
எல்லா மரணங்களும்
கண்ணீர் மரியாதைப்
பெறுவதில்லை...
மறைமுகச் சிரிப்புக்களும்...
லேசான் நிம்மதி பெருமூச்சும்..
போதும்...ஒரு மரணத்தின்
மானம் பறிக்க...
வாக்கியத்தின்
வாழ்க்கைப் பறிப்பு
மரணம்...
மூச்சு காற்றின்
முற்று புள்ளி
மரணம்
என்று இருந்தது
ஒரு காலம்...
ஒவ்வொரு மரணத்திலும்
எதோ ஒன்று பிறக்கிறது...
அறியாமையின் மரண்த்தில்
ஞானம் பிறப்பது போல்...
வெறும் காதலுக்காய்...
எனக்குள் எதோ ஒன்று..
செத்துப் போனது...
சீ..தப்பு..தப்பு..
எதோ ஒன்று..
புதிதாய் பிறக்கிறது
5 comments:
நன்றாக உள்ளது கவிதை.
தேவ்,
என்னவென்று சொல்வது.. உங்கள் கடைசி வரிகளை நான் ஆமோதிக்கிறேன்.
நானும் "மரணம்" ணு ஒரு கவிதை எழுதி இருக்கேன்.. 3 வருஷம் முன்பு
http://geeths.info/?p=39
படிச்சு பாருங்க
அன்புடன்
கீதா
றெனிநிமல் உங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து வாங்க.
கீதா, உங்கள் கவிதையை வாசித்தேன் அதில் எனக்குப் பிடித்த வரிகள் கீழே
//மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின் ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின் ஆரம்பம்//
நம்பிக்கை வரிகள்…
நன்றி
.. கடைசி நம்பிக்கை வரிகள்
கவிதைக்கு இன்னும் அழகு சேர்த்துள்ளது..நன்று
Post a Comment