Thursday, February 16, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 5

இதுவரை நடந்தது

உனக்கும் ஆர்பிக்கும் என்ன பிரச்சனை? அன்னிக்கு ராத்திரி ரூமுக்கு வந்த டாம் நேராவே கேட்டான்...

ஊருல்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அம்மாவுக்கு மூட்டு வலின்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு....தம்பி செம்ஸ்டர் ரிசல்ட் என்னாச்சு...உங்க அப்பா இன்னும் திருட்டு தம் அடிக்கிறாரா...அவருக்கு சிகார் வாங்கிட்டு வந்தியா?”

என்னப் பிரச்சனைன்னு கேட்டேன்?

ஏர்போர்ட்ல்ல இருந்து நேரா ஊருக்கு போயிட்டப் போல...எனக்கு சரக்கு வாங்கிட்டு வந்தீயா ...இல்ல அதை ஊர்ல்ல யாருக்காவது கொடுத்துட்டியா

அவளுக்கும்ம் உனக்கும் என்ன பிரச்சனைன்னு கேட்டுகிட்டு இருக்கேன்..

அவளையே கேளு....

டாம் நீ எனக்கு பிரெண்ட்..அதுன்னாலே தான் உன் ரூமுக்கு வந்தேன் ..இனிமே தயவு செஞ்சு என்னை அந்தப் பக்கம் கூப்பிடாதேன்னு சொல்லிட்டு போறா



என்ன ஓ...அவ என்னையும் சேத்து அசிங்கப்படுத்திட்டு போறாடா...



போர்வையை இழுத்து மூடிட்டு படுத்தேன்...டாம் அதுக்கு அப்புறமும் என்ன எல்லாமோ பேசிட்டே இருந்தான்...நான் தூங்கிட்டேன்...நல்லா தூங்கிட்டேன்...
காலையிலே நான் எழும்பும் போது டாம் ஆபிஸ்க்கு போயிட்டான்...என்னை எழுப்பவும் இல்ல....என் கிட்ட சொல்லிக்கவும் இல்ல...

சேட்டன் கடையிலே நின்னு தம்மையும் டீயையும் போட்டுட்டு பஸ ஏற புறபடும் போது லட்சுமிபதி வந்தான்..

“உர்ரே ஆபிஸ்க்கு போதானுவா....ரா...ரா...”

ஹால்ஸ் எடுத்து வாயிலே போட்டுட்டு அவன் வண்டியிலே ஏறி உக்காந்தேன்..

“உர்ரே ஐடியா செப்புரா...அம்மாயிக்கு நா பிரேமம் எப்படி செப்புதானுரா...”

ஓசியிலே ஆபிஸ்க்கு பிக் அப் பண்ணிட்டு பொண்ணை பிக் அப் பண்ண என்கிட்டே ஐடியாகேட்டான்...

“ஏற்கனவே நான் கொடுத்த ஐடியா ஏமி ஆயிந்து பாபு...ஓர்க் அவுட் ஆகல்லயா”

”உர் ரே மீரு சொன்ன மாதுரி நேனு அம்மாயி கிட்ட போய் சாங் பாடுனேன்ரா...அம்மாயி அதுல்லு இருந்து நா மீது கோப்பம்ங்கா உந்தி...ஏமி சாங்ரா அது”

“பாக மன்ச்சி லவ் சாங் பாபு...னூ ராகம்ல்லு மிஸ்டேக்கு...மறுபடியும் ட்ரை செய்யு”

சுவாதி அப்பா பேர் ரெட்டின்னாலும் சொந்த ஊர் வேலூர்ன்னாலும் பக்கவான சென்னை பொண்ணு...அவக் கிட்டப் போய் கட்ட குரல்ல மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடியிருக்கான்.. அவனோட வார்த்தையிலே சொல்லணும்ன்னா...மங்கினேன்...சொல்லு தங்கினேன்...ன்னு இழுத்துருக்கான்.. அது மட்டுமா....அவனுக்கு புடிச்ச நடிகர் ராமராசன்னு ஒரு பத்து நிமிசம் பேசியிருக்கான்...அவக் கடுப்பாகி திட்டி தாளிச்சு அனுப்பிட்டா..

“பாபு...னு சென்னைக்கு ஒச்சது டப்பு கோசம் பாப்பா கோசம் காது...டப்பு ரண்டி...ஆல் பாப்பா ரண்டி...பிரேமம்க்கு பிரேக் விட்டு வண்டியை பிரேக் போடு ஆபிஸ் வந்துருச்சுன்னு வண்டியில் இருந்து இறங்குனேன்...காதல் ஒருத்தரையும்  விட்டு வைக்காது...எல்லாரையும் எதோ ஒரு பொழுதில் சந்திச்சே தீரும் போல இருக்கு...லட்சுமிபதி மட்டும் விதிவிலக்கா என்ன...

