Saturday, December 24, 2005

கதை4: பழைய பனையோலைகள்பழைய பனையோலைகள் - வைரமுத்துவோட புத்தகம் கையிலே இருந்துச்சு... படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எதோ எனக்குள்ளே ஒரு ஞாபகம். எனக்கும் எதாவது பழைய பனையோலைகள் இருக்குமான்னு.. atleast காகித ஓலைகளாவது இருக்குமான்னு தேடிப் பார்க்குற ஆசை பீறிட்டுக்கிட்டு வந்துச்சு..டக்குன்னு வைரமுத்துக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு என் ரூம் பரணை மேல லூக் விட்டேன். ம்ம்ம் சோனி மியூசிக் சிஸ்டம் வாங்குன அட்டைப் பெட்டி அட்டகாசமா இருந்துச்சு...உள்ளே தான் என் பழைய காகித ஓலைகளின் குடியிருப்பு இருக்கும்.இன்னிக்கு சனிக்கிழமை வேற.. பசங்க வழக்கம் போல அவுட்டிங் பிளான் போட்டுச் சொதப்பி வைச்சுட்டானுங்க... முக்கியமா அந்த திருப்பெரும்புதூர்காரன் சுமதி தியேட்டர்ல்ல அப்படி இப்படி படம் போட்டா அங்கேயே செட்டில் ஆயிடுறான்.
சரி நான் விஷயத்துக்கு வர்றேன்.. நானே கஷ்ட்டப்பட்டு அந்த மெகா சைஸ் பெட்டியை கீழே இறக்கி வைச்சேன். அச்சுன்னு ஒரு தும்மல்.
புதையலைக் கண்டவன் கணக்கா செம feelingaa பொட்டியைத் தொறக்கிறேன். அஞ்சாம் கிளாஸ் நோட் புக் ஒண்ணு கண்ணுல்ல படுது..பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் லேபல் போட்ட நோட்புக். அப்பா கூட மையிலாப்பூர் மாடவிதீயிலே அலைந்து ரவி புக் ஹவுஸ்ல்ல வாங்குன லேபல்.. என் முகத்திலே ஒரு ஸ்மைல்.. பிளாஷ் பேக் போயிட்டு ரிட்டர்ன் ஆகுறேன். நோட் புக்கைத் திறந்துப் பார்க்குறேன். சின்னதா ஒரு சிலுவை அடையாளம் முதல் பக்கத்துல்ல இருக்கு..ச்சே அந்த வயசுல்லேயே அப்படி ஒரு பக்தி எனக்கு..
P.K.Devnath V A, montfort preparatory school Rough note bookன்னு capital lettersல்லே எழுதி இருக்கேன். ம்ம்ம் என் பழைய பனையோலையில் கரையானின் படையெடுப்பு..ச்சே எரிச்சல் வருகிறது.
ஆஹா...... I will not talk in tamil in class.... I will not talk in tamil in class... ச்சே அந்த சின்ன வயசுல்ல எனக்கு என்ன ஒரு தமிழ் உணர்வு இருந்து இருக்கு.
தமிழுக்காக என் பிஞ்சு விரல் நொந்து நூலாக 300 தடவை imposition எழுதி இருக்கேனா பார்த்துக்கோங்க.அந்த இங்கீலிஷ் மிஸ் பேர் ஞாபகத்துக்கு வர்றல்ல. யோசிச்சுப் பார்க்குறேன். கண்டிப்பா என் கூட அப்போ சுப்பு அப்புறம் செந்தில் எல்லாரும் அந்த imposition எழுதி இருப்பாங்க. ஒரு சின்ன சந்தோஷம் தான். உங்க தகவலுக்கு, சுப்பு இப்போ சாப்ட்வேர் இஞினீயரா உலகம் சுத்திகிட்டு இருக்கான். செந்தில் டாக்டரா பல நோயாளிகள் நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு இருக்கான். நான்... உங்களுக்குத் தாந் தெரியுமே என் பழைய பனையோலைகளை புரட்டிகிட்டு இருக்கேன். ஒவ்வொருப் பக்கமா மெதுவாத் திருப்புறேன்.
ஆஹா ஒரு வட்டம் ( அது face)..அதுக்குள்ளே சின்னதா ரெண்டு புள்ளி ( அது கண்ணு) குறுக்கே ஒரு கோடு ( அது வாயாம்)... அப்புறம் பெருசா ரெண்டு காது.. குச்சி குச்சியா ரெண்டு காலு... அதுக்கு கீழே குறிப்பு வேற எழுதி இருக்கேன்..... PT master is a monkey-donkey .... இப்போ படிக்கும் போது கூட சிரிப்பு தாங்கல்ல..
அதே பக்கத்துல்ல... நான் ஒரு பெரிய ஆளூ.. ஹிந்தி படிக்கும் முக்கேஷ் தமிழில் என்னமோ எழுதி இருந்தான்.
அட அட... INDIA VS PAKISTAN...SCORE BOARD
Kapil dev - 100 Srikanth - 0 Vengsarkar - 25 Azharudhin - 23
ச்சே இந்தியா பாக்கிஸ்தான் கிட்டே தோத்துப் போயிருச்சு...பள்ளிக்கூடக் காலத்திலே ரொம்ப பிரபலமான விளையாட்டு.. பேர் book cricketங்கோ. அறிவியல் புத்தகத்தை புரட்டிப் புரட்டி விளையாடுற விறுவிறுப்பான விளையாட்டு.. அந்த புள்ளி விவரம் தான் இப்போ பார்த்துகிட்டு இருந்தேன்.
FLAMES , F அடிச்சு இருக்கு...L அடிச்சு இருக்கு...ஆஹா M மட்டும் அடிக்கப்படாமல் இருக்கு.. M FOR MARRIAGE...எனக்கு யாருக்கும் கல்யாணம்.. ஆ.. ஆர்.ரேணுகுமார்..என்னோட நண்பன் அவன்.. அந்த அறியா வயசுல்ல எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகிடுமோன்னு எவ்வளவு பயந்துப் போயிருப்பேன் தெரியுமா? இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறேன். ரேணு இப்போ ஆஸ்த்ரேலியாவிலே இருக்கான்.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல. ஆனா எனக்கு ஆயிடுச்சு...
அட பாருடா பிலோமினா மிஸ் கையெழுத்து... VERY GOODன்னு எழுதி இருக்காங்க.. நான் படிக்கிற பையன்ங்கோ.
இன்னும் என்ன என்னமோ CARICATURES, FUN WORDS,CODE WORDS..அதை எல்லாம் இப்போ படிக்கும் போது மனசுக்குள்ளே ஒரு இனம் புரியாத சந்தோஷம்...பக்கத்துக்கு பக்கம் அனுபவிச்சு ரசிச்சு புரட்டிக்கிட்டு இருந்தேன்.
அடுத்த பக்கத்துல்ல ஆகா!!! மயிலறகு....ச்சே இன்னும் குட்டி போடலை... வருஷம் 15 ஆச்சு...இன்னும் குட்டி போடலை... REPRODUCTION சூத்திரங்கள் தெரியாதப் பருவத்தில் மயிலறகு நோட்புத்தகத்தோடு புணர்ந்து பிள்ளைப் பெற்று எடுக்கும் என்று ஒரு நிச்சயமான நம்பிக்கை.. யார் கொடுத்தா மயிலறகு? எதிர் வீட்டு மீனாம்பிகா அக்காவா?? இல்லை மாடி வீட்டு கலா அக்காவா??ம்ம்ம் பள்ளிக்கூட நண்பர்களா?? ஆங்.. ஞாபகம் வந்துறுச்சு.. நாங்க வாடகைக்குக் குடியிருந்த மயிலாப்பூர் வீட்டுக்கர வசந்தா அத்தை கொடுத்தாங்க.. கொடுக்கும் போது அந்த மீசை மாமா கிண்டல் பண்ணதா சிரிச்சது ஞாபகம் வந்துச்சு.
ஆனா இப்போ மனசுல்ல ஊசிக் குத்துனாப்பல்ல ஒரு வலி..
டக்குன்னு நோட் புக்கை மூடி வச்சுட்டு எழும்பிட்டேன்.
அந்த மாமா போன மாசம் இறந்து போயிட்டாங்க... நான் போகல்ல...
சிரிச்ச முகமாப் பார்த்த அத்தையை வேற எப்படியும் பார்க்க என்னாலே முடியாது...ரூமை விட்டு அவசரமாய் வெளியே வந்தேன். பைக்கை எடுத்துட்டு கடற்கரைப் பக்கமாப் போயிடேன்.சில நேரங்களில் சில விஷயங்களுக்கு அர்த்தம் புரிவதில்லை...அர்த்தம் தேடுவதிலும் அர்த்தம் இல்லை...

