Friday, December 16, 2005

கவி2: சென்னையில் ஒரு மழைக்காலம்.


கண்ணிமைத் தாண்டி கண்...
கரைக் கட்டித் தெறித்து...
முகம் முழுக்க நனைத்து..
முத்தத்தால் என்னைப் புதைத்து...
என்னைச் செல்லமாய் சீண்டி...
என்னுள்ளே அனுமதியின்றி நீந்தி....
தன் வாசனை என்னில் பூசி...
தயக்கமின்றி என் தேகம் தீண்டி...
அடைபட்ட வாசல்கள் திறந்து...
அங்கத்தில் சங்கமம் ....
சித்தம் சில்லிட்டது...
சிறைபட்டது...
மொத்தமாய் கொடுத்தேன்...
முற்றிலும் நனைந்தேன்....
இன்னும் என்னைத் துவை...
இதயம் வரை நனை....
இது எனக்குப் பிடிச்சிருக்கு....
ஈரம் சொட்ட ...
பாதங்களை வருடி...
பாடங்களை முடித்து
வழிந்தோடும்...
வானத்தின் நீர்த் துளிகள்....

மழை.. சின்ன சின்னதாய் தூறல் பெருத்து...
மண்ணை முத்தமிட்டக் காதல் கண்டேன்......

பி. கு
(கவிதை எழுத காகிதம் தேடினேன்...
காதல் கொண்ட வான் மகள்... அதற்குள் கோபம் கொண்டாளோ...)

ம.பி.கு
(தொலைக்காட்சியில் மழை வெள்ளச் செய்திகள்...பறிகொடுத்த மக்களின் பரிதாபப் படங்கள். வெளியே வந்து நின்றேன். மழை விட்ட பாடில்லை... என் மீது தெறித்த மழை துளிகள் ஏனோ இப்போது தீயாய் சுடுகின்றன.)

3 comments:

Suka said...

அனுபவித்து எழுதியுள்ளீர்கள். எனக்கும் மழையில் நனைந்தது போல் உள்ளது. நல்ல நடை. மழை வெகு எளிதாக கவிஞர்களை படைத்துவிடுகிறது.

வாழ்த்துக்கள்.
சுகா

Unknown said...

சுகா - நன்றி... இதர பதிவுகளையும் படித்துத் தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

Unknown said...

ரூபா - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து படியுங்கள்...