Tuesday, May 02, 2006

கதை 7:நண்பனின் காதலி (2)

நண்பனின் காதலி - பகுதி 1

1998 கல்லூரி காலம்... மறுபடியும் உங்களை எல்லாம் ஒரு பிளாஷ்பேக் மூட்க்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டால் வார்த்தைகள் விரயம் ஆகும் அதனால் நேரா விஷயத்துக்குப் போவோம்.

அது ஒரு மாலை இளவெயில் நேரம்... ஆகாயம் பார்த்து நம்ம நண்பன் வைரமுத்து ஆகும் முயற்சியில் தான் யார் என்பதையே மறந்துக்கொண்டிருந்த வேளையில் அவனை நான் மெரீனா அலைகளின் ஓரம் சந்தித்தேன்.... ஆமாங்க அவன் கவிதைங்கற பேர்ல்ல என் கழுத்தை கடித்துக் குதறினான். கேட்க யாருமில்லை என்னைத் தவிர.

எனக்குப் புரிஞ்சுப் போச்சு பையன் யாரோ ஒரு பொண்ணைப் பாத்து சித்தம் கலங்கி சீட்டியடிச்சுகிட்டு இருக்கான்னு தெளிவா விளங்கிப் போச்சு...

யாருடா அந்தப் புது பிகரு...?

பிகருன்னு சொல்லாதே ....I AM VERY SERIOUS ABOUT HER"

"ஆஹா இது என்ன புது கரடி... மச்சி சும்மா தமாஸ் பண்ணாதேடா...சொல்லு பிகர் எந்த ஏரியா?"

பிகருன்னு சொல்லாதே...எனக்கு கோவம் வரும்... அவ பேர் ரஞ்சனி... என் காலேஜ் ஜூனியர்... கோடம்பாக்கத்துல்ல இருந்து வர்றா... நான் ட்ரெயின்ல்ல பார்த்தேன்... மச்சி அவ செம ஹோம்லி லுக் மச்சி.....

நான் கேட்ட தகவலையும் தாண்டி அவள் புராணம் பாட ஆரம்பித்தான் சிரீஷ். நான் கொஞ்சம் டென்ஷனாகிப் போனேன்.

"டேய் டேய் நிறுத்துடா... நான் NIITல்ல பாக்காத பிகரா... இல்ல கோயில் வாசல்ல தாவணிப் போட்டு ஹார்ட் பீட்டை எகிற வைக்காத குத்துவிளக்குகளாடா... அப்படி என்னடா இவ பெரிய்ய...."

"போதும் நிறுத்து... இவ ஸ்பெஷல் தான்... அவ அழகை வேணும்ன்னா எனக்கு சரியா சொல்லத் தெரியாம இருக்கலாம்.. ப்ட் அவளை எனக்குப் பிடிச்சிருக்கு.. அவளைப் பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கு.... மறுபடியும் பாக்கணும்னு தோணுது..பாத்துகிட்டே இருக்கணும்ன்னு தோணுது...அவக் கிட்ட பேசணும்...அவப் பேச்சைக் கேக்கணும்.. அவச் சிரிப்பைப் பாக்கணும்.. அப்புறம்.."

"மாப்பூ... ஆளை விடுறா... தெரியாம கேட்டுட்டேன்... அவளை இம்புட்டு இதயம் நோக நீ லவ்றங்கற மேட்டர் எனக்குப் புரியாமப் போச்சுடா.. இப்போ புரியுது... சோ நீ எப்படியாவது அவளையே லவ் பண்ணி நாசமாப் போடா... இப்போ நைட் பீர் உட போலாம எப்படி?"

