Monday, March 05, 2007

கவி 30:காதல் சாதி

காதலுக்குக் கண்ணில்லை
பஞ்சாயத்தில் முடிவானது..
அடப் பாவிகளா..
நீங்கள் எழுதியத் தீர்ப்பில்
தெரிகிறதே
உங்களுக்கு இதயமில்லை
என்று..
கண்ணைத் தொலைத்தாலும்
வாழலாம்..
இதயம் தொலைத்து....
ஊர் பஞ்சாயத்தின்
இறுதி ஊர்வலத்தில்
காதல் கல்லெறிப்பட்டது...

காதலை வெட்டிப் புதைப்பாங்களாம்..
மார்தட்டினார்கள்..
எங்கே வெட்டுங்கள் பார்ப்போம்..
வீசிய அரிவாள்களின் முனையில்
பூக்கள் பூத்த மாயமென்ன..
காதலை உரசியதில்
அரிவாள்களும்
அர்த்தம் பெற்றன...
அதைப் பிடித்தவர்களோ
அர்த்தம் இழந்தனர்...

காதல் செய்தால்
கொளுத்துவோம்
கொளுத்துங்கள்..
கொழுந்து விட்டு
எரியட்டும் காதல் சோதி...
திக்கெட்டும்
தெரியட்டும்
காதலின் சேதி...

கட்டி வச்சி அடிப்போம்..
காதலை காயப்படுத்தி
கலவரப் படுத்துவது
அவர்கள் நோக்கம்
காயம்பட்டால் என்ன
காதலுக்கு காதலே
அல்லவா மருந்து..
காதல் அங்கே
மறுபடி மறுபடி
சுரந்தது.....

ஆயுதங்கள் அனுதாபப்பட்ட
அளவிற்கு
ஆட்கள் அசையவில்லை..
கைகளாலே
காதலுக்கு
எழுப்பினார்கள்
கல்லறை..
காற்றில் உதிர்ந்தப்
பூக்கள் அதில் படர...
கல்லறைக்கு மேல் அமர்ந்து
காதல் சிரித்தது...

காதல் தொலைந்தது
சொல்லியப் படி
கூட்டம் கலைந்தது
ஊர் சுத்தமானதாய்
கொட்டடித்து
முழங்கியது...

உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்
சுத்தமாக்கிய
ஊர் வீதிகளிலே
கைகோர்த்தப் படி
உன் காதலும்
என் காதலும்
நடந்துப் போகிறது...

என்ன செய்ய
முடிகிறது
இவர்களால்...!

21 comments:

Unknown said...

காதலர்கள் பிரியலாம்…
காதல்?

Anonymous said...

காதலர்கள் மடிந்தாலும்,காதல் மடியாதோ!
மனதை வருடிய கவிதை அண்ணா.வாழ்த்துக்கள்

இம்சை அரசி said...

nice கவிதை அண்ணா... படிச்சதும் ரொம்ப கஷ்டமா இருக்கு...

இதை படிச்சதும்
"ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு... ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு..." இந்த வரிகள் ஞாபகத்துக்கு வருது...

MyFriend said...

kadhal kavithai..
orE vaarthai..
superb..

aanaal,
enakku..
kathai
kathaithaan
venum..

seekkiram
ezuthunga..
kaahthirukkiren..

கோபிநாத் said...

தேவ்..

அருமையான கவ்தை...

\\உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்
சுத்தமாக்கிய
ஊர் வீதிகளிலே
கைகோர்த்தப் படி
உன் காதலும்
என் காதலும்
நடந்துப் போகிறது...\\

உடலுக்கு தான் பிறிவு...உள்ளத்துக்கு என்றும் இல்லை..

ஜி said...

அருமையான கவிதை தேவ்....

அமாவாசை இரவில்
நிலவை ஒழித்து விட்டதாக
மார்தட்டிக் கொள்வார்கள்
அந்தப் பெரிய மனுசன்கள்...

தண்ணீர் ஊற்றாமலே
நிலவு வளரும்
என்று அறியாமலே...

என்னடா மொக்கயா கமெண்ட் போட்டிருக்கேன் பாக்குறீங்களா... இதத்தான் எங்கூருல கவிதைன்னு சொல்வோம் :))))

Unknown said...

