
தனிமையின் நிசப்தங்களில்
உதடுகள் முணுமுணுக்கும்
உச்சரிப்பில்
அவள்
பொழியும் மழையில்
என் விரல்கள்
துடைக்க மறுக்கும்
கண்ணீர்
அவள்
பின்னிரவின் இருட்டில்
விட்டம் வெறிக்கும்
வேளைகளில்
மெதுவாய் விலகும்
திரைச்சீலைகள்
அவள்
அரவமற்ற சாலையிலே
நடக்கும் பொழுதுகளில்
விரல் தொட்டிழுக்கும்
காற்று
அவள்
அசையும் காற்றில்
சலசலக்கும் இலைகள்
பேசும் ரகசியங்களில்
அவள்
எனக்குள் என்றுமே
ஆறாத காயமாய்
அவள்
என் சொல்ல முடியாத
வேதனையாய்
அவள்
எனக்கே எனக்கான
ரகசிய வலியாய்
அவள்
மரணத்தின் முத்தம்
என்னைச் சுத்தப்படுத்தும் முன்
என் கல்லறையின்
கடைசி கல்லில்
நான் எழுத்ப் போகும்
ரகசிய வாக்குமூலம்
அவள்
14 comments:
Superb.....
சிறு கதை எழுதிய என்னை அதையே தொடர் கதையாய் மாற்றச் சொல்லி ஒரு மிகப் பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளீர்கள். (திருப்பங்களும், சுவாரசியங்களும் தொடர்ந்து இருக்க வேண்டும் அல்லவா?)
சரி இதையே என்னைப் பற்றி என்னுடைய மதிப்பீடு என்ன என்று பார்ப்பதற்காகவே தொடருகிறேன்.
இது என் முழு முதல் முயற்சி.
உங்கள் கவிதைகள் அருமை. மனசு கனத்துப் போகிறது சில இடங்களில்.
வார்த்தைகளின் கனம், இதயத்தில்...
Dreamz,அனுசுயா, ஆர்த்தி, பாழ் வந்து வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.
சிபி, உங்கள் வருகைக்கு முதல் நன்றி. என் கருத்தை ஏற்று சிறுகதையைத் தொடர்கதையாய் மாற்றி இதுவரைச் சிறப்பாக நகர்த்திச் செல்லுவதற்கு என் வாழ்த்துக்கள்.
காதல் வலி
காலன் வரும்வரை
அவளின் மென்மையை
அருமையாக
வடித்துள்ளீர்கள் !
nice blog. just droppin by. thanks
சிந்தியது புன்னகை மட்டுமல்ல
சித்திரமும்தான்..
நன்றி நவீன்..
//காதல் வலி
காலன் வரும்வரை//
காலன் வந்துப் போனப் பின்னும் இருக்கும் அந்த வலி... இன்றும் எங்கோ வலிக்கும் தாஜ்மஹாலைக் கொஞ்ச்ம் உற்று நோக்கினால்...
Thanks Jeff
நன்றி நித்தியா:)
Post a Comment