ரிலீஸ்க்கு முதல் நாள்...பரபரவென எல்லாரும் சுத்திட்டு இருந்தாங்க...நான் என் டெஸ்க்ல்ல போய் உக்காந்து இண்டியா டைம்ஸ் சைட்டைத் திறந்து சினிமா செக்‌ஷன் பக்கம் போனேன்....ப்ரீத்தி ஜிந்தா குட்டி பாவாடையிலே ரெட்டை ஜடை போட்ட படம் ஒண்ணு இருந்துச்சு....பக்கத்துல்ல ஒல்லியா ஒரு புதுப் பொண்ணோட படம்....கரீனா கபூர்.ன்னு பேர் பாத்தேன்...பிகர் தேறுமா..நான் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ளே லட்சுமிபதி குரல் கேட்டு நிமிந்தேன்...

“மீட்டீங்ரா....தாஜ் ரூம்ல்ல” ஒவ்வொரு மீட்டிங் ரூமுக்கும் ஒரு பேர் எங்க ஆபிஸ்ல்ல...தாஜ்...சார்மினார்...கோல்கொண்டா...செஞ்சி...பிருந்தாவன்...இப்படி..
தாஜ் மூணாவது மாடியிலே இருந்துச்சு...

டீ எடுத்துட்டு நான் மீட்டீங் வர்றதுக்குள்ளே ஆரம்பிச்சுட்டா....மீட்டீங்கை...

”சில பல டிபெக்ட் இன்னும் பிக்ஸ் போடல்ல...அது இல்லாம புரொடக்‌ஷன் போறது கஷ்ட்டம்...எதாவது பண்ணனும்....இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு டெட் லைன்...” அவளே தான்...தேன் தொட்ட குரலில் கொஞ்சம் காரம் கலந்திருந்தது...

பேச்சுக்கு நடுவே என் பக்கமா அவ பார்வை திரும்புன போதெல்லாம் அதுல்ல இருந்த நெருப்பின் வீச்சு இருக்கே..அப்பப்பா...என்னை எரிச்சு என் சாம்பலை கரைச்சுட்டு தான் மறு வேலைன்னு சொல்லாமல் சொல்லுச்சு...வெக்கங்கெட்ட மனசு அவ ஆத்திரத்தையும் இல்ல சேத்து ரசிச்சுது...

அன்னிக்கு முழுக்க நான் அவ கிட்டயும் அவ என் கிட்டயும் பேசவே இல்லை..பேச வேண்டிய சந்தர்ப்பங்கள்ல்ல எல்லாம் டாம் வந்து பேச்சு வார்த்தை சுமூகமா நடக்கும் படி பாத்துக்குட்டான்...ம்ம்ம் அதை விட முக்கியமா தான் நல்லவன்...நான் தான் கெட்டவன்ங்கறதை தெளிவா விளக்குற மாதிரியே நடந்துகிட்டான்....

ஒரு மாதிரியா அந்த முக்கியமான டிபெக்ட் பிக்ஸ் போட்டு முடிக்கும் போது மணி பதினொண்ணு....அது டெஸ்டிங் பண்ணி முடிக்கும் போது மணி இரண்டு..

யாரும் வீட்டுக்கு போகல்ல....ஆங் டாம் கிளம்பியிருந்தான்....அன்னிக்குன்னு பாத்து செங்கல்பட்டுல்ல அவங்க மாமா  ஆக்சிடெண்ட்ல்ல மாட்டிகிட்டார்ன்னு போன் வந்துறுக்கு.....

நான் தான் அவனைக் கொண்டு பஸ் ஏத்தி விட்டுட்டு வந்தேன்...பொண்ணை பாத்து அவன் வேணும்ன்னா நண்பனை நட்டாத்துல்ல விடலாம்..ஆனா நான் அப்படி இல்லையே... தளபதியிலே தலைவன் சொன்ன நட்பைப் பாத்து வளந்தவனாச்சே...

”ஓ....கிரேட்...” காரம் குறைஞ்சு அவக் குரல்ல புது உற்சாகம் தெரிஞ்சது.

“சூப்பர் மக்கள்ஸ்...லெட் அஸ் நவ் வெயிட் பார் த ரிசல்ட்....குட் குட்ன்னு ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் சொல்லிட்டு இருந்தா....என் பக்கம் வரவே இல்ல...

