
அதிகாலைப் பொழுதுகளில்
அவசரமாய் பூக்கும் பூக்கள்...
அந்த அழகின் சிரிப்பில்
அதனருகே இருக்கும் முட்கள்
அவ்வளவாய் தெரிவதில்லை....
விடலைப் பருவத்தில் காதல்
கத்தியின் கூர்முனை...
வீச்சரிவாளின் வேகம்,,,
தெறித்து விழும் வார்த்தை..
இலக்கு நானாகும் வரை
உணரவில்லை வலிக்குமென்று
மேடு பள்ளம்...
காடு மலை....
கல்.. முள்...
பார்த்துச் செல்லுவது
புரியவில்லை பயணம் தடைபடும் அரை
ஒரு முறை ஓவியம்
வாழ்க்கை....
தூரிகைக் கைகளில்
வண்ணங்கள் கண்களில்....
புரிதல்....
முயற்சிக்கிறேன்...
என்னால் முடியும் வரை...
8 comments:
Wow.. அருமை.. உங்கள் வார்த்தைகளின் சிக்கனப் பிரயோகம் வெகு அழகு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுகா
சுகா மிக்க நன்றி... அடிக்கடி வாங்க... இனிய 2006 அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தலைப்பு மட்டும்தான் அவசரம்
ஆனால் பொருளில் நல்ல நிதானம்
பாராட்டுக்கள்
நண்பரே.. தங்கள் நட்பு எனக்கு கிட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி....
"கத்தியின் கூர்முனை...
வீச்சரிவாளின் வேகம்,,,
தெறித்து விழும் வார்த்தை..
இலக்கு நானாகும் வரை
உணரவில்லை வலிக்குமென்று "
mmmm...!
வாழ்த்துக்களுக்கு நன்றி
தூரிகைக் கைகளில்
வண்ணங்கள் கண்களில்....
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
அன்புடன்
கீதா
நன்றி கீதா
Post a Comment