Wednesday, January 31, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 2

இது விச்சுவின் கதை - பகுதி 1

விச்சுவின் கதை இந்தப் பகுதியிலிருந்து நந்தினியின் கதையா மாறிடுச்சு... ஆனாலும் இதை நாம விச்சுவின் கதையாவேப் பார்ப்போம் என்ன ரைட்டா? இனி நந்தினியின் கதை உங்கள் பார்வைக்கு...

போட்டோவில் வலது ஓரம் இருப்பவனைப் பார்த்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது.

"விச்சு இவன் தான் செல்லப்பனா?"

"ஆமா இவனே தான்... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

"எல்லாம் ஒரு யூகம் தான்..அந்தப் புட்பால் மேட்ச்ல்ல சேம் சைட் கோல் போட்டு உங்க கிட்ட அடி வாங்குன பையன் தானே ஒரு அப்பாவி முழி அப்படியே இருக்கே "

"அவனா அப்பாவி.. அடப் பாவின்னு சொன்னா அவனுக்கு கரெக்ட்டாப் பொருந்தும்.
புட் பால் மேட்ச்க்கு வந்துப் பொண்ணுங்கப் பாக்குறாங்கன்ன ஓடனே பையனுக்கு அடுத்தவன் கோலுக்கும் எங்க கோலுக்கும் வித்தியாசம் தெரியாமப் போச்சு.. ஆர்வத்துல்ல எங்க கோலுக்கே பாலை அடிச்சி.. ஸ்கூலைத் தோக்க வைச்சுட்டான்..."

"ம்ம்ம் அது சரி... விளையாடத் தெரியாதப் பையனை நீங்கத் தானேடா டீம்ல்ல சேர்த்தீங்க..."

"ஆள் கம்மின்னு சேர்த்தோம்...அதுக்குன்னு..." விச்சுவின் மொபைல் சிணுங்கியது. அவன் எழுந்துச் சென்றான்.

செல்லப்பனை எனக்குத் தெரியும். நேரடி அறிமுகம் இல்லையேத் தவிர செல்லப்பனின் கதைகள் அனைத்தும் எனக்கு அத்துப் படி. செல்லப்பன் கிட்டத்தட்ட விச்சுவின் பள்ளிக்கால கைப்புள்ளன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு அப்புராணி. அவனை உசுப்பேத்தி அவன் உடம்பை ரணகளமாக்கிப் பார்ப்பதில் விச்சுவுக்கும் அவன் கடைசி பெஞ்ச் நண்பர்களுக்கும் அலாதி பிரியம்.அந்தக் கதைகளைத் தனியா தொடராவேப் போடலாம். மீண்டும் நந்தினிக்கு வருவோம். விச்சு போன் பேசி முடித்து விட்டு கையில் முறுக்குகள் நிறைந்த தட்டோடு வந்தான்.

"நந்தினி யார்ன்னு சொல்லலியே...கூட வேற நிக்குற..."

"தேவ்.. நம்ம செல்லப்பன் ஒரு பொண்ணைத் தீவிரமாக் காதலிச்சான்னு சொல்லுவேனே அந்தப் பொண்ணு தான் இந்த நந்தினி..."

நான் மறுபடியும் நந்தினியைப் பார்த்தேன்... நம்ம வெயில் படத்துல்ல வர்ற பாவனா மாதிரி பளிச்சுன்னு இருந்தாப் பொண்ணு.. கண்ணுல்ல ஒரு ஈர்ப்பு சக்தி.. உதட்டுல்ல புன்னகைத் தொழிற்சாலைன்னு அழகாப் பாந்தமா இருந்தா.