”அய்யோ மணி இரண்டே கால்....கேப் புக் பண்ணவே இல்ல....” சுதா தான் முதல்ல சொன்னா...லட்சுமி பதி முகத்துல்ல சட்டுன்னு பல்ப் எரிஞ்சது...

“டாம் கேப் புக் பண்ணல்லயா?”  அவத் தான் கேட்டா

யாரும் பதில் சொல்லவே இல்ல....

”நோ ப்ராளம் சுதா...நேனு ட்ராப் சேசுதானு...ரண்டி.....” லட்சுமி பதி பைக் கீயோட சுதா முன்னால் போய் நின்னான்.

”கேஜி அண்ணா....நீங்க அடையார் தானே போறீங்க....ட்ராப் பண்ணிடுறீங்களா...?”

கேஜி சுதாவையும் பரிதாப முழித்த லட்சுமிபதியும் மாறி மாறி பாத்தான்...என்னை ஓரக் கண்ணால் பாத்தான்...நான் சிரிச்சேன்...

“சரி வா போலாம்....” அவங்க ரெண்டு பேரும் கிளம்புனாங்க...நானும் சிஸ்டமை ஷட் டவுன் பண்ணிட்டு அவங்களோட வெளியே போனேன்...லட்சுமி பதி தலையைத் தொங்கப் போட்டுட்டு கூடவே வந்தான்...

வாசல் தாண்டும் போது லேசா தலையைத் திருப்பி அவளை அவளுக்குத் தெரியாமல் பாத்தேன்...அவளும் கிளம்பிட்டு இருந்தா...எதையோ தேடிட்டு இருந்தா...நான் நடந்தேன்...

பை பை குட் நைட் எல்லாரும் கிளம்பினார்கள்...ஒரு தம்மை போட்டுட்டு கிளம்புலாம்ன்னு பத்த வச்சேன்..குளிர் காத்து முகத்துல்ல வந்து அறைஞ்சது...

பத்து நிமிசம் ஆச்சுது....ஆனா அவ வெளியே வர்றல்ல...அடுத்த தம்மை எடுத்து பத்த வச்சேன்....இன்னொறு பத்து நிமிசம் போச்சு...அப்போவும் அவ வெளியே வர்றல்ல...மூணாவது தம்மை பத்த வைக்கும் போது...அவ வெளியே வந்தா...

வெள்ளை சுடிதார்...வெள்ளை கைப்பை...காற்றில் அலை பாஞ்ச முடி...சத்தம் சன்னமா வரும் மெல்லிய கொலுசு போட்டிருந்தா அதை அப்போத் தான் கவனிச்சேன்...கை இரண்டையும் குறுக்கா கட்டிகிட்டு நின்னா...

நான் பைக்ல்ல சாஞ்சு நின்னபடி கொஞ்ச நேரம் வச்ச கண்ணு வாங்காம உ உதட்டரோம் ஒரு சிரிப்பு வழிய அவளை ரசிச்சு பாத்துட்டு இருந்தேன்..அதே நேரம் அவளும் என்னைப் பாத்தா...

அந்தக் கண்ணு கருவிழியிலே என் உருவம் பட்ட ஒரு வினாடியிலே அவக் கண்ணு ரெண்டுல்லயும் தீ பிடிச்சிருச்சு... சட்டுன்னு முகத்தை வேற பக்கம் திருப்பிகிட்டா...நான் மூணாவது சிகரெட்டை நிதானமா ஊதி தள்ளிட்டு வண்டியைக் கிளப்புனேன்...ஒரு உறுமல் கொடுத்து கிளப்புனேன்...

அவ என் பக்கம் திரும்புவான்னு நினைச்சேன்...அவத் திரும்பவே இல்ல...எனக்கு சிரிப்பு வந்துச்சு....பைக்கை அவ பக்கமாக் கொண்டு போய் நிறுத்தி இன்னும் உறுமலை அதிகப் படுத்துனேன்....

தொடரும்

7 comments:

கோபிநாத் said...

ம்ம்ம்ஃம...;)))

மணி said...

nalla poguthu boss...
vaasam arumai

Anonymous said...

light comedy is perhaps interesting.great job.expectin next release.

Unknown said...

கோபி....ம்ம்ம்ம்ம்ம்:))

Unknown said...

நன்றி மணி தொடர்ந்து படிப்பதற்கு இன்னும் வாசம் வீசும்...நேரம் கிடைச்சா இதையும் படிங்க http://sethukal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%201

Unknown said...

அனானி :))) தேங்க்ஸ்

மணி said...

பாஸ் உங்க கதை எல்லாம் ஏற்கனவே படிச்சிருக்கேன் அப்பலாம் கமெண்ட் போடுவது கிடையாது. I also subscribe ur page boss