
நீ தினம் எனக்குக்
காதலைச் சொன்னப்
பொழுதுகளில் புரியாமல்
போன செய்தி...
பின்னொரு காதலர் தினத்தில்
தொண்டைக்குழிக்குள்
பந்தாய் எழும்பிக்
கண்ணிடுக்கில் கண்ணீர் துளியாய்
கலவரப் படுத்தியது என்னை..
கனவுகளின் பின்னே
கால் வலிக்க ஓடியதில்
காணாமல் போனவைகள்
பட்டியலில்
முதலிடம் எனக்கும்
அடுத்த இடம்
நம் காதலுக்கும்..
பந்தயங்களில்
பரிசுப் பணம்
பாதைகளில்
புகழாரம்..
சேர்த்து சேர்த்து
சோர்ந்தக் கதையின்
சிக்கலானப் பக்கங்களாய்
வாழ்க்கை..
சோர்வையும் சோர்வடிக்க
வித்தைகள் பழகி
விண்ணைத் தொட்டு
விடுவேன் மூச்சை
என்ற படி ஓடியவன்
சிகரங்களின் சிங்காரத்தில்
சில்லிட்டு நிற்கும் போது..
என்னைச் சுற்றிலும்
பேரிரிச்சலாய்
ஆரவார அலைகள்
எனக்குள்ளே
மயான அமைதி...
நிழல்களில் பதுங்கியதில்
நிஜங்களைத் தொலைத்தாயிற்று..
நினைவுகளில் நனைந்தப் படி
ஞாபகங்களில் வெந்துப் போகிறேன்
மொத்தமாய் முடிவதற்குள்
ஒரு முறை
வந்துப் போ
உன் புன்னகையால்
என்னை பெற்று எடு..
இல்லையேல்
உன் நெருப்புப் பார்வையால்
எனக்குக் கொள்ளியிடு..
22 comments:
/கனவுகளின் பின்னே
கால் வலிக்க ஓடியதில்
காணாமல் போனவைகள்
பட்டியலில்
முதலிடம் எனக்கும்
அடுத்த இடம்
நம் காதலுக்கும்../
:(
என்ன தல இப்படி சோகத்த வடிச்சுட்ட?
சோகமா இருந்தாலும் கவிதை நல்லாருக்குப்பா...
தொடரும்...
"Kaanamal ponavaigal pattiyalil muthal idam enakkum, adutha idam nam kadhalukkum" very nice lines :) === rasigai
ம்...
சோகமான உள்ளம்
நேசத்தை அழைக்கிறது!
கவிதை நன்றாகவே இருக்கிறது வாழ்த்துக்கள்!
இன்னைக்குதான் இங்க வந்து என்க புது கதைன்னு கேட்கலாம்ன்னு வந்தேண். ஒரு கவிதையை பார்த்தேன்.. நன்றாகத்தான் இருக்கு!!! ;-)
வேண்டும்.. வேண்டும்.. வேண்டும்.. கதை.. கதை.. கதை..
அருமையான வரிகள்.....
உண்மையின் நிழல் இரவானபோதுதான் தெரியும்....
நண்பரே !
கவிதை நன்றாக இருக்கிறது..
ஒரு சின்ன சந்தேகம்..
நல்ல காதல் கவிதைகள் பெரும்பாலும் சோகமாக இருப்பது ஏன்..?
markka ninaikum padaigalai meeti sellum kavithai. nice poem continue.
//என்ன தல இப்படி சோகத்த வடிச்சுட்ட?
சோகமா இருந்தாலும் கவிதை நல்லாருக்குப்பா...
தொடரும்... //
கவிதை நல்லாயிருக்குன்னு நம்ம காதல் முரசேச் சொல்லியாச்சு.. சோகம் இனி சொல்லாமல் விடைபெறும் :)
//"Kaanamal ponavaigal pattiyalil muthal idam enakkum, adutha idam nam kadhalukkum" very nice lines :) === rasigai //
வாங்க வாங்க ரசிகை நன்றி
//ம்...
சோகமான உள்ளம்
நேசத்தை அழைக்கிறது!
கவிதை நன்றாகவே இருக்கிறது வாழ்த்துக்கள்! //
வாங்க சத்தியா முதல் தடவையா நம்மப் பக்கத்துக்கு வந்து இருக்கீங்க சந்தோசம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க.
