட்டிச் சுவரின் வரலாறு படித்தேன், மிக அருமை..!! :-)
அண்ணா கதை சொல்றதுல உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல‌...!! :-))//


நன்றி SRI தம்பி!!

தேவ் | Dev said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
Superrrr....

நல்ல படம் பார்த்த ஃபீலிங்.. ;-)

சரவணனுக்கும் ரஞ்சனிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியப்படுத்தாமல் சுஸ்பென்ஸ்ல முடிச்சதே சூப்பரான ஒரு எண்டிங்கா இருக்கு. :-)//

Thank you Sister !!!

ஸ்ரீமதி said...

//தேவ் | Dev said...
// Sri said...
உங்களுடைய குட்டிச் சுவரின் வரலாறு படித்தேன், மிக அருமை..!! :-)
அண்ணா கதை சொல்றதுல உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல‌...!! :-))//


நன்றி SRI தம்பி!!//

நான் தம்பி இல்ல தங்கை.. :))

தேவ் | Dev said...

// ஸ்ரீமதி said...
// Sri said...
உங்களுடைய குட்டிச் சுவரின் வரலாறு படித்தேன், மிக அருமை..!! :-)
அண்ணா கதை சொல்றதுல உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல‌...!! :-))//

நன்றி SRI தம்பி!!//

நான் தம்பி இல்ல தங்கை.. :))//

தம்பி என்ற போதும் தங்கை என்ற போதும் அண்ணன் அண்ணன் தானே.... :)))) இதுக்கு மேல மீசையில்ல மண் ஒட்டல்லன்னு எப்படி சொல்ல? எதாவது ஐடியா இருக்கா? :))