Thursday, February 02, 2006

கவி10: காதல் மாசம்



டீக் கடைகளில்
தினமும் புகையும்...
நண்பர்களின் சிகரெட்டுக்கு
ஊடே என் காதல்...

தங்கையின் கேலியிலும்...
விவரமறிந்த சித்தியின்
கிண்டலிலும்...
வெட்கப்பட்டுப் புன்னகைக்கும்..
என் காதல்....

வானொலிப் பெட்டியில்
நேயர் விருப்பமாய்
வாசிக்கப்படும்...
சின்னத்திரையில்
குறுஞ்செய்தியாய்
குறுக்கும் நெடுக்கும் ஓடும்...
என் காதல்...

மொட்டை மாடி
கட்டைச் சுவரில்...
சாயங்கால
கடற்கரை மணலில்...
தமிழ் பேசும்
என் காதல்...

எங்கும் எதிலும்...
திசைகள் எட்டிலும்...
கண்கள் தாண்டியும்...
ஆழங்கள் உயரங்கள் என
எல்லாவற்றிலும்...
என் காதல்

அவள் மனசு...

அது ஒன்றைத் தவிர...

16 comments:

sathesh said...

நல்லாயிருக்கு தேவ்...

கைப்புள்ள said...

//அவள் மனசு...

அது ஒன்றைத் தவிர...//

சோக்கா சொன்னபா... ஒரே ஃபீலிங்ஸ் ஆப் இண்டியா!

நவீன் ப்ரகாஷ் said...

வெட்கப்பட்டுப் புன்னகைக்கும் காதல்
குறுக்கும் நெடுக்கும் ஓடும் காதல்
மணலில் தமிழ் பேசும் காதல்

காதலானதே மனசு!

Sud Gopal said...

ரொம்ப அருமையா இருக்கு.
உங்களோட வலியை நல்லா உணர முடியுது.காலம் உங்களது எல்லாக் காயங்களையும் ஆற்றும்/ஆற்றியிருக்கும்னு நம்பறேன்.

காதல்,நட்பு முதலானவற்றை விட்டு மத்ததப் பத்தியும் எழுதலாமே.

Anonymous said...

"கடற்கரை மணலில்...
தமிழ் பேசும்
என் காதல்."

ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்
கீதா

dvetrivel said...

அப்பு, அசத்திபுட்டீங்க. காதல் கவிதைகள் அருமை. தங்கள் பதிவை எனது blogroll-ல் சேர்த்துள்ளேன்.

Unknown said...

பாழ் உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.

Unknown said...

கைப்புள்ள என்னத்தச் சொல்ல? ராசா நீ என் மனசாட்சி ராசா... நெசமாத் தான்ய்யா சொல்லுறேன். உன்னியப் பத்தி ஒரு தனி பதிவு வருதுங்கண்ணா...

Unknown said...

கீதா பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் உங்களுக்கு நிகர் நீங்களே... நன்றி...

Unknown said...

பூபதி சார்... நீங்க கொடுத்திருக்கும் கௌரவத்திற்கு நன்றி

Unknown said...

நவீன் சார் இந்தக் காலத்துல்ல கவிதை எழுதுவது பெரிசு இல்ல... அதை புரிஞ்சு ரசிக்கிறது தான் பெரிசு.. என் கவிதைகளின் பாக்யம் உங்களால் ரசிக்கப்ப்டுவது....


//காதலானதே மனசு!//

ஒத்தை வரியிலே உள்ளுக்குள்ளே மெல்லிசைத் தவிழ விட்டுட்டீங்க... ம்ம்ம் இன்னொரு தலைப்பு ரெடி:)

Unknown said...

சுதர்சன் சார்...

//காதல்,நட்பு முதலானவற்றை விட்டு மத்ததப் பத்தியும் எழுதலாமே.//


http://sethukal.blogspot.com/2006/01/5.html
http://sethukal.blogspot.com/2005/12/3.html
http://sethukal.blogspot.com/2005/12/2_16.html

காதல் தவிர்த்த பொருள்களில் நான் எழுதிய சிலக் கவிதைகளின் சுட்டியை மேலேக் கொடுத்து உள்ளேன் படித்துப் பாருங்கள்...

//காலம் உங்களது எல்லாக் காயங்களையும் ஆற்றும்/ஆற்றியிருக்கும்னு நம்பறேன்.//

:)

பாலு மணிமாறன் said...

காதல் சுகம்...
காதலிக்கப்படுதல் சுகம்...
அதைவிட காதலிக்கப்படுவதாய்
நினைத்துக் கொள்வது இன்னும் சுகம்...

நீங்கள் நிறைய காதலிக்க வாழ்த்துக்கள் !!! :)))

Unknown said...

பாலு,
உங்கள் ஆசிகளுக்கு நன்றி நண்பரே

Unknown said...

Dreamz,

Kovamaa ethukku?

Unknown said...

Dreamz,

Relax... no hard feelings...:)