Thursday, May 17, 2007

கவி 32:ஒரு காதலும்.. இன்னுமொரு யுத்தமும்..

நீண்ட இரவுகள்
சட்டென விடியும்
ஒற்றை பொழுதினிலே..

ஆடைகளை மறந்து
முழுக்க முழுக்க
காதலை உடுத்திய
முந்தைய இரவு
கட்டில் முனையில்
காதலியின் கருவிழியோரம்
கண்ணீர் மொட்டுக்களாய்

காதலும் கண்ணீரும்
இயல்பான கூட்டணியோ..
கண்ணீர் பூக்கும் முன்
இதழ் முத்தம் கொண்டு
அதை மூடியதில்.
காதல் பூத்தது..

காதலின் வாசம்..
கட்டி இழுக்க..
இன்னொரு தேரோட்டம்
துவங்கியது..
கெஞ்சலும்..
கொஞ்சலும்..
ஆயுதமென
தாக்குதல் தொடர்ந்தது..

மன்மதப் போரின்
அரைப் புள்ளியில்
மயிலறகாய் வருடியபடி
காதலின் காயங்களுக்கு
மருந்திட்டுப் போனது
காதலியின் குழல்
கலைத்துப் போன
என் தேசத்துக்
குறும்பு காற்று..

காற்று நுழைந்த
ஜன்னல் வழியே
கண் சிமிட்டுகிறது..
காதலி கன்னம் போல்
சிவந்து நிற்கும் ரோசாப் பூ..


மறுபடியும் மறுபடியும்..
காதல் வானிலை
மழை பொழிய
எத்தனிக்க..
வெட்கத்தை
வாரியிறைத்து
விடைப் பெறுகிறாள் காதலி..

படுக்கையில்
களைத்திருக்கும்
காதலை உள்ளுக்குள்
ஓயவெடுக்கச் சொல்லிவிட்டு
கண்கள் கனவுலகம்
பயணம் போகினற
விநாடி பொழுதில்..
எங்கிருந்தோக் கேட்கிறது..

செல்லடிக்கிறாங்க...
செல்லடிக்கிறாங்க..

என் காதல்
ஓய்வெடுக்க மறுத்து
ஓடுகிறது..


கண் சிமிட்டிய
ரோசாப் பூ...

கிழிந்துக் கிடக்கும்
காதலியின் கன்னத்தில்
கசங்கிக் கிடக்கிறது..

காதலின் அலறல்..
அடுத்த குண்டுச் சத்தத்தில்
அமிழ்ந்துப் போகிறது..
யுத்தப் பூமியில்
முத்தச் சத்தங்களுக்கு
என்ன வேலை?

துப்பாக்கியின் கேள்விக்குப்
பதில் சொல்ல
காதல் அங்கு
உயிரோடில்லை...

20 comments:

இராம்/Raam said...

தேவ்,

கவிதை அருமையாக இருக்கிறது......

போரின் வலியை தெளிவாக உணர்த்துக்கிறது கடைசி சில வரிகள்...

கோபிநாத் said...

\\காதலின் அலறல்..
அடுத்த குண்டுச் சத்தத்தில்
அமிழ்ந்துப் போகிறது..
யுத்தப் பூமியில்
முத்தச் சத்தங்களுக்கு
என்ன வேலை?

துப்பாக்கியின் கேள்விக்குப்
பதில் சொல்ல
காதல் அங்கு
உயிரோடில்லை...\\


உயிர்ரோட்டம் உள்ள வரிகள் ;))

சிறில் அலெக்ஸ் said...

நல்லாயிருக்கு பார்ட்னர்..
ம்ம். கலக்குறீங்க.

இரா. வசந்த குமார். said...

துவக்கத்தில் சும்மா , சிலுசிலுவென ஆரம்பித்து, இறுதியில் துயரில் நிறுத்தி விட்டீர்....

Unknown said...

வாங்க பார்ட்னர், தமிழ்மண வாசிப்பில் என்னுடைய இந்தக் கவிதையினை சுட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Unknown said...

//கவிதை அருமையாக இருக்கிறது......