//காதலர்கள் பிரியலாம்…
காதல்? //

அருட்பெருங்கோ காதல் பிரியும்.. பிரிவினில் பெருகும்.. பெருகியதில் நிறையும்..

Unknown said...

//காதலர்கள் மடிந்தாலும்,காதல் மடியாதோ!
மனதை வருடிய கவிதை அண்ணா.வாழ்த்துக்கள் //

நன்றி துர்கா..

Unknown said...

//nice கவிதை அண்ணா... படிச்சதும் ரொம்ப கஷ்டமா இருக்கு...//

நன்றி இம்சை அரசி...

//இதை படிச்சதும்
"ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு... ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு..." இந்த வரிகள் ஞாபகத்துக்கு வருது...
//
நல்ல வரிகள்..இது யாருடையதுன்னுத் தெரிஞ்சுக்கலாமா?

Unknown said...

//kadhal kavithai..
orE vaarthai..
superb..//

Thanks my friend

//aanaal,
enakku..
kathai
kathaithaan
venum..

seekkiram
ezuthunga..
kaahthirukkiren..//

:)

Unknown said...

//தேவ்..

அருமையான கவ்தை...

\\உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்
சுத்தமாக்கிய
ஊர் வீதிகளிலே
கைகோர்த்தப் படி
உன் காதலும்
என் காதலும்
நடந்துப் போகிறது...\\

உடலுக்கு தான் பிறிவு...உள்ளத்துக்கு என்றும் இல்லை.. //


நன்றி கோபிநாத்.. வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown said...

//அருமையான கவிதை தேவ்....//
நன்றி ஜீ

//அமாவாசை இரவில்
நிலவை ஒழித்து விட்டதாக
மார்தட்டிக் கொள்வார்கள்
அந்தப் பெரிய மனுசன்கள்...

தண்ணீர் ஊற்றாமலே
நிலவு வளரும்
என்று அறியாமலே...

என்னடா மொக்கயா கமெண்ட் போட்டிருக்கேன் பாக்குறீங்களா... இதத்தான் எங்கூருல கவிதைன்னு சொல்வோம் :)))) //

நம்ம ஊர் தானே உங்களுக்கும் பாளையங்கோட்டையிலே படிச்சப் புள்ள தானே.. ஒத்துக்கிடுறேன் உங்க கவிதையை.. :)

இம்சை அரசி said...

//இதை படிச்சதும்
"ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு... ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு..." இந்த வரிகள் ஞாபகத்துக்கு வருது...
//
நல்ல வரிகள்..இது யாருடையதுன்னுத் தெரிஞ்சுக்கலாமா?
//

இது அமராவதி படத்துல வர "உடல் என்ன உயிர் என்ன" பாட்டு அண்ணா....

நவீன் ப்ரகாஷ் said...

//கல்லறைக்கு மேல் அமர்ந்து
காதல் சிரித்தது...//

:)) நல்லா இருக்கு தேவ்:))

Deekshanya said...

nalla eluthi irukinga dev, vaalthukkal. kaathal, kulanthai mathiri, epadi enda roobathila irunthalum alagu than.

Unknown said...

//இது அமராவதி படத்துல வர "உடல் என்ன உயிர் என்ன" பாட்டு அண்ணா....
//

அமராவதியிலே வர்ற பாட்டா அடுத்த முறை பாட்டைக் கவனமாக் கேக்குறேன்ம்மா..

Unknown said...

//:)) நல்லா இருக்கு தேவ்:)) //

நன்றி நவீன்

Unknown said...

//nalla eluthi irukinga dev, //

வாங்க தீக்ஷன்யா,

ரொம்ப நாளா இந்தப் பக்கம் உங்களை காணும்..வேலை ஜாஸ்தியோ..

//vaalthukkal. kaathal, kulanthai mathiri, epadi enda roobathila irunthalum alagu than. //

உண்மை உண்மை..

Anonymous said...

:)))))) ====rasigai

கார்த்திக் பிரபு said...

thala chk my blog today evning

Wyvern said...

padam superappu....payan therikiran.....straight'a IAS eluthiduvan poliruke