"செல்லப்பன் எங்க கூட இருந்தாலும் நல்லாப் படிப்பான்.. கிளாஸ் பர்ஸ்ட்.. அந்த நந்தினி கிளாஸ் செகண்ட்.. நான் எல்லாம் எதோ பாஸ் ஆவேன்.. என் கூட இருந்த காசி என்னை விட மோசம்.. இந்த செல்லப்பனாலே எனக்கும் காசிக்கும் எப்பவுமே கெட்டப் பெயர் தான்.. எல்லா வாத்தியார் கிட்டயும் பின்னாலே அடி வாங்கியே காசிக்குப் பழுத்துப் போச்சு.. நான் கொஞ்சம் பட்ட.. கழுத்துல்ல கொட்டைன்னு மெயின்டெயின் பண்ணி பிரம்புக்கு தப்பிச்சுக்குவேன்..."

லாரா இன்னொரு சிக்ஸ் அடிக்க அதில் லயித்த விச்சு கதையைச் நிறுத்திட்டு கைத் தட்ட ஆரம்பிச்சான். அவன் மறுபடியும் கதைச் சொல்ல ஆரம்பிக்கும் வரை நான் இரண்டு நெய் முறுக்கினை எடுத்து வாயில் போட்டேன்.. என்ன ருசிடா சாமி.

"அப்புறம் என்ன நான் ஒரு மாஸ்ட்டர் பிளான் போட்டேன். காசி எனக்கு அதுல்ல கூட்டு.. எங்க கிளாஸேப் பார்த்து மயங்கி நிற்கிற நந்தினி செல்லப்பனை விரும்புறதா அவனை உசுப்பேத்த ஆரம்பிச்சோம்.. காசியும் அதுக்கு ஒத்து ஊதுனேன்..பையன் ஆரம்பத்துல்ல மசியல்ல.. நாங்க மெதுவாப் பல செட் அப் வேலை எல்லாம் செய்து அவன் மனசைக் கெடுத்தோம்.. அப்புறம் என்ன .. ஒழுங்காத் தலைவாரிகிட்டு இருந்தவன் தலையைக் கலைச்சுக் கோதிகிட்டான்... பள்ளிக்கொடம் முடிஞ்சதும் ஜிம்க்கு போக ஆரம்பிச்சான்.. ட்யூஷனுக்கு டைட் ஷ்ர்ட்.. டைட் பேண்ட்.. சைக்கிள்ல்ல எஸ் என் அப்படின்னு ஸ்டிக்கர்ன்னு பயலைக் கிறுக்கு புடிச்சு அலையவிட்டோம்."

"அட பாவிகளா அடுக்குமாடா... ??"முறுக்கைக் கடித்தப் படி நான் கேட்டேன்.

"மச்சி அவ உன்னியத் தான் பாக்குறா.. நீ கிரவுண்ட்ல்ல எக்ஸ்ர்சைஸ் பண்றத அவ நேத்துக் கூடப் பார்த்தாடா..அப்படின்னு நான் சொல்ல..காசி அதுக்கு பயங்கரமா ஆமாப் போடுவான்.. பைய இப்படியே படிப்புல்ல கோல் போட்டுட்டு சதா சர்வ காலமும் நந்தினி நந்தினின்னு திரிய ஆரம்பிச்சான்"

" ம்ம்ம் யப்பா எம்புட்டு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்கடா " தண்ணி சொம்பை வாயில் கவிழ்த்தேன்.

"எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.. அப்புறம் எங்கக் கூட சேர்ந்து செல்லப்பனும் அடி வாங்க ஆரம்பிச்சான்.. அரையாண்டுல்ல ஒரு பாடத்துல்ல பெயில் வேற ஆயிட்டான்..."

"சந்தோசமா.. அது வேறயா" வாய் விட்டுச் சொன்னேன்

"காசியும் நானும் மரத்தடியிலே உக்காந்து திருட்டு தம் போட்டுகிட்டு இருந்தோம்.. செல்லப்பன் வந்தான்... எனக்கு ஒரு உடனே இப்போ நந்தினி என்னை லவ் பண்றாளா இல்லையான்னு உண்மைத் தெரியணும்ன்னு கோவமாப் பேசிட்டான்."

