
..
வழியிலே வீசி எறிய
வலிய வந்து வாங்கினாய்
என் இதயம்
கண்ணிலே தீ மூட்டி
கண்ணீரிலே அணைத்தாய்
என் காதல்...
புன்னகையில் பூத்து
மௌனத்தில் உதிர்கிறது
என் நேசம்
வார்த்தையில் வளர்த்து
வலியில் முடித்தாய்..
என் உறவு
குருடனின் கண்களுக்கு
கனவுகள் கொடுத்தது ஏன்?
பாலைவன பயணிக்கு
மழைவாசம் தெரிவிததது ஏன்?
பதில் வேண்டாம்...
கேட்க நினைத்தேன்
கேட்கிறேன்..
6 comments:
:(((...paavam ya. What shd be the punishment for ppl who do this to others.....hmmmm..oopsey got carried away...:P .
மிக அருமையான கேள்விகள். ரசிக்க கூடிய வகையில்....
நன்றி அனுசுயா...
நம் நட்பு கவிதையில் தொடரட்டும்..
விஜயகுமார் சார் நான் என்ன சொல்ல? கைக் கொடுங்க சார்
anony.... Thanks
வாங்க ரூபா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. வழக்கம் போல் வாழ்த்துக்களுக்கு நன்றி
தேவ்,
கிட்டத்தட்ட இதே போன்ற கருத்துடைய கவிதை ஒன்றை நான் 3 வருடங்களுக்கு முன்பு எழுதியுள்ளேன்
http://geeths.info/?p=45
:)
அருமை
அன்புடன்
கீதா
ம்ம்...இதே கருத்துடையக் கவிதைகள் இன்னும் மூன்று அல்லது முப்பது வருடங்கள் கழித்துக் கூட வேறு யாராவது எழுதி நீங்கள் படிக்க நேரிடலாம். இந்தக் கேள்விகளுக்கு விடைக் கிடைக்கும் வரை யாராவது கேட்டுக் கொண்டுதான் இருப்பார்களோ என்னவோ? :)
Post a Comment