
நடக்கையிலே...
கவனமாய் தேடிப் பார்க்கிறேன்...
சென்ற முறை வந்தப் போது...
விட்டுப் போன...
என் காலடிகளின் சுவடுகள்...
இருக்கின்றனவா என்று..
இல்லை என்று அறிந்ததும்...
இன்னும் அழுத்தமாய்
கால் பதித்து நடக்கிறேன்...
அழியாமல் இருக்கும்..
அடுத்த முறை நான் வரும் போது...
என்ற நம்பிக்கையில்...
14 comments:
கிண்டலும் நல்லா பண்ணறீங்க...கவிதையும் நல்லா எழுதறீங்க...கலாசறீங்க தல!
சுவையான கவிதை தேவ்
கைப்புள்ள கிண்டலா நானா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு? ஹி..ஹி..
பாழ் கவிதையைச் சுவைத்தற்கு நன்றி
கவிதை அருமை புகைப்படம் மிக அருமை
அவைகள் அழியவில்லை..
அந்தக் கடல் தண்ணீருக்கும்
ஒரு மோகம் தான் உன்
கால் சுவடுகள்மீது..
அருமை நண்பரே
அருமை..!!
ஆர்ப்பாட்டமே இல்லாமல் மெதுவாக வருவிட்டீர்கள்.
-ஞானசேகர்
ஆர்ப்பாட்டமே இல்லாமல் மென்மையான கவிதை. படம் சூப்பருங்க.
-ஞானசேகர்
Dreamz Thanks :)
ஞானசேகர் சார் தங்கள் வருகையினால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
//அந்தக் கடல் தண்ணீருக்கும்
ஒரு மோகம் தான் உன்
கால் சுவடுகள்மீது..//
நித்யா, அப்படியா சொல்லுறீங்க...
அதான் சுனாமியா சீறி ஊருக்குள்ளே வந்துப் போனதோ என்னைப் பார்க்க??:)
தங்கள் ரசனைக்கு நன்றி அனுசுயா
சுவடுகளை விட்டுச் செல்வதற்குத்தானே வாழ்கிறோம் வாழ்க்கை? கடலோரச் சுவடுகளை திரும்பப்போய்த் தேடலாம்...வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சுவடுகளைத் திரும்பி வந்து தேட ஏதேனும் வழியுண்டா தேவ்?
இருந்தால் சொல்லுங்கள், கணிசமாக காசு பார்த்து விடலாம் :)))
எளிமையும், இனிமையும் இணைந்து நடந்த கவிதை. அதன் தடங்கள் நெஞ்சில்!
//வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சுவடுகளைத் திரும்பி வந்து தேட ஏதேனும் வழியுண்டா தேவ்?//
இது கவிஞரின் பார்வையால் விளைந்தக் கேள்வி!
இருந்தால் சொல்லுங்கள், கணிசமாக காசு பார்த்து விடலாம் :)))
இது வியாபார பார்வையால் விளைந்தக் கேள்வி!
தற்சமயம் இரண்டுக்குமே என்னிடம் பதில் இல்லையே...:)
Post a Comment