"பரவாயில்ல பய உஷாரா ஆயிட்டானா? "

"காசியும் நானும் எவ்வளவோ அவனைச் சமாதானப்படுத்திப் பார்த்தும் முடியல்ல.. அவன் நேரா நந்தினியைப் பாக்கப் போயிட்டான்... நானும் காசியும் அவன் பின்னாடி போறதா வேண்டாமான்னு முடிவு எடுக்க முடியாம அங்கேயே நின்னுட்டோம்.."

தட்டில் முறுக்கு தீர்ந்துப் போய் விட்டதால் விச்சு கீழேப் போய் திரும்பி வரும் போது தட்டில் முந்திரி பக்கோடா எடுது வந்தான்.

"அது நடந்து மூணு நாளா செல்லப்பன் ஸ்கூல் பக்கம் வரவே இல்ல... எனக்கும் காசிக்கும் கொஞ்சம் வருத்தமாப் போச்சு.. செல்லப்பன் வீட்டுக்குப் போனா அங்கே செல்லப்பன் படுக்கையிலே கால் ஓடிஞ்சுப் படுத்து கிடந்தான்.. அவ்ங்க அம்மா செல்லப்பன் சிமேண்ட் ரோட்ல்ல வரும் போது தடுக்கி விழுந்துட்டான் அதுன்னால கால் ஒடைஞ்சுப் போச்சுன்னு சொன்னாங்க. நாங்க அதை நம்பல்ல"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"செல்லப்பன் எங்களை முகத்துக்கு முகம் பார்க்காமலே பேசினான்.. ஏன்டா பொய் சொன்னீங்க.. நந்தினி என்னைக் காதலிக்கல்லடா.. அவ்வ்ளவு ஏன் என்னிய சுத்தமாப் பிடிக்காதுன்னு சொல்லிட்டா.. தீயிலே விழுந்த தேவாங்கு மாதிரி இருந்துகிட்டு ஒனக்கு எல்லாம் லவ் கேக்குதான்னு அவன் அண்ணன் வந்து கேட்டுட்டுன்னு மென்னு முழுங்குனான்..."

"ம்ம்ம்"

"எனக்கும் காசிக்கும் செல்லப்பனின் கால் எப்படி உடைஞ்சிருக்கும்ன்னு இப்போப் புரிஞ்சுப் போச்சு... எனக்கு கோவம் தலைக்கேறிப் போச்சு.. காசியும் கொந்தளிச்சுப் போயிட்டான்...செல்லப்பன் பயந்துப் போயிட்டான்.. டேய் எங்க வீட்டுல்ல தெரிஞ்சா எங்கப்பா எனக்கு இருக்க இன்னொரு காலையும் ஓடைச்சு விட்டுருவார்டா இத்தோட இதை மறந்துரலாம்டான்னு சொன்னான். அப்போதைக்குத் தலை ஆட்டிட்டு..செல்லப்பன் கால் குணமடையும் வரை காத்திகிட்டு இருந்தோம். நந்தின் எதுவுமே நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு வந்துப் போயிட்டு இருந்தது எங்களுக்கும் இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது."

"என்னடா செஞ்சீங்க?"

"செல்லப்பன் வீட்டுல்ல ஓய்வா இருந்தது நல்லதாப் போச்சு.. விட்டப் பாடத்தை எல்லாம் படிச்சு பழைய அளவுக்குத் தேறிட்டான். அவன் கால் சரியானதும்.. மூணு பேரும் நந்தினி அண்ணன் வழக்கமா காலேஜ் விட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து நின்று கொண்டோம்.. எங்களோடு துணைக்கு காசியின் சித்தி பையனும் வந்திருந்தான். செல்லப்பனுக்கு வெலவெலத்துப் போனது.. நான் போறேன்டா.. என்னை விட்டுருங்க.. இதெல்லாம் வேணாம்..பயம் போகணும்ன்னா இதைக் குடிங்கடா.. காசியின் சித்தி பையன் ஊத்தி கொடுத்த என்ன எழவையோ ( பிற்காலத்துல்லா நான் கொஞ்சி குலாவும் பீர் தான் அந்த எழுவுன்னு எனக்கு அப்போத் தெரியாது). குடிச்சதுல்ல மூணு பேருக்கும் யானை பலம் வந்துருச்சு...அப்புறம் என்ன... நந்தினி அண்ணன் தனியாத் தான் அந்தப் பக்கம் ... நாலு எருமை அவன் மேல ஏறி ஓடுனா என்ன ஆகியிருக்குமோ அந்த அளவுக்கு அவனைச் சேதப் படுத்தி அனுப்புனோம்"