"இல்ல மச்சி எனக்கே அவ நினைப்பே பீர்ல்ல குளிச்ச பீலிங்கையே தருதுடா... நான் வர்றல்ல"

யப்பா சாமீ இந்த மாதிரி பேச்சு எல்லாம் என் லிட்டில் ஹார்ட் தாங்காதுடா சாமீ... நான் போய் இன்னிக்கு ஹாட் அடிச்சுட்டு அந்தர் பல்டி அடிச்சாத் தான் நான் நார்மல் ஆவேன் போலிருக்கு"

சிரீஷ் எழுந்து போய்விட்டான்.. நான் ரொம்ப நேரம் அலைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்...சிரீஷ்க்கு காதல் வந்துறுச்சுப் போலிருக்கு... எனக்கு நானேப் பேசிக் கொண்டேன்... சிரித்துக் கொண்டேன்.. சுண்டல் விற்கவந்த சின்னப் பையன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஒதுங்கி சென்றான்.

இதற்கு பிறகுத் தறுதலையாய்... சாரி ஒரு தலையாய்... சிரீஷின் காதல் புல்லட் ட்ரெயின் வேகத்தின் சிட்டி ட்ரெயினின் கம்பார்ட்மென்ட்களில் வளர்ந்தது...
சிரீஷ் கிட்டத்தட்ட தேவதாஸ் கோலம் பூண்டுவிட்டான்.. அந்த தேவதாஸ் பக்கத்தில் ஒரு நாய் உண்டு... இவன் பக்கத்தில் என்னை விட்டால் யாருண்டு.

மூணு வருஷமாச்சு... சொல்லித் தான் தொலையேன்டா

சொல்லி அவ வேற மாதிரி எதாவது சொல்லிட்டா... என்னாலே அதை தாங்க முடியாதுடா

"முடியாதுன்னு அவ சொல்லிட்டா சூசைட் பண்ணிப்பியா....?"

"சே..சே அதெல்லாம் செய்ய மாட்டேன்டா..."
"அப்புறம்..."
"தெரியல்ல என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியல்ல..."

"நான் சொல்லுறேன்... போய் சொல்லு...அவ ஒ.கே சொன்னா... கிளப் போறோம்... மூக்கு முட்ட தண்ணியப் போட்டு அந்த சந்தோஷத்தை விடிய விடிய கொண்டாடுறோம் என்ன?"

"நோ சொல்லிட்டா என்னடாப் பண்ணுறது??"

"ம்ம்ம் இருக்கே வழி நேரா அப்பவும் கிளப் போறோம் மூக்கு முட்ட தண்ணியப் போட்டுட்டு விடிய் விடிய சோகத்தைத் தண்ணியிலே கரைச்சுட்டு வீட்டுக்குப் போய் குப்புறப் படுத்துட்டு குறட்டை விடலாம் என்ன?"

சிரீஷ் என்னைப் பார்த்தப் பார்வையில் அவன் மட்டும் நக்கீரனாய் இருந்திருந்தால் சத்தியமாய் என் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. அப்பாடியோ... காதல்டா சாமி...

"சரி..சிரிஷ்.. நீ நேராச் சொல்ல வேண்டாம் ... யார்கிட்டயாவது உன் விருப்பத்தைச் சொல்லி இந்தப் படத்துல்ல எல்லாம் வர்ற மாதிரி தூது அனுப்பக் கூடாதா?"

"எங்களுக்குள்ளே அப்படி எந்த ஒரு பொதுவான பிரண்ட்ம் இல்லயே... "

"லவ் லெட்டர்.. அதான் ஒரே வழி..."

கற்காலக் காதல் துவங்கி கலிகாலக் காதல் வரைக்கும் சீராய் வளர்வதற்கும் சிதைந்து சிதறுவதற்கும் வழிவகை செய்யும் ஒரே காதல் யுக்தி காதல் கடிதம் தான். என் அறிவுக்கு எட்டிய மகத்தான ஐடியாவை அடுத்த சில நாட்களில் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.
ம்ம்..அப்படி ஒரு டீம் ஓர்க். எத்தனைப் புத்தகங்கள் எத்தனை கவிஞர்கள்.. எத்தனை எழுத்தாளர்கள்..எங்களுக்கு உதவி இருப்பார்கள் தெரியுமா? பின்னே கண்ணதாசனிலிருந்து பழனிபாரதி வரை ஒரு கவிஞரின் வரி விடாது படித்துப் பார்த்து பார்த்து நகல் எடுக்கப் பட்ட ஒரு உன்னதக் காதல் கடிதம் அது...

