

இவனுக்கு அறிமுகம்
தேவை இல்லை...
இவன் இன்னொரு
முகத்திற்காக
தன் சொந்த முகம்
தொலைத்தவன்
கரவொலிகளும்
விசில் வேட்டுகளும்
இவன் அடையாளங்கள்
நடித்தவன்
நிமிர்ந்து எழும்ப
இவன் வீழ்ந்துக் கிடப்பான்
அவன் புகழ்
வெளிச்சத்தில் திளைக்க
இவன் விழிகளை
விற்று இருளை
உடுத்திக் கொள்வான்
தலைவனுக்குக்
கொடிக் கட்ட
இவன் தன்
கோவணத்தையும் துறப்பான்
பிள்ளைப் பால்
கேட்டுக் கதறும்
செவிடனாய் இவன்
கட் அவுட்டிற்கு
பாலாபிஷேகம் செய்வான்
கட்டி வந்தவள் கூந்தலில்
கால் முழப் பூ சூட்டாத இவன்
போஸ்டர்க்கு மலர் மாலை
மாட்டி மகிழ்வான்
அவன் அப்படித் தான்
அவன் ரசிகன்டா..
நாளைய முதல்வர்களின்
இன்றைய தொண்டன்டா..
8 comments:
Helo!
Very, very good
Tank you
//இவனுக்கு அறிமுகம்
தேவை இல்லை...//
ஆமாம்.. தேவை இல்லை.. "இவன்"தானே நாமெல்லாம்.. ;-)
//Helo!
Very, very good
Tank you
//
Thanks David
////இவனுக்கு அறிமுகம்
தேவை இல்லை...//
ஆமாம்.. தேவை இல்லை.. "இவன்"தானே நாமெல்லாம்.. ;-) //
மை பிரெண்ட் ஒரு விதத்துல்ல உண்மைத் தான்
//இவன் இன்னொரு
முகத்திற்காக
தன் சொந்த முகம்
தொலைத்தவன்
//
சூப்பர் தேவ்.. மிக அருமை.
//அவன் அப்படித் தான்
அவன் ரசிகன்டா..
நாளைய முதல்வர்களின்
இன்றைய தொண்டன்டா//
நல்ல punch உடன் முடித்து உள்ளாய்..
இது போன்று காதலில்லாத மற்ற கவிதைகளும் அதிகம் எழுது தேவ்..
//இது போன்று காதலில்லாத மற்ற கவிதைகளும் அதிகம் எழுது தேவ்.. //
நிச்சயமா எழுதுறேன் மனதின் ஓசையாரே.. உன் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி.
வணக்கம் தேவ்...
ரொம்ப அருமையான கவிதை தேவ்...
\\நடித்தவன்
நிமிர்ந்து எழும்ப
இவன் வீழ்ந்துக் கிடப்பான்\\
உண்மை தேவ்..யதார்த்த வரிகள்
வாங்க கோபிநாத்,
//ரொம்ப அருமையான கவிதை தேவ்...
\\நடித்தவன்
நிமிர்ந்து எழும்ப
இவன் வீழ்ந்துக் கிடப்பான்\\
உண்மை தேவ்..யதார்த்த வரிகள் //
ரசனைக்கு நன்றி.. தொடர்ந்து நம்ம பக்கம் 78க்கு வாங்க உங்கக் கருத்துக்களைச் சொல்லுங்க.. :)
Post a Comment