"நந்தினி உங்க மொகத்தைப் பாக்கமலாப் போனான்.?"

"அவன் முகத்தைத் தான் துண்டால்ல நல்லா மூடி கட்டி வச்சு இல்ல உதைச்சோம்... செல்லப்பனுக்கு எங்கிருந்து தான் வீரம் வந்துச்சோ.. ஏறி ஏறி மிதிச்சான்..."

"ம்ம் பழி தீர்த்துட்டீங்க இல்ல?"

"இத்தோடு எங்க ஆத்திரம் அடங்கவில்லை.. நந்தினி ட்யூஷன் முடிந்து தனியா வரும் வீதியில் அவளுக்காகக் காத்திருந்தோம்.. முக்குல்ல அவளை மடக்கி மிரட்டி எச்சரித்து அனுப்புவ்து தான் எங்கள் திட்டம்... ஆனா காசியின் சித்தி பையன் நந்தினி வந்ததும் திட்டத்தை மாத்திட்டான்.. மாப்பூ உன்னிய பார்த்து கருப்புத் தேவாங்குன்னு சொல்லிட்டான் இல்ல இவ அண்ணன்.. கருப்பு தேவாங்கு எப்படி முத்தம் கொடுக்குமோ அப்படி இவளுக்கு இப்போ முத்தம் கொடுடான்னு உசுப்பேத்த நம்ம செல்லப்பனும் போதையின் தயவில் பொங்கி எழுந்து விட்டான்.."

"அட பாவிகளா விவரம் வில்லங்கமா இலல் போயிருக்கு.."

"எனக்குப் பயங்கரமா ஏறிப் போச்சு.. நான் தட்டு தடுமாறி பாக்குறேன்.. ரெண்டு நந்தினி நிக்குறா அவளுக்கு நாலு கண்ணுல்ல இருந்து தண்ணீ வருது.. என் மனசுத் தாங்கல்ல.. டேய் வேணாம்டா பாவம் மிரட்டிட்டு போகச் சொல்லுங்கடான்னு சொல்லிப் பாக்குறேன்.. கைக்கலப்பு ஆகிப் போச்சு.. அந்த காசியோட சித்தி பையன் என்னப் பொழப்புப் பாத்தானோ அப்போ தெரியாது.. சட்டுன்னுக் கத்தி எடுத்து என் தோள்ல்ல குத்திட்டான்.. குப்புன்னு ரத்தம் பாத்ததும் காசி, செல்லப்பன் எல்லோருக்கும் போதை இறங்கிடுச்சு.. படுபாவிக தலை தெறிக்க என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க... கண்ணைக் கசக்கி கசக்கிப் பாக்குறேன் இப்போ என் முன்னாடி நாலு நந்தினி...கண் இருட்டுது.. போயிடு போயிடுன்னு கையைக் காட்டிட்டு மயங்கி விழுந்துட்டேன்.

தட்டில் இருந்த முந்திரி பக்கோடாவும் முடிஞ்சுப் போச்சு...விச்சு வாங்க தேவ் இப்போ கிளம்புனாத் தான் நாம் சாப்பிட்டு படம் பாக்க போக கரெக்ட்டா இருக்கும். டிவியில் மேட்சும் முடிந்துப் போயிருந்தது. காரில் ஏறி கிளம்புனோம்.