10 comments:

கைப்புள்ள said...

சூப்பர்மா! I liked your casual style. Was surprised to learn that you could post on something as simple as this. Book Cricket, Flames, Raja Rani Thirudan Police, Four Cups...marakka koodiya vishayama idhellam? Enga schoolleyum oru Philomena Miss irundhanga...nice reading this...really enjoyed...and liked the way you signed off on a philosophical note.

நளாயினி said...

"டக்குன்னு நோட் புக்கை மூடி வச்சுட்டு எழும்பிட்டேன்.

அந்த மாமா போன மாசம் இறந்து போயிட்டாங்க...


நான் போகல்ல...

சிரிச்ச முகமாப் பார்த்த அத்தையை வேற எப்படியும் பார்க்க என்னாலே முடியாது...

ரூமை விட்டு அவசரமாய் வெளியே வந்தேன். பைக்கை எடுத்துட்டு கடற்கரைப் பக்கமாப் போயிடேன்.

சில நேரங்களில் சில விஷயங்களுக்கு அர்த்தம் புரிவதில்லை...அர்த்தம் தேடுவதிலும் அர்த்தம் இல்லை..."

கதையை விட இத்தகைய தொடுகைகள் நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்.

தேவ் | Dev said...

Thanks for the kind words Kaipullai. Boss, btw did u do ur schooling in chennai?
Marubadiyum solluren...
Neenga rombey nallavar...

கைப்புள்ள said...

Aamanga...Chennai dhaan. Gill Adarsh Mat.Hr.Sec.School, Meersahibpettai. Idhu varaikkum udhai vaangunadhu kidaiyadhu publicaa...nallavanu sollareenga bayamayirukku!!!

தேவ் | Dev said...

நளாயினி தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கு மிக்க நன்றி..உங்கள் கருத்துக்கள் என் பதிவுகளை மேலும் மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்...

தேவ் | Dev said...

Kaipullai sir...

Namma area thaan... I spent my childhood days in Royapettah..

ஆர்த்தி said...

Now I want to search for my old boxes..

தேவ் | Dev said...

ஆர்த்தி, உங்கள் பழையப் பொட்டியில் இருக்கும் நல்ல சமாச்சாரங்களைப் பதிவாப் போடுவீங்களா?

Naveen Prakash said...

ரசித்"தேன்"

தேவ் | Dev said...

நற்றமிழரின் ரசனைக்கு என் வணக்கங்கள்.