முழுசா மூணு நாள் உக்காந்து எழுதி முடிச்சு... இதுல்ல ஒரு நாள் காலேஜ்க்கு கட் அடிச்சுட்டு வேற இந்த வேலையை முடிச்சோம்.

இப்போ காதல் என்னும் தேர்வு எழுதும் அந்த முக்கியமான நாள் வந்து நின்னுச்சு. எனக்கு தேர்வு நேரம்.
நம்ம நண்பனைப் பார்த்துக் கடைசி நேரக் கோச்சிங் எல்லாம் கொடுக்க முடியல்ல. அப்போ செல் போன் எல்லாம் பணக்காரகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற உயர்வான நிலையிலிருந்த ஒரு ஏற்ற தாழ்வின் காலம்.

வீட்டு போனிலிருந்து முனகலாய்... "மச்சி தைரியம்டா.. ஆல் த பெஸ்ட்..." சொல்லிவிட்டு நிமிர...

"ஆமா யாருக்கு குசுகுசுன்னு ஆல் த பெஸ்ட் சொல்லுற கேர்ள்பிரண்ட்க்கா..." என் பாசக்கார கசின் அக்கா கேட்டுச் சிரிக்க... நான் கெக்கப் பிக்கே எனப் பதிலுக்குச் சிரித்து என் கெத்தைக் காப்பாற்ற வேண்டியக் கட்டாயத்துக்குத் தள்ளபப்ட்டேன்.

நம்ம பரீட்சை டென்ஷ்ன் விட நண்பன் வாழ்க்கைப் பரீட்சைத் தான் நமக்கு அதிக டென்ஷன் கொடுத்தது. சாயங்காலம் வீடு வந்ததும்... டெலிபோனைச் சுத்த ஆரம்பிச்சேன்.. கை விரல் ஒரு முக்கா இஞ்ச் தேஞ்சு டேமெஜ் ஆகிப் போற அளவுக்குப் போயிருச்சு... போன் மணி அடிக்குது. அவங்க வீட்டுல்ல யாரும் போனை எடுத்தப் பாடில்லை.

நமக்கா தாள மாட்டேங்குது.

என்னாச்சோ?

ஒருவேளை இப்படி இருக்குமோ? இல்லை அப்படி இருக்குமோ?

மனசு ஒரு நிலை இல்லாமல் தவிச்சுப் போச்சு... இதுக்கு மேலயும் நமக்குத் தாங்காது.

அப்போ சிரீஷ் வீடு மயிலாப்பூர்ல்லயும் என் வீடு திருவான்மியூரிலும் இருந்துச்சு... என் டி.வி.எஸ் 50ஐ எடுத்துகிட்டு அதுல்ல பெட்ரோல் இல்லாமப் போய் நான் அல்லல் பட்டது தனிக்கதை... அவன் வீட்டுக்கு போய் நிக்கும் போது மணி எட்டு.

அண்ணன் வழக்கம் போல் மொட்டை மாடியிலே தவக் கோலம் பூண்டிருந்தார். நான் மூச்சிரைக்க ஓவர் ஹெட் டாங்க் பக்கம் போய் நின்னேன். அவன் எந்த வித சலனமும் இல்லாமல் என்னை நிமிர்ந்துப் பாத்தான். கிட்டத்தட்ட 100 மீ ரேஸ் ஓடி கடைசியா வந்தவன் ( அந்த அனுபவம் நமக்கு ரொம்ப ஜாஸ்திங்க) மாதிரி நான் அவனையேப் பாக்குறேன்...