"என்னாச்சு ஏதாச்சுன்னு எனக்குத் தெரியாது... எங்க வீட்டு டிரைவர் வந்து என்னியத் தூக்கிட்டு வந்து வீட்டுல்ல சேத்து இருககார். நம்ம கத்தி குத்து மேட்டரைக் கமுக்கமா முடிச்சு நம்ம பேமிலி டாக்டர் என்னைய் முழுசா எங்க வீட்டுல்ல ஓப்படைச்சுட்டார். தண்ணீப் போட்டதுக்காக எங்க அப்பா என் கூடப் பேசுறதையே விட்டுட்டார்..நான் மறுபடியும் ஸ்கூலுக்குப் போனேன்..வீட்டுக்குக் கூட என்னப் பாக்க வராதா பசங்க கிளாஸ் வாசல்ல என் கையைப் பிடிச்சுகிட்டு அழுதாங்க.. மனசு மறுகிருச்சு... பிளஸ் டூ எக்ஸாம் வந்துச்சு... அதுக்கு முன்னாடி எடுத்தப் படம் தான் அது.. பொண்ணுங்க வரிசையிலே இடம் இல்ல என் பக்கம் கொஞ்சம் இடம் இருந்துச்சு.. நந்தினியா வந்து நின்னா.. என்னைப் பார்த்துச் சிரிச்சா.. யாருக்கும் கேக்காத மெதுவா.. அன்னைக்கு நடந்ததுக்கு சாரி அப்புறம் தாங்க்ஸ்ன்னு சொன்னா. எனக்கு ரொம்ப நெருங்கி வந்து நின்னா.. எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு தேவ்.."

இரவுச் சாப்பாடு அதிகம் இல்லை.. ஒரு இரண்டு சப்பாத்தியோட முடிச்சுக்கிட்டு தியேட்டர் நோக்கிக் கிளம்பினோம்...வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆள் கையை ஆட்ட காரை ஓரம் கட்டினான் விச்சு...

"தேவ் இது தான் காசி.. என் ஸ்கூல் மேட்.. தியேட்டர்ல்ல வேலைப் பாக்குரான் ஓனர்.. இவங்க தியேட்டர்ல்ல தான் வேட்டையாடு விளையாடு படம் போட்டிருக்காங்க... மாப்பூ காசி இது நம்ம மெட்ராஸ் ஆபிஸ் பிரெண்ட் தேவ்..."

என்னைப் பார்த்து ஒரு புன்னகையோடு தலையாட்டியக் காசி விச்சுவிடம் எதோச் சொல்லிவிட்டு கிளம்பினான். எதோ அவசரம் என்று புரிந்துக் கொண்டேன்...

"சரி இப்போ செல்லப்பன் எங்கே இருக்கான்?"

"அவன் இப்போ யு-எஸ் போயிட்டான் ஓராக்கிள்ல்ல எதோ பெரிய லெவல்ல இருக்கான் பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு... கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.. ஆள் தொந்தியும் தொப்பையுமா இருக்கானாம்.. சொன்னாங்க.."

"ஏய்.. என்னப்பா சிமெண்ட் ரோட்டுக்குப் போகமா இப்படி திரும்புற.. நேரு போன ரோட்டுல்ல நானும் போகலாம்ன்னு பாக்குறேன்.. வரும் போதாவது அப்படி வா... சரி சொல்லு இப்போ நந்தினி எங்கே இருக்கா? எப்படி இருக்கா?"

"தேவ்... நந்தினி இப்போ உயிரோட இல்ல்... அந்த சிமெண்ட் ரோட்ல்ல பிளஸ் டூ லீவுல்ல எதிரே வந்த லாரி மோதி ஸ்பாட்ல்லயே இறந்துட்டா...."

கொஞ்ச நேரத்துக்கு என்னால் எதுவும் பேசமுடியவில்லை..

விச்சுவே மௌனம் கலைத்தான்...

