
ரகசிய பார்வைகள்
மெளன மொழிகளில்
வரைந்த ஒரிரு கடிதங்கள்
காற்றில் கலந்து
ஜன்னல் தட்டும்
ஆசையின் முத்தங்கள்
கசக்கிய காகிதங்களில்
வழியும் கவிதைகளில்
இருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும்
அன்புத் தோழியாய் தமிழ் மொழி..
அம்மாவின் புடவையில்
அழகாய்த் தானிருக்கிறாய்
கணினித் திரையில்
மாயாஜாலச் சித்து வேலை..
அதிகாலைக் கனவினில்
மாலைகள் மாற்றியாச்சு
பலிக்கும் என்றும
பக்கத்து அறை நண்பன் சொல்லி வைக்க
பிள்ளைகளுக்குப் பேரும் கூட வைச்சாச்சு..
வாழ்க்கையின் அர்த்தம்
எப்படி யோசித்தாலும்
வட்ட நிலா முகத்தழகி
வீட்டு வாசலுக்கே வழி சொல்ல..
முடிவெடுக்க முடிந்தது
வார்த்தைகளுக்கு வண்ணம் அடித்து
அழகிய ஆரமொன்று
கோர்த்து எடுத்து
விருப்பம் சொல்ல நினைக்கையிலே
கல்யாணம் என்று
கலகலப்பாய் பத்திரிக்கை
நீட்டுகிறாள்
கருவிழிக்குச் சொந்தக்காரி..
சேர்த்து வைத்த ஆசைகளை
கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு
வலியிலே பூத்த பூவாம் புன்னகையை
கல்யாணத்தின் முதல் பரிசாய்
கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...
(பி.கு.இது சிந்தாநதி அறிவித்துள்ளப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை)
24 comments:
இதெல்லாம் உங்க மனைவிக்குத் தெரியுமா?? ;)))
அருமையானக் கவிதை.
Excellent anna :)))
அண்ணா,
நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :-D
பின்னிட்டிங்கண்ணே ;)
\\\சேர்த்து வைத்த ஆசைகளை
கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு
வலியிலே பூத்த பூவாம் புன்னகையை
கல்யாணத்தின் முதல் பரிசாய்
கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...\\
பிரிவின் வலியை எளிமையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிங்க
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
தங்கச்சி வந்துட்டேன் அண்ணா
இதுவும் ஒரு கவி காவியம் அண்ணா :-)))
/சேர்த்து வைத்த ஆசைகளை
கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு
வலியிலே பூத்த பூவாம் புன்னகையை
கல்யாணத்தின் முதல் பரிசாய்
கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...//
வலியிலே பூத்த பூ என்கிற வரி அருமை தேவ்... ஆசைக்கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து விட்டதில் இதழ் சிந்தும் வலிப் பூ ! நல்ல கற்பனை.ரசித்தேன்.
நல்லாருக்கு.. போட்டிக்கு வாழ்த்துக்கள். நானும் இந்த மாதிரி எதுனா எழுதலாம்னு பார்த்தா டாண்ணு கவிதை வந்து அருவி மாதிரி கொட்டமாட்டேங்குது.. ஏற்கனவே வெளியான கவிதையை வேற போடப்படாதுன்னு சொல்லிப்புட்டார்... ம்.. யோசிக்கிறேன் என்ன பண்றதுன்னு.
//அதிகாலை கனவினில்
மாலைகள் மாற்றியாச்சு
பலிக்கும் என்றும
பக்கத்து அறை நண்பன் சொல்லி வைக்க
பிள்ளைகளுக்குப் பேரும் கூட வைச்சாச்சு..//
இது அருமை
இது கவிதையில்ல கதை (யார் கதை???????)
கதையோ கவிதையோ நெஞ்சத் தொட்டுட்ட தலை
ஜி தம்பி எதுக்கோ இப்பவேக் கேட்டு வச்சிகிட்டு தயாராகற மாதிரி இல்ல தெரியுது.. :)
இமசை அரசி,மை ஃபிரண்ட், துர்கா பாசமலர்களே நன்றி நன்றி நன்றி
கோபி - நன்றிப்பா
//வலியிலே பூத்த பூ என்கிற வரி அருமை தேவ்... ஆசைக்கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து விட்டதில் இதழ் சிந்தும் வலிப் பூ ! நல்ல கற்பனை.ரசித்தேன். //
நற்றமிழ் ரசனைக்கு நன்றி ஷைலஜா.. சமயம் கிடைக்குமாயின் நம்ம பக்கம் 78ஐ கொஞ்சம் புரட்டிப் பாருங்களேன்.
சேதுக்கரசி உங்க உதவிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.. போட்டிக்கு நீங்களும் கிளம்பியாச்சா ஆத்தாடி... வாழ்த்துக்கள்
//இது கவிதையில்ல கதை (யார் கதை???????) //
ஒரு வேளை நமக்கெல்லாம் தெரிஞ்சவங்க கதையோ :)
//கதையோ கவிதையோ நெஞ்சத் தொட்டுட்ட தலை //
டேங்க்ஸ்ங்கோ
Kavidha superb..Really nice..
நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்
வாங்க ராஜி, முதல் வரவு நல்வரவு ஆகுக... வாழ்த்துக்களுக்கு நன்றி!
அட சொல்லவே இல்லை..
எப்படிப்பா??
;-)
அழகாய் இருக்கிறது
என்று எல்லாம் சொல்ல
மாட்டேன்..! :-p
ஆனால் என் சிந்தனையை
அழகுபடுத்தியது உங்கள் கவிதை
அருமை..
நேசமுடன்..
-நித்தியா
nalla varikal...good one...
//நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள் //
வாங்க சந்திரவதனா,
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. சமயம் வாய்க்கும் போது நம்ம பக்கம் 78க்கு வாங்க.. கருத்துக்களைப் பகிருங்கள்
//அட சொல்லவே இல்லை..
எப்படிப்பா??
;-)
அழகாய் இருக்கிறது
என்று எல்லாம் சொல்ல
மாட்டேன்..! :-p
ஆனால் என் சிந்தனையை
அழகுபடுத்தியது உங்கள் கவிதை
அருமை..
நேசமுடன்..
-நித்தியா //
கவிதாயினி ஆச்சே..அதான் வாழ்த்துக்களில் கூட வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கீங்க.. மிக்க நன்றி நித்யா
//nalla varikal...good one... //
மிக்க நன்றி சீனு
Beautiful🌹
Beautiful🌹
Post a Comment