//இன்னைக்குதான் இங்க வந்து என்க புது கதைன்னு கேட்கலாம்ன்னு வந்தேண். ஒரு கவிதையை பார்த்தேன்.. நன்றாகத்தான் இருக்கு!!! ;-) //
வாங்க மை பிரெண்ட் கவிதையை 'நல்லாயிருக்கு'ன்னு சொல்லிட்டீங்க.. சந்தோசம்ங்க.. நன்றி.
//வேண்டும்.. வேண்டும்.. வேண்டும்.. கதை.. கதை.. கதை..//
உங்களுக்கு முடியாதுன்னு சொல்ல முடியுமா? நிச்சயம் ஒரு கதையை இந்த வாரம் வெளியிட்டுருவோம்ங்க
//அருமையான வரிகள்.....//
நன்றி ஜி
//உண்மையின் நிழல் இரவானபோதுதான் தெரியும்.... //
அட இது அற்புதமான வரி ஜி... பின்னுறீங்க..
//நண்பரே !
கவிதை நன்றாக இருக்கிறது..
ஒரு சின்ன சந்தேகம்..
நல்ல காதல் கவிதைகள் பெரும்பாலும் சோகமாக இருப்பது ஏன்..? //
நன்றி நண்பரே.. உங்கள் கேள்விக்கானச் சரியானப் பதில் என்னிடம் இல்லை.. ஒரு யுகமாய் வேண்டுமானால் சொல்கிறேன்..
வெற்றி பெற்ற காதல்கள் வாழ்க்கையில் பதிவுச் செய்யப்படுகினறன..
வலியில் முடியும் காதல்கள் அதிகம் கவிதைகளில் பதிவுச் செய்யப்படுகின்றன.. அதனால் இப்படி இருக்குமோ?
//markka ninaikum padaigalai meeti sellum kavithai. nice poem continue. //
Thanks for your visit and wishes Priya.. Pls keep visiting:)
//பின்னொரு காதலர் தினத்தில்
தொண்டைக்குழிக்குள்
பந்தாய் எழும்பிக்
கண்ணிடுக்கில் கண்ணீர் துளியாய்
கலவரப் படுத்தியது என்னை..//
irukum varai arumai theriyathu... kathalum ithil serthi!
nalla varigal, keep writing!
//irukum varai arumai theriyathu... kathalum ithil serthi!//
இல்லாதப் பொருள் நினைத்து ஏங்கும் மனம் இருக்கும் நல்ல்வைகளை நினைக்க எப்போதும் தயங்கத் தானே செய்கிறது.. இதுவும் உலக இயல்பு தானோ..
//nalla varigal, keep writing!
Thanks ..:-)
ரொம்ப அருமையா இருக்கு.
பின்னூட்டத்தில் சோகமா ஏன் இருக்குன்னு ஒரு யூகம்
சொல்லீருக்கீங்களே அதுவும் நல்லாருக்கு.
//ரொம்ப அருமையா இருக்கு.
பின்னூட்டத்தில் சோகமா ஏன் இருக்குன்னு ஒரு யூகம்
சொல்லீருக்கீங்களே அதுவும் நல்லாருக்கு. //
வாங்க முத்து லெட்சுமி,
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.. நேரம் கிடைக்கும் போது பக்கம் 78 ஐ சுத்திப் பாருங்க.. கருத்துச் சொல்லுங்க..
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார்
ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே!
"கனவுகளின் பின்னே
கால் வலிக்க ஓடியதில்
காணாமல் போனவைகள்
பட்டியலில்
முதலிடம் எனக்கும்
அடுத்த இடம்
நம் காதலுக்கும்.."
"சோர்வையும் சோர்வடிக்க
வித்தைகள் பழகி"
"நிழல்களில் பதுங்கியதில்
நிஜங்களைத் தொலைத்தாயிற்று.."
"உன் புன்னகையால்
என்னை பெற்று எடு.."
arumaiyana kavithai
punnahaiyal pettru yedukka kooda mudiyuma?
kathali in parvai usual a kulirvikkum parvai yaha thane irukkum
neruppu parvai yendru solli irukirirgalae?
athanai kopama avalukku ungalidam?
Post a Comment