"தேவ்.. வரும் போதும் என்னாலே அந்த சிமெண்ட் ரோட்ல்ல வர முடியாது தேவ்.. என்னைத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே..."

இல்லை என்பதற்கு அடையாளமாய் என் தலையை அசைத்தேன்.. கார் தியேட்டரை நெருங்கி விட்டிருந்தது. எனக்கு எனோ படம் பார்க்கும் ஆசைத் தொலைந்துப் போயிருந்தது...

இது விச்சுவின் கதையா.. நந்தினியின் கதையா.. நீங்களே சொல்லுங்க...ப்ளீஸ்

23 comments:

நித்யா பழனியப்பன் said...

நெகிழ வைக்கும் முடிவு..

Unknown said...

//நெகிழ வைக்கும் முடிவு.. //

நன்றிங்க நித்யா

வெட்டிப்பயல் said...

அருமையா இருந்தது தேவ்!!!

முடிவு மனச ரொம்ப கஷ்டமாக்கிடுச்சி!!!

இது உண்மை கதையா?

Anonymous said...

ithu dev ooda kathai ======= rasigai. Ella kathaiyum en sogamave mudikreenga?

MyFriend said...

விச்சுவோ நந்தினியோ!! அது ஒரு கேள்வியே இல்லை.. என்னை பொருத்த வரையிலும் இது தேவின் கதை..

கதை கேட்டீங்களோ இல்லையோ! விச்சு வீட்டில் வித விதமாக உணவு சாப்பிட்டிருக்கீங்கன்னு தெளிவா புரியுது.. ;-)

MyFriend said...

//Ella kathaiyum en sogamave mudikreenga? //

சோகமாய் முடியும் கதைகள்தான் நம் மனதில் ஆள்மாய் பதியுது.. ;-)

Anonymous said...

Very nice story. Is this a real story ?

- Unmai

Anonymous said...

Gud One Dev.

Nayagan.

Unknown said...

ஏன் ஏன் ஏன் இந்த சோகம்?

நந்தினிய அநியாயமா கொன்னுப் போட்டீங்களே...

போப்பா... இனிமே கதையோட முடிவ மொதல்ல சொல்லிடு!!!

Unknown said...

//அருமையா இருந்தது தேவ்!!!//
மிக்க நன்றி வெட்டி.

//முடிவு மனச ரொம்ப கஷ்டமாக்கிடுச்சி!!!//
நிச்சயமா இது கொஞ்சம் வ்ருத்தமான முடிவு தான்

//இது உண்மை கதையா?//
ம்ம்ம் ஆமா வெட்டி இது ஒரு ஊரில் நடந்து நான் கேள்விப்பட்ட நிகழ்வின் அடிப்படையில் பிறந்த கதை தான்..

Unknown said...

//ithu dev ooda kathai ======= rasigai. //
வாங்க ரசிகை கருத்துக்கு நன்றி..


//Ella kathaiyum en sogamave mudikreenga? //

சந்தோஷமா ஒரு கதைத் தானே சொல்லிருவோம் ஓ.கே தானுங்களே

Unknown said...

//விச்சுவோ நந்தினியோ!! அது ஒரு கேள்வியே இல்லை.. என்னை பொருத்த வரையிலும் இது தேவின் கதை.. //
நன்றி மை பிரெண்ட்

//கதை கேட்டீங்களோ இல்லையோ! விச்சு வீட்டில் வித விதமாக உணவு சாப்பிட்டிருக்கீங்கன்னு தெளிவா புரியுது.. ;-) //
ஆகா நீங்க கதையை ரொம்பவே ஆழ்ந்துப் படிச்சிருக்கீஙக்ன்னு தெரியுதுங்க.. ஆனா ஒண்ணுங்க செட்டி நாட்டு பலகாரம் எல்லாம் ருசியோ ருசிங்கறது 100 சதவிகிதம் உண்மைங்க..

Unknown said...

//சோகமாய் முடியும் கதைகள்தான் நம் மனதில் ஆள்மாய் பதியுது.. ;-)//
வலியின் பாதிப்பு நீண்ட நாள் தங்கும் எனப்து நிச்சயம் உண்மைங்க..