"காலெஜ் போனீயா?"
"ம்.."

"ம் ண்னா"

"போனேன்"

"அவளைப் பார்த்தீயா?"

"ம்ம்.பாத்தேன்"

"கொடுத்தியா?"

"இல்ல" என்றவன் வானம் பார்த்து லுக் விட்டான். நான் செமக் கடுப்பு ஆயிட்டேன்.

"டேய் என்னடா? விளையாடுறீயா? சொல்லுடா?"

"இல்லடா மச்சி.. காலையிலே அவக் கிட்டே லெட்டர் கொடுக்கத் தான் போனேன். அப்போ இன்னொரு சீனியர் பையன் எனக்கு ஜஸ்ட் முன்னாடி போய் அவக்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்துட்டான்டா"

"அப்புறம்"

"அவ அழ் ஆரம்பிச்சுட்டா.... பெரிய கலாட்டா ஆயிடுச்சு... கோவத்தில்ல அவனைப் பார்த்து செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்ன்னு வேற சவுண்ட் விட்டாளா நான் கொஞசம் பயந்துப் போயிட்டேன்"

என் மூட் சட்டென மாறி எனக்கு கொல்லெனச் சிரிப்பு வந்தது. விழுந்து விழுந்துச் சிரித்தேன். சிரிஷ் ஒரு மாதிரி ஏக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

"மச்சி.. பாப்பா படிப்ஸ் பார்ட்டி போலிருக்கு...சோ யார் பண்ண புண்ணியமோ இன்னிக்கு நீ பப்ளிக்கா செருப்பட் வாங்கமா எஸ்கேப் ஆயிட்டே...சரி சரி இதெல்லாம் உனக்கு ஒத்துவராது... நம்ம வேலையப் பாப்போம் கிளம்பு" என்றேன் நான்.

"ஆமா.. அந்த லெட்டர என்னப் பண்ணுன...?" பாதி பீர் உள்ளேப் போயிருந்தப் பொழுதினில் கேட்டேன்.

"இதோ என் இதயத்துக்கு பக்கமா சேப்டியா வச்சிருக்கேன் மாப்ளே"

"போடா.. வென்று... ஆம்பிளையப் பாத்துச் செருப்பாலே அடிப்பேங்கறா.. அவளுக்கு எழுதுன லெட்டர் அங்கே எதுக்கு ?"
நான் வலுக்கட்டாயமாக அந்த லெட்டரைப் பிடுங்கி சுக்கல் சுக்கலாக் கிழித்து கசக்கி காற்றில் பறக்க விட்டு சிரித்தேன்.
அவனும் போதையில் சிரித்தான் என்று தான் நினைக்கிறேன்.

அதற்கு பிறகு நான் என் தேர்வுகளில் தீவிரமாகக் கவனமானதில் எனக்கும் சிரீஷ்க்கும் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது.
ஒரு மூணு வாரம் கழிச்சு அவனை அதே தவக் கோலத்தில் அவன் வீட்டு மொட்டை மாடியில் மீண்டும் ஒரு இளம் மாலைப் பொழுதினில் சந்தித்தேன்.
எனக்கு ஒரளவிற்கு விவரம் எல்லாம் புரிஞ்சுப் போச்சு... ம்ஹம் எல்லாம் காதல் செய்த மாயமந்திரம்.
" என்னாலே அவளை மறக்க முடியல்லடா... நான் என்னச் செய்யுறது சொல்லு?"
நண்பனின் மனசு என் கண்ணிலும் நீர்க் கோர்த்தது.

