Thursday, December 14, 2006

கவி 26:டிசம்பர் பக்கங்கள்

டிசம்பர் மாதம்..
போர்வைக்குள் தூக்கம்..
மெதுவாய் திறக்கும்
என் இமைகளின்
இடையினில்
பூக்களைச் செருகிச்
செல்கிறாய்...

உன் புன்னகை..

சூடு பறக்கும்
காலைக் காபி..
ம்ம்ம் பருகும் போது
பரவசம்....
கோப்பை நுனியில்
மிச்சமிருப்பது

உன் முத்தம்...

போர்வை விலக்கிச்
சோம்பல் முறிக்க...
தேகம் நெளிக்கிறேன்..
என் செல்கள்
ஒவ்வொன்றிலும்
முந்தைய இரவினில்
குடிப் புகுந்த

உன் வெட்கம்...

ஜன்னல் வழியே
குளிர் காற்று
முகத்தில் அறைய
மூச்சு காற்றில்
மிஞ்சி நிற்கும்

உன் வெப்பம்.....

சன்னமாய் ஒலிக்கும்
சின்னதொரு பறவைக்
குரலின் வழியே
என் விடியல்
அறிவிக்கும்

உன் சிணுங்கல்...

இப்படி
டிசம்பர் மாதம்
என் டைரியின்
மொத்தப் பக்கங்களும்
சேமித்து வைத்திருப்பது

உன் காதல்...

20 comments:

Unknown said...

சோதனைப் பின்னூட்டம் :)

சேதுக்கரசி said...

ரொமாண்டிக்கா இருக்கு :)

சந்தனமுல்லை said...

ம்..கலக்கலா இருக்குங்க!

சேதுக்கரசி said...

என்கோடிங் பிரச்சினையோ என்னவோ.. நம்ம பேரெல்லாம் குளறுபடி (ஃபையர்ஃபாக்ஸில் பார்க்கிறேன்)

Anonymous said...

dev superb :) rasigai

MyFriend said...

சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
உங்கள் தோழி..
.:: மை ஃபிரண்ட் ::.

Unknown said...

//ரொமாண்டிக்கா இருக்கு :)//

நன்றி சேதுக்கரசி. உங்களை மாதிரி யாராவது வந்துச் சொன்ன பிறகு தான் நாம எழுதுனது எழுதுன மாதிரியே படிக்கறவங்களும் புரிஞ்சுக்குறாங்கன்னு ஒரு சின்ன சந்தோஷ்ம்.

Unknown said...

//ம்..கலக்கலா இருக்குங்க!//
வாங்க சந்தனமுல்லை.. உங்கள் முதல் வருகை நல்வருகை ஆகுக... அப்படியே நேரம் கிடைக்கும் போது பக்கம் 78ல்ல இருக்க மத்தச் செதுக்கலையும் ஒரு பார்வை பார்த்துருங்க நன்றி

Unknown said...

//என்கோடிங் பிரச்சினையோ என்னவோ.. நம்ம பேரெல்லாம் குளறுபடி //

ஆமாங்க பீட்டா வெர்ஷ்னுக்கு மாறிய பின் டெம்பளேட் குளறுபடிகள் நிறையவே சந்திக்க வேண்டி உள்ளது.. முடிந்த வரையில் சீக்கிரம் சரி செய்ய முயல்கிறேன்.. அது வரைக்கும் பொறுத்துக்கங்க ப்ளீஸ்

Unknown said...

//dev superb :) rasigai //

வாங்க ரசிகை.. நன்றி

Unknown said...

//சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..//

//உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள். //

உங்க பிராத்தனைகளுக்கும் நட்புக்கும் பாசத்துக்கும் நான் சொல்லும் நன்றிங்கற வார்த்தை ரொம்பச் சின்னதுங்க...
என்னங்கச் சொல்லுறது.. உண்மையிலே நெகிழ வைச்சிட்டீங்க.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
MyFriend said...

//உங்க பிராத்தனைகளுக்கும் நட்புக்கும் பாசத்துக்கும் நான் சொல்லும் நன்றிங்கற வார்த்தை ரொம்பச் சின்னதுங்க...
என்னங்கச் சொல்லுறது.. உண்மையிலே நெகிழ வைச்சிட்டீங்க.//

ஆஹா.. இது இதுதான் என்னை உண்மையிலேயே நெகிழ வைச்சிடுச்சு தேவ்.. புதுசா நிறைய கதைகளை எழுதுங்க. படிக்க ரொம்பவும் ஆர்வமா இருக்கு..

Unknown said...

//ஆஹா.. இது இதுதான் என்னை உண்மையிலேயே நெகிழ வைச்சிடுச்சு தேவ்.. புதுசா நிறைய கதைகளை எழுதுங்க. படிக்க ரொம்பவும் ஆர்வமா இருக்கு.. //


மீண்டும் நன்றி மை பிரண்ட் :)

நவீன் ப்ரகாஷ் said...

வெட்கமான வெப்ப முத்தம்
சிணுங்குகின்றது காதலாக..

கழியாத மார்கழி அழகாக ...

மேலும் காதலுறுங்கள் தேவ் !! :))

MyFriend said...

தேவ்.. என்ன கோபம் உங்களுக்கு? என்கவுண்டர் கதையை உங்க வலையிலிருந்து எடுத்துட்டீங்க?

Unknown said...

தல,

டிசம்பருக்கேத்த ரொமான்ஸ் தான் போங்க :)

Unknown said...

//வெட்கமான வெப்ப முத்தம்
சிணுங்குகின்றது காதலாக..

கழியாத மார்கழி அழகாக ...

மேலும் காதலுறுங்கள் தேவ் !! :))//

வாங்க நவீன்,

கவிதைக்கு கவிதையால் அலங்காரம் செஞ்சுட்டிங்க... நன்றி நவீன்.

Unknown said...

//தேவ்.. என்ன கோபம் உங்களுக்கு? என்கவுண்டர் கதையை உங்க வலையிலிருந்து எடுத்துட்டீங்க? //

வாங்க மை பிரெண்ட்,

கோபம் எல்லாம் இல்லைங்க.. கதை இதோ இப்போது உங்கள் பார்வைக்கு தயாராயிருக்கு படிச்சுட்டு நீங்கத் தான் சொல்லணும்.

Unknown said...

//
டிசம்பருக்கேத்த ரொமான்ஸ் தான் போங்க :) //

காதல் முரசின் தீர்ப்பாச்சே தப்பாப் போகுமா!!! :)))