Unknown said...

//Very nice story. Is this a real story ?

- Unmai //

வாங்க உண்மை, கேட்டு தெரிஞ்சுகிட்ட ஒரு நிகழ்வு தான் கதையா வந்து இருக்கு

Unknown said...

//Gud One Dev.

Nayagan. //

நன்றி நாயகன்.

Unknown said...

//ஏன் ஏன் ஏன் இந்த சோகம்?//
ம்ம் காதல் முரசு கம்பெளயிண்ட் பண்றாரே..!!!

//நந்தினிய அநியாயமா கொன்னுப் போட்டீங்களே...//
விதி வலியது நண்பா

//போப்பா... இனிமே கதையோட முடிவ மொதல்ல சொல்லிடு!!! //
சரிங்கோ நண்பா..

மனதின் ஓசை said...

தேவ்..

கதை மிக வேகம்.. நிறுத்தி நிதானமாக படிக்க கூட முடிய வில்லை..

திடீர் என சோக திருப்பம்.. (அனியாயமா இப்படி கொன்னுபுட்டியே தேவு..நியாயமா?)..

கதை சொல்லும் கலையை நன்றாக கையாண்டு இருக்கிறாய் தேவ்..

அருமை.. தொடரட்டும் உன் முயற்சிகள்.

நவீன் ப்ரகாஷ் said...

மீண்டும் ஒரு அழகான
நடையில்
அடக்கமான
ஒரு பெண்ணின் கதை !

நெகிழ்ச்சி தேவ் ! :))
வழக்கம் போல அள்ளிக்கொண்டீர்கள் இதயத்தை ! :))

Anonymous said...

What the fuck is wrong with you man...why can't u write one story with a happy ending...you spoiled my whole day...happy now...Everytime I read ur stories...I think I should never come back...but I guess deep inside me I love those poignant tales u write...thats why I keep checking ur blog daily

Once...just once....please write a story where every one lived happily ever after

Unknown said...

//தேவ்..

கதை மிக வேகம்.. நிறுத்தி நிதானமாக படிக்க கூட முடிய வில்லை..

திடீர் என சோக திருப்பம்.. (அனியாயமா இப்படி கொன்னுபுட்டியே தேவு..நியாயமா?)..

கதை சொல்லும் கலையை நன்றாக கையாண்டு இருக்கிறாய் தேவ்..

அருமை.. தொடரட்டும் உன் முயற்சிகள்.//

மனதின் ஓசை நண்பா.. நன்றிப்பா.. உன் பாராட்டு இன்னும் ஊக்கம் அளிக்கும் வண்ணம் உள்ளது..

Unknown said...

//மீண்டும் ஒரு அழகான
நடையில்
அடக்கமான
ஒரு பெண்ணின் கதை !

நெகிழ்ச்சி தேவ் ! :))
வழக்கம் போல அள்ளிக்கொண்டீர்கள் இதயத்தை ! :)) //

நன்றி நவீன்,

நீங்க ஒருத்தர் தாங்க இது நந்தினியின் கதைன்னு சொல்லியிருக்கீங்க.. அதுக்கு இன்னொரு நன்றி.

Unknown said...

/What the fuck is wrong with you man...why can't u write one story with a happy ending...you spoiled my whole day...happy now...Everytime I read ur stories...I think I should never come back...but I guess deep inside me I love those poignant tales u write...thats why I keep checking ur blog daily

Once...just once....please write a story where every one lived happily ever after
//

Hey Arun u made my day dude..
The best compliment I eva recd for my stories..

I will try to write a story as u had asked for ... I will certainly try..:)

Osai Chella said...

ஒரு எழுத்தாளன் தீர்க்கதரிசி மாதிரி... சென்னை ஸ்வாதி கொலை ஞாபகம் வருகிறது 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இப்பதிவை படித்த போது.. இன்று ;-(