போரின் வலியை தெளிவாக உணர்த்துக்கிறது கடைசி சில வரிகள்... //

நன்றி ராம்

Unknown said...

//\\காதலின் அலறல்..
அடுத்த குண்டுச் சத்தத்தில்
அமிழ்ந்துப் போகிறது..
யுத்தப் பூமியில்
முத்தச் சத்தங்களுக்கு
என்ன வேலை?

துப்பாக்கியின் கேள்விக்குப்
பதில் சொல்ல
காதல் அங்கு
உயிரோடில்லை...\\


உயிர்ரோட்டம் உள்ள வரிகள் ;)) //

நன்றி கோபி

Unknown said...

//துவக்கத்தில் சும்மா , சிலுசிலுவென ஆரம்பித்து, இறுதியில் துயரில் நிறுத்தி விட்டீர்....
//
யுத்தப் பூமியில் இப்படி முடிந்த காதல்கள் ஏராளம் ஏராளம் வசந்த்

Anonymous said...

kann simittiya rojapoo, kizhinthu kidakkum kaadhaliyin kannathil kasangi kidakirathu--- manathai thotta varigal ===== rasigai (evlo 'ka' use panni irukkaru :O)

Raji said...

Waroda vazhiya kadaisi lines romba urukkama solli irukeenga DEv..

Unknown said...

//kann simittiya rojapoo, kizhinthu kidakkum kaadhaliyin kannathil kasangi kidakirathu--- manathai thotta varigal ===== rasigai (evlo 'ka' use panni irukkaru :O) //

வாங்க ரசிகை, உங்க வாசிப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் வழக்கம் போல என் மனமார்ந்த நன்றிகள் :))

Unknown said...

//Waroda vazhiya kadaisi lines romba urukkama solli irukeenga DEv..//


வாங்க ராஜி, போர்களை எதிர்கொள்ள இப்போ நம்ம கிட்ட இருப்பது வெறும் வார்த்தைகள் மட்டும் தானே... :))

✪சிந்தாநதி said...

தேவ்

எங்கே இருக்கீங்க... உங்களுக்கான அழைப்பு ஒண்ணு காத்திருக்கு....

http://raamcm.blogspot.com/2007/05/6.html

Raji said...

Eppa nga thodar kadhai poda pooreenga...

சீனு said...

miga arumaiyeana kavithai...

Unknown said...

//தேவ்

எங்கே இருக்கீங்க... உங்களுக்கான அழைப்பு ஒண்ணு காத்திருக்கு....

http://raamcm.blogspot.com/2007/05/6.html //

தாமதத்திற்கு மன்னிக்கவும்... ஞாபகங்களைச் சிறகடிக்க விட்டாச்சு இங்கே இல்ல.. நம்ம சென்னைக் கச்சேரியில்ல...பார்த்துட்டு கருத்துச் சொல்லுங்க..

Unknown said...

//Eppa nga thodar kadhai poda pooreenga... //

தொடர் கதையா இது வரைக்கும் முயற்சி செயதது இல்லை.. மினி தொடர்கள் நம்ம பதிவுல்ல சிலது இருக்கும்.. தொடர் போடலாம்ங்கறீங்களா?

Unknown said...

//miga arumaiyeana kavithai... //

நன்றி சீனு

சேதுக்கரசி said...

//துவக்கத்தில் சும்மா , சிலுசிலுவென ஆரம்பித்து, இறுதியில் துயரில் நிறுத்தி விட்டீர்....//

வசந்த் சொன்னதே தான் எனக்கும் தோன்றியது தேவ். வித்தியாசமான கவிதை.

Unknown said...

//வாங்க சேதுக்கரசி.. போர்களின் ஆரம்பம் அசத்தலாக அமைந்தாலும் முடிவின் பாதிப்புகள் எல்லாருக்கும் துயரமே.. போரில் சிக்கிய காதல் துயரத்திலும் துயரமே..//

வாங்க சேதுக்கரசி.. போர்களின் ஆரம்பம் அசத்தலாக அமைந்தாலும் முடிவின் பாதிப்புகள் எல்லாருக்கும் துயரமே.. போரில் சிக்கிய காதல் துயரத்திலும் துயரமே..