" இன்னும் மூணு நாள்... அப்புறம் காலேஜ் முடிஞ்சுப் போயிடும்டா..
நான் அவளைக் காதலிச்சது அவ்ளுக்கு தெரியாமலே போயிடும்ன்னு நினைக்கும் போது தான் என் மனசுக்கு ரொம்பக் கஷ்ட்டமாயிருக்குடா... முதல்ல எங்கே அவ என்னை விட்டு விலகிடுவாளோன்னு பயந்தேன்... இப்போ நான் சொல்லாட்டியும் விலகத் தான் போறா.. ஒரு வேளை என் காதலை நான் அவக்கிட்டச் சொல்லி அவ என் காதலுக்கு ஓ,கே சொல்லிட்டா... அவ எங்கூடவே இருந்துடுவா இல்லையா?
அதனால நான் என் காதலைச் சொல்லணும்டா"

அவன் அப்படி பேசும் போது அவன் எல்லாத்தையும் மறந்து ஒரு ஆனந்த நிலைக்குப் போயிட்டான்.

ஓ.. ஓ ஒரு வேளை அது தான் காதல் மயக்கமோ... எனக்கு அது என்னன்னு தெரியல்ல...

ஆனா சிரீஷ்வோட மொத்த சந்தோஷமும் அந்த பொன்ணுகிட்ட்த் தான் இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது... என் நண்பனுக்கு அவன் சந்தோஷம் கிடைக்கணும்ன்னு விரும்புனேன்...

அதுக்கு மறுநாள்....

நண்பனின் காதலி - பகுதி 3

9 comments:

Anonymous said...

kadhai nalla than pogudhu...ella makkalukum avanga avanga college nyabagam vara vachudum polruku

நாமக்கல் சிபி said...

தேவ்,

கதை நல்லா போகுது!
அடுத்த நாள் என்ன ஆச்சு? தெரிஞ்சிக்க ஆவலா இருக்கோம்.

பொன்ஸ்~~Poorna said...

கதை சூப்பர் தேவ்... அங்கங்க நிறுத்தி நிறுத்தி டென்சன் ரொம்ப கூட்டறீங்க

கவிதா | Kavitha said...

தேவ், கதை சூப்பர்.. தொடர் வேண்டாமே... முழுசா சொல்லி முடிச்சிடுங்களேன்..ப்ளீஸ்..

Unknown said...

//kadhai nalla than pogudhu...//

நன்றி அனானி...

//ella makkalukum avanga avanga college nyabagam vara vachudum polruku //

கல்லூரி நாட்கள் ஒவ்வொரு மனிதனும் மறக்க முடியாத பட்டாம்மூச்சி தினங்களாயிற்றே:)

ம்ம்ம் அனானி கருத்துச் சொல்லும் போது உங்கப் பேரைப் போட்டிருந்தா நல்லா இருந்து இருக்கும் :)

Unknown said...

சிபியாரே நன்றி.. கொஞ்சம் பொறுமை... சீக்கிரமே தெரிஞ்சுக்குவீங்க.. ஒண்ணும் மட்டும் இப்போச் சொல்லுறேன்.. அடுத்த நாள் பெரிசா எதுவும் நடந்திடல்ல...:) அதுக்கும் பின்னாடி தான்... சரி சரி கதையிலேயெ சொல்லிடுறேன்.. கொஞசம் வெயிட் ப்ளீஸ்

Unknown said...

அக்கா பொன்ஸ் இலக்கணச் செம்மலே... நேத்து நீங்க நம்ம கச்சேரியிலேப் போட்டப் பின்னூட்டத்திற்கும் இந்தக் கதைக்கும் ஒரு சின்ன சம்பந்தம் இருக்கு :)

Unknown said...

கவிதா வாங்க தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக...

ஒரு சின்ன செய்தி சொல்லிடுறேன்.. இது தொடர் கதை எல்லாம் இல்லங்க... ம்ம் தொடர்ந்து எழுத முடியாதக் காரணங்களால் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கதை இன்னும் ஒரிரு நாட்களில் நிச்சய்ம் முழுக் கதையையும் இங்கேப் பதிந்து விடுகிறேன்.. தயவு கூர்ந்து பொறுத்தருள்க :)

Unknown said...

இந்தக் கதைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.